இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் நாளை (14.11.2013 ) விசாரணைக்கு வருகிறது
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று (13.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன் பிற்பகல் 2.45 மணி அளவில் விசாரணைக்கு வந்தது. வரிசை எண் 23-ல் வழக்கு
விசாரணை இருந்தாதால் மதியத்துக்குள் விசராணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.அனால் பிற்பகலே விசராணைக்கு வந்தது.ஒரு வருட வழக்கறிஞர் திரு.பிரகாஷ் அவர்கள் தன்னுடைய வாதங்களை எடுத்துரைத்தார்.
மேலும் தலைமை நீதிபதி ஜார்கண்ட் மாநிலத்தில் பதவி ஏற்க உள்ளதால் அவர்களுக்கு இன்று பிரிவு உபசார விழா நடைபெற இருந்ததால் நீதி மன்றம் விரைவாக முடிக்கப்பட்டது. எனவே இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் நாளை (14.11.2013 ) விசாரணைக்கு வருகிறது