மேற்கண்ட தலைப்பில் தந்தி தொலைக்காட்சி ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.
கூடவே தமிழக நிதிநிலை பற்றியும் விவாதிக்கப்பட்டது.
இதில் சிறப்பு என்னவென்றால் ஆளும் கட்சி ஆதரவு சட்ட மன்ற உறுப்பினர் திரு.மாஃபா பாண்டியரஜன் பேசியபோது ஆசியர்கள் போராட்டம் கோரிக்கைகள் நியாயமில்லை என்று சொல்லமாட்டேன் என்றும் ஆனால் அவர்கள் போராடும் முறை சரியில்லை என்று கூறினார்
ஆனால் சரியான முறையைக் கூற மறந்துவிட்டார்.
தி.மு.க சார்பில் பேசிய திரு. ஜெயராஜ்
அவர்கள் எங்கள் ஆட்சியில் 750ரூ.கொடுத்தோம் என்றார்.ஆனால் இப்பிரச்சனை எங்கள் ஆட்சியிலேயே தொடங்கியது எனக் கூற மறந்துவிட்டார்.
CPS பிரச்சனைப் பற்றி பேசியபோது அது அரசின் கொள்கை முடிவு என்றார்கள். ஆனால் அதை தமிழக அரசு மாற்ற முடியும் என்றார் தி.மு.க சார்பானவர்
அதை நீங்கள் ஏன் மாற்றவில்லை? அதை மத்திய அரசு கொண்டுவந்த போது ஏன் எதிர்க்கவில்லை என்ற கேள்வி வந்தவுடன் அவர் டெஸ்மா எஷ்மாவிற்குச் சென்றுவிட்டார்.
ஒரே பணி ஆனால் மாறுபட்ட ஊதியம் என்ற கருத்தைப் பதிவு செய்யவே கடைசியாகப் போராடி நேரம் பெற்றார் தலைமையாசிரியர்கள் சங்க பொருப்பாளர் திரு.நடராஜன் அவர்கள்.
ஆனால் நெறியாளர் அதற்கு வேறொரு கேள்வியான இராணுவ வீரருக்கும் காவல்துறைக்குமான ஊதிய முரண்பாட்டைக் கேட்பார்களே அதுவும் ஒரே பணிதானே என்றார்.அதற்கு ஆசிரியர் சங்க நிர்வாகி முன்பெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் இப்பொழுது எடுத்துக் கொண்டுவிட்டார்கள் புதிதாகக் கேட்கவில்லை என்று பதில் சொல்ல விடவில்லை நெறியாளர்.
பொருளாதார நிபுணர் ஒருவர் பேசியது சற்று ஆறுதல் தந்தது என்னவெனில் கல்விக்கு வழங்கப்படும் நிதி செலவு இல்லை, மூலதனம் என்றார். ஆனால் இக்கருத்து கோரிக்கைகளை நிறைவேற்றினால் 2500கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று தொடக்கத்திலே பேசிய பாண்டியராஜனுக்கு கேட்காமல் போய்விட்டது.
மொத்தத்தில் ஆசிரியர்கள் போராட்டங்களை எதிர்க்கட்சிகள் ஆதரிப்பது அதுவும் தேர்தல் நேர போராட்டங்களை ஆதரிப்பது இயல்பானதுதான் எனினும் இன்றைய விவாதத் தலைப்பை கடன் சுமையோடு சேர்த்து விவாதித்தது சரிதானா? என்பதும் அரசியல் ஆக்கப்படுவது யாரால் என்பதை மனச்சாட்சி உள்ளோரும்,ஆசியர்கள் கோரிக்கைகளின் நியாயங்களை உணர்ந்தவர்களுமே முடிவு செய்யட்டும்.
T.A.T.A Kumbakonam