PAGEVIEWERS

அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்ட 499 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தகுதித் தேர்வில் தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்கள் டிஸ்மிஸ் - பள்ளி கல்வித்துறை நடவடிக்கை

 அரசு உதவி பெறும் பள்ளிகளில்கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்ட 499 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து பள்ளிக் 
கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 23.8.2010 முதல் 14.11.2011-க்கு இடைப்பட்ட காலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
மத்திய அரசின் இலவச

லஞ்சத்தை கைவிட பயிற்சி மையம்

உத்தமபாளையம்: அரசு ஊழியர்களிடையே நிலவும் லஞ்சஊழல் சிந்தனையை ஒழித்துஅரசு இயந்திரத்தை தூய்மைப்படுத்துவதற்காகதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில்சென்னையில் பயிற்சி
மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மையத்திற்காக1.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இடம் வாங்க,மாவட்டம் தோறும் நிதியளிப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையத்தில்தற்போதைய நிலையில் அரசு பணிக்கு வருவோரிடையே ஏற்படும் லஞ்ச,ஊழல் பழக்கங்களை கைவிட்டுதூய்மையான நிர்வாகத்தை அளிக்கும் விதத்தில் முழுமையான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


நன்றி                                  நன்றி            


தொடக்ககல்விதுறை மாநில அளவிலான 


விடுமுறை வேலைநாள் பட்டியலினை 


வெளியிட்டுள்ளது. 




தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்  (TATA), 

மாநில 

அளவில் விடுமுறை வேலைநாள் பட்டியல் 

வெளியிடக்கோரி தொடர்ந்து கோரிக்கை வைத்து 

வந்தது. தற்போது எங்களின் கோரிக்கை 

நிறைவேறியுள்ளது அறிந்து பெருமிதம் 

கொள்கிறோம்.




தொடக்ககல்விதுறைக்கும், தமிழக அரசுக்கும் 

நன்றி கூறுகிறோம்.


 மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் "ஆல்-பாஸ்' திட்டத்தால், 40 சதவீத மாணவர்கள் அடிப்படை வாசிப்பு திறன் கூட இன்றி, வகுப்புகளுக்கு வருவதாக உயர்நிலை ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
"அனைவருக்கும் கல்வி இயக்கம்' திட்டத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும், இடைநிற்றல் தடுப்பதற்காக, கட்டாய தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது. இதனால், மாணவர்களின் அடிப்படை கல்வித்திறன் முற்றிலும் பாதிக்கப்படுவதாக,
செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக ரூ450 கோடி செலவில் உருவாக்கப்பட்ட மங்கல்யான் விண்கலம், பி.எஸ்.எல்.வி சி-25 ராக்கெட் மூலம் கடந்த 5ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட மங்கல்யான், பூமியை சுற்றி வருகிறது. இந்நிலையில் மங்கல்யா னின் நீள்வட்ட பாதையை ஒவ்வொரு சுற்றாக அதிகரிக்கும் பணியை பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் கடந்த 7ம் தேதி தொடங்கியது. 

EMIS பணிகளை 15 ம் தேதிக்குள் முடிக்க ஆசிரியர்கள் திணறல்

மாணவமாணவிகளுக்கு ஆதார் எண்ணுடன் பல் நோக்கு பயன்மிக்க
ஸ்மார்ட் கார்டுகள் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று
வருகின்றன.
இந்த கார்டுகளை வரும் 15 ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டது.
ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க ஆசிரியர்கள் திணறி
வருகிறார்கள்.

1,821 இடைநிலை ஆசிரியர்கள், 11,922 பட்டதாரி ஆசிரியர்கள், 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர்

அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித்
துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார்.

சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் சிறந்த நூலகர்களுக்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா இன்று (14.11.2013 வியாழக்கிழமை) நடைபெற்றது.
இந்த விழாவில் அவர் பேசியது:

அகஇ - தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான டிசம்பர் 2013 மாதத்திற்கான குறுவளமையப்பயிற்சி "சமூக சமநிலை நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்தல்" எனற தலைப்பில் 07.12.2013 அன்று நடைபெற உள்ளது.

இரட்டை பட்டம் சார்பான வழக்கு ஒரு தரப்பு வாதம் முடிந்தது, அரசுதரப்பு வாதங்கள் மற்றும் மூன்று வருட படிப்பு சார்பாக வாதம் எஞ்சியுள்ள நிலையில் வருகிற 25ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று 12மணியளவில் முதன்மை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மூத்தவழக்கறிஞ்சர்கள் பிரகாஷ் மற்றும் முத்துகுமாரசாமி வாதிட்டார்கள். அதை தொடர்ந்து மதிய உணவு இடைவெளிக்கு பிறகு அரசு தரப்பு வழக்கறிஞ்சர் வாதிட்டார், அப்பொழுது அரசின் நிலை குறித்து கேட்டறிந்த நீதியரசர்கள் வருகிற 25ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
அன்றைய தினம் எஞ்சிய வாதங்கள் அதாவது அரசுதரப்பு, அதற்கடுத்து மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான வழக்கறிஞ்சர்கள் ஆகியோர் ஆஜராக உள்ளனர்.

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் நாளை (14.11.2013 ) விசாரணைக்கு வருகிறது

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று (13.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன் பிற்பகல் 2.45 மணி அளவில் விசாரணைக்கு வந்தது. வரிசை எண் 23-ல்  வழக்கு

விசாரணை இருந்தாதால் மதியத்துக்குள் விசராணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.அனால் பிற்பகலே விசராணைக்கு வந்தது.ஒரு வருட வழக்கறிஞர் திரு.பிரகாஷ் அவர்கள் தன்னுடைய வாதங்களை எடுத்துரைத்தார்.

மேலும் தலைமை நீதிபதி ஜார்கண்ட் மாநிலத்தில் பதவி ஏற்க உள்ளதால் அவர்களுக்கு இன்று பிரிவு உபசார விழா நடைபெற இருந்ததால் நீதி மன்றம் விரைவாக முடிக்கப்பட்டது. எனவே இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு  மீண்டும் நாளை (14.11.2013 ) விசாரணைக்கு வருகிறது

தகுதி தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கியுள்ளதாக வழக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

சரியான விடைக்கு மதிப்பெண் அளிக்காததால் சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு மேலும் ......

நமது TATA சங்கம் கோரிக்கைக்கு செயல் வடிவம் 


  தொடக்கக்கல்வி இயக்ககத்தின் சார்பில் 2013-14ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி வெளியீடு

விடுமுறை - 14.11.2013 அன்றைய மொகரம் பண்டிகை 15.11.2013 வெள்ளிகிழமைக்கு மாற்றம் செய்து அரசானை வெளியீடு

 தமிழக அமைச்சர்கள் இலாகாக்கள் இன்றுமாற்றம் 

செய்யப்பட்டன. இதன்படி நிதி அமைச்சர் ஓ.பி. 

பன்னீர்செல்வத்திற்கு கூடுதல் பொறுப்பாக 

பொதுப்பணித்துறை மற்றும் நீர்ப்பாசனம் 

வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் வீரமணியிடம் 

இருந்த விளையாட்டு மற்றும் இளைஞர்நலம் 

அமைச்சர் கே.வி., ராமலிங்கத்திடம் 

ஒப்படைக்கப்பட்டது. வீரமணி பள்ளிக்கல்வி துறை 

அமைச்சராக நீடிப்பார்.
லக்னோ: உபி.யில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி 

நடக்கிறது முதல்வராக ர் அகிலேஷ் யாதவ் 

உள்ளார்.மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான 

சம்பளம் வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட 

பல்வேறு கோரி்க்கைகளை வலியுறுத்தி உ.பி.யில் 

அரசு ஊழியர்கள் நாளை முதல் வேலை 

நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

இம்மாநிலத்தில் 200-க்கும் மேற்பட்ட அரசு 

ஊழியர்கள் சங்கங்கள் உள்ளன. இது தொடர்பாக 

அரசுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தின.இதில் 

உடன்பாடு எட்டப்பட வில்லை இதையடுத்து 

நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 

இறங்க முடிவு செய்துள்ளன. இந்த போராட்டத்தில் 

16 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்க முடிவு 

செய்துள்ளனர்.

மொஹரம் விடுமுறையில் மாற்றம் - நவம்பர் 14 ஆம் தேதிக்கு பதில் நவம்பர் 15 ஆம் தேதி விடுமுறை

click here-: F.No.l2/10/2013-JCA-2 Government of India Change in the date of Holiday onthe occasion of Muharram -reg.

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 14ம் தேதி மொஹரம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறை தென்படாததால் நவம்பர் 15ம் மொஹரம் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

மக்கள் நலப்பணியாளர்கள் பணிநீக்கம் விவகாரம்.. உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது...


Candidate Instruction for TET Certificate verfication

டி.இ.டி. தேர்வு: தேர்ச்சி பெறாதவர்களை குறி வைத்து உலா வரும் ஊழல் கும்பல்கள்

தூத்துக்குடி: தமிழ்நாடு முழுவதும் டி.இ.டி. தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் வேலை கிடைக்குமாஎன்ற கேள்வி எழுந்துள்ள நிலையில்வெற்றி பெறாதவர்களையும் வெற்றி பெற
வைக்கும் முயற்சியில் தமிழ்நாடு முழுவதும் ஊழல் கும்பல் ஒன்று முழு முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர் தர ஊதியம் மாற்றம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து என 2 கோரிக்கைகளை முன் வைத்து போராட டிட்டோஜாக் கூட்டத்தில் முடிவு

இன்று சென்னையில் நடைபெற்ற டிடோஜாக் கூட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையை சார்ந்த முக்கிய 7ஆசிரியர் இயக்ககங்கள் பங்கேற்றன. கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் தர ஊதியம் மாற்றம் மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டிட்டோஜாக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக வருகிற நவம்பர் 13ஆம் தேதி அனைத்து ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்திப்பதென முடிவெடுக்கப்பட்டது.
அதற்கடுத்தகட்ட கூட்டம் வருகிற நவம்பர் 20ஆம் தேதி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தலைமையகத்தில் கூடுவதென முடிவு செய்யப்பட்டது.