'ஜாக்டோ'விற்கு போட்டியாக 'ஜாக்டா' அமைப்பு மனு....
சென்னை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, 'ஜாக்டோ'
ஆசிரியர் அமைப்பினர், அறிவித்துள்ள நிலையில், 'ஜாக்டா' அமைப்பினர், முதல்வர்
தனிப்பிரிவு அலுவலகத்தில்,
மனு கொடுத்தது, பெரும்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய
அரசு ஊழியர்களுக்கு இணையாக, ஆறாவது சம்பளக்
கமிஷன்படி,
ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்
என்பது உட்பட, 15 கோரிக்கைகளை, நிறைவேற்றக்கோரி, 8ம் தேதி முதல்
போராட்டம் நடத்தப் போவதாக, 'ஜாக்டோ'
அமைப்பு அறிவித்துள்ளது. 'ஜாக்டோ' அமைப்பு, 28 ஆசிரியர்
சங்கங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக, அதன் நிர்வாகிகள்
தெரிவித்தனர்.