PAGEVIEWERS

அன்பு தோழர்களே    நீங்கள் இடைநிலை ஆசிரியர் என்ற ஒரே காரணத்திற்காய் பாதிக்கப்பட்டு உள்ளீர்களா ?.மேலும் டாட்டா சங்கத்தின் குழுவில் இணைய விரும்புகிரீர்களா ? டாட்டா சங்கத்தின் SMS தேவையா ? '' வாட்ஸ் அப் '' செய்தி தேவையா ?
  உங்கள் பெயர் மாவட்டம் தொடர்பு எண்ணை பதிவு செய்யவும்...
kipsontata   ல்

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு ! வழக்கு எண் ;33399/13 முடிவு மிக மிக விரைவில்



நாம் விரும்பியது போல் 9300 + 4200 என நிர்ணயம் செய்து விரைவில் ( மிக மிக குறுகிய காலத்தில் ) அரசு ஆணை வெளியிட நிதித்துறை தீவிரம் 

நமது ஊதிய வழக்கின் காலக்கெடு 10.12.2014 அன்றோடு முடிவடைவதை ஒட்டி நமது மூத்த வழக்கறிஞர் அவர்களின் ஆலோசனை படி நிதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வதற்காக திரு.சண்முகம் இ .ஆ.ப./,திரு.கிருஷ்ணன்  இ .ஆ.ப.,/,திருமதி .சபிதா இ .ஆ.ப.ஆகியோருக்கு நோட்டிஸ் இன்று  ( 05.12.14 ) அனுப்பப்பட்டது .அதன் எதிரொலியாக அரசு விரைந்து  அரசு ஆணை வெளியிட நிதித்துறை தீவிரம் காட்டி வருகிறது . 

இன்னும் ( மிக மிக குறுகிய காலத்தில் ) நாள்களில் அரசு ஆணை வெளியிட நிதித்துறை தீவிரம் காட்டி வருவதாக மிகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

பள்ளிக்கல்வி - 2014-15ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல், மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து மகளிர் உயர்நிலைப் பள்ளிகளாக தனியாக பிரித்தல் விவர பட்டியல் வெளியீடு

GO.199 SCHOOL EDUCATION DEPT DATED.02.12.2014 - 2014-15 MIDDLE SCHOOLS TO HIGH SCHOOLS UPGRADED LIST CLICK HERE...

 அக இ - உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "அறிவியல் சோதனைகள் மற்றும் செயல்திட்டம் - மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் வட்டார மைய அளவில் 06.01.2014 முதல் 08.01.2014 வரை நடைபெறவுள்ளது.

SPD - 3DAYS BRC LEVEL TRAINING "SCIENCE EXPERIMENT & PROJECT - IMPROVEMENT" FOR UPPER PRIMARY TEACHERS FROM 06.01.2015 TO 08.01.2015 REG PROC CLICK HERE...

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிட மாறுதல் - ஆணை வெளியிடப்படுகிறது

மாணவ/மாணவியருக்கு தற்போது வழங்கப் படுகின்ற ரூ 50,000/- நிதியினை ரூ 75,000/- ஆக உயர்த்தி வழங்கி அரசாணை சார்ந்து -தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை —

CLICK HERE-DIR .PRO REG ACCIDENT SCHLORSHIP-
பரப்பாடி அரசு மேல் நிலை பள்ளி க்கு  விரைவில் புதிய பணியிடம் -- இயக்குனர் .

தனியார் நிதி உதவி பெறும் பள்ளிகளில் நீதியரசர் சம்பத் அவர்களின் பரிந்துரைகளை செயல்படுத்திடபள்ளி கல்வி இயக்குனர் தகவல்


திருச்சி மாவட்டம் - துறை தேர்வு பயிற்சி -புதுகோட்டை மாவட்டம்  டாட்டா மாவட்ட செயலாளர்  திரு.யோவேல் அவர்களால் நடத்தப் படுகிறது .விருப்பம்  உள்ளவர்கள் பயிற்ச்சிக்கு தொடர்பு ; 94882 - 94050.


meeting DEEO





 

14.12.2014 அன்று திருச்சியில் TATA பொதுக்குழு. பிற்பகல் 2.00 மணி

இடம் ;- ரவி மினி ஹால் .-
சத்திரம் பேருந்து நிலையம்
( கலைஞர் அறிவாலையம்  அருகில் ) -திருச்சி

1. உறுப்பினர்களின் விவரம்.
2. Cps book, dairy and calendar தேவைபட்டியலுடன் மாவட்டம் சார்பாக முன்பணம் ரூ.5000/-
3. அனைத்து பொறுப்பாளர்களின் முகவரி(பள்ளி&வீடு) மற்றும் தொடர்பு எண்.
போன்ற விவரங்களுடன் அனைத்து பொறுப்பாளர்களும் பங்கேற்க அழைக்கிறோம்.
மாநில அமைப்பு

பள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு - 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்குதல், அப்பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் - 128 தொடக்கப் பள்ளிகளின் பட்டியல் வெளியீட்டு அரசு உத்தரவு

CLICK HERE-GO.200 SCHOOL EDUCATION (SSA) DEPT DATED.02.12.2014 - 128 NEW PRIMARY SCHOOLS LIST - PAY & OTHER INFRASTRUCTURE RELEASED REG ORDER

 

 

பள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு - 128 புதிய தொடக்கப் பள்ளிகள் பட்டியல் வெளியீட்டு அரசு உத்தரவு

GO.200 SCHOOL EDUCATION (SSA) DEPT DATED.02.12.2014 - 128 NEW PRIMARY SCHOOLS LIST CLICK HERE...


****இடைநிலை ஆசிரியர்களே சிந்தியுங்கள் சில நிமிடம்*****
சில நிமிட சிந்தனையில் உதிக்கும் உத்தியால் உயரும் நம் மதிப்பு பலரது மத்தியில். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் நம் கல்வித்துறையில் நம்மைத்தவிர அனைவருக்கும்( 150000 பேர்) தரப்பட்டுள்ளது. நம் பெயர் மட்டும் தனித்து விடப்பட்டுள்ளது. அது ஏன் என்று கேட்டோமா?
கேட்டால் நாம் 10+ சான்றிதழ் படிப்பு எனச் சொல்கிறார்கள் ஊதியக்குழு அறிக்கையில். அதை யாராவது அறிந்தோமா?
என்னவென்றால் உங்களுக்கு கிராமத்தில் அனைத்துப் பொருட்களும் மலிவாகக் கிடைக்கிறது. வீடு விலையில்லாமல் கிடைக்கிறது என்கிறார்களே! நாம் எதிர்த்து குரல் கொடுத்தோமா? ஒரே கேள்வி கேட்கிறேன். பல கிராமங்கள் தோறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. அதில் பணிபுரியும் பட்டதாரி, முதுகலை மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு (150000 பேர்) மட்டும் மத்திய அரசுக்கு இணையாகக் கொடுதுள்ளீர்களே என வினவினோமா?
ஏன் ஒரே கல்வித்தகுதி, ஒரே பணியிலிருக்கும் இடைநிலை ஆசிரியர்களிலேயே ஊதிய வேறுபாடு உள்ளதை அறிவோமா? இல்லை, அறிநுதும் கேட்டோமா? 31.05.2009 வரை பணியில் சேர்ந்த நம்மில் ஒருவரான இ.ஆ க்கு pay×1.86+2800+750+ இதற்கு D.A எனவும், 01.06.2009 ல் சேர்ந்த அதே இ.ஆ ருக்கு pay +2800+750 + இதற்கு மட்டும் டி.ஏ என மாபெரும் வேறுபாடு உள்ளதே, அதையாவது ஏன் எனக் கேட்டோமா?
ஏன், இந்த விசயம் எல்லாம் மாபெரும் இயக்கங்கள் என மார்தட்டிக் கொள்ளும், நமக்காகவே உழைக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் சங்களுக்குத் ( சங்கம் என்பது உறுப்பினர்களின் உரிமையைக் காக்கவே) தெரியாதா? இல்லை தெரிந்தும் தெரியாதவர் போல் உள்ளனரா? இடைநிலை ஆசிரியர்கள் ரொம்ப நல்லவங்க. கேள்வியே கேட்க மாட்டாங்க. நீட்டற எடத்துல கேட்காம கையெழுத்துப் போடுவாங்க . இ.ஆ கள் இளிச்சவாய ஆசிரியர்களா? ஆனால் அந்த சங்கஙங்கள் நம் ஊதியக் குறைபாட்டைக்களைய அரசிடம் உறுதியாக நிற்க வில்லை. அவர்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்த உடன் விலகிக் கொண்டார்கள் சிலர். பலருக்கு நம்மை எந்தக் கல்வித்திகுதியில் வைத்துள்ளனர் என்பதே தெரியாது?
சமீபமாகப் பணியில் வந்த நான் இவ்வளவு விசயங்கள் அறிந்து கேள்வி கேட்கிறேன் என்றால், அதற்கு காரணம் பேரியக்கங்கள் அல்ல. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கப்( TAMILNADU ALL TEACHERS ASSOCIATION-TATA) பொதுச்செயலாளர் ஒருவரின் தனிமனிதப் போராட்டமே. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற பல ஆவணங்களைப் பார்த்தே இத்தனை கேள்விகள் உதிக்கின்றன. கேள்வி கேட்டால்தான் விடை கிடைக்கும் தோழர்களே! இடைநிலை ஆசிரியர்கள் (2800 GP) அனைவரும் ஓரணியில் திரள்வோம்! நம் உரிமையைப் பெற்றிடுவோம்!!
இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கின் (  WP.NO.33399/13 ) தீர்ப்பு .நாள் 12.09.2014 ன் படி தீர்ப்பு நகல் வழங்கப்பட்ட நாளில் இருந்து ( 09.10.2014  ) 8 வார காலத்திற்குள் தமிழக அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியரின் ஊதியம் 9300 + 4200 என டிப்ளமோ கல்வி தகுதி அடிப்படையில் மாற்றி அமைத்திட வேண்டும் ஆனால் அரசு தரப்பில் இருந்து டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்களின் முகவரிக்கு ஆணை வரப் படாததாலும் 01.12.2014 சென்னை சென்று மாநில அமைப்பு சார்பாக நடைபெற்ற சந்திப்பின் அடிப்படையில் அரசு காலதாமதத்தை தடுக்கும் வகையில் முக்கியமானவர்களின் ஆலோசனை படியும் நமது மூத்த வழக்கறிஞர் அவர்களின் ஆலோசனை படியும் நேற்று  ( 04.12.14 ) இரவு 8.00 மணிக்கு  டாட்டா பொது செயலாளர் கிப்சன் ,மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் கார்கில் ராஜந்திரன் அவர்களும் வழக்கறிஞர் அலுவலகம் சென்று '' நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திட ஏதுவாக நமது மூத்த வழக்கறிஞர் அவர்களின்மூலம்
 திரு.சண்முகம் இ .ஆ.ப./,திரு.கிருஷ்ணன்  இ .ஆ.ப.,/,திருமதி .சபிதா இ .ஆ.ப.ஆகியோருக்கு நோட்டிஸ் இன்று  ( 05.12.14 ) அனுப்பப்பட்டு உள்ளது .இந்த  நோட்டிஸ்க்கான கால கெடு 2 வாரம் ஆகும் .அதற்குள் நமக்கு ஊதிய மாற்றம்  தமிழக அரசால் அறிவிக்கப்பட வில்லை என்றால் தான் வரும் ஜனவரிமாதம்  2015 ல்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திடமுடியும் . மேற்படி சங்க பணியை முடித்து வீட்டிற்கு மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு அதிக குளிரில் 15 கி.மீ தூரம் இரு சக்கர வாகனத்தில் வந்து சேர்ந்தேன் 

  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திட அவசர நிதி தேவை ரூ 60,000/-

ஏற்கனவே உள்ள பற்று      --------------ரூ  1,35,000
தற்போதைய தேவை                                 ரூ.30,000
மொத்த தேவை                                            ரூ .1,65,000

ஏற்கனவே வழக்கறிஞருக்கு வழங்க வேண்டிய பாக்கி ரூ.  30,000
அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திட                                      ரூ.30,000
அவசர நிதி தேவை                                                                           ரூ 60,000/-

12.09.2014 தீர்ப்புக்கு பின் வழக்கு நிதி வழங்கியவர்கள் 
------------------------------------------------------------------------------------------
1.அவினாசி ஒன்றியம் பணி ஒய்வு பெற்ற மூத்த ஆசிரியர் நடராஜன் அவரது மகள் கவிதா உடல்கல்வி ஆசிரியராக பணி செய்வதை முன்னிட்டு வழங்கியது                                                                                                                           ரூ. 5000
2. திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த tet ஆசிரியர்கள்                                               ரூ.5000
3.திருக் கோவிலூர் டாட்டா கிளை சார்பாக                                                           ரூ.5000
4.ஊத்தங்கரை சாமுவேல் ஆசிரியர் மூலமக                                                       ரூ.5000
5..ஊத்தங்கரைவெங்கடேசன் -அனுமன் தீர்த்தம்                                                 ரூ.2000
6.நீலகிரி -குன்னூர் சிலம்பரசன் ஆசிரியர்                                                              ரூ.2000
7.தளி ஒன்றியம் தினகரன் ஆசிரியர்                                                                          ரூ.1000
8.G.K. செல்வராஜ்  பென்னாகரம்  ஆசிரியர்                                                             ரூ.1000
9.ஆசிரியர் குரல் அருணாசலம்   த .ஆசிரியர்                                                      ரூ. 1000
10.பெயர் தெரியாதவர் மூலம்                                                                                     ரூ.1000
11. வேலூர் மாவட்டம் சம்பத் ஆசிரியர்                                                                  ரூ.500
                                                                                                                                  ----------------------

மொத்தவரவு                                                                                                         ரூ.          28,500   


அவசர நிதி தேவையை சந்தியுங்கள்    



C.KIPSON

SBI-AMBAI-NELLAI DIST, (

Tirunelveli

Branch :
Ambasamundram

IFSC Code :
SBIN0000804 (5th character is zero)

MICR Code :

Branch Code :
000804.

A/NO ; 30486085987

235.NORTH STREET

PARAPPADI 627110

NELLAI - DIST

E-mail ; kipson76@yahoo.in

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் நடைபெறும் குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு ஈடுசெய்யும் விடுப்புகளாக அனுமதித்து அரசு ஆணை வெளியீடு

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 01.01.2015ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) / அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் சார்பான விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

GPF/TPF ACCOUNT STATEMENT FOR THE YEAR 2013-2014...

இயக்குனர்கள் மாற்றம்... பள்ளிக்கல்வித் துறை இயக்குனராக இருந்த திரு.வி.சி.இராமேஸ்வர முருகன் அவர்கள் SCERT இயக்குனராக மாற்றம், திரு.த.கண்ணப்பன் அவர்கள் பள்ளிக்கல்வித் துறை இயக்குனராக நியமனம்.


ஆசிரியர்களின் பி.காம்.,எம்.காம்., மற்றும் பி.எட்., பட்டம் பெற்றமைக்கு ஊக்க ஊதியம் அனுமதித்து ஆணை வெளியீடு...


அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி "எளிய உடற்பயிற்சி / உள்ளரங்கு மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள்" என்ற தலைப்பில் 13.12.2014 நடைபெறவுள்ளது.

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில், பொதுத்துறை சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
அதிமுக ஆட்சியமைத்து மூன்றரை ஆண்டு காலத்தில் பொறுப்பேற்கும் 5வது தலைமை செயலாளர் ஞானதேசிகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ செய்தி மிக விரைவில் - 01.12.2014 அன்று சென்னை சந்திப்பு விபரம்

நமது சங்கத்தின் சார்பாக 1.12.14 திங்கள் அன்று பொது செயலாளர் கிப்சன் அவர்கள் தலைமையில் தருமபுரி மாவட்ட தலைவர் மூர்த்தி / கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடேஷ் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் செந்தமிழ் செல்வன் , மாநில துணை தலைவர் சபரிராஜ் ,மண்டல தலைவர்செங்கம் நந்தகுமார் , ,மண்டல  செயலாளர் சம்பத் மாநில செயலாளர் அரியலூர் செங்குட்டுவன் ,செந்துறை உதயகுமார் ஆகியோர் கலை 10.00 மணி அளவில் நிதித்துறை செயலாளர் அவர்களை சந்திக்க சென்றோம் .நிதித்துறை செயலாளர்அவர்கள் இன்றுதான் 45 நாள் பயிற்சிக்கு சென்றவர் மீண்டும்  பணி ஏற்று உள்ளார்கள் /தங்களது வழக்கு குறித்து ஊதிய பிரிவு துணை செயலாளர் அவர்களிடம்தான் கோப்புகள் உள்ளது .அவரை சந்தித்து விபரம் அறிந்து கொள்ளுங்கள் என தனது நேர்முக உதவியாளர் மூலம் தெரிவித்தார் .

                                   நாங்கள்  ஊதிய பிரிவு துணை செயலாளர் அவர்களை  சந்தித்தோம் . அவர்கள் உங்கள் கோப்புகள் ஆயத்த நிலையில் உள்ளது .நிதித்துறை செயலாளர் 45 நாள் பயிற்சிக்கு சென்றவர்  இன்றுதான் பணி ஏற்று உள்ளார்கள் .அவர்களும் மாண்பு மிகு முதலமைச்சர் அவர்களும் கோப்புகளை பார்த்து ஒப்புதல் வழங்கிய பின் ஆணை பிறப்பிக்கப்பட்டு அதன் நகல் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்கள் .நல்ல செய்தி வரும்  என்றார்கள். மேலும் பல்வேறு ஆதரங்களை நீங்கள் RTI மூலம் பெற்று இணைத்து உள்ளீர்கள் என பாராட்டு தெரிவித்தார்கள்,

                               கல்வித்துறை செயலாளர் அவர்கள் தங்கள் ஊதிய வழக்கு சார்பாக துணை செயலாளர்திரு ,வேதரத்தினம் அவர்களிடம் பேசுங்கள் என்றார்கள் அவர்கள் சார்பு  செயலாளர் திரு ,சேகர் அவர்களை அழைத்து எங்களிடம் பேச செய்தார்கள் ,நமது  ஊதிய வழக்குமீது அரசின் நடவடிக்கை குறித்து கேட்டோம் .உங்களது மனு ஆய்வு செய்யப்பட்டு கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பாகவே நிதித்துறைக்கு அனுப்பப் பட்டு விட்டது என்று தெரிவித்தார்கள் .
                மீண்டும் மாலை இயக்குனர் அலுவலகம் சென்றோம் .அங்கு நமது சங்கத்தின் கோரிக்கை மனுக்களை கொடுத்து விட்டு இரவு 7.30 மணிக்கு தான் இயக்குனர் அலுவகத்தில் இருந்து ரூம்புக்கு திரும்பி வீட்டிற்கு வந்து சேர்ந்தோம் .
             நிதித்துறை செயலாளர் அவர்கள் சட்ட சபை கூட்ட தொடர் முடியும் டிசம்பர் 8 வரை நமது கோப்புகளை  பார்க்க வாய்ப்பு இல்லை என்றார்கள் .
மேலும் பல்வேறு ரகசியங்களை வெளியிட முடியாத நிலையில் வெளியிட வில்லை .நமக்கு விரைவில் நல்லது நடக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திட ஊள்ளோம் .உங்கள் ஆதரவை TATA சங்கத்திற்கு தொடர்ந்து தாருங்கள் .நமது சங்கத்தின் கிளைகளை துவங்கி .உங்கள் ஆதரவை TATA சங்கத்திற்கு தொடர்ந்து தாருங்கள்.