PAGEVIEWERS

Pay commission-ல் எப்படி fitment formula மூலம் புதிய ஊதியம் கணக்கிடப்படுகிறது .........?
தற்போது D.A 119%

01-01-2016 - ல் எதிர் பார்க்கப்படும் 6% கூடுதல் D.A உடன் மொத்த  D.A 125%.
Pay 100% + D.A 125% = 225% = 2.25
# ஒரு வேளை அரசின் அளிப்பாக கூறப்படும் 15% ஊதிய உயர்வு எனில்,
F.F = 2.25 + ( 2.25 × 15% ) = 2.58
# ஒரு வேளை தொழிற் சங்கங்களின் குறைந்த பட்ச கேட்பான 30% உயர்வு எனில்,
F.F = 2.25 + ( 2.25 × 30% ) = 2.92
இந்த F.F ( Fitment Formula ) -ஐ நமது தற்போதைய BASIC உடன் பெருக்கினால் நமது புதிய அடிப்படை ஊதியம் கிடைக்கும்....

 

 

தொடக்ககல்வி இயக்குநர் மதிப்புமிகு இளங்கோவன் அவர்களை சந்தித்து TATA சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கைகள்

1. இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் வழக்கு குறித்தும் நிதி துறைச்செயலாளரின் கடிதத்திற்கு இடைநிலை ஆசிரியரின் கல்வித்தகுதி பணித்தன்மை குறித்து கேட்கபட்டதற்கு 215 பக்கங்கள் கொண்ட ஆதாரங்களின் தொகுப்பு வழங்கப்பட்டது(இவை பள்ளிக்கல்வித்துறை செயலாளரின் நேர்முக உதவியாளர் மற்றும் நிதித்துறைச் செயலாளரிடமும் வழங்கப்பட்டது.
2. திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன் மீதான புகர் வழங்கப்பட்டது இவர் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

3. திருச்சி மாவட்டம் தா.பேட்டை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ரேவதி மீதான புகார் வழங்கப்பட்டது இவர்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார
4. விநாயகம்மிஷன் பல்கலை கழகத்தில் படித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற நமது கோரிக்கைக்கு ஆணை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்
5. பணிமாறுதல் பெற்று ஈராசிரியர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை விடுவித்தல் வேண்டும்
6. ஆசிரியர்கள் உயர்கல்விக்கு பின் அனுமதி ஆணை வழங்க வேண்டும்
7. நெல்லை மாவட்டம் DEEO அலுவலக கண்காணிப்பாளர் மாலா உட்பட பலர் மீது பொதுச்செயலாளர் அளித்த புகார் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ள நகல் வழங்கப்பட்டது இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பணியிட மாற்றம் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித்தேர்வு: இடைநிலை, பட்டதாரிகள் ஏமாற்றம்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் பி.எட். பட்டதாரிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில்ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரைக்குமான இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், நவோதயா பள்ளிகள் போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர ‘சி-டெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

6 வது ஊதிய கமிஷன் அரிவிக்கப்பட்டத்திலிருந்தே எவ்வாறு இடைநிலை ஆசிரியர்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர் என்பதை பார்ப்போம்.

 நடுவன் அரசுக்கு பரிந்துரை செய்த ஊதியக் குழு கமிட்டி ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ துறையில் செவிலியர்களுக்கு மட்டும் சிறப்பு ஊதிய நிர்ணயங்கள் செய்தல் வேண்டும் ஏனெனில் இவை இரண்டும் சேவையை
அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை என பரிந்துறை செய்தது. எனவே மத்திய அரசு அன்றைய அடிப்படை ஊதியமான 4500 x பெருக்கு விகிதமான 1.86 ஆல் பெருக்க கிடைத்த தொகையான ரூ.8370 அடிப்படை ஊதியமாக வைக்காமல் ரூ.9300 அடிப்படை ஆக வைத்து கிரேடு ஊதியமாக 4200 சேர்த்து ஒரு இடைநிலை ஆசிரியரின் அடிப்படை ஊதியம் ஆக ரூ13500 அறிவித்தது. எள்முனையளவும் குறையாது மத்திய அரசின் பரிந்துறைகளை அறிவிப்போம் என அறிவித்த அன்றைய தமிழக அரசு இடைநிலை

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் : ஒரு லட்சம் ஆசிரியர்கள் ஏமாற்றம் .-உறுதிமொழி என்னாச்சு?தினகரன் செய்தி

 

 

இடைநிலை ஆசிரியர்களில் 1-6-2009 பின்  நியமனம்  ஆறாவது ஊதியகுழுவினால் ஊதிய இழப்பே  என்பதால் பழைய ஊதியம் போதும் ,புதிய ஊதியம் வேண்டாம்.

ஆறாவது ஊதியக்குழு ஊதிய விகிதம் 01.6.2009 முதல் இடைநிலை ஆசிரியர்களாக புதியதாக  நியமிக்கப்படடவர்களுக்கு, முந்தைய ஊதிய விகிதத்தை ஒப்பிடுகையில் ஊதிய இழப்பையே ஏற்படுத்தியுள்ளது. 1.6.2009 தேதியை கொண்டு பழைய ஊதிய விகிதம் மற்றும் புதிய ஊதிய விகிதம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் விளங்கும். 


தற்போது புதிய ஊதிய விகிதத்தினருக்கான  D.A. அறிவித்த பின்னர் முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்று வருபவர்களுக்காக ஒரு அகவிலைப்படி  அரசாணை வெளியிடப்பட்டுவருகிறது. தற்போது 80% - க்கான D.A  அரசாணை  வெளியிடப்பட்ட பின்னர், முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்றுவருபவர்களுக்காக நிதித்துறை அரசாணை  258 நாள்.14.5.2013 இல் D.A. 166% -க்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தை விட, முந்தைய ஊதிய விகிதம் (பழைய ஊதிய விகிதம்) நடைமுறையில் இருந்திருந்தாலே ஊதியம் அதிகம் இருந்திருக்கும் என்பதை விளக்கிக்காட்ட விரும்புகிறேன்.

முந்தைய ஊதிய விகிதமே  இருந்திருந்தால் பெற்றிருக்கக்கூடிய ஊதியம்:

         BASIC PAY                          =       4500
         DEARNESS PAY (D.P)        =       2250
         D.A. 166%                             =     11205
                                                           ___________
         TOTAL                                          17955
                                                           ____________
         (D.A. நிதித்துறை அரசாணை  258 நாள்.14.5.2013 இன் படி)

ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறுபவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு.

           BASIC                                 =      5200
           GRADE PAY                       =      2800
           P.P.                                    =        750
           D.A. 80%                             =      7000
                                                              _________
           TOTAL                                        15750
                                                              __________

மூன்றாவது ஊக்க ஊதிய (3rd Incentive) உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் -15.


 Govt issued  pay   9300+4200  to SSLC,Tamil + English shorten   qualification 

but 

HSC+D.T.Ed qualified teacher  get only  5200+
gp 2800+750pp----ஏன் ?

dears think about it.










ன் இனிய அப்பாவி இடைநிலை ஆசிரிய தோழனே! உன் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக உன்னிடமிருந்து பறிக்கப்படுவதை உணர்ந்தாயா? உன் தரநிலை தர ஊதியத்தால் தரம் கெட்டு போனதை அறிந்தாயா? அறிந்தும் உன்னிடம் எவ்வித சலனமோ, சஞ்சலமோ இருப்பதாக தெரியவில்லை. உன்னால் உனக்கான சரியான இயக்கத்தைக்கூட தெரிவு செய்ய இயலாமல் சிதறிக் கிடக்கிறாய். போராட்ட களத்தில் உன் பங்களிப்பு என்பது சொல்லும் அளவிற்கில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஏன் இந்த தயக்கம். நாம் ஏன் செல்ல வேண்டும்? நமக்காக யாராவது போராடுவார்கள் என்ற அசட்டையா? இல்லை அச்சமா? புரியவில்லை. இந்த நாட்டின் தலைவிதியை நிரணயிக்கப்போகும் மாணவர் சமுதாயம் உன் கையில். உன்னுடைய பிரதிபலிப்பு உன் மாணவர் சமுதாயத்திற்கும் தொடரும் என்பது உனக்கு பரியாததா?. உன் உரிமைகளைக் கூட கேட்க திராணியற்று ஊமையாய் உருக்குலைந்து இருக்கும் உன்னால் எப்படி உன் மாணவர் சமுதாயத்திற்கு உரிமையை பெற கற்றுக்கொடுக்க போகிறாய்?. போராட்டக் களத்தில் மற்றவர்கள் போராடிப் பெறும் உரிமைகளை எவ்வித கூச்சமும் இன்றி எப்படி உன்னால் அனுபவிக்க இயலுகிறது. மீண்டும் பகத்சிங் பிறந்தா உன்னை காப்பற்ற முடியும்?. இல்லை சேகுவரா தோன்ற வேண்டுமா?. உனக்கான பகத்சிங், சே யார் என்று அடையாளம் கண்டுக்கொள். இன்று தவறவிட்டால் இழந்த உரிமைகளை உன்னால் இனிமேல் பெற இயலாது. பல கட்ட போராட்டங்கள் தனித்தும், இணைந்தும் அரங்கேற்றியாகிவிட்டது. அரசோ, அதிகாரிகளோ அசையவில்லை. 30000க்கும் குறைவாக உள்ள பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு நீக்க முன்வர அரசு தயங்க காரணம் யோசித்தாயா? தொடக்கக்கல்வித் துறையில் உள்ள சங்கங்களின் போராட்டங்களை பார்த்தாலே பயம் கொள்ளும் அரசாங்கம் அமைதி காப்பதன் அர்த்தம் புரிந்தாயா? போராட்ட களத்தில் உன் பங்களிப்பு குறைந்ததன் விளைவே என்பதை நீ அறிவாயா?. அளவு மாற்றம் குணம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை என்றாவது நினைத்ததுண்டா?. போராட்டம் யாருக்கோ என்று வெளியில் நின்று வேடிக்கை பாரப்பது எவ்வளவு கேவலம் என்பது இனிமேலாவது உணர்ந்து கொள். இயக்கங்கள் அறிவிக்கும் போராட்டத்தில் எழுச்சியுடன் கலந்து கொள்ள தயாராகு. மற்றவர்களையும் தயார் படுத்து. இடைநிலை ஆசிரியர்களில் இளைஞர்கள் பலம் அதிகமாகிவிட்டது. உன் பலத்தை பலவீனமாக்க சில சுயநலமிக்க தலைவர்கள் திட்டமிட்டு காய் நகர்த்துகிறார்கள். அதில் சிக்கி சின்னாபின்னமாகி விடாதே. சிந்தித்து செயல்படு. சிந்தணை செய்யாதவன் ஜெயித்ததாக வரலாறு இல்லை. உனக்காக போராட கூட்டு நடவடிக்கைக்கு 

TATA  KIPSON.9443464081.

உணர்வாயா? மற்றவர்க்கும் உணர்த்துவாயா?
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!

உரிமையைப் போராடிப் பெறுவோம்!!!

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு; TATA சார்பில் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் TATAவை இணைத்து கொள்ள மனு தாக்கல்.வழக்கு வருகிற 16 அல்லது 17.11.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் என நமது வழக்கறிஞர் அவர்கள் இன்று தொலைபேசி மூலம் தெரிவித்தார்கள் .


ஒரு நபர்க் குழுவின் பரிந்துரை அடிப்படையில் டிப்ளமோ பட்டம் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9300, தர ஊதியம் ரூ.4200 வழங்கப்பட்டுள்ளது என அரசு அறிவிப்பு...RTI--அரசு கடித எண் ;41541/சி.எம்.பி.சி./2013.நாள்.20.8.2013.

 

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - அரசு மேல்நிலை / உயர்நிலைப் பள்ளிகளில் 23.08.2010க்குப் பின்னர் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டவர்களில் 23.08.2010க்கு முன்னர் சான்றிதழ் சரிப்பார்ப்பு நடந்திருப்பின் ஆசிரியர் தகுதித் தேர்ச்சி பெற தேவையில்லை, மேலும் அவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடிக்க ஆணை

நிதித்துறை - G.O MS : 282 - அரசு ஊழியர் பணியிலிருக்கும் போது இறந்துவிட்டால் வழங்கப்படும் ஈமச் சடங்கு நிதி ரூ.5000/- இல் இருந்து ரூ.25000/- ஆக உயர்த்தி அரசானை வெளியீடு...........

ஜாக்டோவின் அறிவிப்பு!!!
அன்பார்ந்த இடைநிலை ஆசிரியர்களே!!
அனைவருக்கும் வணக்கம்.நீங்கள் ஊதியம் குறித்து தேவையில்லாத பதிவுகளையும் கண்டனங்களையும் பதிவு செய்து வருவதை நாங்கள் அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.உங்களின் மனவேதனைகளும் ஆதங்கங்களும் எங்களுக்கு புரியாமலில்லை.நம் கையில் எதுவுமில்லை.அரசு நமக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.நாம் பொறுத்திருந்து தான் சாதிக்க முடியும்.எடுத்தவுடனேயே ஊதிய முரண்பாட்டை நீக்கு என்று கூறிவிட முடியாது.படிப்படியாகத்தான் படிகளில் ஏற வேண்டும். இன்னுமோர் பத்து ஆண்டுகளுக்குள் நிச்சயம் நாம் மத்திய அரசுக்கு இணையான 9300+4200 பெற்றே தீருவோம்.அதுவரை பொறுமையாக இருங்கள் இடைநிலை ஆசிரியர்களே.நாங்கள் எப்பாடுபட்டாவது உங்களின் உரிமையை பெற்றுத் தருவோம்.
இன்னும் ஓர் இரண்டு மூன்று வருடங்களாவது போராட்டம் நீண்டு போகட்டும் அப்போதான் அரசு நம் போராட்டக் குணத்தை அறியும்.நாம் போராளிகள் என்பதை அரசுக்கு ஒரு சில ஆண்டுகளாவது போராடிக் காட்ட வேண்டாமா.அதற்குள் தலைமையாசிரியர்களுக்கு நிகரான ஊதியம் கேட்டால் எப்படி?
நீங்களே சற்று சிந்தியுங்கள்.
அப்டேட் ஆகாமல் அப்படியே இருக்கும் எங்களை உங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது ஊதியம் மட்டுமே. அதையே நீக்கிவிடு என்றால் உங்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் நீங்கிவிடாதா? பிறகெப்படி எங்களுக்கான மதிப்பை பள்ளியில் நிலைநாட்டிக் கொள்வது.உங்களின் ஊதியம் பெற்றுத் தருவது எங்கள் கடமை.போராடாமல் எதுவும் கிடைத்து விடாது.இதுவரை நாம் பெற்றவை அனைத்தும் போராடி பெற்றவையே.எஸ்மா,டெஸ்மா சட்டங்களையே பார்த்தவங்க தான் நாம.ஆசிரியர்களின் போராட்டம் தோற்றதா சரித்திரமே இல்லை எங்களின் ஊதியம் குறைவுபடும் சமயத்தில் மட்டும்.இது ஏனோ உங்களின் ஊதிய முரண்பாடு களைவதில் மட்டும் பலிக்காமல் போய்விட்டது.

பரவாயில்லை இனிவரும் போராட்டங்களில் நாம் நிச்சயம் நம் பலத்தைக் காட்டுவோம்.இங்கே ஒரு உண்மையை நாங்கள் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.ஏனென்றால் எங்களால் இனியும் உங்களை ஏமாற்ற முடியாது. என்னவெனில் இதில் முழுவதும் பாதிப்பு உங்கள் சார்ந்ததாகவே இருப்பதால் எங்களால் இதில் அவ்வளவாக எவரும் தீவிரம் கொண்டு ஈடுபட முடியவில்லை.உங்களுக்காக நாங்கள் ஏன் போராட வேண்டும் என்ற மனநிலை நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ளதும் உங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
மேலும் வயதான காலத்தில் பொண்டாட்டி பிள்ளைகளை பிரிந்து சங்க செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொண்டு உங்களுக்காக பாடுபடுவதில் எங்களின் மனைவிமார்கள் எள்ளளவும் மகிழ்ச்சி கொள்ளவில்லை.இது மேலும் எங்களுக்கு தளர்வையே ஏற்படுத்துகிறது.

இத்தனையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காக நாங்கள் உழைத்து வருகிறோம் என்பதை உங்கள்
மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
எங்களால் முடியாதது எதுவும் இல்லை.இப்படியே நீங்கள் தேவையற்ற விமர்சனங்களைக் கையாண்டால் எங்களால் உங்களின் ஊதியத்தை பெற்றுத் தர முடியாது என்பதை இங்கு அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

எங்களால் இடைநிலை ஆசிரியர்களாகிய உங்களின் விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியவில்லை.எங்கள் அனைவரின் காதுகளிலிருந்தும் இரத்தம் வருவதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியுமா என்பது எங்களுக்குத் தெரியவில்லை.
பரவாயில்லை அதை நாங்கள் தாங்கிக்கொள்கிறோம். நாங்கள் மனது வைத்திருந்தால் உங்களின் ஊதியம் 9300+4200 ஐ எப்பவோ வாங்கிக் கொடுத்திருக்க முடியும்.
ஆனால் தலைமையாசிரியர் பதவிக்கும் இடைநிலை ஆசிரியர்
பதவிக்கும் இடையே வேறுபாடுகள் வேண்டாமோ?

நீங்கள் எங்களின் இடத்திலிருந்து பார்த்தால்தான் எங்களின் வேதனை புரியும்.பரவாயில்லை விடுங்கள் அதை.இதுவரை நடந்துள்ள போராட்டங்கள் அனைத்திலும் இடைநிலை ஆசிரியர்களான நீங்கள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளீர்கள்.இனிவரும் காலங்களிலும் அத்தகைய நல்லதொரு பங்களிப்பை நீங்கள் நல்குவீர்கள் என்று நம்புகிறோம்.
மேலும் புதிய ஆசிரியர்களின் பயவுணர்வை போக்கி போராட்டங்களில் பங்கேற்பதால் எவ்வித பாதிப்பும் வந்துவிடாது என்பதை நீங்கள் எடுத்துரைத்து அவர்களையும் போராட்டக் களத்திற்கு கொண்டுவர வேண்டும்.
போராட்டக் காலங்களில் நாம் இழந்த ஊதியத்தை மீண்டும் அரியரோடு பெற்றுள்ளோம் எனவே எதற்கும் அஞ்ச வேண்டாம் என்று கூறுங்கள்.

மேலும் ஒரு உண்மையை தங்களிடத்தில் கூற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.ஜாக்டோவில் இருக்கும் வயதான தாத்தாக்களின் ஒத்துழைப்பு சரிவரக் கிடைக்காத காரணத்தினால் ஏறக்குறைய ஜாக்டோ செத்துவிடும் நிலையில் உள்ளது.
அதற்காக நம் ஊதியப் பிரச்சினையை விட்டுவிடவா முடியும்.

முடியாது எப்பாடுபட்டாவது இழந்த நம் உரிமையை மீட்டே தீருவோம்.
செய் அல்லது செத்துமடி என்று யாரோவொரு இடைநிலை ஆசிரியன் கூறுவது என் செவிகளில் விழுகிறது.பரவாயில்லை கேட்டுவிட்டு போகட்டும்.
அதற்காக நாங்கள் செத்து விடவா முடியும்?
நமக்கு மாணம் பெரிதல்ல உசுறுதான் முக்கியம்.முடியாது என்று விட்டுவிட்டால் இதுவரை நாங்கள் கட்டிக்காத்த மாணம்
என்னாவது.

அப்புறம் எப்படி உங்களிடம் சந்தா வாங்குவது?
தரையில் விழுந்தாலும்
மீசையில் மண் ஒட்டலைன்னு கூறும் நாம் அப்படியே உங்களை அம்போன்னு விட்டுவிடவா முடியும்? எங்களுக்கு உங்களின் சேவை எப்போதும் தேவை.கூட்டம் சேர்க்கவும்,கோஷம் போடவும், சந்தாகொடுக்கவும் இடைநிலை ஆசிரியர்களாகிய நீங்கள் தேவை.
எங்களால் உங்கள் பிரச்சினையை தீர்க்க முடியாது என்று எப்படி விட்டுவிட முடியும்?

இருந்தாலும் நான் இங்கே ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறேன்.உங்கள் (இ.நி.ஆ) மேல் இருக்கும் அக்கறையால் உண்மை ஒன்றை அழுத்தமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
எங்களால் உங்கள் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியாது.கஜானா காலியாம்.
இன்னும் பத்தே பத்து வருடங்களில்
உங்கள் ஊதியம் 9300+4200 உங்கள் கையில் அதற்கு நாங்கள் கியாரன்டி.இல்லை எனக்கு பிரச்சினை இப்பவே தீர வேண்டும் என்றால் உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் தனியாகப் பிரிந்து கூட போராடி உங்களுக்கானதைப் பெற்றுக் கொள்ளுங்கள்.எங்களை நம்பியிருங்கள் என்று தான் கூறுகிறோம்.

ஆனாலும் நீங்கள் எங்களை விட்டு சென்றால் அதற்கு ஜாக்டோ பொறுப்பாகாது.
ஜாக்டோ கோமாவில் இருப்பதென்னவோ உண்மைதான் ஆனால் செத்துவிடவில்லை தலைமையாசிரியர்களான எங்களுக்கு ஏதாவதொரு பாதிப்பு ஏற்படும்போது மட்டும் அது வீறுகொண்டு எழும்,இப்போதல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்து வரக்கூடிய போராட்டங்களில் இடைநிலை ஆசிரியர்கள் எல்லோரும் கண்டிப்பா தவறாமல் கலந்து கொள்ளவும்.
வெற்றி நமதே!!
வெற்றி நமதே!!
போராடுவோம்!!
போராடுவோம்!!
இறுதிவரை ( சாகும் வரை) போராடுவோம்!!

வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!
வாழ்க ஜாக்டோ
வளர்க ஜாக்டோ

இப்படிக்கு ஜாக்டோ ஒருங்கினைப்பாளர்
சுப்பிரமணி 👎👎👎👎👎👎 இந்த பதிவு உண்மை எனில் நான் ஜாக்டோவில் இருப்பதற்கு வெட்கப்படுகிறேன்..👎👎👎👎👎👎R..ரெங்கபாஷ்யம் இடைநிலை ஆசிரியர்...கரூர்
இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய மாற்றம் கிடைக்குமா ? ----சந்தேகங்களும் --விளக்கங்களும் ...டாட்டா கிப்சன் .




 

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு; TATA சார்பில் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் TATAவை இணைத்து கொள்ள மனு தாக்கல்


மாதச் சம்பளம் வாங்கும் பலருக் கும் தங்களது சம்பளம்
எவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாது. சம்பளத்தில் பிடித்தம் போக இவ்வளவு கையில் கிடைக்கும் என்று சொல்வார்களே தவிர,
மொத்த சம்பளம் எவ்வளவு?
அதில் என்ன என்ன பிடித்தம் செய்கிறார்கள்?
எதற்கு பிடிக்கிறார்கள்? என்பது தெரியாது.

வருமான வரிக்காக பிடிக்கிறார்களா? அல்லது
வருங்கால வைப்பு நிதிக்காக (பிஎப்) பிடிக்கிறார்களா? என்பதைகூட அறிந்து கொள்ள மாட்டார்கள். பிஎப் பணம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும் எவ்வளவு பிடிக்கிறார்கள்? என்பது தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். தவிர தங்களது பிஎஃப் கணக்கில் இதுவரை எவ்வளவு தொகை இருக்கிறது? அதன் பலன் என்ன? என்பது குறித்து விவரங்களும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர்.

இந்த சந்தேகங்களை நீக்கும் சிறு முயற்சி இந்த கட்டுரை.
எவ்வளவு பிடிக்கிறார்கள்?
***************************************
பணியாளர்களின் வருங்கால பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது தான் வருங்கால வைப்பு நிதி. வாங்கும் சம்பளத்தில் பணியாளர்களிடம் இருந்து 12 சதவீத தொகை பிடித்தம் செய் யப்படும். பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பாக அதற்கு இணையான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் நிறுவனம் முதலீடு செய்யும். பணியாளர்கள் வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும் தொகையில் 8.33 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்கும் 3.67 சதவீத தொகை வருங்கால வைப்பு நிதியாகவும், 0.50 சதவீத தொகை காப்பீட்டுக்கும் செலுத்தப்படும். ஆனால் சமீப காலமாக சிடிசி (cost to company) முறையில், நிறுவனங்கள் முதலீடு செய்யப்போகும் தொகையையும் சம்பளத்தில் சேர்த்து விடுகிறார்கள்.

சம்பளத்தில் 12 சதவீதம் என்பது விதிமுறையாக இருந்தாலும் கூட, எவ்வளவு அதிகமாக சம்பளம் இருந் தாலும், புதிய விதிமுறைகளில் குறைந்தபட்சம் 1,800 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் பல நிறுவனங்கள் இதை பின்பற்றுகின்றன. இந்த தொகையையும் நிறுவனங்கள் பென்ஷன், காப்பீடு என்று பிரித்து முதலீடு செய்கின்றன.
நிரந்தர கணக்கு எண்
*******************************
புதிதாக பொறுப்பேற்ற மத்திய அரசு ஆரம்ப காலங்களில் செய்த முக்கியமான பணி நிரந்தர வைப்பு நிதி எண் ( யுஏஎன் - Universal Account Number) கொண்டுவந்ததுதான். இதன் மூலம் பி.எஃப். தொகையை கையாளுவது எளிதாகிவிட்டது. பலர் அடிக்கடி வேலை மாறுகிறார்கள். ஆனால் புதிய நிறுவனத்துக்கு சென்றவுடன் பழைய பிஎஃப் குறித்து கவலைப்படுவதில்லை. இதனால் பல கோடி ரூபாய் தொகை யாரும் கோரப்படாமலேயே இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக யுஏஎன் கொண்டுவரப்பட்டது. இதனால் புதிய நிறுவனத்துக்கு செல்லும் போது யுஏஎன் எண்ணை கொடுக்கும் பட்சத்தில் ஏற்கெனவே இருக்கும் தொகையில் புதிய பி.எஃப் தொகையும் சேர்ந்துவிடும். பயனாளிகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் பிஎஃப் தொகையை கையாளலாம்.

தெரிந்துகொள்வது எப்படி?
****************************************
சில வருடங்களுக்கு முன்பு பி.எஃப். கணக்கில் இருக்கும் தொகையை தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இப்போது இணையம் வந்த பிறகு அனைத்தும் எளிதாகிவிட்டது. யுஏஎன்-யை அடிப்படையாக வைத்து பி.எஃப் இணையத்தில் நம்மிடம் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு மாதமும் நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறதா, வட்டி எப்போது வரவு ஆனது. பழைய நிறுவனத்தில் இருக்கும் தொகை என்ன என்பது உள்ளிட்ட அனைத்து தகவல் களையும பார்த்துக்கொள்ள முடியும்.

இணையதளம் தவிர பி.எஃப் கணக்கை நிர்வகிக்க செயலி இருக் கிறது. அரசின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் நம்மு டைய கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். தவிர அந்த இணையதளத்தில் இருக்கும் எண்ணுக்கு மிஸ்டு கால் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் கணக்கில் இருக்கும் தொகையை அறிந்துகொள்ளலாம்.
பணம் எடுப்பது எப்படி?
***********************************
பி.எஃப். பணத்தை எடுக்க முடியும் என்றாலும் முடிந்த வரைக்கும் எடுக் காமல் இருப்பது நல்லது. தற்போதைய சூழலில் ஓய்வு காலத்துக்காக யாரும் தனியாக சேமிப்பது இல்லை, சேமிக்க முடியவில்லை. அதனால் ஓய்வு காலத்துக்கு கைகொடுப்பது இந்த பிஎஃப் தொகை என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.

பணியில் சேர்ந்து ஐந்து வருடத் துக்குள் பி.எஃப். தொகையை எடுக்க வேண்டும் என்றால் 10 சதவீத வரி (டிடீஎஸ்) பிடித்தம் செய்யப்படும். 5 வருடங்களுக்கு மேல் என்றால் வரிபிடித்தம் செய்யப்படமாட்டது. அதேபோல இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வேலையில் இல்லை என்றாலும் பி.எஃப். தொகையை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் உள்ளன. அதனை பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம். பணம் எடுப் பதை தவிர சில தேவைகளுக்கு முன் பணம் கூட பெற்றுக்கொள்ளலாம். திருமணம், குழந்தைகளில் கல்விச் செலவுகள், மருத்துவ சிகிச்சை, வீடு கட்டுதல் ஆகிய தேவைகளுக்கு எடுத்து கொள்ளலாம்.
ஆன்லைன் பரிவர்த்தனை
******************************************
வரும் மார்ச் மாதம் முதல் ஆன் லைனிலேயே பணம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை செலுத்தலாம். மூன்று மணி நேரத்தில் பரிசீலனை செய்யப்பட்டு பி.எஃப். தொகை அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்படும். இந்த வசதியை பிஎஃப் ஆணையர் கே.கே.ஜலான் தெரிவித்திருக்கிறார். தற்போது ஆதார் எண் இருப்பவர்கள் 3 நாட்களில் தங்களது தொகையினை பெற்றுக் கொள்ள முடியும்.

பங்குச் சந்தையில் பி.எஃப்.
***************************************
ஓய்வு காலத்துக்காக சேமிக்கப்படும் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்களே என்று அச்சப்பட தேவையில்லை. இப்போது பி.எஃப். ஆணையத்தில் 8.5 லட்சம் கோடி ரூபாய் தொகை இருக்கிறது. இவை அரசாங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்போவதாக பி.எஃப். அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த தொகையில் முக்கியமான குறியீடுகளாக பிஎஸ்இ இடிஎப் மற்றும் என்எஸ்இ இடிஎப்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கூடுதலாக கிடைக்கும் தொகையில் அதிகபட்சம் 15 சதவீதம் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதம்
**********************
நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர் ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.

ஓய்வுகாலத்துக்கு இன்னும் கூடுதலாக முதலீடு செய்ய விரும்பினால் அதற்கும் வாய்ப்பு உண்டு. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 12 சதவீதம் தவிர இன்னும் அதிகமாக பிடிக்கலாம் என்று நினைக்கும் பட்சத்தில் பணி யாற்றும் நிறுவனத்திலேயே எழுதி கொடுத்து பிடித்தம் செய்யலாம். இந்த விருப்ப தொகை விபிஎப் ஆக முதலீடு செய்யப்படும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், சேமிக்கும் பழக்கம் இல்லாத மாத வருமானம் கொண்டவர்கள் தங்களது ஓய்வு காலத்தை பொருளாதார சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் பிஎஃப் திட்டம் உண்மையிலேயே ஓய்வு காலத்தை வசந்தமாக்கும் திட்டம்தான்.
நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.
நன்றி : தி இந்து நாளிதழ் - 26.10.2015
டாட்டா சங்கத்தின் உச்ச நீதிமன்றம் ஊதிய வழக்கு எண் SLP . C. 9109/2015. I. A. No. 6/2015 விசாரணை விபரம் .
இன்று உச்ச நீதிமன்றத்தில் 6 வது ஊதியகுழு இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சினை மற்றும் இரு வேறுபட்ட ஊதிய முறையை ரத்து செய்து 1.1.2015 முதல் டிப்ளோமா கல்வி தகுதி படி 1-6-88 முதல் பெற்று வந்த ஊதியம் ஆறாம் ஊதிய குழுவில் மறுக்கப்பட்டுள்ளது .இதை ரத்து செய்து ஊதியம் 9300+4200 வழங்கிட வேண்டும் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .அதன் விசாரணை இன்று 5-11-2015 நடைபெற்ற இருந்து .ஆனால் விசாரணை பட்டியலில் இன்று இடம்பெற வில்லை .நமது மூத்த வழக்கறிஞர் .திரு.ந்ந்தகுமார் அவர்கள் தெரிவித்த படி நாளை அல்லது 14-11-2015 அன்று விசாரணைக்கு வரும் என தெரிவித்தார்கள் .நல்லது நடக்கும் இடைநிலை ஆசிரியர் ஊதியம் டாட்டா சங்க வழக்கில் மாற்றம் கிடைக்கும் .அனைவரும் ஆதரவு தாரீர் .இழந்த உரிமை மீட்போம் ........டாட்டா கிப்சன் .9443464081.