PAGEVIEWERS

ஒரு நபர்க் குழுவின் பரிந்துரை அடிப்படையில் டிப்ளமோ பட்டம் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9300, தர ஊதியம் ரூ.4200 வழங்கப்பட்டுள்ளது என அரசு அறிவிப்பு...RTI--அரசு கடித எண் ;41541/சி.எம்.பி.சி./2013.நாள்.20.8.2013.

 

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - அரசு மேல்நிலை / உயர்நிலைப் பள்ளிகளில் 23.08.2010க்குப் பின்னர் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டவர்களில் 23.08.2010க்கு முன்னர் சான்றிதழ் சரிப்பார்ப்பு நடந்திருப்பின் ஆசிரியர் தகுதித் தேர்ச்சி பெற தேவையில்லை, மேலும் அவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடிக்க ஆணை

நிதித்துறை - G.O MS : 282 - அரசு ஊழியர் பணியிலிருக்கும் போது இறந்துவிட்டால் வழங்கப்படும் ஈமச் சடங்கு நிதி ரூ.5000/- இல் இருந்து ரூ.25000/- ஆக உயர்த்தி அரசானை வெளியீடு...........

ஜாக்டோவின் அறிவிப்பு!!!
அன்பார்ந்த இடைநிலை ஆசிரியர்களே!!
அனைவருக்கும் வணக்கம்.நீங்கள் ஊதியம் குறித்து தேவையில்லாத பதிவுகளையும் கண்டனங்களையும் பதிவு செய்து வருவதை நாங்கள் அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.உங்களின் மனவேதனைகளும் ஆதங்கங்களும் எங்களுக்கு புரியாமலில்லை.நம் கையில் எதுவுமில்லை.அரசு நமக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.நாம் பொறுத்திருந்து தான் சாதிக்க முடியும்.எடுத்தவுடனேயே ஊதிய முரண்பாட்டை நீக்கு என்று கூறிவிட முடியாது.படிப்படியாகத்தான் படிகளில் ஏற வேண்டும். இன்னுமோர் பத்து ஆண்டுகளுக்குள் நிச்சயம் நாம் மத்திய அரசுக்கு இணையான 9300+4200 பெற்றே தீருவோம்.அதுவரை பொறுமையாக இருங்கள் இடைநிலை ஆசிரியர்களே.நாங்கள் எப்பாடுபட்டாவது உங்களின் உரிமையை பெற்றுத் தருவோம்.
இன்னும் ஓர் இரண்டு மூன்று வருடங்களாவது போராட்டம் நீண்டு போகட்டும் அப்போதான் அரசு நம் போராட்டக் குணத்தை அறியும்.நாம் போராளிகள் என்பதை அரசுக்கு ஒரு சில ஆண்டுகளாவது போராடிக் காட்ட வேண்டாமா.அதற்குள் தலைமையாசிரியர்களுக்கு நிகரான ஊதியம் கேட்டால் எப்படி?
நீங்களே சற்று சிந்தியுங்கள்.
அப்டேட் ஆகாமல் அப்படியே இருக்கும் எங்களை உங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது ஊதியம் மட்டுமே. அதையே நீக்கிவிடு என்றால் உங்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் நீங்கிவிடாதா? பிறகெப்படி எங்களுக்கான மதிப்பை பள்ளியில் நிலைநாட்டிக் கொள்வது.உங்களின் ஊதியம் பெற்றுத் தருவது எங்கள் கடமை.போராடாமல் எதுவும் கிடைத்து விடாது.இதுவரை நாம் பெற்றவை அனைத்தும் போராடி பெற்றவையே.எஸ்மா,டெஸ்மா சட்டங்களையே பார்த்தவங்க தான் நாம.ஆசிரியர்களின் போராட்டம் தோற்றதா சரித்திரமே இல்லை எங்களின் ஊதியம் குறைவுபடும் சமயத்தில் மட்டும்.இது ஏனோ உங்களின் ஊதிய முரண்பாடு களைவதில் மட்டும் பலிக்காமல் போய்விட்டது.

பரவாயில்லை இனிவரும் போராட்டங்களில் நாம் நிச்சயம் நம் பலத்தைக் காட்டுவோம்.இங்கே ஒரு உண்மையை நாங்கள் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.ஏனென்றால் எங்களால் இனியும் உங்களை ஏமாற்ற முடியாது. என்னவெனில் இதில் முழுவதும் பாதிப்பு உங்கள் சார்ந்ததாகவே இருப்பதால் எங்களால் இதில் அவ்வளவாக எவரும் தீவிரம் கொண்டு ஈடுபட முடியவில்லை.உங்களுக்காக நாங்கள் ஏன் போராட வேண்டும் என்ற மனநிலை நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ளதும் உங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
மேலும் வயதான காலத்தில் பொண்டாட்டி பிள்ளைகளை பிரிந்து சங்க செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொண்டு உங்களுக்காக பாடுபடுவதில் எங்களின் மனைவிமார்கள் எள்ளளவும் மகிழ்ச்சி கொள்ளவில்லை.இது மேலும் எங்களுக்கு தளர்வையே ஏற்படுத்துகிறது.

இத்தனையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காக நாங்கள் உழைத்து வருகிறோம் என்பதை உங்கள்
மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
எங்களால் முடியாதது எதுவும் இல்லை.இப்படியே நீங்கள் தேவையற்ற விமர்சனங்களைக் கையாண்டால் எங்களால் உங்களின் ஊதியத்தை பெற்றுத் தர முடியாது என்பதை இங்கு அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

எங்களால் இடைநிலை ஆசிரியர்களாகிய உங்களின் விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியவில்லை.எங்கள் அனைவரின் காதுகளிலிருந்தும் இரத்தம் வருவதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியுமா என்பது எங்களுக்குத் தெரியவில்லை.
பரவாயில்லை அதை நாங்கள் தாங்கிக்கொள்கிறோம். நாங்கள் மனது வைத்திருந்தால் உங்களின் ஊதியம் 9300+4200 ஐ எப்பவோ வாங்கிக் கொடுத்திருக்க முடியும்.
ஆனால் தலைமையாசிரியர் பதவிக்கும் இடைநிலை ஆசிரியர்
பதவிக்கும் இடையே வேறுபாடுகள் வேண்டாமோ?

நீங்கள் எங்களின் இடத்திலிருந்து பார்த்தால்தான் எங்களின் வேதனை புரியும்.பரவாயில்லை விடுங்கள் அதை.இதுவரை நடந்துள்ள போராட்டங்கள் அனைத்திலும் இடைநிலை ஆசிரியர்களான நீங்கள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளீர்கள்.இனிவரும் காலங்களிலும் அத்தகைய நல்லதொரு பங்களிப்பை நீங்கள் நல்குவீர்கள் என்று நம்புகிறோம்.
மேலும் புதிய ஆசிரியர்களின் பயவுணர்வை போக்கி போராட்டங்களில் பங்கேற்பதால் எவ்வித பாதிப்பும் வந்துவிடாது என்பதை நீங்கள் எடுத்துரைத்து அவர்களையும் போராட்டக் களத்திற்கு கொண்டுவர வேண்டும்.
போராட்டக் காலங்களில் நாம் இழந்த ஊதியத்தை மீண்டும் அரியரோடு பெற்றுள்ளோம் எனவே எதற்கும் அஞ்ச வேண்டாம் என்று கூறுங்கள்.

மேலும் ஒரு உண்மையை தங்களிடத்தில் கூற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.ஜாக்டோவில் இருக்கும் வயதான தாத்தாக்களின் ஒத்துழைப்பு சரிவரக் கிடைக்காத காரணத்தினால் ஏறக்குறைய ஜாக்டோ செத்துவிடும் நிலையில் உள்ளது.
அதற்காக நம் ஊதியப் பிரச்சினையை விட்டுவிடவா முடியும்.

முடியாது எப்பாடுபட்டாவது இழந்த நம் உரிமையை மீட்டே தீருவோம்.
செய் அல்லது செத்துமடி என்று யாரோவொரு இடைநிலை ஆசிரியன் கூறுவது என் செவிகளில் விழுகிறது.பரவாயில்லை கேட்டுவிட்டு போகட்டும்.
அதற்காக நாங்கள் செத்து விடவா முடியும்?
நமக்கு மாணம் பெரிதல்ல உசுறுதான் முக்கியம்.முடியாது என்று விட்டுவிட்டால் இதுவரை நாங்கள் கட்டிக்காத்த மாணம்
என்னாவது.

அப்புறம் எப்படி உங்களிடம் சந்தா வாங்குவது?
தரையில் விழுந்தாலும்
மீசையில் மண் ஒட்டலைன்னு கூறும் நாம் அப்படியே உங்களை அம்போன்னு விட்டுவிடவா முடியும்? எங்களுக்கு உங்களின் சேவை எப்போதும் தேவை.கூட்டம் சேர்க்கவும்,கோஷம் போடவும், சந்தாகொடுக்கவும் இடைநிலை ஆசிரியர்களாகிய நீங்கள் தேவை.
எங்களால் உங்கள் பிரச்சினையை தீர்க்க முடியாது என்று எப்படி விட்டுவிட முடியும்?

இருந்தாலும் நான் இங்கே ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறேன்.உங்கள் (இ.நி.ஆ) மேல் இருக்கும் அக்கறையால் உண்மை ஒன்றை அழுத்தமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
எங்களால் உங்கள் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியாது.கஜானா காலியாம்.
இன்னும் பத்தே பத்து வருடங்களில்
உங்கள் ஊதியம் 9300+4200 உங்கள் கையில் அதற்கு நாங்கள் கியாரன்டி.இல்லை எனக்கு பிரச்சினை இப்பவே தீர வேண்டும் என்றால் உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் தனியாகப் பிரிந்து கூட போராடி உங்களுக்கானதைப் பெற்றுக் கொள்ளுங்கள்.எங்களை நம்பியிருங்கள் என்று தான் கூறுகிறோம்.

ஆனாலும் நீங்கள் எங்களை விட்டு சென்றால் அதற்கு ஜாக்டோ பொறுப்பாகாது.
ஜாக்டோ கோமாவில் இருப்பதென்னவோ உண்மைதான் ஆனால் செத்துவிடவில்லை தலைமையாசிரியர்களான எங்களுக்கு ஏதாவதொரு பாதிப்பு ஏற்படும்போது மட்டும் அது வீறுகொண்டு எழும்,இப்போதல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்து வரக்கூடிய போராட்டங்களில் இடைநிலை ஆசிரியர்கள் எல்லோரும் கண்டிப்பா தவறாமல் கலந்து கொள்ளவும்.
வெற்றி நமதே!!
வெற்றி நமதே!!
போராடுவோம்!!
போராடுவோம்!!
இறுதிவரை ( சாகும் வரை) போராடுவோம்!!

வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!
வாழ்க ஜாக்டோ
வளர்க ஜாக்டோ

இப்படிக்கு ஜாக்டோ ஒருங்கினைப்பாளர்
சுப்பிரமணி 👎👎👎👎👎👎 இந்த பதிவு உண்மை எனில் நான் ஜாக்டோவில் இருப்பதற்கு வெட்கப்படுகிறேன்..👎👎👎👎👎👎R..ரெங்கபாஷ்யம் இடைநிலை ஆசிரியர்...கரூர்
இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய மாற்றம் கிடைக்குமா ? ----சந்தேகங்களும் --விளக்கங்களும் ...டாட்டா கிப்சன் .




 

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு; TATA சார்பில் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் TATAவை இணைத்து கொள்ள மனு தாக்கல்


மாதச் சம்பளம் வாங்கும் பலருக் கும் தங்களது சம்பளம்
எவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாது. சம்பளத்தில் பிடித்தம் போக இவ்வளவு கையில் கிடைக்கும் என்று சொல்வார்களே தவிர,
மொத்த சம்பளம் எவ்வளவு?
அதில் என்ன என்ன பிடித்தம் செய்கிறார்கள்?
எதற்கு பிடிக்கிறார்கள்? என்பது தெரியாது.

வருமான வரிக்காக பிடிக்கிறார்களா? அல்லது
வருங்கால வைப்பு நிதிக்காக (பிஎப்) பிடிக்கிறார்களா? என்பதைகூட அறிந்து கொள்ள மாட்டார்கள். பிஎப் பணம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும் எவ்வளவு பிடிக்கிறார்கள்? என்பது தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். தவிர தங்களது பிஎஃப் கணக்கில் இதுவரை எவ்வளவு தொகை இருக்கிறது? அதன் பலன் என்ன? என்பது குறித்து விவரங்களும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர்.

இந்த சந்தேகங்களை நீக்கும் சிறு முயற்சி இந்த கட்டுரை.
எவ்வளவு பிடிக்கிறார்கள்?
***************************************
பணியாளர்களின் வருங்கால பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது தான் வருங்கால வைப்பு நிதி. வாங்கும் சம்பளத்தில் பணியாளர்களிடம் இருந்து 12 சதவீத தொகை பிடித்தம் செய் யப்படும். பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பாக அதற்கு இணையான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் நிறுவனம் முதலீடு செய்யும். பணியாளர்கள் வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும் தொகையில் 8.33 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்கும் 3.67 சதவீத தொகை வருங்கால வைப்பு நிதியாகவும், 0.50 சதவீத தொகை காப்பீட்டுக்கும் செலுத்தப்படும். ஆனால் சமீப காலமாக சிடிசி (cost to company) முறையில், நிறுவனங்கள் முதலீடு செய்யப்போகும் தொகையையும் சம்பளத்தில் சேர்த்து விடுகிறார்கள்.

சம்பளத்தில் 12 சதவீதம் என்பது விதிமுறையாக இருந்தாலும் கூட, எவ்வளவு அதிகமாக சம்பளம் இருந் தாலும், புதிய விதிமுறைகளில் குறைந்தபட்சம் 1,800 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் பல நிறுவனங்கள் இதை பின்பற்றுகின்றன. இந்த தொகையையும் நிறுவனங்கள் பென்ஷன், காப்பீடு என்று பிரித்து முதலீடு செய்கின்றன.
நிரந்தர கணக்கு எண்
*******************************
புதிதாக பொறுப்பேற்ற மத்திய அரசு ஆரம்ப காலங்களில் செய்த முக்கியமான பணி நிரந்தர வைப்பு நிதி எண் ( யுஏஎன் - Universal Account Number) கொண்டுவந்ததுதான். இதன் மூலம் பி.எஃப். தொகையை கையாளுவது எளிதாகிவிட்டது. பலர் அடிக்கடி வேலை மாறுகிறார்கள். ஆனால் புதிய நிறுவனத்துக்கு சென்றவுடன் பழைய பிஎஃப் குறித்து கவலைப்படுவதில்லை. இதனால் பல கோடி ரூபாய் தொகை யாரும் கோரப்படாமலேயே இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக யுஏஎன் கொண்டுவரப்பட்டது. இதனால் புதிய நிறுவனத்துக்கு செல்லும் போது யுஏஎன் எண்ணை கொடுக்கும் பட்சத்தில் ஏற்கெனவே இருக்கும் தொகையில் புதிய பி.எஃப் தொகையும் சேர்ந்துவிடும். பயனாளிகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் பிஎஃப் தொகையை கையாளலாம்.

தெரிந்துகொள்வது எப்படி?
****************************************
சில வருடங்களுக்கு முன்பு பி.எஃப். கணக்கில் இருக்கும் தொகையை தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இப்போது இணையம் வந்த பிறகு அனைத்தும் எளிதாகிவிட்டது. யுஏஎன்-யை அடிப்படையாக வைத்து பி.எஃப் இணையத்தில் நம்மிடம் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு மாதமும் நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறதா, வட்டி எப்போது வரவு ஆனது. பழைய நிறுவனத்தில் இருக்கும் தொகை என்ன என்பது உள்ளிட்ட அனைத்து தகவல் களையும பார்த்துக்கொள்ள முடியும்.

இணையதளம் தவிர பி.எஃப் கணக்கை நிர்வகிக்க செயலி இருக் கிறது. அரசின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் நம்மு டைய கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். தவிர அந்த இணையதளத்தில் இருக்கும் எண்ணுக்கு மிஸ்டு கால் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் கணக்கில் இருக்கும் தொகையை அறிந்துகொள்ளலாம்.
பணம் எடுப்பது எப்படி?
***********************************
பி.எஃப். பணத்தை எடுக்க முடியும் என்றாலும் முடிந்த வரைக்கும் எடுக் காமல் இருப்பது நல்லது. தற்போதைய சூழலில் ஓய்வு காலத்துக்காக யாரும் தனியாக சேமிப்பது இல்லை, சேமிக்க முடியவில்லை. அதனால் ஓய்வு காலத்துக்கு கைகொடுப்பது இந்த பிஎஃப் தொகை என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.

பணியில் சேர்ந்து ஐந்து வருடத் துக்குள் பி.எஃப். தொகையை எடுக்க வேண்டும் என்றால் 10 சதவீத வரி (டிடீஎஸ்) பிடித்தம் செய்யப்படும். 5 வருடங்களுக்கு மேல் என்றால் வரிபிடித்தம் செய்யப்படமாட்டது. அதேபோல இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வேலையில் இல்லை என்றாலும் பி.எஃப். தொகையை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் உள்ளன. அதனை பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம். பணம் எடுப் பதை தவிர சில தேவைகளுக்கு முன் பணம் கூட பெற்றுக்கொள்ளலாம். திருமணம், குழந்தைகளில் கல்விச் செலவுகள், மருத்துவ சிகிச்சை, வீடு கட்டுதல் ஆகிய தேவைகளுக்கு எடுத்து கொள்ளலாம்.
ஆன்லைன் பரிவர்த்தனை
******************************************
வரும் மார்ச் மாதம் முதல் ஆன் லைனிலேயே பணம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை செலுத்தலாம். மூன்று மணி நேரத்தில் பரிசீலனை செய்யப்பட்டு பி.எஃப். தொகை அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்படும். இந்த வசதியை பிஎஃப் ஆணையர் கே.கே.ஜலான் தெரிவித்திருக்கிறார். தற்போது ஆதார் எண் இருப்பவர்கள் 3 நாட்களில் தங்களது தொகையினை பெற்றுக் கொள்ள முடியும்.

பங்குச் சந்தையில் பி.எஃப்.
***************************************
ஓய்வு காலத்துக்காக சேமிக்கப்படும் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்களே என்று அச்சப்பட தேவையில்லை. இப்போது பி.எஃப். ஆணையத்தில் 8.5 லட்சம் கோடி ரூபாய் தொகை இருக்கிறது. இவை அரசாங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்போவதாக பி.எஃப். அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த தொகையில் முக்கியமான குறியீடுகளாக பிஎஸ்இ இடிஎப் மற்றும் என்எஸ்இ இடிஎப்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கூடுதலாக கிடைக்கும் தொகையில் அதிகபட்சம் 15 சதவீதம் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதம்
**********************
நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர் ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.

ஓய்வுகாலத்துக்கு இன்னும் கூடுதலாக முதலீடு செய்ய விரும்பினால் அதற்கும் வாய்ப்பு உண்டு. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 12 சதவீதம் தவிர இன்னும் அதிகமாக பிடிக்கலாம் என்று நினைக்கும் பட்சத்தில் பணி யாற்றும் நிறுவனத்திலேயே எழுதி கொடுத்து பிடித்தம் செய்யலாம். இந்த விருப்ப தொகை விபிஎப் ஆக முதலீடு செய்யப்படும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், சேமிக்கும் பழக்கம் இல்லாத மாத வருமானம் கொண்டவர்கள் தங்களது ஓய்வு காலத்தை பொருளாதார சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் பிஎஃப் திட்டம் உண்மையிலேயே ஓய்வு காலத்தை வசந்தமாக்கும் திட்டம்தான்.
நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.
நன்றி : தி இந்து நாளிதழ் - 26.10.2015
டாட்டா சங்கத்தின் உச்ச நீதிமன்றம் ஊதிய வழக்கு எண் SLP . C. 9109/2015. I. A. No. 6/2015 விசாரணை விபரம் .
இன்று உச்ச நீதிமன்றத்தில் 6 வது ஊதியகுழு இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சினை மற்றும் இரு வேறுபட்ட ஊதிய முறையை ரத்து செய்து 1.1.2015 முதல் டிப்ளோமா கல்வி தகுதி படி 1-6-88 முதல் பெற்று வந்த ஊதியம் ஆறாம் ஊதிய குழுவில் மறுக்கப்பட்டுள்ளது .இதை ரத்து செய்து ஊதியம் 9300+4200 வழங்கிட வேண்டும் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .அதன் விசாரணை இன்று 5-11-2015 நடைபெற்ற இருந்து .ஆனால் விசாரணை பட்டியலில் இன்று இடம்பெற வில்லை .நமது மூத்த வழக்கறிஞர் .திரு.ந்ந்தகுமார் அவர்கள் தெரிவித்த படி நாளை அல்லது 14-11-2015 அன்று விசாரணைக்கு வரும் என தெரிவித்தார்கள் .நல்லது நடக்கும் இடைநிலை ஆசிரியர் ஊதியம் டாட்டா சங்க வழக்கில் மாற்றம் கிடைக்கும் .அனைவரும் ஆதரவு தாரீர் .இழந்த உரிமை மீட்போம் ........டாட்டா கிப்சன் .9443464081.
நெல்லை மாவட்டம் முக்கூடல் சொக்கலால் மேல்நிலை பள்ளியில். பணி செய்து வந்த திருமதி .மரகதவல்லி .இடைநிலை ஆசிரியர் .பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கேட்டதனால் இடைநிலை இரண்டு மாத காலம் தற்காலிக பணிநீக்கம் செய்ய பட்டார் .டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்கள் வழிகாட்டுதல் படி 3-11-2015 பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக DEO. அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது .அவர்களுக்கு ஆதரவாக டாட்டா கிப்சன் அவர்கள் கலந்து கொண்டார் .போராட்டம் மாலை 6.45 மணி வரை நடைபெற்றது .இறுதியாக CEO .and DEO மற்றும் காவல்துறையினர் ஆகியோர் முன்னிலையில் பொது செயலாளர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை படி எவ்வித நிபந்தனைகள் இல்லாமல் மீண்டும் பணியில் சேர நிர்வாகம் ஆணை வழங்கியது .மேற்படி ஆசிரியர் பணியில் சேர செய்தி வெளியிட்ட( 3-11-2015 மற்றும் 4-11-15 ) அனைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் அனைவருக்கும் டாட்டா சங்கம் சார்பாக நன்றிகள் தெரிவிக்கிறோம் .மேற்படி ஆசிரியர் இன்று 5-11-15 பணியில் சேர்ந்து உள்ளார்கள்
ஓ!இடைநிலை ஆசிரியப் பேரினமே! 🌺
அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்கிறார்களே!
நீங்களோ எத்தனைதான் அடி அடித்தாலும் அசையாமல் நிற்பது ஏனோ?
ஆறாவது ஊதியக்குழு இடைநிலை ஆசிரியர் வயிற்றில் அடித்திருக்கிறதே?
உனது வயிறு பற்றிக்கொண்டு எரியவில்லையா?
பொறுமை கடலினும் பெரிது எனும் வள்ளுவன் வாக்குக்கிணங்க பொறுமை காக்கிறாயோ?
இது பொறுமையாக இருக்க வேண்டிய காலமா? இல்லை!இல்லவே இல்லை!
🌺இந்தக் காலத்தில் நீ மௌனமாக இருந்தால் உன் எதிர்கால ஆசிரிய சமுதாயத்தை யாராலும் மீட்டெடுக்க முடியாது என்பதை அறிவாயோ?
🌺ஆறாவது ஊதியக்குழுவில் ₹10,000 பாதிப்பு என்றால் 2016-ல் ஏழாவது ஊதியக்குழுவில் உனது பாதிப்பு ₹20,000 என்பதைஅறிந்தும் மௌனம் காக்கிறாயோ?
நமக்கு காலம் கை கொடுக்கவில்லை.இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது.அதற்குள் ஏதாவது செய்ய வேண்டுமே!
பொங்கியெழு.......
வீறுகொண்டெழு......
🌺👍ஊதியம் பெறும் வரை ஓய மாட்டேன் என உள்ளத்தில் உறுதிகொள்.......
👍🍀
உனக்காக நீ உழைக்காமல் வேறு யார் உழைப்பார்?
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை உலகுக்கு உணர்த்துவோம்!ஒற்றுமையின் பலத்தை உலகுக்கு பறைசாற்றுவோம்!
🍀பாதிக்கப்பட்டவனுக்கே அந்த பாதிப்பின் வலி தெரியும்.உள்ளத்தில் வலி இருந்தால் நிச்சயம் வழி பிறக்கும்.
நம்முடைய தர ஊதியம் ₹2800 காட்டுகிறது நாம் தரம் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்பதை.
நாம் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமானால்,நம் தர ஊதியம் உயர வேண்டும்.
இன்னும் ஏன் பொறுமையாக இருக்கிறாய்?
😛😝யாரோ நமக்காக போராடி வாங்கித் தருவார்கள் என பகல் கனவு காண்கிறாயோ!
😳பகல் கனவு என்றும் பலித்ததில்லையே! இதை நீ அறியாயோ!
யாரும் நமக்காக போராடவில்லை.அவர்கள் அவர்களுக்காக மட்டுமே போராடுகிறார்கள்.அவர்கள் நமக்கு ஒன்றும் பெற்றுத் தரப்போவதுமில்லை.
🐎🐎விரைவாக பாதிக்கப்பட்ட 2009 மற்றும் Tet ஆசிரியர்களை ஒன்று சேர்ப்போம்.நாம் ஒன்றுபட்டால் நிச்சயம் நமக்கு தீர்வு உண்டு......
🙏🙏🙏
🍄🍄ஒவ்வொவரும் நிச்சயம் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கையில்....
🌸🍁 👍👍 உங்களில் ஒருவன்.👍
டாட்டா சங்கத்தின் உச்ச நீதிமன்றம் வழக்கு .SLP(C)No.9109/2015ல் I.A.No.6/2015. அபிடவிட் உங்கள் பார்வைக்கு ......
20 துறைகள் சார்ந்த 52 வகை பணியிடங்களுக்கு அரசு ஆணை எண்.71.நிதி .நாள் .26.2.11 மூலம் ஊதிய குறைப்பு செய்து ஆணையிட பட்டது .அதே அரசு ஆணையில் ஊதிய குறைதீர்ப்பு பிரிவு அமைக்க பட்டது .இந்த பிரிவில் ஊதிய பாதிப்பு மற்றும் முரண்பாடு உள்ளவர்கள் மனு செய்து பாதிப்பை சரி செய்து கொள்ளலாம் .என ஆணையிடப்பட்டது .ஊதிய குறைப்பால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் பல சங்கம் நீதிமன்றம் நாடி தடைகள் பெற்றனர் .இதன் தொடர்ச்சியாக நடந்த வழக்கு விசாரணை W.A.No.504/2012.ன் முடிவில் 27.2.2014.அன்றுசென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழக அரசின் ஒருநபர் குழு அறிக்கை மற்றும் ஊதியகுறை தீர்க்கும் பிரிவு அறிக்கைகள் ரத்து செய்தது மட்டும் அல்லாமல் ஓய்வு பெற்ற தலைமை நீதி திரு .வெங்கடாசலம் மூர்த்தி அவர்கள் தலைமையில் ஆணையம் அமைத்து தீர்ப்பு வழங்கப்பட்டது .
இந்த ஆணையம் தமிழக அரசு உழியர்களுக்கு ஆறாவது ஊதிய குழு வில் ஏற்பட்ட ஊதிய முரண்பாடு குறித்து ஆய்வுகள் செய்து அரசுக்கு அறிக்கைகள் கொடுக்க வேண்டும் .மேலும் 20 துறைகள் சார்ந்த 52. வகையான பணியிடங்களுக்கு ஊதிய குறைப்பு செய்து சரியா ?.தவறா ?என ஆய்வுகள் செய்து அறிக்கை கொடுத்து அதன்படியே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .இந்த பணியிடங்களுக்கு ஒருநபர் குழு அறிக்கை படி மத்திய அரசு உழியர்களைவிட அதிக ஊதிய நாளது தேதி வரை வழங்கப்படுகிறது .
தற்போது தமிழக அரசுழியர்கள் ஊதிய பிரச்சினை வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது .இந்த வழக்கில் அரசு வெற்றி பெற வேண்டும் என்றால் இடைநிலை ஆசிரியர் களுக்கு பொய்யான காரணம் கூறி 1989 முதல் பெற்று வந்த ஊதியத்தை மீண்டும் வழங்கி ட வேண்டும் .என்ற இக்கட்டான நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது .டாட்டா சங்கத்தின் சட்ட போராட்டத்திற்கு கள போராட்டம் வழு சேர்ந்து உள்ளது நமது சங்கம் மட்டுமே ஆறாம் ஊதிய குழு அறிக்கைகள் சட்ட விரோதமானவை உண்மையில்லாதவை என பல்வேறு ஆதாரம் தாக்கல் செய்து உள்ளது ..இதனால் நமது ஊதிய பிரச்சினை யை தீர்த்தால் தான் 52 வகையான பணியிடங்களுக்கு ஊதிய குறைப்பு செய்தது சரி என அரசு வழக்கில் வெற்றி பெற முடியும் என்ற நிலையை டாட்டா சங்கத்தின் உச்ச நீதிமன்ற ஊதிய வழக்கு ஏற்படுத்தி உள்ளன .இதன் காரணமாக தான் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200 என மாற்றம் செய்திட நடவடிக்கை எடுத்து வருகிறது .
இந்த அபிட்விட் டை பிரின்டு எடுத்து வருகிற CRC.7-11-15 ல் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன் .....
G o.71.date .26.2.11.and G.o.242 date .22-7-2013
ன் படி ஊதிய குறைப்பு செய்யப்பட்ட 20 துறைகள்

வேளாண்மை துறை .
வேளாண்மை பொறியியல் துறை
கால்நடை பராமரிப்பு துறை .
மீன் வளத்துறை .
நெடுஞ்சாலை துறை .
ஊரக வளர்ச்சி துறை .
போக்குவரத்து துறை.
கைத்தறி துறை.
அரசு வாகனங்கள் பராமரிப்பு துறை .
பொதுப்பணி துறை .
இன்டஸ்ட்ரீஸ் துறை
அரசு இல்லங்கள் துறை .
மருத்துவ போக்குவரத்து துறை .
உடல் உனமுற்றோர் நல துறை .
நகர பஞ்சாயத்து துறை .
மின்சார வாரியம் .சென்னை மாநகராட்சி .
வருவாய் துறை .
காவல் துறை .
வனத்துறை.

டாட்டா கிப்சன் .
பொது செயலாளர் .
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் .
9443464081.
கல்வித்தரம் எப்போது மேம்பாடு அடையும் ?
தற்போது உள்ள நடைமுறைக்கு ஏபில் அட்டை தேவையா? ஏபில் ஏன்?
1.மாணவர்கள் தன் சுய வேகத்தில் கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது.
2. வகுப்புகளுக்கு முக்கியத்துவம் இல்லை. மாணவர்களின் அடைவுத்திறனே முக்கியம்
3. இதனால் 5ஆம் வகுப்புக்குள் எழுத்துக்கள் தெரியாத மாணவர்களே இருக்க முடியாது. அதாவது மிகவும் பின்தங்கி இருக்கும் 5 ஆம் வகுப்பு மாணவன் தன் திறன் 3ஆம் வகுப்பிற்குண்டான திறன் எனில் அவன் 3ஆம் வகுப்பு படிக்கலாம். அதற்காகதான் ஏணிபடிகள்.
4. ஒரு 2 ஆம் வகுப்பு மாணவன் திறன் இருந்தால் நேரடியாக ஏணிப்படிகளை முடித்து 3 ஆம் வகுப்பிற்கு கூட செல்ல முடியும்.
இப்படி மாணவர்களின் குறைந்த பட்ச கற்றல் அடைவை உறுதி செய்ய அப்போதைய Chennai Corporation Commissioner Mr.விஜயகுமார் IAS அவர்களால் உருவாக்கப்பட்டது.
ஏபில் ஏன் வேண்டாம்?

தவறாமல் பங்கு பெறுங்கள் .....

6 வது ஊதிய குழு பிரச்சணை ---ஊதிய வழக்கு --- போரடகளம் --கருத்தரங்கம் ..

இடம் ;- இராமநாதபுரம் ;  நாள் .11.10.2015  மாலை .2.30 மணி .


08.10.2015 . போராட்டத்தில் மாநில அளவில் கலந்து கொண்டோர் விவரம்
(-இயக்குனரிடமிருந்து பெறப்பட்ட தகவல்)

தொடக்கக் கல்வியில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை - 1,12,742
* அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 33,061
* வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள்- 79,681
* பங்கேற்றோர் % -70.68 %

பள்ளிக் கல்வியில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை- 1,07,473
* அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 84,408
வேலை நிறுத்தத்தில்
* ஈடுபட்டவர்கள்- 23,065
* பங்கேற்றோர் % -21.46 %

ஒட்டு மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை- 2,20,215
* அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 1,17,469
* வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள்- 1,02,746
* பங்கேற்றோர் % - 46.65 %

ஆசிரியர்கள் ஸ்டிரைக் அபாரம் -அரசு மெகா ஷாக்.......

8.10.2015 போராட்டத்தில் டாட்டா சங்கம் ..ஆழைக்கப்படாத விருந்தினர் ஆக கலந்து கொண்டது . ஜேக்டோ வில் எண்ணிக்கை அதிகமாக பள்ளிகல்வி துறை சார்ந்த சங்கம் இருந்தாலும் பள்ளிகல்வி துறை யில் பணிபுரியும் ஆசிரியர் கள் அதிகம் பங்கு பெற வில்லை .20% மட்டுமே பங்களிப்பு செய்தனர் .ஜேக்டோ நிர்வாகிகள் அடுத்த கட்ட போராட்டம் செய்யும் முன்னர் தொடக்க கல்வி துறையில் உள்ள அனைத்து சங்கங்கள் இணைத்து இதைவிட வலுவான போராட்டம் உருவாக்க வேண்டும் .நான் பெரியவர் நீ சிறியவர் என்பதை மறக்க வேண்டும் .போராட்டம் செய்ய வராத பள்ளிகல்வி சங்கங்கள் ஒதுக்கப்பட்ட. வேண்டும் .
👥வேறுபாடு கருதாது அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் எனபதில் மாற்றுக் கருத்து இல்லை .
👥 பெரியவர்/ன் என்ற எண்ணம் உண்டான போதே எல்லாம் துண்டாகி விட்டது. இதை உணர வேண்டும்.
👥ஈகோ வை விடுத்து அனைவரும் ஒன்றினையும் போது மட்டுமே வெற்றி சாத்தியப்படலாம்.
👥பள்ளிக்கல்வி இயக்குநரின் அறிக்கையில் வெகு சுலபமாக "சில சங்கங்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபடுகிறது" என்று கூறியுள்ளது நமக்குள் ஒற்றுமையில்லை என்பதையே உலகுக்குத் தெரிவிப்பதாக உள்ளது.
👥 இனி வரும் காலத்தில் "ஒரு சில" என்பதற்குப் பதிலாக "அனைத்து சங்கங்களும்" என்று குறிப்பிடும் நிலையை உருவாக்கினால் மட்டுமே கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும். போராட்டங்கள் விழலுக்கு இறைத்த நீராகாமலிருக்க ஒற்றுமை அவசியம்.
👥ஒன்று படுவோம் போராடுவோம் என்பது வெறும் வார்த்தையாக மட்டும் இருந்தால் போதாது. மனதிலும் உணர்விலும் இருக்க வேண்டும்.....

.டாட்டா கிப்சன் .பொது செயலாளர் .
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் .9025054081.

பள்ளிக்கல்வி - ஆசிரியர்கள் PASSPORT பெற NOC - தெளிவுரை வழங்கி இயக்குனர் செயல்முறைகள்,,,,,,,,,,,,

அக்டோபர் 8 போராட்டம் ---டாட்டா வின் அறிவிப்பு ...


1. 6 வது ஊதிய குழு முரண்பாடு தீர்க்கப்பட வேண்டும் .இடைநிலை ஆசிரியரின் இரு வேறு பட்ட ஊதிய முரண்பாடுதீர்க்கப்பட வேண்டும்

2. CPS திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் 

3.2003--2006 தொகுப்பூதிய பணிக்காலம் பணிகலமாக ஏற்கப்பட்டு பணி நியமன நாள் முதல் பணிவரன்முறை செய்யப்பட வேண்டும் .

என்ற கோரிக்கைகளை மட்டும் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( டாட்டா  ) அக்டோபர் 8 போராட்டத்திற்கு முழு ஆதரவு வழங்கி   போராட்டத்தில் கலந்து கொள்கிறது மேலும் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு வலு சேர்க்க கேட்டுக்கொள்ள படுகிறது.டாட்டா சங்கம் போராட்டத்திற்கு தடை வேண்டி நீதி மன்றத்தில் வழக்கு ஏதும் தாக்கல் செய்ய வில்லை .

மாநில அமைப்பு ....டாட்டா கிப்சன் .