PAGEVIEWERS

ஜாக்டா'-ஆசிரியர் போராட்டத்தில் அரசியல் தலையீடு: அரசு அதிர்ச்சி; பெற்றோர் கவலை

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் ஆசிரியர்கள் போராட்டம் அரசியலாகியுள்ளது. வரும், 12ம் தேதி, 'ஜாக்டா' நடத்தும் உண்ணாவிரதத்தில், தி.மு.., மற்றும் தே.மு.தி.., உட்பட, சில கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள்
பங்கேற்க உள்ளனர்.

மறவாதீர் ஏப்ரல் 12.4.2015 உண்ணாநிலை அறப்போர் !




கண்ணீர் அஞ்சலி --டாட்டா மாநில அமைப்பு

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிறுவனர் திரு.அப்துல் மஜீத் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. என்னை பொறுத்த வரையில் நான் ஆசிரியராக பணியேற்பதற்கு முன்பிருந்தே திரு.அப்துல் மஜீத் அவர்களின் பேட்டிகளை அவ்வப்போது செய்தித்தாள்கள் மூலம் அறிந்திருக்கிறேன். தன்னலமற்றவர். அவரின் மறைவு பேரிழப்பு.





டாட்டா சங்கத்தால் மட்டுமே ஊதியம் 9300 + 4200 என மாற்றிட முடியும்...W.P.NO.1612/2015.நீதிமன்ற ஆணை

இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனைக்காக டாட்டா சங்கம் மட்டுமே உண்மையாக போராடி வருகிறது அது தாங்கள் அறிந்ததே ,
நமது ஊதிய மேல் முறையீட்டு வழக்கு பிப்ரவரி  மாதம் 2015 மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டது .W.P.NO.1612/2015. அந்த வழக்கு நமது ஊதிய பிரச்சனைக்காக ஒய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்திட வேண்டும் ,அங்கு நமது ஊதிய பிரச்சனை விரிவாக விசாரிக்கப்பட்டு ஊதியத்தை 1.1.2006 முதல் அனைத்து இடைநிலை ஆசிரியருக்கும் 9300+4200 என மாற்றி அமைத்திட அரசுக்கு உத்தரவிட வழக்கு தாக்கல் செய்யப்பட்டது .மேற்படி வழக்கில் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க மனு செய்து மிக குறுகிய காலம் தான் ஆகி உள்ளது .எனவே மேற்படிஊதிய வழக்கு சிறிது காலம் கழித்து தாக்கல் செய்திட நீதிபதி அவர்களால் 10.02.2015 ஆணை 
வழங்கப்பட்டது .மேலும்   ஊதிய பிரச்சினை சார்ந்த கடிதம் 8.3.2015 அன்று ஊதிய குறை தீர்வு ஆணையம் "தலைவர் .ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி .திரு .வெங்கடாசல மூர்த்தி அவர்களிடம் இருந்து வர பெற்று உள்ளன .இதன் அடிப்படையில் மேல் முறையீட்டு மனுவை ஒய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்திட வேண்டும் என மீண்டும் நமது ஊதிய வழக்கு வருகிற வாரம் விசாரணைக்கு வர உள்ளது .இதற்காக இன்று  
( 04.04.2015 ) பொது செயலாளர் கிப்சன் மற்றும் மாநில பொருளாளர் திரு.தமரைவேல் மற்றும் சிவகங்கை மாவட்ட பள்ளி கல்வி செயலாளர் எட்வின் மற்றும் பலர் நமது முத்த வழக்கறிஞர் திரு.அஜ்மல் கான் அவர்களை சந்தித்தோம் .அவர்கள் வருகிற வாரம் வழக்கு விசாரணையில் ஆஜர் ஆகி வழக்கை வென்று தருவதாக உறுதி வழங்கி உள்ளார்கள் .கண்டிப்பாக டாட்டா சங்கத்தால் மட்டுமே ஊதிய மாற்றம் கிடைக்கும் .டாட்டா வை நம்பி இணைத்திடுவீர் ஊதியத்தை வென்றிடுவோம் .மேலும் வழக்குமூலம் விரைந்து பல்வேறு வெற்றி தொடர்ந்திட நிதி வழங்கிட வேண்டுகிறோம் .
மறவாமல் வருகிற 12.04.2015 அன்று வள்ளுவர் கோட்டம் முன்பு நடைபெறும் உண்ணாவிரதத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்,

.W.P.NO.1612/2015.நீதிமன்ற ஆணை ...
 

 


 

டாட்டா சங்க ஊதிய வழக்கு தற்கால நிலை


8.3.2015 அன்று ஊதிய பிரச்சினை சார்ந்த கடிதம் " ஊதிய குறை தீர்வு ஆணையம் "தலைவர் .ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி .திரு .வெங்கடாசல மூர்த்தி அவர்களிடம் இருந்து வர பெற்று உள்ளன .
அதன். அடிப்படையில் நமது ஊதிய வழக்கு மார்ச்சு மாதம் 16 ல் வர. இருந்து ஏப்ரல் முதல் வாரம் மீண்டும் மதுரை உயர் நீதிமன்றம் கிளையில் வர உள்ளன .அன்று நமது ஊதிய பிரச்சினை யை விசாரணை செய்து ஊதியம் 9300 + 4200 என மாற்றி அமைத்திட அரசுக்கு பரிந்துரைகள் செய்திட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்றம் நீதிபதி அவர்கள் தலைமை யில் ஆணையம் அமைத்திட அரசுக்கு ஆணை வழங்கிட தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஊதியம் மாற்றம் டாட்டா சங்கத்தால் மட்டுமே ஊதியம் 9300 + 4200 என மாற்றிட முடியும் .புதிய வரலாறு நீதிமன்றம் துணையுடன் டாட்டா உருவாக்கும் .
தற்போது உள்ள நிலை யில் சட்ட போராட்டம் மற்றும் கள. போராட்டம் இரண்டும் சேர்ந்து நடைபெற்றால் தான் நாம் வெற்றி பெற முடியும் .எனவே தான் டாட்டா மூலமாக சட்ட போராட்டமும் ஜாக்டா மூலமாக கள போராட்டம் என இரண்டு வகையான போராட்டங்களை டாட்டா நடத்தி வருகிறது .தற்போது உள்ள அரசியல் நிலையில் இரண்டு வகையான போராட்டம். முன்னெடுத்து சென்றால் மட்டுமே இடைநிலை ஆசிரியர் ஊதியம் மாற்றிட முடியும் .--,டாட்டா
கிப்சன் .

 

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 2முதன்மை கல்வி அலுவலர் / 4மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ஒத்த நிலை அலுவலர்கள் 31.03.2015 அன்று பிற்பகல் ஓய்வு பெறுவர்களை அனுமதித்தல் மற்றும் பொறுப்பு அலுவலர்களை நியமனம் செய்து இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா மன்னிப்பு கேட்டார் ....

தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில்,  ‘’ஆசிரியர் கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வியியல், ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனம் ஆகியவைகளுக்கு விரிவுரையாளர் பதவிகளுக்கு கடந்த 2009–ம்ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. மொத்தம் 195 விரிவுரையாளர் பதவிகளில், பார்வையற்ற ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று விளக்க குறிப்பேட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: தமிழக அரசுக்கு பதில் அளிக்க அவகாசம் அளித்து ஒத்திவைப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மற்றும் இடஒதுகீட்டை ரத்து செய்யக் கோரித் தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றம் 2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி
இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் சார்பில், பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு கோரப்பட்டது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறைக்கு மாறுதல் பெற்றாலும் அவர்களின் CPS க/கு எண்ணை மாற்றம் செய்ய தேவையில்லை.

மாற்றம் செய்ய வேண்டியதற்கான வழிமுறைகள்:-
1. பழைய பணியின் நியமன ஆணை
2. கணக்குத்தாள் நகல் 
3. மாறுதல் பெற்ற பணியின் DDO மூலம் கடிதம்.
குறிப்பு: DDO மூலம் அனுப்பும் கடிதத்தில் பழைய பணியில் பணிபுரிந்த DDO CODE மற்றும் EXTENSION(EXTN)ஐ குறிப்பிட வேண்டும். அதேபோல் மாற்றம் செய்ய வேண்டிய DDO CODE மற்றும் EXTENSION(EXTN)ஐ குறிப்பிட வேண்டும்.

புதியதாக நியமனம் பெற்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட எண் (CPS NO.) ஒதுக்கீடு செய்ய மே 2015 வரை கால அவகாசம் வழங்கி அரசு உத்தரவு

அரசாணைக்கு (எண். 165 கல்வி. 15.10.14) திருத்தம் அளித்து புது அரசாணை (எண். 68.கல்வி். 25.03.15) பெறப்பட்டுள்ளது..

1987 வரை 10 வகுப்பு கல்வித் தகுதியுடன் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து, ஏதேனும் ஒருசில பாடங்களில் தோல்வி அடைந்து, 1987 க்கு பிறகு பயிற்சியை முடித்தவர்களைப் பொருத்தவரை அவர்களும் +2 முடித்ததாகக் கருதி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெறும் வகையில் ஏற்கெனவே வெளியிட்ட அரசாணைக்கு (எண். 165 கல்வி. 15.10.14) திருத்தம் அளித்து புது அரசாணை (எண். 68.கல்வி். 25.03.15) பெறப்பட்டுள்ளது

தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!.....


சென்னை: தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 15 மாவட்ட கல்வி அலுவலர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வி துறை செயலாளர் சபிதா பிறப்பித்துள்ளார்.
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் விவரம் வருமாறு: அடைப்பு குறிக்குள் முன்பு வகித்த பதவி குறிப்பிடப்பட்டுள்ளது.
1. விஜயக்கண்ணு (மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்) – ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு

எமது பள்ளி --டாட்டா கிப்சன்


TATA - திருச்சி - வையம்பட்டி -புதிய ஒன்றிய கிளை துவக்க விழா 

நாள் ; 28 - 03- 2015   மாலை  5.15 மணி 

தலைமை ; திரு .வை.விஜயகுமார் -
                              திருச்சி மாவட்ட செயலாளர் 

சிறப்பு விருந்தினர் ; 1.ந .கார்த்திகையன் 
                                                  -மாநில தலைவர் 

                                          2. திரு.செ .கிப்சன் -       

                                                  பொதுசெயலாளர்

            மற்றும்  மாநில , மாவட்ட ,வட்டார பொறுப்பாளர்கள்

ஆசிரியர்கள் பிரச்சனைக்கு காரணம் அரசா? அதிகாரிகளா?


தமிழக பட்ஜெட் : பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி நிதி

தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி, வேளாண்துறைக்கு ரூ.6 ஆயிரத்து 613 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.