PAGEVIEWERS

TATA - தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் - மாநில செயற்குழு கூட்டம் 

இடம் ; திருச்சி  மாவட்டம் -
 துரையூர் - பேருந்து நிலையம் அருகில் - ஜாய் மகால்

நாள்  ; 21.03 . 2015   - சனிக்கிழமை 

நேரம்  ;  காலை  10.00 மணி 

 அனைத்து மாவட்ட , வட்டார  பொறுப்பாளர்களும் உறுப்பினர் சந்தா படிவங்களுடன் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம் - மாநில அமைப்பு

வருமான வரி: பள்ளிகளுக்கு கெடு!!

வரும் 31ம் தேதிக்குள், வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், ஒரு நாளைக்கு, 20 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும்' என, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, கல்வித் துறை
எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான வருமானவரிக் கணக்கை, இம்மாத இறுதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, வருமானவரித் துறை உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை கட்டுப் பாட்டிலுள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்,

அனைத்து சட்ட உதவிகளையும் டாட்டா சங்கம் செய்திடும்

    • குரல் கொடுப்பார் யாருமுண்டா!
      ஆசிரியர்குரல் நண்பர்களே!சட்ட வல்லுனர்களே!பத்திரிக்கையாளர்களே !முகனூல் வல்லுனர்களே!
      ஆசிரியர்குரல் கடந்த 4 ஆண்டுகளாக ஆசிரியர்கள்,ஆசிரிய இயக்கங்கள் ,அரசுப்பள்ளிகளைப் பற்றிய செய்திகளை அளித்து வந்துள்ளது.
      இன்று காலை ஆசிரியர்குரல் பகிர்ந்தசெய்தி
      ஆசிரியர்களே!
      தமிழக ஆசிரிய சங்கங்களின் சொத்துக்கள்,அறக்கட்டளைகள்,வைப்பீடுகள் போன்றவற்றிற்கு எந்த சங்கங்களும் முறையான கணக்கினை தெரிவிப்பதில்லை.
      உறுப்பினர்களிடம் போராட்டத்தின்போது வசூலிக்கப்படும் பணத்திற்கும்கணக்கு வழக்கில்லை.சில ஒன்றிய ,மாவட்டபொறுப்பாளர்கள் ஏதும் செய்யாமலே இதனை ஏப்பம் விட்டுவிடுகின்றனர்.
      ஒன்றியத்தில் ,மாவட்டத்தில் ,மானில அளவில் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய்...
      இதற்கு ஒரு சங்கத்தவர் எதிர்ப்பு தெரிவித்தனர்.எமது நிலையை தெளிவு படுத்தினோம்.
      எமது பதில் கருத்தாக ஆசிரியர்குரல் இனி உளறல் குரல் என அவர் அடித்த கமெண்ட்டினை பதிவிட்டொம்.
      அதற்கு அவர் எம் மீது வழக்கு போடப்போவதாக கூறுகிறார்.
      ஆசிரியர் குரல் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரம் வழங்காவிட்டால் அவதூறு வழக்கு தொடரப்படும்
      மேலும் Eilaina yenga federation members yellakittayum solli asiriyar kural account ah spam nu fb la complaint panna vachu block panna poren.
      ஆசிரியர்குரல் அருணாசலம்


பள்ளிக்கல்வி - 2012-13ம் ஆண்டில் ஆசிரியர் தெர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்த நாள் முதல் முறையாண நியமனமாக முறைபடுத்தி ஆணை வழங்கி உத்தரவு

வருந்துகிறோம்!!!
sad க்கான பட முடிவு  திருச்சி மாவட்டம், தமிழ்நாடு அனைத்து  ஆசிரியர் சங்கம் , மண்டல தலைவர் திரு .புகழேந்தி அவர்களின் மாமியார்  அவர்களின் மறைவிற்கு இயக்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

இன்றைய 08.03.2015 ஜாக்டோ போராட்டம் ? ஏமாற்றத்தில் இடைநிலை ஆசிரியர் சமுதாயம் !

இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற பேரணியில் மாதம் ரூ .10000/= பாதிப்பில் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர் பாதிப்பு பற்றி விளக்கமாக எந்த மாவட்டத்திலும் பேசவில்லை /பத்திரிக்கை செய்திகளுக்கும் இந்த கோரிக்கை பற்றி விரிவாக பேட்டி கொடுக்க பட வில்லை இப்படி இருந்தால் நமது கோரிக்கைகளை இவர்கள் எப்படி வென்று தருவார்கள் ? மேலும் நான்கு சுவருக்குள் அரசுடன் நடக்கும் பேச்சு வார்த்தையில் எப்படி இவர்கள் நமக்காக முழு மனதுடன் பேசி பெற்று தருவார்கள் ? மேலும் இவர்கள் உண்மை நிலை வெளிவர வேண்டும்  அரசிடம் சமரசம் செய்திடாமல் கடந்த 7 வருடமாக
 ஏமாற்றப்பட்டது போல் தற்போதும் ஆகி விட கூடாது என்பதால் தான் ஜாக்டா உருவாக்க பட்டு உள்ளது ,மேலும் இவர்கள் நம் முன்னேயே பேச வில்லை இங்கு பேசினால்தானே உளவு காவல் துறை அரசிடம் எடுத்து செல்லப்படும்  இடைநிலை ஆசிரியர் சமுதாயம் இழந்துள்ளது அதிகம் .உங்கள் திறமையில் இந்துல்லத்தை பெற்று தருவதில் கவணம் செலுத்துங்கள் ......

நமது முக்கிய கோரிக்கை 3 மட்டுமே 

1.இடைநிலை ஆசிரியர் ஊதியம்  .2.CPS ரத்து . 3.தொகுப்பூதிய பணி நாள். ஏற்க பட வேண்டும்.
மேலும் டாட்டா வின் சட்ட போராட்டம் மிக வலுவாக தொடருகிறது ... மிக விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் .
மேலும் முக நூல் பக்கத்தில் டாட்டா சங்கத்தையும் என்னையும் எள்ளி  நகையாடுகிறவர்கள் எவரும்
 பாதிப்புக்கு உள்ளான இடைநிலை ஆசிரியர்கள் அல்ல என்பதை கருத்தில் கொண்டு சிந்திப்பீர் !!!
தமிழகத்தில் புதிதாக டாட்டா சங்கத்தின் தலைமயில் ஜாக்டா என்ற பெயரில் 15 சங்கங்களை கொண்ட அமைப்பு உருவாக்க பட்டுள்ளது. இதன். முதல் கூட்டம் 5-3-15 அன்று நடைபெற்றது .மேற்படி கூட்டமைப்பு சார்பாக 5.3.15 தலைமை செயலகம் சென்று மனு கொடுத்தனர்  .இந்த கூட்டமைப்பு பணியில் உள்ள. தலைவர்கள் மூலம் உருவான சங்கம் ஆகும். இந்த கூட்டமைப்பில் பணி ஓய்வுபெற்றவர் இல்லை .டாட்டா சங்கத்தின் நோக்கம் சட்ட போராட்டம் மற்றும் கள போராட்டம் இரண்டுமே இருந்தால் தான் நமது கோரிக்கை வெல்ல முடியும் .
1.இடைநிலை ஆசிரியர் ஊதியம் 
.2.CPS ரத்து .
3.தொகுப்பூதிய பணி நாள். ஏற்க பட வேண்டும்.
கோரிக்கைகள்  3 மட்டுமே  
ஜாக்டோ போல் 15 அல்ல 25 அல்லவே
அல்ல...

கோரிக்கைகளை நிறைவேற்ற ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்: வாசன் அறிக்கை

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 வருடமாக தொடர்ந்து போராடி வருகிறார்கள்.


தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 6–வது ஊதியக்குழுவில் திருத்தம் மேற்கொண்டு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் அரசு ஆசிரியர்களுக்கான தர ஊதியம் ரூ.4,200ம், படி நிர்ணயம் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும்.

தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் முதல்-அமைச்சர் தனி பிரிவில் JACTA மனு



 
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சர் தனி பிரிவில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டா)JACTA கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி மத்திய அரசில்
பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம்போல், தமிழக அரசின் கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
தன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (சி.பி.எஸ்.) ரத்து செய்துவிட்டு, பழைய திட்டத்தை (ஜி.பி.எப்.) நடைமுறைப்படுத்த வேண்டும். தொகுப்பூதிய அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்ட அனைத்து நிலை ஆசிரியர்களையும் பணியில் சேர்த்த நாள் முதல் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறையில் வழங்குவதுபோல, மாவட்ட அளவிலான கலந்தாய்வின் மூலம் பொதுமாறுதல் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'ஜாக்டோ'விற்கு போட்டியாக 'ஜாக்டா' அமைப்பு மனு....

 
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, 'ஜாக்டோ' ஆசிரியர் அமைப்பினர், அறிவித்துள்ள நிலையில், 'ஜாக்டா' அமைப்பினர், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில்,
மனு கொடுத்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, ஆறாவது சம்பளக்
கமிஷன்படி, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட, 15 கோரிக்கைகளை, நிறைவேற்றக்கோரி, 8ம் தேதி முதல் போராட்டம் நடத்தப் போவதாக, 'ஜாக்டோ' அமைப்பு அறிவித்துள்ளது. 'ஜாக்டோ' அமைப்பு, 28 ஆசிரியர் சங்கங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக, அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஜாக்டா--கூட்டமைப்பில் உள்ள சங்கம்


1,தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் --
2,தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் -TATA.
3,தமிழ்நாடு ஆசிரியர் மன்றம்
4,தமிழ்நாடு கலை ஆசிரியர் கழகம்
5,தமிழ்நாடு பட்டதாரி இடைநிலை ஆசிரியர் பேரவை
6,தமிழ்நாடு தொழில் ஆசிரியர் நல சங்கம்
7,தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆசிரியர் சங்கம்
8,தமிழ்நாடு கைதொழில் கல்வி ஆசிரியர் சங்கம்
9,தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம்
10,தமிழக ஆசிரியர் மன்றம்
11,JSR,தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி
12,தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆதிவாசிகள் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம் .
13,சென்னை மாநகராட்சி இடைநிலை ஆசிரியர் சங்கம்
14.ஒருங்கிணைந்த பள்ளி ஆசிரியர் சங்கம்
15,தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆசிரியர் பேரவை

அக இ - தொடக்க நிலை / உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "குழந்தைகளின் அடைவு குறித்து கலந்துரையாடல்" என்ற தலைப்பில் 14.03.2015 அன்று குறுவள மைய அளவில் ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது.

இரண்டு கோரிக்கைகள் மட்டும் வைத்த போராட்டம் என்றால் அதற்கு மறுகேள்வியே இல்லை.--டாடா வாழ்த்தி வரவேற்கும் ்...டாட்டா கிப்சன் ்...

போராட்டம் வேண்டாம் என்றோ, போராட்டத்திற்குப் போக வேண்டாம் என்றோ யாரிடமும் சொல்லவில்லை. போராட்டம் வேண்டாம் என்று நாங்கள் ( இளைய தலைமுறை) சொல்லவில்லை. போராட்டத்தின் முக்கிய அம்சமாக என்ன உள்ளது, என்ன இருக்க வேண்டும் தற்போது என்பது கேள்வியாக அனைவரது மனதிலும் உள்ளது. 2800 கிரேடு பேவில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் இந்த 6 வது ஊதியப் பரிந்துரை முழுவதும் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் அடுத்த ஊதியக்குழுவில் இன்னும் மாபெரும் இழப்பு. இதைக் கருத்தில் கொண்டு இ. ஆ ஊதியம் மற்றும் cps cancel ஆகிய இரண்டு அதிமுக்கிய கோரிக்கையை மட்டுமே வைத்து நம் தொடக்கப்பள்ளி சங்கங்கள் மட்டும் இணைந்து ( அரசு கூற்றின்படி இ.ஆ 1,00,000 பேர்+ ) போராட்டம் செய்திருக்கலாமே? என்பது பலரது கேள்வி. அதைவிடுத்து 15 கோரிக்கைகள்( உட்பிரிவு வேறு) எதற்கு? மற்றவர் கோரிக்கையும் பெற வேண்டியதுதான், ஆனால் அதிமுக்கியமான கோரிக்கைகளை அதுவும் இத்தனை வருடம் இதோ, அதோ என்று ஏமாற்றிய கோரிக்கைகளை மட்டும் வைத்திருக்கலாமே?

-TATA -சங்கம் போலியான இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாது.---டாட்டா கிப்சன் ...

என் இனிய இ.நி.ஆசிரியர் சமுதாயமே! மார்ச் - 8 ல் அவசியம் கலந்து கொள்ளுங்கள். அது நம் இ.நி.ஆ. சமுதாயம் மீது பழி வராமலிருக்க உதவிடும். ( அப்படியே TATA மீதும் பழி வராது ) போராட ஆக்கபூர்வமான வழியை விட்டுவிட்டு TATA பொய் சொல்கிறது ஏமாற்றுகிறது என்று தூற்றித்திரியும் சா(ன்றோ)ர்களின் கவனத்திற்கு மற்றும் இ.நி.ஆ. சமுதாயத்திற்கான விழிப்புணர்வு மடல் : முந்தைய கால போராட்டங்களில் இ.நி.ஆ. அதிகம் பங்கேற்கவில்லை. எனவே தான் இன்னமும் ஊதிய முரண்பாடு தீர்க்கப்படவில்லை என்று நம் மீது ஒரு பழி இருந்து கொண்டே உள்ளது. எனவே அனைவரும் கலந்து கொள்ளுங்கள். நாம். ஏமாற்றப்படாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். நம் பிரச்சனைகளை முன்வைத்து போராடி, இறுதியில் நம்மைத் தவிர்த்து இவர்களுக்குரிய பயன்களையெல்லாம் பெற்று விட்டனர். இந்திய மக்கள் தொகையைவிட நாங்கள் எண்ணிக்கையில் அதிகம் என்று சொல்லாத குறையாக, நாங்கள் தான் பெரியவர்கள் என்று சொல்பவர்கள் ஜனவரியில் நடந்த முதல் TETOJAC கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தனிவழியில் சென்றவர்கள் பின்னர் பிப்ரவரியில் நடந்த கட்டத்திலேயே கலந்து கொண்டனர். அப்படி Buildup பண்ணுகிறார்களாம்.யாரும் இதை மறக்கவில்லை. மறைக்கவும் முடியாது. தனியாக வேண்டாம் கூட்டாகவே இருக்கலாம் என லேட்டாக முடிவு செய்திருக்கிறார்கள். இவர்கள் எங்களை விமர்சிக்கிறார்கள் அறிவை விரிவு செய் அகண்டமாக்கு என்று . ஜனவரியில் இது தெரியவில்லையோ! பிப்ரவரியில் தான் இவர்களுக்கு தெரிந்ததோ! சரி அது போகட்டும். முத்தாக கோரிக்கை வைப்பார்கள் என்று பார்த்தால் கொத்தாக கோரிக்கை வைத்திருக்கிறார்கள். முதன்மையான பிரச்சனை இ.நி.ஆசிரியர்களுடையது. அதனை முதல் கோரிக்கையாக வைப்பது போல் வைத்து இ.நி.ஆசிரியர்களுடன், அவர் இவர் என சுவர் விளம்பரம் போலக் குறிப்பிட்டு கோரிக்கை வைத்துள்ளனர். இ.நி.ஆசிரியர்களே உஷார். கட்டாயம் கலந்து கொள்ளுங்கள். அப்போது தான் நீங்கள் உங்கள் உரிமையை கேட்க முடியும். அடுத்தாக இவர்களின் மிகமுக்கிய கோரிக்கையை, திட்டமிட்டு அரசு கண்ணில் பட வேண்டும் என்பதற்காக கடைசியில் வைத்திருக்கிறார்கள். முதலாம் கோரிக்கையை பார்த்து விட்டு கடைசி கோரிக்கையை பார்ப்பார்களாம். என்னே ஐடியா. தொடக்கப்பள்ளிகள் பொறுத்தவரையில் இந்த. கோரிக்கை நிறைவேற்றப்பட்டாலே ஆளுக்கு முந்தி நன்றி சொல்லி விட்டு நடையை காட்டுவார்கள். கடை காலியாகி விடும். இப்படி சொன்னால் காமாலைக்காரனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரியும் என்று தத்துவம் பேசாதீர்கள். உங்கள் P.P. யை யாரும் மறக்க முடியாது. அது போல பதவி உயர்வுக்கு 6% வேண்டுமாம். ஏற்கனவே இ.நி.ஆசிரியர்கள் பெயரைச்சொல்லி போராடி தேர்வு /சிறப்பு நிலைகளுக்கு. 6% பெற்றவர்கள் தானே இக்கூட்டம். மத்திய அரசிலேயே இப்படியொன்று இல்லையென்று நினைக்கிறோம். இ.நி.ஆ. பெயரைச் சொல்லி போராடி, அவர்கள் அதிகம் பங்கேற்கவில்லை என்று குற்றம்சாட்டி இவர்களுக்கு ஆக வேண்டியதை பார்த்து விட்டு அமைதி காப்பதே வாடிக்கையாகிவிட்டதே. இந்த முறை அப்படியொரு நிகழ்வு நடக்காத வண்ணம் கவனமாயிருங்கள். எனவே அனைவரும் கலந்து கொள்ளுங்கள். ஏமாற்றப்படாமல் இருக்க விழிப்பாயிருங்கள்.----டாட்டா வை குறை கூறி கூட்டம் சேர்காதீர்கள் .உங்கள் 5//15//25//35//45//கோரிக்கைகளை விளக்கி கூறி போராட்டத்திற்கு கூட்டம் சேர்த்து கொள்ளுங்கள்

டிட்டோ ஜேக் ல்- JACTTO வில் டாட்டா சங்கத்தை சேர்க்காததற்கு கரணங்கள் ...



1.  டிட்டோ ஜேக் ல் உள்ள தலைவர்கள் ஓய்வு பெற்றவர்களரகவே உள்ளனர்...
அவர்களுக்கென்று 'ஓய்வு பெற்றோர்கள் சங்கங்கள்' இருக்கும் போது அவர்கள் ஏன் இங்கு பொறுப்பை பிடித்துக் கொண்டு இருக்கிறரர்கள்....
இளம் சந்ததியருக்கு வழி விடலாமேஎன 2013 ல் விமர்சனம் வெளியிட்டது .

2. டிட்டோ ஜேக் ல் உள்ள 7 சங்கங்கள் அரசு அங்கிகாரம் உள்ள சங்கம் என பொய் சொல்லுகிறார்கள் இதில் 2 சங்கம் டாட்டா வை போல் பதிவு பெற்ற சங்கம்தான் ,

3.வழக்கு நடத்தியவர்களை அரசு பேச்சு வார்த்தைக்கு அழைக்காது என்பதால் சேர்க்கவில்லை என நாடகம் நடத்துகிறார்கள் .வழக்கை பற்றி அரசு எதாவது சொன்னால் இவர்களை மறுத்து கூரிட முடியுமா ? 

4. 72 ஆயிரம் இடைநிலை ஆசிரியனின் ஊதிய பிரச்சனையும் மாதம் ரூ 10,000 இழப்பும் பிற ஆசிரியர்களுக்கும் உள்ள இழப்பும் ஒன்றானதா ? ஏன் இடைநிலை ஆசிரியனின் ஊதிய பிரச்சனைக்கு தனி கோரிக்கை வைக்க முடிய வில்லை ? கூட்டம் காட்ட . 72 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் வேண்டும் .ஆனால் தனி கோரிக்கை வைக்க முடியாதா ? ஒற்றுமை , ஒற்றுமை  என விர வசனம் பேசி டாட்டா வை விமர்சித்து நீதிமன்றம் மூலம் வாங்க முடியாது என பொய் சொல்லி ஆசிரியர்களை எமாற்றி கூட்டம் சேர்ப்பது நியாயமா ? டிட்டோ ஜேக் மற்றும் JACTTO வாள் கண்டிப்பாக 9300+4200 பெற்று தருவோம் என உத்திர வாதம் வழங்கிட முடியுமா? டாட்டா  9300+4200 பெற்று தருவோம் என உத்திர வாதம் கொடுக்கிறதே உங்களால் ஏன்  உத்திர வாதம் கொடுக்க முடிய வில்லை ? 

5.நீதிமன்றத்தால்  (1 man commission,,3 man commission அறிக்கைரத்து செய்ய பட்ட விபரம் முழுமையாக உங்களுக்கு தெரியுமா?

 6 .JACTTO கூட்டமைப்பில் உள்ள பல இடைநிலை சங்கத்தின் பொறுப்பாளர்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்றவர்களரகவே உள்ளனர்...
அவர்களுக்கென்று 'ஓய்வு பெற்றோர்கள் சங்கங்கள்' இருக்கும் போது அவர்கள் ஏன் இங்கு பொறுப்பை பிடித்துக் கொண்டு இருக்கிறரர்கள்....
இளம் சந்ததியருக்கு வழி விடலாமே என்றோம்...
இதில் தவறு என்ன இருக்கிறது...
சரி என்றரல் ஏற்றுக் கொள்ளுங்கள்...
இல்லையென்றரல் விட்டு விடுங்கள்....
அதைவிடுத்து TATA வை ஓரம் கட்டும் முயற்சி வேண்டாம்....
அது பெரும் சங்கங்களுக்கு அழகு இல்லை....
சங்கத்தலைவர்களுக்கும் தான்...
நல்ல தலைவருக்கு உள்ள தகுதிகளில் ஒன்று....
விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும்....
அனைவரையும் அணைத்து செல்ல வேண்டும்...
நாங்கள் நீதிமன்றம் துணை கொண்டு உலகுக்கு வெளிக்காட்டிய பிறகுதான் உங்களுக்கே பிரச்சினை யின் தன்மை புரிந்து கூட்டு குழு அமைத்து (உறுப்பினர்களை தக்க வைக்க) களத்தில்
இறங்கினீர்கள்.....

நான் JACTTO வுக்கு கேட்கும் ஒரேயொரு கேள்வி.....
4 வயதேயான ஒரு குழந்தை சங்கம் தனியே போராடி எண்பதாயிரம் இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதார பிரச்சினையை, நீதிமன்றத்தின் மூலம் ஊருக்கு தெரிய படுத்தி JACTTO என்ற கூட்டமைப்பு அமைய காரணமாக இருந்த (1 man commission பிறகு கூட அனைத்து பெரும் சங்கங்களும் விசயம் தெரியாமல் அரசியல் தலைவர்களை பாராட்டி நன்றி சொல்லிவிட்டு வந்தீர்கள்-அதையும் இச்சமயத்தில் நியாபகப் படுத்துகிறது TATA) எங்களை நீங்கள் பாராட்ட வேண்டாம் .....
அங்கீகரிக்க வேண்டாம் .....

 7. எங்களை எங்கள் வழியிலே விட்டு விடுங்கள் எம் ஆசிரியர் சமுதாயத்தின் முக்கிய பிரச்சனைகளை 1.புதிய ஓய்வுதிய திட்டம் ,2. இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை களை சட்ட போராட்டம் நடத்தி கண்டிப்பாக கண்டிப்பாக புதிய வரலாறு டாட்டா சங்கத்தினால் உருவாகும் .காலம் பதில் சொல்லும் டிட்டோ ஜேக் மற்றும் JACTTO வுக்கு - இவர்கள் போராட்டம் வெற்றியடைய டாட்டா வின் வாழ்த்துகள்

பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக புதிதாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளுக்கு பதவி உயர்வு மூலம் தலைமையாசிரியர் நியமனம் செய்தல் மற்றும் தற்போது காலியாக உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களையும் பதவி உயர்வு மூலம் கலந்தாய்வு நடத்தி நியமனம் செய்திட இயக்குனர் உத்தரவு

DSE - HIGH SCHOOL HM PROMOTION REG PROC CLICK HERE.

பள்ளிக்கல்வி - 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மார்ச் 1ம் தேதி நடைபெறவுள்ளது

தமிழகத்தில் காலியாக உள்ள 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கல்ந்தாய்வு மார்ச்1ம் தேதி நடைபெறவுள்ளது. இக்கலந்தாய்வில் முன்னுரிமை பட்டியல் வரிசை எண்.685 வரை உள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்

நிதி(ஊதியப் பரிவு)த்துறை - 6வது ஊதியக் குழுவில் ஊக்க ஊதியம் பெற்றதனால் ஏற்படும் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாட்டை களைய, ஊதிய நிர்ணயம் மேற்கொள்ளும் அதிகாரியே ஊதிய நிர்ணயம் செய்யலாம் என த.அ.உ.சட்டத்தின் வாயிலாக அரசு பதில்

தமிழ்நாடு விடுமுறை விதிகள் - விதி 15 - அரசு ஊழியர் / ஆசிரியர்களின் ஈட்டா விடுப்பின் பேரில் மருத்துவ விடுப்பு அனுமதித்தல் சார்பான வழிமுறைகள் வழங்கி அரசு உத்தரவு

Dear Madam/Sir,
Government of India has created a 'New Education Policy' group to formulate New Education Policy. In all 33 themes have been identified (13 under School Education and 20 under Higher Education sector).
The link can be accessed at http://mygov.in/new-education-policy-group.html
For all your convenience, the link has also been shared/activated on the Home page of NCERT and CIET website:
http://www.ncert.nic.in/index.html http://www.ciet.nic.in/
Please do share with your colleagues, friends, group members who are associated with school and/or higher education and/or interested to contribute. Your inputs are valuable for shaping the New Education Policy of our Country.