தேசிய திறனாய்வு தேர்வு 9ம் வகுப்பு மாணவர்கள் ஆக.1 முதல் விண்ணப்பிக்கலாம்
அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஆக.1 முதல் 8 வரை விண்ணப்பிக்கலாம். கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் பகுதிகளில் இருக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2016-17ம் கல்வியாண்டில் தொடர்ந்து 9ம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகள் இத்தேர்வு எழுத தகுதி படைத்தவர்கள்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு
வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய்
துறையினரிடமிருந்து வருமான சான்று பெற்று அளிக்க வேண்டும்.தேர்வுக்கு
விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.8ம் தேதி ஆகும். இதற்கு பின்னர் பெறப்படும்
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும்
தேர்ந்தெடுக்கப்படும் 100 பேருக்கு 12ம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகையாக
ஆண்டுதோறும் ரூ.1000 வீதம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.