PAGEVIEWERS


அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேம்டுமா ? இனி 'பாஸ்' ஆனால் போதாது; 'பர்ஸ்ட் கிளாஸ்' வேண்டும்

 

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு
உத்தரவிட்டது.

இதனை பின்பற்றி மாநில அரசு தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை 2012ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தியது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த தேர்வில் 6.67 லட்சம் பேர் எழுதியதில் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அப்போது இடைநிலை ஆசிரியர் தேர்வில் 1735 பேரும், பட்டதாரி ஆசிரியர் 713 பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் மொழிபெயர்ப்பு......

 

கீழ் கோர்ட் நீதிபதிகள் மற்றும் சட்ட மாணவர்கள் வசதிக்காக, சுப்ரீம் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு விவரங்கள், பொதுமக்கள், மாணவர்கள் படிப்பதற்கு வசதிக்காக தமிழில் மொழிபெயர்த்து வெளியிட அம்பேத்கர் சட்ட பல்கலை முடிவெடுத்துள்ளது.


சென்னையில் செயல்பட்டு வரும், அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ், தமிழகம் முழுவதும் 7 அரசு சட்ட கல்லுாரிகள் உள்ளன. உச்ச நீதிமன்றம் தினசரி புதிய தீர்ப்புகளை வழங்கி வருகிறது. அவற்றை சட்டக் கல்லுாரி மாணவர்கள் முதல் கீழ் கோர்ட்டில் உள்ள நீதிபதிகள் என அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
ஆங்கிலவழி கல்வி சேர்க்கைக்கு 'டார்கெட்...
=================================
அரசு ஆரம்பப்பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, மறைமுகமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 
மாநில அளவில், 23 ஆயிரத்து 522 அரசு ஆரம்பப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில், 14 லட்சத்து 63 ஆயிரத்து 767 மாணவர்கள் படித்துவருகின்றனர். 1.4 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.அரசு பள்ளிகளில், கல்வித்தரத்தை உயர்த்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு அறிவித்தாலும், இதனால், மாணவர்கள்சேர்க்கையில் பெரிய அளவிலான மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறையால் கொண்டுவர இயலவில்லை. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விசேர்க்கை நடந்துவருகிறது.நடப்பு கல்வியாண்டில் ஆங்கில வழிக்கல்வியில், 1.50 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டு, அதில், ஒரு லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதே சமயம், தமிழ்வழிக்கல்வியில் ஒரு லட்சம் மாணவர்கள் சேர்க்கை சரிந்துள்ளது.மாநிலம் முழுவதும்,3500 பள்ளிகளில் தற்போது, ஆங்கில வழிக்கல்வி செயல்பட்டு வருகிறது. எதிர்வரும் கல்வியாண்டில், மேலும், ஒன்றியத்திற்கு 10 வீதம் 350 ஒன்றியங்களில், 3500 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி கட்டாயம் துவங்க கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 10 மாணவர்கள் இருந்தால் தான் ஆங்கில வழிக்கல்வியை துவங்க இயலும் என்பதால், மாணவர்கள் சேர்க்கை அனைத்து பள்ளிகளிலும்இருக்குமா என்பது கேள்விக்குறியே. இந்நிலையில், ஆங்கில வழிக்கல்வியில் மாணவர்களை சேர்க்க ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில பொதுசெயலாளர் வின் சென்ட்பால்ராஜ் கூறுகையில், ''ஆங்கில வழி சேர்க்கைக்கு, முன்னுரிமை கொடுக்க வலியுறுத்துவதால், தமிழ் வழியில் மாணவர்கள் சேர்க்கை முற்றிலும் பாதிக்கப்படும். 

மேலும், ஆங்கில பிரிவுக்கு தனி ஆசிரியர்கள் நியமனம் மற்றும் தற்போதைய ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி இல்லாத போது, இரண்டு பிரிவுகளையும் ஒரே ஆசிரியர்களே கவனித்து கொள்ளவேண்டும். இதனால், மாணவர்கள் தான் பாதிக்கப்படுவர். கல்வித்தரத்தில், பெரிய மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை,'' என்றார்.

தொடக்கக் கல்வி - ஆசிரியர் வருங்கால வைப்பு - ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்களுக்கு கணக்குத்தாள் வழங்குதல் சார்பாக தணிக்கை விரைவாக மேற்கொள்ள உத்தரவு

மதுரை- தினமலர் நாளேட்டை கண்டிக்கிறோம் ...
          
  மதுரை தினமலர் 17.3.2014 தேர்தல் களம் பக்கம் 7 ல் 
           ஆசிரியருக்கு எதிராக செய்தி வெளியிட்டு உள்ளது ..இதில் இலவச கட்டாய கல்வி சட்டம் 2009 பிரிவு 23(2) ன் படி ஏற்கனவே பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் எனவும் தற்போது உள்ளவர்கள் தகுதியற்றவர்கள் எனவும் திசை திருப்பும் நோக்கத்தோடு செய்தி வெளியிட்டு ஆசிரியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது 

        உண்மையில் சட்டம் ஏற்கனவே பணியில் இருப்பவர்களை பற்றி குறிப்பிட வில்லை .ஆசிரியர் பயிற்சி படிக்காமல் ஆசிரியராக பணி செய்பவர்களுக்கே பொருந்தும் .சில மாநிலத்தில் இது போல் ஆசிரியர் பயிற்சி முடிக்காமல் பணி செய்பவர்களுக்கே பொருந்தும் 


தொடக்கக் கல்வி - புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது - 2014 (Insprire Award) - நடப்பு கல்வியாண்டில் சிறப்பாக நடைபெறுவதற்கு பயிற்சி அளிக்க இயக்குனர் உத்தரவு, முதற்கட்டமாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு சென்னையில் 20.3.14 அன்று பயிற்சி

 


தொடக்கக் கல்வி - "பி" "சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு கடவுச்சீட்டு பெற அல்லது புதுப்பிக்க மறுப்பின்மை சான்று நியமன அலுவலரே (DEEO) வழங்கலாம் என இயக்குனர் உத்தரவு

 




இடை நிலை ஆசிரியர் பதவி உயர்வு மாநில அளவில் நடை பெற வேண்டும் , தொடக்க பள்ளி தலைமை ஆசிரியராகவே பிற ஒன்றியம், பிற மாவட்டம் மாறுதல் பெற விரும்பும் தோழர்களே !                                      


 இது  சாத்தியமா ? 

கண்டிப்பாக சாத்தியமே எப்படி எனில் தொடக்க கல்வி சார்நிலை பணி விதி 9 ன் படி தான் தற்போது ஒன்றிய அளவில் பதவி உயர்வு பேணல் தயாரிக்க படுகிறது .விதி 9 என்ன என்றால்  ( நியமனம் மற்றும் மறு நியமனம் என்ற தலைப்பில் '' ஒவ்வொரு ஒன்றியமும் தனி அலகு '' என்பதாகும் ) . நாம் அரசு உழியர்ராக ஏற்கப்பட்ட நாள் முதல் நியமனம் மாவட்ட அளவிலும் தற்போது ஊச்ச நீதி மன்ற தீர்ப்பு படி மாநில அளவிலும் கடைபிடிக்க படுகிறது ..தற்போது  சட்ட படி உச்ச நீதி மன்றம்  தீர்ப்பு படி 2008 முதல் மாநில அளவில் தான் பதவி உயர்வு நடை பெற்றிருக்க வேண்டும் அல்லது 2013 செப்டம்பர்  உச்ச நீதி மன்ற இறுதி   தீர்ப்பு மற்றும் இலவச கட்டாய கல்வி சட்டம் 2009 ன்  படி வரும் நாள்களில் மாநில அளவில் தான் நடக்க வேண்டும் .தற்போது ஏற்கனவே  நிலுவையில் உள்ள நமது விரைந்து முடிக்க விரும்பும் தோழர்கள் தொடர்பு கொள்ளவும்  

                        நமது TATA சங்கம் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாகவே இதற்காகவே வழக்கு தாக்கல் செய்து உள்ளது .தொடர்ந்து வழக்கை நடத்துவதில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனை மற்றும் ஊதிய வழக்கின் நலன் கருதி அதில் தொடர் கவணம் செலுத்த முடியாத நிலை காரணமாக இதை விரும்பும் தோழர்கள் தொடர்பு கொள்ளவும் ... 

  இடை நிலை ஆசிரியர் பதவி உயர்வு மாநில அளவில் நடை பெற வேண்டுதல் மற்றும்   , தொடக்க பள்ளி தலைமை ஆசிரியராகவே பிற ஒன்றியம், பிற மாவட்டம் மாறுதல் வேண்டி  வழக்கு.
         
1) WP.(MD) ;4773/2011.மதுரை உயர் நீதி மன்றம் 
              
 வழக்கறிஞர்கள்;திரு.பால சுந்தரம் , திரு சி.செல்வராஜ்  ,திரு.அறிவழகன் ..

 2) WP; 4787/2012    மற்றும்   WP  ; 16040/2012.  சென்னை   உயர் நீதி மன்றம் 

வழக்கறிஞர்கள்;திரு . மீனாச்சி சுந்தரம் , திரு சங்கர் ,

                                          தொடர்புக்கு ..சா.செ .கிப்சன் .                            TATA பொது செயலாளர்.                                     9443464081... 9840876481