ஆசிரியர் தேர்வு வாரியம் தொடர்பாக எந்த சந்தேகமாக இருந்தாலும் நேரில் வரலாம். அல்லது 7373008134 மற்றும் 7373008144 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொள்ளலாம்.
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு கொண்டுவருபவர்களுக்கு கம்ப்யூட்டர் உதவியுடன் உடனடியாக பதில் அளிக்கிறார்கள்.
ஆசிரியர் தேர்வு வாரியம்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் செய்கிறது. அதுமட்டுமல்ல அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்கிறது. மேலும் அரசு கலை கல்லூரிகளுக்கு உதவி பேராசிரியர்களை தேர்வு செய்கிறது. இப்படியாக வருடம் முழுவதும் ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை நடத்தி வருகிறது.
