PAGEVIEWERS

ஓய்வூதியம் என்றால் என்ன?
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
நோபல் பரிசும்,இந்தியாவின் மிகஉயர்ந்த பாரதரத்னா விருதும் பெற்ற பொருளாதாரமேதை அமார்த்தியசென் ‘ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தின் சமமான மறுபங்கீடே’ என்று விளக்கமளித்துள்ளார்.

செல்வத்தை உற்பத்தி செய்வதே தொழிலாளிதான்.அதில் அவனுக்குப் பங்கு உண்டு. இந்த அடிப்படையில்தான் 1871ல் ‘ஓய்வூதியச் சட்டம் 1871’நிறைவேற்றப்பட்டது.
‘ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்தாகும்’ அரசியல் நிர்ணயச் சட்டத்தின் 31-ஆவது பிரிவின்படி ஓய்வூதியம் அவரது சொத்துரிமை. ஓய்வூதியம் என்பது ஓய்வு பெற்றவரின் கையில் சென்றுசெர வேண்டும் என ஓய்வூதியச் சட்டம் உறுதிப் படுத்துகிறது. அதை எந்த நீதிமன்றமும்கூடப் பறிமுதல் செய்துவிட முடியாது. உச்சநீதி மன்றம் மன்னர் மான்ய ஒழிப்பு வழக்கில் ‘ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்துரிமை. அரசியல் சட்டத்தின் 31ஆவது பிரிவு அளித்துள்ள இந்த உரிமையைத் தட்டிப் பறிக்க- இந்த அடிப்படை அம்சத்தை மறுதலிக்க நாடாளுமன்றத்துக்குக்கூட அதிகாரமில்லை’ என்று தீர்ப்பு அளித்துள்ளது.
நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்குத் பணிக்கொடை வழங்குவதற்காக பணிக்கொடைச் சட்டம் 1972 (GGratuity Act 1972)நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாட்டில் உள்ள தொழிலாளர் எவரும் பணிக்கொடை இல்லாமல் இருக்கக் கூடாது. எனவே அனைவருக்கும் பணிக்கொடை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பணிக்கொடையைப் பறிக்க அரசுக்கு உரிமை கிடையாது. ஓய்வுபெறும்போது ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெற கம்முட்டேஷன் உரிமையும் ஊழியருக்கு உண்டு.
ஒருவேலையில் சேர்ந்து சுமார் 35 முதல் 40 ஆண்டுகள்வரை தனது உழைப்பை நாட்டுக்குத் தந்து ஓய்வுபெறும் ஒருவர் தனது எஞ்சிய வாழ்நாளை ஓரளவாவது குறைந்தபட்ச வசதிகளோடு வாழவேண்டும் என்ற நோக்கில் அவர் பணியில் இருக்கும்போதே அவரது ஊதியத்தில் ஒருகணிசமான தொகையைப் பிடித்தம் செய்து அத்துடன் அதேஅளவுக்கு அரசின் பங்கையும் சேர்த்து ஓய்வுபெறும் நாளில் அளித்திட உருவானதுதான் வருங்கால வைப்புniநிதித் திட்டம்.இதற்காக நிறைவேற்றப்பட்டதுதான் பிராவிடண்ட் ஃபண்ட் சட்டம்
1952 (Employees Provident Fund Act 1952) அனைவருக்கும் பி.எஃப் இருக்கவேண்டும் என்றுசொல்லும் இந்தச்சட்டத்தின்படி எவர் ஒருவருக்கும் இதை மறுப்பது சட்டவிரோதச் செயலாகும்.
இந்தச் சமூகப்பாதுகாப்புத் திட்டங்களை பா,ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நிதித்துறை அமைச்சகம்22.12.2003ல் பிறப்பித்த உத்தரவு ஆபத்துக்குள்ளாக்கியது. எந்த ஒரு அரசு உத்தரவும் இந்திய அரசியல் சாசனத்தின்படி குடியரசுத் தலைவரின் பெயரில்தான் பிறப்பிக்கப் படவேண்டும். அதற்கு மாறாக மத்திய நிதித்துறை அமைச்சகம் ‘புதிய ஓய்வூதியத் திட்டம்’ என்ற உத்தரவைப் பிறப்பித்தது.
இதன்படி ஓய்வூதியவிதிகள். ஓய்வூதியத்தைத் தொகுத்துப்பெறும் விதிகள்,எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஓய்வூதிய விதிகள்,வருங்கால வைப்புநிதி விதிகள் 1.1.2004க்குப்பின் புதிதாகப் பணியில் சேர்பவர்களுக்குப் பொருந்தாது .

ஓய்வூதிய விதிகளில்தான் பணிக்கொடை விதிகளும், ஓர்ஊழியர் இறந்தபின் அவரது குடும்பத்திற்கு வழங்கும் குடும்ப ஓய்வூதிய விதிகளும்,பணிக்காலத்தில் ஊனம்,நோய் முதலியவற்றால் வேலை இழப்பவர்களுக்கு வழங்கும் இயலாமை ஓய்வூதிய விதிகளும் உள்ளன.
நிதித்துறை உத்தரவின்மூலம் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மேற்பார்வையிடவும், வளர்த்திடவும் ஓர்ஆணையம் 10.10.2003முதல் முன்தேதியிட்டு நியமிக்கப்பட்டது. இந்த ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும். அதன்பின் முறையான சட்டம் இயற்றி அதன்மூலம் உருவாகும் சட்டபூர்வமான ஆணையம் செயல்படும். இது பா.ஜ.க.வின் ஆட்சிக்காலத்தில் நிதித்துறையின் செயல்பாடு.
2004ல் ஆட்சிக்குவந்த காங்கிரஸ் தலைமையிலான முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பா.ஜ.க. கொண்டுவந்த நிதித்துறை ஆணையைச் சட்டபூர்வமாக்க 29.12.2004 அன்று ‘ஓய்வூதிய நிதியை ஒழுங்கு படுத்துதல் மற்றும் வளர்த்தல் ஆணைய அவசரச் சட்டத்தைப்(Pension Fund Regulatory And Development Authority Ordinance) பிறப்பித்தது. இந்த அவசரச் சட்டத்தைச் சட்டபூர்வ மாக்க2005 பிப்ரவரியில் P.F.R.D.A 2005 Bill –ஐ அறிமுகப்படுத்தியது.

ஆனால், ஐ.மு.கூட்டணி 1 அரசை வெளியில் இருந்து ஆதரித்த இடதுசாரிக்கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்த்தன. எனவே இந்த மசோதாவை 14-வது மக்களவை முடியும்வரை அந்த அரசால் சட்டமாக்க முடியவில்லை.இதனால்,7.4.2005ல் அவசரச் சட்டம் காலாவதியானது.
பி.எஃப்.ஆர்.டி.ஏ 2005 பில் –ஐச் சட்டமாக்க முடியாத நிலையில் நிதித்துறை அமைச்சகம் 14.7.2008ல் மீண்டும் ஒரு சுற்றறிக்கை மூலம் இடைக்கால ஆணையத்தின் பதவிக்காலத்தை 8.4.2005முதல் என முன்தேதியிட்டு மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்தது.

10.10.2003ல் நியமிக்கப்பட்ட அந்த ஆணையம் 10.10.2011ல்8ஆண்டுகளைக் கடந்துவிட்டது. 8.4.2005ல் மேலும் 5ஆண்டுகளுக்கு என நீட்டித்த காலமும் 7.4.2010ல் முடிவடைந்து விட்டது
8.4.2010 முதல் சட்டபூர்வத் தகுதியை இழந்துவிட்ட இம்மசோதாவைச் சட்டபூர்வமாக்க ஐ.மு.கூட்டணி2 அரசு 24.3.2011ல்‘.பி.எஃப்.ஆர்.டி.ஏ 2011 பில்’ என அறிமுகப் படுத்தியது.

ஆனால் இடதுசாரிக்கட்சிகள்-குறிப்பாக மார்க்ஸிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா ‘இந்த மசோதாவை வாக்கெடுப்பின் மூலம்தான் அறிமுகப்படுத்த வேண்டும்’ என நிர்ப்பந்தித்தார். அவையில் அன்று போதுமான உறுப்பினர் எண்ணிக்கை இல்லாததனால் காங்கிரஸ் கட்சி பா.ஜ.க. ஆதரவைப்பெற்று மசோதாவை அறிமுகப் படுத்தியது.
அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப் பட்டுவிடுமானல் பழைய ஓய்வூதியத் திட்டதின் சமுதாயப் பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிடும். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10% பிடித்தம் செய்யப்படும். இதற்கு இணையான தொகையை அரசு வழங்கும். இந்த ஓய்வூதிய நிதி மேலாளர்கள் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும்.ஓய்வு பெறும் நாளில் பங்குச் சந்தையின் ஏற்ற,இறக்கங்களுக்கேற்ப ஓய்வூதியம் கிடைக்கும்.பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டால் இலாபம் மட்டுமல்ல: மொத்த முதலீடும் பறிபோய்விடும். அதுமட்டுமா?
புதிய ஓய்வூதியத்திட்டத்தில்
1.ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெறமுடியாது.
2.ஓய்வூதியத்திற்கு அகவிலைபடி சேராது.
3.குடும்பஓய்வூதியம் கிடையாது.
4.பணிக்கொடை கிடைக்காது.
5.புதிய ஊதியக்குழுக்கள் பரிந்துரைக்கும் ஊதியத்திற்கேற்ப ஓய்வூதியம் உயராது.

-இதுபோன்ற பல்வேறு ஆபத்துக்கள் உள்ளதால்தான் நாடுமுழுவதுமுள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்துப் போராடிவருகிறார்கள்.
இப்படி பட்ட cps காகத்தான் போராடுகிறோம் என்பதை cps தோழர்களுக்கும் பொதுமக்களுக்கு ம் தெரியப்படுதுங்கள்.
~tata ....kipson.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா?..
 .................................................................................................................................
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு
அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது. அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது.
ஆனால், தற்போது ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதத்தைப் பிடித்து, அதை பங்குச் சந்தையிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்து, அதன் பயனை அவருக்குத் தருவதான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை முக்கியமான கோரிக்கையாக வைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) போராடியது. ஆனால், மாநில அமைச்சர் “மத்திய அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசால் திரும்பப் பெற முடியாது. அது சாத்தியமில்லாத விஷயம்’’ என்று விளக்கியுள்ளார். அவரின் விளக்கம் சரியானதல்ல.
அமைச்சர்களின் உறுதிமொழி
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பிப்ரவரி 10-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். அவர்களின் முக்கியமான கோரிக்கையும் இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான்.
அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். முதலமைச்சரின் கவனத்துக்கு கோரிக்கைகளைக் கொண்டுசெல்வதாகவும், நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப் பதற்காகக் கூடுகிற சட்டசபை கூட்டத்தொடரின்போது பிப்ரவரி 16-ம் தேதி இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் உறுதியளித்தனர். ஆகவே, வேலைநிறுத்தத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். அமைச்சர்களின் உறுதிமொழியைச் சில சங்கங்கள் ஏற்றுக்கொண்டன.
ஆனால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் புதிய ஓய்வூதியத் திட்டம் திரும்பப் பெறப்படும் என்பதை எழுத்துபூர்வமான உடன்பாடாக ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கேட்டுக்கொண்டது. அப்படிச் செய்துகொண்டால், வேலைநிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்தது. அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் வேலைநிறுத்தம் நீடிக்கிறது.
எப்படி வந்தது?
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம்தான் இதை முதலில் அறிவித்தது. தனது ஆட்சியின் கடைசி ஐந்து மாதங்களுக்கு முன்பாக ஒரு நிர்வாக உத்தரவைப் போட்டது. அதன் மூலம்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் 1.1.2004 முதல் அமலாகியது.
இதற்கான சட்டம் செப்டம்பர் 2013-ல்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இந்தச் சட்டத்தை நிறை வேற்றியது. பாஜக இதை ஆதரித்ததில் ஆச்சரியமில்லை. 2014 பிப்ரவரி 1-ல்தான் இந்தச் சட்டம் அதிகாரபூர்வமாக அரசின் கெஜட்டில் அறிவிக்கப்பட்டது.
தமிழகம்தான் எல்லாவற்றிலும் முன்னோடி ஆயிற்றே? இந்தப் புதிய ஓய்வூதியம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமலாக்கப்பட்டதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே
தமிழக அரசு ஊழியர்களுக்கு 1.4.2003 முதல் அப்போதைய அதிமுக அரசு அமல்படுத்திவிட்டது. 6.8.2003-ல் அரசாணையும் வெளியிட்டது. எனவே, தமிழக அரசு நினைத்தால் அதனைத் திரும்பப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.
ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையச் சட்டம் - 2013 (Pension Fund Regulatory and Development Authority Act - 2013) என்பது மத்திய அரசின் சட்டத்துக்குப் பெயர். இந்தச் சட்டத்தின்3(4) வது பிரிவில், ‘எந்த மாநில அரசும் அல்லது எந்த யூனியன் பிரதேச நிர்வாகமும் ஒரு அறிவிக்கை மூலம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அதன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் என்று பெயர். எனவே, மாநிலஅரசு விரும்பினால்தான், அந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம். விரும்பாவிட்டால், தன் ஊழியர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்திலேயே வைத்துக்கொள்வதைச் சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.
எனவே, இந்தச் சட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நேரடியாகப் பொருந்தும். ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கோ வேறு தனியார், பொதுத்துறை அமைப்புகளுக்கோ நேரடியாகப் பொருந்தாது, கட்டுப்படுத்தாது என்பதுதான் உண்மையான நிலை.
தமிழகத்தால் முடியும்
பல மாநிலங்களில் நவம்பர் 2015 வரை 28 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் திரிணமூல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டமே நீடிக்கிறது. திரிபுராவும் அப்படியே. இந்த மாநிலங்களில் பழைய திட்டம் தொடர்வதை மத்திய சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.
எனவே, தமிழக அரசு உண்மையாகவே விரும்பினால், ஒரு மறு அறிவிக்கையை வெளியிட்டு, அனைத்து அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்பக் கொண்டுவர முடியும். மொத்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் என்ணிக்கையில் 60% பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டனர். மீதியுள்ளோர் பழைய ஓய்வூதிய திட்டத்திலேயே நீடிக்கின்றனர்.
புதிய ஓய்வூதிய சட்டத்தில் இணைந்த ஊழியர்களின் பணம் ரூ.4,661 கோடி. அரசின் பங்களிப்பு ரூ.3,791 கோடி. மொத்தம் ரூ.8452 கோடி. இந்த தொகையை மாநிலத்தை ஆண்ட திமுக, அதிமுக அரசுகள் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்துக்கு பங்குச் சந்தையிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய கடந்த 12 ஆண்டுகளாக அனுப்பிவைக்கவில்லை. இந்தக் காலத்தில் 3,404 பேர் ஓய்வுபெற்றுள்ளனர். 1,890 பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு எந்தப் பணமும் தரப்படவில்லை.
விருப்பம் இல்லையா?
மத்திய அரசுக்கு அனுப்பிவைக்காத அந்தத் தொகை மாநில அரசின் கையில் இருக்கிறது. அரசு விரும்பினால், தன் பங்களிப்புத் தொகையான ரூ.3,797 கோடியை எடுத்துக்கொள்ளலாம். மீதியை அரசு ஊழியர்களின் சேமநல நிதியில் சேர்க்கலாம்.
புதிய ஓய்வூதியத்துக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, இடதுசாரிகளுடன் இணைந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். திமுக உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று 2011 சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று ஜெயலலிதா சென்னையில் அறிவித்தார். ஆனால், இப்போது அதிமுக அமைச்சர் ‘‘இது மத்திய சட்டம். அதனைத் திரும்பப் பெற மாநில அரசால் முடியாது’’ என்று கூறுவது இந்த விஷயத்தில் அரசுக்கு விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது.
சமீபத்தில் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. 3 லட்சம் கோடி ரூபாய்களுக்கும் மேலான முதலீட்டாளர்களின் பணம் பறிபோனது. இத்தகைய நிலையில்லாத, சூதாட்டம் போன்ற பங்குச் சந்தை விளையாட்டுகளில் ஊழியர்களின் வாழ்நாள் சேமிப்பைப் போட்டு அரசு விளையாட வேண்டாம் என்றுதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதை நிறைவேற்றுவதே சிறந்த தீர்வு..m......TATA Sangam.

சட்டப்பேரவை 110விதியின் கீழ்....
அரசு ஊழியர்களுக்கு

🔰குடும்ப நல காப்பீட்டுத்தொகை உதவி 1,50,000/- லிருந்து 3,00,000/- உயர்வு.
🔰அரசு பணிகள் பொது அரசாணைமூலம் முறைப்படுத்தப்படும்.
🔰சத்துணவு ஓய்வூதியம் 1500/- உயர்வு.
🔰சமையல் உதவியாளர் பணப்பயன் ஓய்வின்போது 25,000/- .
🔰நிர்வாக தீர்ப்பாயம் மீண்டும் செயல்படுத்த முடிவு.
🔰பதவி உயர்வு பெற்றுள்ள உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு கணக்கு தேர்வில் விலக்கு.
🔰பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்த புதிய வல்லுநர் குழு.
🔰கிராம செவிலியர்க்கு துறை செவிலியராக பதவிஉயர்வு.
🔰கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம்15,000 .
🔰மருத்துவக்கல்லூரி பேராசிரியர்களுக்கு பதவிஉயர்வு.
🌹🌹🌹TATA...Sangam.🌹🌹
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா** வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க 20.02.16 அன்று வழங்கப்பட உள்ளது .அரசு உழியர்கள் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்காக ...
Voice of TATA:-TATA சங்கம் தேர்தல் ஆணையம் மீது வழக்கு .W.P.(MD).NO.3448/2016.

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 18/2/16 விசாரணைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வருகிறது.
1.கைக்குழந்தை உடைய, தீவிர நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத்திறன் ஆசிரியர் ஆகியோருக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
2. கணவன் மனைவி இருவரும் பணியில் இருந்தால் தேர்தல் பணி ஒரே பூத் அல்லது அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் பணியில் அமர்த்த வேண்டும்.
3.ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தும்போது உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும். 20km சுற்றளவுக்குட்பட்ட பகுதியில் பணி வழங்கவேண்டும். உள்ளிட்ட 10 கோரிக்கைகளை நிறைவேற்றிட
  வலியுறுத்தி பொதுநல வழக்கு.தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.விரைவில் விசாரணை விபரம் மற்றும் தீர்ப்பு விபரம் பதிவிடப்படும் ...
TATA


TATA




TATA - சங்கம் போராட்டம் குறித்த நிலைப்பாடு .....

நமது சங்கத்தின் முந்தய மாநில செயற்குழு தீர்மானத்தின் படி கள போராட்டம் யார் செய்தாலும் ஆதரவு என்ற நிலை பாடு காரணமாக அரசு உழியர்களின் போராட்டத்திற்கு டாட்டா முழு ஆதரவு வழங்குகிறது .மேலும் வரும் நாள்களில் நடை பெறும்  கள போராட்டங்களில் மாவட்ட சூழ்நிலைக்கு ஏற்ப மாவட்ட செயலாளர்களின் முடிவின் படி பேராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என மாநில அமைப்பு கேட்டு கொள்கிறது 
Hello Mr. Xxxx    TATAவின் 5வருட  சாதனைகள் ...

He is commenting about TATA &TATA.
Before commenting anyone...you must know what I am...commenting whom...past history...what is going on now...
Not knowing anything...having lot of strength...what is the use...strength/age will not workout...hand full of dash...what's the use...
Last 9 years what u are doing...
Now also not doing fruitful.....nothing...

இடைநிலை ஆசிரியருக்கு பிரச்ச்னைகள் இருக்குன்னு சொல்லி தூங்கி கிடந்த உங்களை எழுப்பியது இந்த சிறு சங்கங்களே...
என்ன நடந்தது...இன்னும் அரசு இடைநிலை ஆசிரியரை டிப்ளமோ ஹோல்டர் இல்லை என்றுதான் சொல்லி வருகிறது...
சிறு சங்கங்களின் சாதனைகள் கடந்த சில வருடங்களில்....

--மாநில மூப்பு அடப்படையில் பணி நியமனம் உச்ச நீதிமன்றம் மூலமாக.நியமனம் பெற்றவர்கள் மாவட்ட மாறுத்தல் பெற முதன் முதலில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தீர்ப்பு பெற்றது .... நாங்களே..

--இடைநிலை ஆசிரியர்களின் 6வது ஊதிய குழுவில் 'பிரச்சனை உள்ளது' என்று சென்னை உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு .... நாங்களே...

--தற்போது இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300+4200 வழங்கிட ஊதிய பிரச்சனை தொடர்பாக உச்ச நீதி மன்ற வழக்கு - நிலுவையில்....

....தொடக்க கல்வி துறையில் மாநில அளவில் பதவி உயர்வு வழக்கு நிலுவையில் .....

....ஆசிரியர் நலனுக்காய் 10 கோரிக்கைகளை நிறைவேற்றிட தேர்தல் ஆணையம் மீது பொது நல வழக்கு ....மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நாள் ..18.02.2016.

... CPS..திட்டம் தவறானது, 2003 க்கு பின் ஓய்வு ,,மரணம் அடைந்தவைகளுக்கு ( 216 பேர் ) கட்டிய பணம் திரும்ப வழங்கிட வேண்டும் .தற்காலிக ஓய்வுதியம் ரூ.10,000/= அனுமதிக்க வேண்டும் .கமுடேசன் வழங்கிட வேண்டும்.என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ...விசாரணை நாள் ...23-02-2016 .

எங்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும்..

...ஆசிரியாரின் நலனுக்காய் உண்மையாய் உழைக்கும் சங்கம் டாட்டா மட்டுமே.!!!!!


We don't want any appreciation r recognition...
We r fighting on our way...ultimately v also FOR teachers only...
Leave us alone...pl don't pass any negative comments against us....
--from Kipson Tata

நிதிநிலை அறிக்கையில் மரபை பின்பற்றி புதிய அறிவிப்புகள் இல்லை

தமிழக சட்டப்பேரவையின் வழக்கமான மரபை பின்பற்றி புதிய அறிவிப்புகள் எதையும் அரசு மேற்கொள்ளவில்லை என்று நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார். தமிழக அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்த ஓ. பன்னீர்செல்வம், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படாது என்ற பேரவையின் வழக்கமான மரவை பின்பற்றி, அதிமுக தலைமையிலான அரசு புதிய அறிவிப்புகள் எதையும் மேற்கொள்ளவில்லை.


இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கு ரூ.60,610 கோடி  உத்தேசமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்ட மானியத்துக்கு ரூ.5,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றித்திறனாளி உள்ள குடும்பத்தினருக்கு வருமான வரம்பின்றி இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.

பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு 2015-16ஆம் ஆண்டிற்கான நேரடி நியமனம் / இதர நியமன முறைக்கான காலிப் பணியிடம் நிர்ணயம் செய்தல் - ஆணை வெளியீடு....

எச்சரிக்கை... எச்சரிக்கை...
ஜாக்டோவிற்கு எச்சரிக்கை..!!!

திராணி இழந்துவிட்டதா நம் ஜாக்டோ பேரமைப்பு...
மாற்றுத்திறனாளிக்கு உள்ள திராணி கூடவா ஜாக்டோவிற்கு இல்லை...????
கடந்த மூன்று நாட்களாக மாற்றுத்திறனாளிகள் செய்த தொடர் மறியலால் அரசு நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் பட்ஜெட்டில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்றது..
கூட்டம் முடிந்து வெளியே வந்த மாற்றுத்திறனாளிகள்.. பட்ஜெட்டில் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் கோட்டையை நோக்கி தொடர் முற்றுகை செய்வோம் என்று ஆவேசமாக அந்த இடத்திலேயே பத்திரிக்கையாளர்களிடம் அரசுக்கு எச்சரிக்கை செய்துவிட்டு களைந்தனர்..
(இப்படியல்லவா அரசை எச்சரித்து விட்டு வந்திருக்கனும் நம் ஜாக்டோ பேரமைப்பு...ஆனால், பண்ணியதா அதை)
16-ம் தேதி பட்ஜெட்டில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் காலவறையற்ற வேலைநிறுத்தம் செய்வோம் என்று அரசுக்கு எச்சரித்துவிட்டு வர ஜாக்டோவிற்கு ஏன் இவ்வளவு தயக்கம்...????
தயக்கமா....
இல்லை, கூட்டமைப்பின் மீது உள்ள நம்பிக்கையின்மையா..????

2002-களில் இருந்த உங்களின் வேகம் தற்பொழுது எங்கேபோனது...????
நாங்கள் அகலபாதாளத்தின் விளிம்பில் தவிக்கும் போது கூட...,
நீங்கள் பொங்கி எழாததன் மர்மம் தான் என்ன......??????

பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு நமக்கு வெறும் 13 நாட்கள் மட்டுமே உள்ளன..
அதன்பின் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்கள்,
அதன் பிறகு வெறும் கண்துடைப்பு நாடகத்தை மட்டும் அரங்கேற்றலாம் என்ற எண்ணமோ...????

16-ம் தேதி ஏமாற்றப்பட்டோம் என்றால் அடுத்தகட்ட போராட்டத்தை 17-ம் தேதி அறிவிப்போம் என்று கூறியுள்ளீர்களே...????
தொடர்வேலைநிறுத்தின் தேதியை 17-ம் தேதி அறிவிப்போம் என்று கூற கூடவா திராணியை இழந்தது ஜாக்டோ பேரமைப்பு...????
17-ம் தேதி கோட்டையை நோக்கி தொடர் முற்றுகையிடுவோம் என்று அறிவித்து எங்களின் கோரிக்கைகளை கேளிக்கை ஆக்கிவிடாதீர்கள்..
(உங்க பொங்கச் சோறும் வேண்டாம் .. பூசாரித் தனமும் வேண்டாம்)

நேற்று அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை முடிந்து...
ஆனால் , அதற்கு மற்ற சங்க நிர்வாகிகளோ... உயர்திரு.பன்னீர்செல்வம் அவர்கள் கூறியதால் பட்ஜெட் வரை காத்திருக்கலாம் என்றார்களாமே......????
அவர்கள் என்ன 2800 ஊதியக்கட்டில் உள்ளவரா...?????
இல்லை, CPS-ஆல் பாதிக்கப்பட்டவரா...????)
நாங்கள் போராட வேண்டியது அரசுடன் இல்லை...
நாங்கள் சார்ந்துள்ள இயக்கத் தலைமைகளிடம் தான் என்று மீண்டும் மீண்டும் உணர்த்திவிட்டீர்கள்..

ஜாக்டோஜியோ-வாக விஸ்வரூபம் எடுத்திருக்க வேண்டிய நமது போராட்டத்தை பிசுபிசுக்கச் செய்துவிட்டீர்களே....????
(இதில் என்ன சூழ்ச்சியோ..!!! )

தொடர்வேலை நிறுத்தத்தை நீங்கள் விரைவில் அறிவிக்க தவறினால்....!!!
எச்சரிக்கை... எச்சரிக்கை...
ஜாக்டோவிற்கு எச்சரிக்கை..

ஜாக்டோவில் உள்ள பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை அனைத்து சங்கங்களும் இழக்க நேரிடும் என்பதை பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக எச்சரிக்கின்றேன்.....
அதற்கு அச்சாரம் தீட்டுவதைப் போல் உள்ளது ஜாக்டோவின் தொடர் அலட்சியப் போக்கு....
-இவண்
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுடன்,
தேவராஜன்
தற்சமயம் பேச்சு வார்த்தை தோல்வி.
தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளதால் கோரிக்கைகளை தற்போது ஏற்க இயலாது என நிதித்துறை செயலாளர் அறிவிப்பு.





வாட்ஸ் ஆப்ல் சுட்டது.
எங்கே போனது..?
எங்கே போனது..?
2002-ல் DA மற்றும் 7 நாட்கள் EL-ஐ மீட்டெடுக்க அரசு ஊழியர்களுடன் கைகோர்த்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதித்த வீரம் எங்கே போனது..?
தெரியவில்லையா...?
தெரியவில்லையா...?
அதைவிட பாதிப்பு அதிகம் உள்ளது உனக்குத் தெரியவில்லையா...?
அமைந்திடுமா..?
அமைந்திடுமா..?

முதுமை என்ற நோயிற்கு
ஆதரவாய் CPS திட்டம் அமைந்திடுமா...?

அலட்சியமா...?
அலட்சியமா..?

முதுமை கண்ட தலைமைகளே
நீங்கள் கரையில் நிற்பதால் (பழைய ஓய்வூதியம்) இந்த அலட்சியமா...?

கூறிடுக ...?
கூறிடுக...?

3000 ரூபாய் இழப்பிற்கே அன்று (2002) தொடர் வேலைநிறுத்தத்தில் குதித்த நம் பேரமைப்பு ...
மாதம் 12,000 இழக்கின்றோம் இருந்தும் தொடர்வேலைநிறுத்தத்தை
அறிவிக்காதது ஏன் கூறிடுக..?

சுயநலமோ...?
சுயநலமோ...?

8 ஆண்டுகள் உருண்டோடியும் டிக்டோஜாக்கால் தொடர்வேலைநிறுத்தத்தை நோக்கி நகர முடியாதது முதுமை தலைமைகளின் சுயநலமோ...?
வேகமெடு..வேகமெடு..
இழப்பினை மீட்க வேகமெடு..

குதிக்கின்றோம்..
குதிக்கின்றோம்...

எங்களின் அடியே நெருப்பினைத் தான்..
பற்ற வைத்தது நம் அரசு..

அதனால் கொதித்து குதிக்கின்றோம்..
உணர்ந்தாயோ..?
உணர்ந்தாயோ..?
அனலின் கொடுமையை உணர்ந்தாயோ..

மறுக்கிறதோ...?
மறுக்கிறதோ..?

அன்று கொதித்த உன் குருதி இன்று கொதிக்க மறுக்கிறதோ..?
அழிக்காதே அழிக்காதே..
போட்ட கோட்டை மீண்டும் அழிக்காதே..

ஆரம்பிக்காதே ஆரம்பிக்காதே..
மீண்டும் முதலிருந்து ஆரம்பிக்காதே..

குறைக்காதே குறைக்காதே..
போராட்டத்தின் வீரியத்தைக் குறைக்காதே..

நடவடிக்கை எடு
நடவடிக்கை எடு...

அரசு ஊழியர்களுடன் கைகோர்க்க நடவடிக்கை எடு..
யோசிக்காதே யோசிக்காதே..
அரசு ஊழியர்களுடன் இணைய யோசிக்காதே...

இணைந்திடுக இணைந்திடுக...
விருப்பு வெறுப்பினை கலைந்து இணைந்திடுக..

முரண்படாதே முரண்படாதே...
தொடர் வேலைநிறுத்தத்தை அறிவிப்பதில் முரண்படாதே..

உருவெடு உருவெடு...
ஜாக்டீயாய் உருவெடு...

அலட்சியம் வேண்டாம்...
அலட்சியம் வேண்டாம்..

போராட்டத்தை அறிவிப்பதில் அலட்சியம் வேண்டாம்..
சோகம் தான்..
சோகம்தான்..
உங்கள் வேகம் எங்கள் சோகம் தான்..

தாண்டினாயே...?
தாண்டினாயே...?

எங்கள் கையைப் பிடித்துத் தாண்டினாயே..?
முழு கிணரும் தாண்டினாயா...?

காத்திருக்காதே..
காத்திருக்காதே...

அரசின் அறிப்பை எதிர்பார்த்து காத்திருக்காதே...
வகுத்திடுக வகுத்திடுக..
அனல் பறக்கும் போராட்ட வியூகம் வகுத்திடுக..

கையில் எடு..
கையில் எடு...

கடைசி ஆயுதத்தை (தொடர் வேலைநிறுத்தம்) கையில் எடு...
புரிகிறதா புரிகிறதா...?
பாதிக்கப்பட்டவர்களின் கொந்தளிப்பு உனக்குப் புரிகிறதா..?

நெருக்கடி கொடுப்போம்...
நெருக்கடி கொடுப்போம்...

தொடர் வேலைநிறுத்தத்தை அறிவிக்கும்வரை நெருக்கடி கொடுப்போம்...
காப்பாயோ..காப்பாயோ...
இனியும் அமைதி காப்பாயோ..

இனியும் தாமதம் செய்திட்டால்..
வெளுத்திடுமே...
வெளுத்திடுமே..
சாயம் இருப்பின் வெளுத்திடுமே..

-இவண்
பாதிக்கப்பட்ட ஆசிரியர்

வாக்குறுதிகள் நமக்கு வாய்க்கரிசிகளே....
டிட்டோஜாக் தலைமைகளே..
நாளையாவது பின்வாங்காமல் தெளிவாக கோரிக்கையில் ஒரே நிலைபாட்டுடன் இருங்கள்....
புதிய பென்சன் திட்டம் எங்களுக்கு வாய்கரிசி போட மட்டுமே உதவும் என்பதை மறந்துவிட வேண்டாம்...
தீயாய் பற்றி எரியக் கூடிய இந்த இரண்டு
(CPS ரத்து & மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர் ஊதியம்)
கோரிக்கைகளும் நிறைவேறாமல் போராட்டத்திலிருந்து பின்வாங்கமாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை அரசுக்கு உணர்த்துங்கள்..

தற்பொழுது நிதிநிலை சரியில்லை 15 அம்சக் கோரிக்கையில் நிதி சாராத கோரிக்கைகளை தற்பொழுது நிறைவேற்றித் தருகிறோம் ...
750-ஐ போல் ஒரு 250 தருகிறோம் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூறினால் பச்சை துண்டு வாங்க வெளியே வந்துவிடாதீர்....
கோரிக்கைகள் நிறைவேறாவிடில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்து வாரீர்..
அடுத்த கட்டமாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தை
ஜாக்டீயாக உருவெடுத்து அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம் என்று..

உங்களின் உறுதியான நிலைப்பாடு மட்டுமே எங்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கும்..
-இவண்
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுடன்,

29 மாவட்டங்களுக்கு புதிய டிஇஓ நியமனம்

கல்வி மாவட்ட வாரியாக காலியாக இருந்த 29 பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் மாவட்ட கல்வி அதிகாரிகள் (டிஇஓ) நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு உயர் நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு நிகரான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, விழுப்புரம் மாவட்ட சித்தாமல்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சிங்கராஜ், சென்னை பள்ளிக் கல்வி இயக்கக உதவி இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மாங்காடு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, சென்னையிலும், மணலி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் திருப்பூரிலும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, காஞ்சிபுரம் மாவட்ட செங்காடு தலைமை ஆசிரியர் சாந்தகுமார் கோயமுத்தூர் மாநகராட்சி கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் மொத்தம் 29 பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளன.

அரசின் அனுமதி பெற்ற பிறகே அரசு ஊழியர்களிடம் விசாரணை!

அரசு ஊழியர்கள் மீது லஞ்சம் மற்றும் ஊழல் புகார் வந்தால், அரசு அனுமதி பெற்ற பிறகே, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது, லஞ்சம் மற்றும் ஊழல் புகார் வந்தால், அரசு அனுமதி பெற்ற பிறகே, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

.
ஆனால், பிற அரசு ஊழியர்கள் மீது, புகார் வந்ததும், அரசு அனுமதியின்றி, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக, சிலர், உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில், தமிழக அரசு, நேற்று முன்தினம், புதிய அரசாணை பிறப்பித்து உள்ளது.
அதில் கூறியுள்ளதாவது:
அரசு ஊழியர்கள் யார் மீதேனும், லஞ்சம் மற்றும் ஊழல் புகார் வந்தால், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்குனரகம், புகாரை லஞ்ச ஒழிப்பு கமிஷனுக்கு அனுப்ப வேண்டும்.
கமிஷன், புகார் பதிவு செய்ய, அரசிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி கிடைத்த பின், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்குனரகம், விசாரணை நடத்தலாம். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க மட்டுமே, அரசிடம் அனுமதி பெற வேண்டும் என இருந்தது. இப்போது, அரசு ஊழியர்கள் மீதும் வழக்கு தொடர அனுமதி பெற வேண்டும் என, புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போலி சான்றிதழ்கள் தடுக்க 'ஸ்மார்ட்' எண் : பள்ளி கல்வித்துறை அதிரடி
போலி சான்றிதழ்களை தடுக்க, இந்த ஆண்டு முதல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழ்களில், ஆதார் அடிப்படையிலான, 'ஸ்மார்ட்' எண் வழங்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களில் போலிகள் அதிகரித்துள்ளன. போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த, ஐந்து ஆசிரியர்கள் சமீபத்தில், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர்; மற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. போலி சான்றிதழ் பிரச்னையை தடுக்க, புதிய அடையாள எண் திட்டத்தை, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு சான்றிதழ்களில் நிரந்தர, 'ஸ்மார்ட்' எண் தரப்படும்.
டாட்டா சங்கம் சார்பில் அடுத்த வாரம் தேர்தல் ஆணையத்தின் மீது பொது நல வழக்கு தாக்கல் ..

2016 ஆண்டில் தமிழ்நாட்டின் சட்ட மன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது .தேர்தல் பணிக்கு 3,50,000 ஆசிரியர்கள் பயன்படுத்த உள்ளனர்.தேர்தல் பணியின் போது ஆசிரியர்களின் நலன் சார்ந்து 10 கோரிக்கைகள் 28.12.2015 அன்று தலைமை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பபட்டு உள்ளது.இதன் மீது விரைவில் தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பிக்க பொது நல வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட உள்ளது .என்பதை மகிழ்சியுடன் தெரிவிக்கிறேன் .என்றும் ஆசிரியாரின் நலனுக்காய் உண்மையாய் உழைக்கும் சங்கம் டாட்டா மட்டுமே.!!!!!





போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான சம்பளம், புதிய சம்பள கொள்கை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் இன்று
(பிப்ரவரி 1ம் தேதி) மூன்றாவது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் இன்றைய ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து, அரசின் கருவூலத்தில் செலுத்தும்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.