தமிழ்நாடு
பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் ஒரு
மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ‘’ஆசிரியர்
கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம்
மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வியியல்,
ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனம்
ஆகியவைகளுக்கு விரிவுரையாளர் பதவிகளுக்கு கடந்த 2009–ம்ஆண்டு ஆசிரியர் தேர்வு
வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. மொத்தம் 195 விரிவுரையாளர் பதவிகளில், பார்வையற்ற ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று விளக்க குறிப்பேட்டில்
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.