PAGEVIEWERS


கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? என்பதை அறிய...

 

கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? எந்த நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
1. www.treasury.tn.gov.in/Public/ ecstokenno.aspxஎன்ற தளத்திற்குச் செல்லவும்.
2. உங்களது மாவட்டத்தினைத் தெரிவு செய்யவும்.
3. Sub treasury ஐத் தெரிவு செய்யவும்.

4. Select branch என்னும் பகுதிக்கு அருகில் உள்ள கட்டத்தில் உங்கள் வங்கியின் MICR code ஐப் பதிவு செய்யவும்.(உங்கள் காசோலைப் புத்தகத்தில் பார்த்தால் தெரியும்)
5. உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைப் பதிவு செய்யுங்கள்.
அவ்வளவு தான் நண்பர்களே! எந்த தேதியில் உங்கள் அலுவலர் கருவூலத்தில் ஊதியப்பட்டியலைச் சமர்பித்தார், எந்த தேதியில் அது காசாக்கப்படும் என அறியலாம்.
மேலும் கடந்த காலத்தில் நீங்கள் பெற்ற ஊதிய விபரங்களையும் அறிய முடியும்

meeting

Photo
பொதுமாறுதலில் காலிப்பணியிடங்கள் 

மறைக்கப்படுவதை தடுக்க இயக்குனர் அலுவலகம் 

முற்றுகை ...

நாள் ; 20.05.2014 . நேரம் ; காலை 11   மணி முதல் .. 

இடம் ; DPI . நுங்கம் பாக்கம் ,சென்னை -6.   

                   அன்பார்ந்த ஆசிரியர்களே கடந்த 2005 முதல் கலந்தாய்வு 


முறைக்கு வேட்டு வைக்கும் விதமாக தொடர்ந்து 

காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டு கையூட்டு கொடுக்கும் 

ஆசிரியர்களுக்கு ரூ . 8 லட்சம் வரை தொடர்ந்து விற்கப்பட்டு 

வருகிறது . 
                 

இதை தடுக்க வேண்டி தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் 

பல தகவல்களை சேகரித்து கடந்த 2010 முதல் TATA சங்கம் 

மூலம் போராடி வருகிறோம். மேலும் மதுரை உயர் நீதி மன்ற 

கிளையில் வழக்கும் தொடர்ந்து உள்ளோம் .மேலும் பல புகார் 

காரணமாக  கடந்த 2013 செப்டம்பரில் ஊழல் தடுப்பு காவல் 

துறையில் அமைச்சர் மற்றும் 194 அலுவலர்கள் மீது வழக்கு பதிவு 

செய்யப்பட்டது . மேற்படி வழக்கு தற்போது முறையான 

விசாரணையின்றி  ஊழல் வாதிகளுக்கு சாதகமாக உறங்கும் 

நிலையில் உள்ளது .
                   
                             ஊழலுக்கு எதிராக நான் போராடி வருவதால் 


திருநெல்வேலி DEEO அலுவலகமும் எனது மனைவி பணி செய்த 

தனியார் பள்ளி நிர்வாகமும் சேர்ந்து 2011 முதல் எனது மனைவியை 

நிரந்தர பணி நீக்கம் செய்து என்னை பழிவாங்கியது .மேற்படி   பணி 

நீக்கம் ரத்து செய்திட திருநெல்வேலி DEEO அலுவலகத்திற்கு மனு 

செய்தேன். மேற்படி அலுவலகம் நிர்வாகத்திடம் பணம் 

பெற்றுக்கொண்டு பணி நீக்கத்தில் தலையிட கல்வித்துறைக்கு 

உரிமை இல்லை என அறிவித்து விட்டது .தனியார் பள்ளி 

ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு உள்ளது என்பதால் தொடக்கக் 

கல்வி இயக்குனர் அவர்களிடம் சுமார் 80 மனுக்கள் கொடுத்தும் நீதி 

வழங்காமல் என்னை கல்வி துறை பழிவாங்கி வருகிறது .
                                             

  எனக்கு நீதி கிடைக்க வேண்டியும் நிர்வாகம் 

என்றப்பெயரில் காலிப்பணியிடங்கள் விற்பனை செய்யப்படுவது 

நிறுத்தப்பட்டு ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு நடத்திட வேண்டியும் 

மேற்படி போராட்டம் நடைபெற உள்ளது .
             

 கல்வித்துறையில் ஊழல் ஒழிக்கப்பட 

ஆசிரியர்களே மே 20 ல் திரண்டு வாருங்கள் . 
 


தொடர்புக்கு ; கிப்சன் .                

TATA.பொதுசெயலாளர்                                                                         

9443464081//9840876481.





01.01.2014 அன்றைய நிலையில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு