மாநில ஜாக்டோ தலைவர்களுக்கு நான்கு கேள்விகள்..
1.ஐந்து கட்ட
போராட்டத்திற்கு பின்பு இப்படி சில காரணங்களால் போராட்டத்தை நிறுத்தி
விட்டால் மீண்டும் என்ன காரணம் கூறி போராட்டத்தை துவங்க முடியும்?
2.ஆசிரியர்களின் எண்ணங்களை மதிக்காத அரசாங்கத்திற்கு எதிராக எந்த
சாவால்களையும், நேரடியான கண்டங்களையும் தெரிவிக்காமல் போராட்டங்களை
முன்மொழிந்து நடத்தியதும் ,பின்னர் நிறுத்தியதும் மாட்டங்களில்
போராட்டங்கள் நடந்தால் மட்டுமே போதும் ,மாநிலம் தழுவிய மறியலை திரும்பப்
பெற்றதும் ஏன்? மனிதச்சங்கிலி துங்குவதற்கு முன்னரே திருச்சியில் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க என்ன அவசியம் ஏற்பட்டது?
3. அவசரமாக வாபஸ் பெரும் எண்ணங்களே ஜாக்டோ தலைவர்களுக்கு இருந்த சூழலில்
யாருடைய உதிரத்தை உரிஞ்சிக்கொள்ள (அ) யாருடைய உழைப்பை கொச்சைப்படுத்த
"மனிதச்சங்கிலி போராட்டத்தை அறிவித்தீர்கள்
4. தற்போதைய ஜாக்டோ
போராட்டங்களை தேர்வு,தேர்தல்,அச்சம்,அவசரம், ஆகிய காரணங்களினால் சிதைக்க
காரணமாக இருந்த சில ஜாக்டோ இணைப்புச் இயக்கங்களை மீண்டும் ஜாக்டோ இணைத்துக்
கொள்ளுமா?
மாநிலத் தலைமையில் தற்போதிருக்கும் தாங்கள்.
ஒரு சராசரி ஆசிரியனாக, வட்டார/மாவட்ட பொறுப்பாளராக இருந்த காலகட்டங்களையும் நினைவு கூர்ந்து பதில் கூறுங்கள்.
என்றும் இயக்கப்பணியில்.....
கே.சத்தியநாதன்
மாவட்டச் செயலாளர்
TESTF, Chennai Corporation