PAGEVIEWERS


பள்ளிக் கல்வி இயக்குநர் திரு மதிப்பு மிகு 

இராமேஸ்வர முருகன் அவர்களை சந்தித்து TATA 

 பொதுச்செயலாளர் திரு S.C கிப்ஸன் 08-04-2014 

அன்று அளித்த கோரிக்கையில் புதுக்கோட்டை 

மாவட்டம் , கிள்ளுக்கோட்டை,அரசினா் 

மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர் நிர்வாக 

சீர்கேடுகள் பற்றி புகார் தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் நிர்வாக சீர்கேடுகள் 

தொடர்வதால்  புதுக்கோட்டை மாவட்ட

முதன்மைக் கல்வி அலுவலர் திரு 

நா.அருள் முருகன் ,முனைவர் அவர்களுடன்  TATA 

 மாநில தலைவர் திரு நா.கார்த்திகேயன் மற்றும்

 புதுக்கோட்டை மாவட்ட TATA 

பொறுப்பாளர்கள்  திரு .சு.யோவேல்,

திரு அ.சேவியர் ராஜேஸ் 06-05-2014 அன்று 

பேச்சுவார்தை நடத்தினர்.புதுக்கோட்டை 

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கொடுத்த 

 வாக்குறுதியின் பேரில் தற்காலிகமாக தீர்வு 

தீர்மானிக்கப்பட்டது.
கோரிக்கை தீர்மானங்கள்.

1. ஊதியம் தாமதம் இல்லாமல் மாத இறுதியில் 

பெற்று தருவது.

2.ஆசிரியர் மற்றும் அலுவலக ஊழியர் 

பணப்பலனை உரிய நாட்களில்தாமதமின்றி

  பெற்று தருவது.

3.பணிப்பதிவேடு விடுப்பட்ட பதிவுகள் உரிய 

நேரத்தில் தவறின்றி பதிவுகள் மேற்கொள்வது.

4.மாற்று சான்றிதழுக்கு நன்கொடை 

வசூலிக்க தடை.

5.மாணவர் - கூட்டுறவு சங்கம் முறைப்படுத்துவது.

6..மாணவர் பயிற்சி ஏட்டிற்கு உரிய

 தொகை மட்டும் வசூலிப்பது.

7.பெற்றோர் ஆசிரிய கழக நிதியை செயற்குழு 

அனுமதியுடன் முறையாக பயன்படுத்துவது.




ஆசிரியர் பணியிடம் ரூ.8 லட்சம்: 

ஆசிரியர்கள் குற்றச்சாட்டு- 

DINAKARAN NEWS

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தினர் ( TATA )   வெளியிட்டுள்ளஅறிக்கை:
தமிழ்நாட்டில் தொடக்க கல்வி துறை மற்றும் பள்ளிகல்வித்துறையில் 
 காலிப்பணியிடங்களை கலந்தாய்வில் காட்டாமல்நிர்வாக மாறுதல் 
 என்ற பெயரில் ஓரு ஆசிரியர் பணியிடம் ரூ.5 லட்சம்முதல் 8 லட்சம் வரை 
 விற்பனை செய்யப்படுவது தடுக்கப் பட்டு

கலந்தாய்வுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.வேலூர் மாவட்டத்தில்
உள்ள நல்லூர் பள்ளி உதவியாசிரியர்கள் மீது தவறே செய்யாமல்
 தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்பனஉள்ளிட்ட 
 கோரிக்கைகள் குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம்பலமுறைமனுக்கள்  
கொடுத்தும் நடவடிக்கை இல்லை.எனவே பாதிக்கப்பட்டுள்ளஆசிரியர்கள் 
 தங்களது குடும்பத்துடன் வரும் 20ம் தேதி முதல் தொடக்ககல்வி இயக்குநர் 
 அலுவலகத்தின் முன்பு காலவரையற்ற போராட்டத்தில்ஈடுபட முடிவு
  செய்துள்ளோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.