PAGEVIEWERS

நெல்லை - தூத்துக்குடி - கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் கவனத்திற்கு

1. பணம் கொடுக்காமல் பணி மாறுதல் பெறுத்தல் சார்பாக 
2. இடைநிலை ஊதிய மேல் முறையீட்டு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகளும் 
3. CPS -  திட்டம் சட்ட ரீதியாக ரத்து குறித்த விபரங்கள் அறிந்திட 
4 .பிப்ரவரி 1 ல் சென்னை யில் நடைபெறும் டாட்டா வின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் 
 
வாருங்கள்  ! வாருங்கள்  ! வாருங்கள்  ! வாருங்கள் 

இடம்  ; ஹோட்டல் சகுந்தலா இன்டர் நேசனல் - நானா ஹால் -திருநெல்வேலி .

நாள் ; 17.01.2015   மதியம் 2.00 மணி முதல் 6.00 மணி வரை 

சிறப்புரை ; S.C. கிப்சன். டாட்டா .பொது செயலாளர்

கூட்ட தொடர்புக்கு 

 திரு.முருகன்  .டாட்டா மாவட தலைவர் - 9865980209
திரு.துரை பாக்கியநாதன் .டாட்டா மாவட செயலாளர் 9488564390

TATA வின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்

நாள் ;-01.02.2015  ஞாயிறு காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை  

இடம் ;- விருந்தினர் மாளிகை முன்பு ,சேப்பாக்கம் ,சென்னை 

மேற்படி  கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்  நடத்திட காவல் துறை அனுமதி வழங்குவதாக நமது மனுவை ஏற்று கூறி உள்ளனர் 
மேலும் பந்தல் , மை செட் , சேர்  ஆகிய வற்றிற்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது ,

உண்ணாவிரதம் செலவு 25,000 ஆகும் என எதிர் பார்க்கப்படுகிறது ,
நமது சங்க மாவட்ட செயலாளர்கள் மாவட்டத்திற்கு ரூ  2500  மாநில அமைப்புக்கு கொடுக்க வேண்டுகிறோம்

இன்று முதலே ஆயத்தம் ஆவோம்! நண்பர்களையும் அழைத்து வருவோம் !

இடைநிலை ஆசிரியர்கள் , உடல் கல்வி ஆசிரியர்கள் , தொழில் ஆசிரியர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம் .

நமது சங்கத்தின் ஊதிய வழக்கின் தீர்ப்பு படி இடைநிலை ஆசிரியர் ஊதியம் மாற்றி அமைக்காமல் நிராகரித்தது தவறு என்று நமக்கு ஆதரவாக பேட்டி கொடுத்த ஐயா ஜி.கே. வாசன் அவர்களுக்கு நன்றி ! நன்றி ! நன்றி !

கிராமப்புற ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் : ஜி.கே. வாசன் கோரிக்கை--

கிராமப்புற ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை வைத்துள்ளார்இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தர ஊதியம் ரூபாய் 4,200 வழங்க வேண்டியும், பழைய ஓய்வூதிய திட்டம், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு, பதவி உயர்வு,
பள்ளிகளின் தரம் உயர்த்துதல், காலியான பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்காக ஆசிரியர் கூட்டணி போராடி வருகிறது.
தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு, மத்திய அரசு ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அரசை அணுகி, அதன்பின் உயர் நீதிமன்றத்தையும் அணுகினார்கள். உயர் நீதிமன்றம் "மனுதாரர்களின் - ஆசிரியர்களின் - கோரிக்கையை பரிசீலித்து, 8 வாரங்களுக்குள் தக்க பதில் தர வேண்டும்" - என்று தமிழக அரசை அறிவுறுத்தியது.
அதனை பரிசீலித்த தமிழக அரசு நகரங்களில் பணிபுரியும் மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் ஊதியத்திற்கு இணையாக, கிராமங்களில் பணிபுரியும் தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க இயலாது; காரணம் கிராமங்களில் செலவு குறைவு, இரண்டாவது இக்கோரிக்கையை ஏற்றால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும். அதனை ஏற்கும் நிலையில் தமிழக அரசின் நிதிநிலை இல்லை" - என்ற இரண்டு காரணங்களின் அடிப்படையில், ஆசிரியர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
இந்நிலையில்  ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் தொடங்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
இச்சூழலில் நகரங்களில் பணிபுரியும் ஆசிரியர்களை விட, கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியருக்குத் தான் முக்கியத்துவமும், கூடுதல் ஊதியமும் வழங்கப்பட வேண்டும். அப்பொழுது தான் கிராமங்களில் பணிபுரிய தகுதியான ஆசிரியர்கள் முன் வருவார்கள்; கல்வியின் தரமும் உயரும்; கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
ஆகவே மத்திய அரசின் நகர்புற ஆசிரியர்களின் ஊதியத்தை விடக் கூடுதலாக வழங்காவிட்டாலும், அவர்களுக்கு இணையான அளவிலாவது தமிழக அரசின் கிராமப்புற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது தான் நியாயமானது.
இப்பொழுது ஆசிரியர் சங்க அமைப்புகள் போராட்ட நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். போராட்டம் தொடங்கப்பட்டால், பள்ளிக்கூடங்கள் மூடப்படும் அபாயமும், ஏழைக் குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படும் சூழலும் உருவாகும். தேர்வு காலம் என்பதால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களது கல்வி பாதிக்காத வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும்.

ஆகவே தமிழக அரசு நேரிடையாக ஆசிரியர் சங்க அமைப்புகளின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி, பாதிக்கப்பட்ட சுமார் 25000 ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடக்கக் கல்வி - 366 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், 399 தட்டச்சர், 367 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 31.12.2017 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவு

இன்று முதலே ஆயத்தம் ஆவோம்! நண்பர்களையும் அழைத்து வருவோம் !

 டாட்டா வின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் 
நாள் ;-01.02.2015  ஞாயிறு காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை 

இடம் ;- விருந்தினர் மாளிகை முன்பு ,சேப்பாக்கம் ,சென்னை

இன்று முதலே ஆயத்தம் ஆவோம்! நண்பர்களையும் அழைத்து வருவோம் !

 டாட்டா வின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் 
நாள் ;-01.02.2015  ஞாயிறு காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை 

இடம் ;- விருந்தினர் மாளிகை முன்பு ,சேப்பாக்கம் ,சென்னை

இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் மறுக்கப்பட்டதும், இப்போதும் நடப்பதும்...
TATA சார்பில் நீதிமன்றத்தில் பெறப்பட்ட வழிகாட்டுதல் ஆணையை நிறைவேற்ற முடியாது என, மாண்புமிகு திரு. சண்முகம் IAS அவர்கள், TATA மாநில பொதுச்செயலாளர் திரு. கிப்சன் அவர்களுக்கு மறுப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இதை மறுத்தோ அல்லது கண்டித்தோ எந்த கூட்டணியும் அறிக்கையும் வெளியிடவும் இல்லை(இரு கூட்டணி தவிர்த்து).
கடந்த டிசம்பர் 26 அன்று(கிறுத்துமசுக்கு அடுத்த நாளே) TATA சார்பில் டிட்டோஜாக்கில் உள்ள அனைத்து சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியும், கூட்டத்திற்கு TATA வை அழைக்கவில்லை.
அனைத்து சங்கங்களும் நம் ஊதிய முரண்பாட்டை நிறைவேற்ற முடியாதோ என்ற ஐயப்பாட்டுடன் கைவிரித்த நிலையில், TATA தான் பாதிக்கப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் நம் ஊதியம் மறுக்கப்பட்ட காரணங்களை தெளிவாக முன் வைத்து நீதிமன்றத்தை நாடினர். மேலும் அனைத்து விவரங்களையும் தமிழ்நாடு முழுவதும் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், இடைவிடாது ஒவ்வொரு வாரமும் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் கூட்டத்தில் பேசியுள்ளனர். இதனாலேயே என்னைப்போன்ற பல இளைஞர்கள் TATA பக்கம் வந்துகொண்டிருக்கின்றனர். இதனால் நான் மற்ற சங்கங்களை குறை கூறுவதாக நினைக்க வேண்டாம். அனைத்து சங்கங்களும் ஆசிரியர்களின் நலன் காக்கவே. அது அவரவரின் வரலாறு சொல்லும். இது மறுக்க முடியாத உண்மைதான்.
அந்த காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இது புறா தூது அனுப்பும் காலமில்லை. தகவல் தொடர்பு நொடிகளில் நடந்து கொண்டிருக்க, எதனால் டிட்டோஜாக் கூடவே, ஒரு மாதம் தேவைப்பட்டது?
அதிலும் ஏன் எந்த முடிவும் எட்டபடவில்லை??
அடுத்தக்கட்ட கூட்டம் நடத்த இடையில் ஒரு மாதம் எதற்கு???
அப்போதாவது முடிவு எட்டப்படுமா????
இன்று இப்பிரச்சினையை டிட்டோஜாக் கையில் எடுக்க காரணமான TATA வை ஏன் சேர்க்கவில்லை?????
வராத ஒரு கூட்டணியை அழைக்க இரு நபர் குழு, கடிதம் அனுப்பிய TATA வை புறக்கணிப்பது என்ன அரசியல்?????
அடுத்த டிட்டேஜாக் கூட்டம் திட்டமிட்டபடி நடக்குமா???????

இன்னும் பல கேள்விகளுடன்- சம்பத்
— with Testf Sankarankovil Tirunelveli and 43 others.

தேசிய நல்லாசிரியர் விருது - மாவட்ட அளவிலான தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்டதேர்வுக் குழு அமைத்து இயக்குனர் உத்தரவு

இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்த ஒருவர் புதிய ஊதியக்குழு அமலாக்கப்பட்டதால் தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்பு- 

இன்று முதலே ஆயத்தம் ஆவோம்! நண்பர்களையும் அழைத்து வருவோம் !

 டாட்டா வின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் 
நாள் ;-01.02.2015  ஞாயிறு காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை 

இடம் ;- விருந்தினர் மாளிகை முன்பு ,சேப்பாக்கம் ,சென்னை

கணக்கீட்டுத்தாள் இடைநிலை ஆசிரியர் ஊதியக்குழு அமுல்படுத்தப்படாமல் இருந்திருந்தால் அவருக்கு புதிய ஊதியக்குழுவின் ஊதியத்தைவிட அதிகம் சம்பளம் கிடைக்கும்.இதனை
ஒப்பிட்டு பட்டியல்.

தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் 01.01.2015 அன்றைய நிலவரப்படி பதவி உயர்விற்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்பான அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசு; தமிழக அரசு அறிவிப்பு

மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2013-2014 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடிப்படையிலேயே அரசுப் பணி நியமனம் என்ற விதி செல்லாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10 () செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.விமல்ராஜ், ஜி.ஜோசப் தாமஸ் ரிச்சர்டு, வி.முருகையா உள்பட ஐந்து பேர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், நாங்கள்
2006-08-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தோம்.
அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுகிறது. இதற்கு, அரசுப் பணிகளின் விதி 10 () வழிவகை செய்கிறது. இந்த விதியால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்.
இந்த விதி அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, இந்த விதியை ரத்து செய்ய வேண்டும், செல்லாதது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரினர்.
இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் ஐந்து பேரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.ஆர்.சிவகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஒரு வழக்கில், வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பதிவு மூப்புப் பட்டியல் பெறுவது
இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+ 4200 - மேல் முறையீட்டு வழக்கு 

6.01.2015 அன்று மேல்முறையீட்டு வழக்கு குறித்து நமது மூத்த வழக்கறிஞர் திரு .அஜ்மல்கான் அவர்கள் ஆலோசனை பேரில் அபிடவிட் பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ஊதியம் மறுக்கப்பட்டது சட்ட விரோதம் என தயாரிக்கும் பணிகள் வழக்கறிஞர் திரு.வெங்கடேஷ் குமார் அவர்கள் மூலம் முழு வீ ச்சில் நடைபெற்று வருகிறது .வழக்கு விசாரணை பொங்கல் விடுமுறை முடிந்ததும் நடைபெறும் ,
டாட்டா வின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் 
நாள் ;-01.02.2015  ஞாயிறு காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை 

இடம் ;- விருந்தினர் மாளிகை முன்பு ,சேப்பாக்கம் ,சென்னை

ஆயத்த பணிகள் மேற்கொள்ள மாநில பொறுப்பாளர்கள் வருகிற 10,11,12-01-2015 ஆகிய நாள்கள் சென்னையில் பணிகள் மேற்கொள்ள உள்ளனர் 

கோரிக்கைகள் 2 மட்டுமே 

1.இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+ 4200 தேர்தல் வாக்குறுதி ,நீதிமன்ற ஆணைக்கு எதிராக வழங்க மறுத்த நிதித்துறை கடிதம் 
Letter No. 60473/CMPC/2014-1 Dt: December 10, 2014 ய் ரத்து செய்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் 9300 + 4200 வழங்கிட வேண்டியும் 

2. அவசர சட்டம் மூலம் 2003 முதல் நடை முறை படுத்தி வரும் PRDA மூலம் நடைமுறை படுத்தி வரும்     CPS திட்டம் ரத்து செய்ய பட்டு பழைய ஓய்வூதிய  திட்டம் நடைமுறை படுத்திட வேண்டியும்  நடைபெற உள்ளது 

உணர்வுள்ள எமது ஆசிரியர் சமுதாயமே  நமக்காய் நாமே போராடிட நமது பதிப்பு நீங்கிட ஆயத்தம் ஆவோம் ,அடுத்தவரை நம்ப வேண்டாம் நமக்கே நாமே களம் காண்போம் சென்னையில் சங்கமிக்க தயார் ஆவோம் 

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - 01.01.2015 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்திட தகுதிவாய்ந்த இடை நிலை / உடற்கல்வி / சிறப்பாசிரியர்கள் பட்டியல் தயாரித்து அனுப்ப இணை இயக்குனர் உத்தரவு

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு-மேலும் ஓர் ஆய்வுப்பட்டியல்

புதிய ஊதியக்குழு அமுலாக்கத்தினால் ஏற்பட்டுள்ள மாதாந்திர இழப்பு பாரீர் முதல் பட்டியல் (Aமுதல் J வரை) 01.06.2006-ல் பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர் ஊதியக்குழு அறிக்கையின் படி அவரது அடிப்படை ஊதியம் {(4500*1.86)=8370+2800GP}

எனக்கணக்கிட்டுள்ளோம் 

இரண்டாம் பட்டியல் (K முதல்R வரை) 01.06.2006-ல் பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர் ஊதியக்குழு அறிக்கையின் படி அவரது அடிப்படை ஊதியம் PAY BOND 2 (5200+2800GP} எனக்கணக்கிட்டுள்ளோம் . வித்தியாசம் கணக்கீடு (s)