PAGEVIEWERS

நெல்லை மாவட்டம் - தொடக்க கல்வி- ஆசிரியர்கள்  காலிபணியிடம் -- பட்டியல் ---டாடா சங்கம் --


 
DEE-- மனமொத்த மாறுதலின் போது கடை பிடிக்க வேண்டிய செயல்முறைகள் -- இயக்குனர் -- ஆணை ..




TATA - சங்கத்தின் 19.7.2016 கோரிக்கையை ஏற்று பணி நிரவல் ஒன்றியம் விட்டு ஒன்றியம் செய்யப்படும் போது பணிமாறுதல் அன்று தான் வழங்கிட வேண்டும் --என ஆணை --  DEE பணி நிரவலின்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்(நாள்:22.07.2016)




EMIS-ELEMENTARY DIRECTOR PROCEEDINGS

EMIS (2016-17) முதல் வகுப்பு உள்ளீடு செய்யவும், மற்ற வகுப்பு பதிவுகளை சரி செய்யும் பணியை 7.8.16 க்குள் முடிக்க உத்தரவு..


பிச்சை எடுக்கும் அரசு ஊழியர்கள்


அநீதிக்கு எதிராக அரசின் குரல்வளையை இறுக்கிப் பிடிக்க வேண்டாமா..
{ ( * ) நானும் களத்தில் உள்ளேன் என்று காட்டிக்கொள்ள மட்டும் தான் இந்த குரலோ.. }
உயிர் காக்கும் அரசின் கட்டணமில்லா மருத்துவ காப்பீட்டுத் திட்டம் இருந்தும்... மருத்துவமனையில் இன்னும் கொஞ்சம் சேத்துக் கொடுங்க (காப்பீட்டுத்தொகையினை) என்று அரசு ஊழியர்கள் பிச்சை எடுக்கும் அவல நிலை..
உன் அப்பன் வீட்டு காசையா கேட்கிறான் அரசு ஊழியன்.. மாதம் தவறாமல் பிடித்தம் செய்யப்பட்ட தனக்கான காப்பீட்டுத் தொகையினைத் தானே கேட்கிறான்..
ரூ.4,00,000 காப்பீட்டுத் தொகை இருந்த பொழுதே அதில் ரூ.50,000 வாங்க படாத பாடு..
இதில் குறிப்பிட்ட 2 சிகிச்சைக்கு மட்டும் ரூ.7,50,000-மாம் ..
யாருக்காக இந்த மாற்றம்..
அரசு ஊழியனிடம் பிடுங்கிக் கொடுத்த (தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம்) ரூ.150-ஐ ரூ.180 ஆக உயர்த்த மட்டும் தான் இந்த மாற்றம்..
2008 மே மாதம் வரை HF ரூ.10 பிடித்தம் செய்து 1,00,000 காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டது, பிறகு ரூ.25 க்கு 2,00,000 ஆக மாற்றம், அதன் பிறகு ரூ.150-க்கு 4,00,000 ஆனது. ஆனால் தற்பொழுதோ அதே 4,00,000 காப்பீட்டுத் தொகைக்கு ரூ.180 பிடித்தம்
கொடுப்பதோ ரூ.100 (MA) ஆனால் பிடுங்குவதோ ரூ.180
சரி பிடுங்கிய காப்பீட்டுத் தொகையாவது ஆபத்து காலத்தில் பெற முடிகிறதா அதுவும் இல்லை..
மாதம் மாதம் 10,22,000 அரசு ஊழியர்களிடம் ரூ.180 பிடித்தம் செய்தால்.
*10,22,000×180=ரூ.18,39,60,000 (ஒரு மாதத்தில் மட்டும் 18 கோடி)*
ஒரு வருடத்தில் 18,39,60,000×12=ரூ.220,75,20,000.
4 வருடத்தில் 220,75,20,000×4=ரூ.883,00,80,000
நான்கு வருடம் ஒப்பந்தம் செய்த தனியார் நிறுவனத்திற்கு அரசு நம்மிடமிருந்து பிடுங்கிக் கொடுக்கும் மொத்த தொகை ரூ.883 கோடிகளுக்கு மேல்.. (4 வருடத்தில் மட்டும்)
ஆனால் காப்பீட்டு நிறுவனம் இதற்காக செலவிடும் காப்பீட்டுத் தொகை சொற்ப அளவு தான்..
இப்படி இருக்க 10,22,000 அரசு ஊழியர்களில் எத்தனை பேர் 4 வருடங்களில் சிகிச்சை பெறுவர்...???
இதுவும் சொற்ப அளவு தான்...

சொற்ப அளவில் மட்டுமே சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு காப்பீட்டுத் தொகையும் சொற்ப அளவில் பிச்சையாக வழங்கப்படுகிறது..???
இந்த முறைகேடுகளை செய்தித்தாளில் வெளியிடுவதுடன் சங்கங்களின் பணி முடிந்துவிட்டதா...??
அதனால் மயிர்நுனி அளவுகூட பயன் ஏதும் இது வரை இல்லையே...
மாநில அமைப்பில் உள்ள இயக்கவாதிகள் இதுநாள்வரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லவில்லையா என்ன...???
இல்லை, இந்த முறைகேடுகளை தட்டிக் கேட்க திராணி இன்றி தனது சொந்த செலவில் சிகிச்சை பெறுகின்றனரோ..??
இல்லை, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தான்மட்டும் முழு காப்பீட்டு உரிமையையும் பெற்றுவிடுவதால் கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் அவல நிலை பற்றி கவலையில்லையோ...???
இது எதுவாயினும் அரசு ஊழியனின் உயிர்காக்க சங்கங்களின் ஒன்றுபட்ட போராட்டம் தேவை..
நமது உரிமைகளை பிச்சையாக பெற முடியாது தோழர்களே..
இனியும் இழப்பதற்கு அரசு ஊழியனின் உயிர் மட்டுமே மிச்சமுள்ளது..

அதைக் காக்கவாவது சங்கங்கள் சுயநலமின்றி ஓரணியாய் திரள வேண்டும்..
கட்டணமில்லா மருத்துவ சிகிச்சையை உறுதிசெய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டுமாய் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சார்பாக தமிழக அரசையும் நிதித்துறையும் கேட்டுக்கொள்கிறேன்-----

பள்ளிக்கல்வி / தொடக்கக் கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பங்கள்......

தமிழ்நாடு அரசு -- நிதித்துறை - 2016-17ஆம் நிதியாண்டிற்கான வரவு-செலவு திட்ட அறிக்கை....

தமிழ் நாட்டில் ஆசிரியர் மற்றும் அரசுழியர்களுக்கு 6 வது ஊதிய குழு முரண்பாடுகளை தீர்ப்பதற்கு 2010 ல் திரு . ராஜிவ் ரஞ்சன் .இ.ஆ.ப.அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது . அதிலும் பலவேறுபட்ட முரண்பாடுகள் ஏற்பட்டது. அதை தீர்க்க சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு படி 2012 ல் திரு .கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் 3 நபர் குழு அமைக்க பட்டது . அதன் அடிப்படையில் பல்வேறு அரசு ஆணைகள் வெளியிட்டது .அதில் ஆசிரியர்களுக்கு எந்தவொரு பயனுமில்லை .மேலும் இடைநிலை ஆசிரியர்கள் பற்றி உண்மையில்லாத பல்வேறு கருத்தை கூறியது .மேற்கண்ட இரு ஊதிய குழு அறிக்கை கருத்தை ரத்து செய்து உண்மையான ஆதாரங்கள் அடிப்படையில் ஊதியம் 9300 + 4200 என மாற்றம் செய்திட டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்கள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு எண் .33399/2013 தொடரப்பட்டது .அதில் 12.9.2014 தீர்ப்பு பெறப்பட்டது .அதன் அடிப்படையில் அரசு வெளியிட்ட அரசு கடிதம் எண் .60473/Cmpc/2014 நாள் . 10-12-2014 ல் மேற்கண்ட ஊதிய குழு அறிக்கையில் உள்ள அதே கருத்தை மீண்டும் கூறி மறுத்து விட்டது . பிறிதொரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இரு நபர் அமர்வில் மேற்கண்ட இரு ஊதிய குழு அறிக்கைகள் சட்டப்படி சரியானவை அல்ல .இதில் பல்வேறு குழறுபடிகள் உள்ளன என்பதால் அதை ரத்து செய்து ஓய்வுபெற்ற சதீஷ்கர் மாநில தலைமை நீதிபதி .திருமிகு .வெங்கடாசல மூர்த்தி அவர்கள் தலைமையில் ஊதிய குறை தீர் ஆணையம்.மீண்டும் அமைத்து ஊதிய முரண்பாடு தீர்க்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது .
அதன் படி உடனடியாக நீதிமன்றம் தீர்ப்பு படி ஆணையம் அமைத்து ஊதியம் மாற்றி அமைக்க பட வேண்டும். மேலும் அரசு கடிதம் 60473/2014 -----10-12-2014 ரத்து செய்யப்பட வேண்டும். மீண்டும் டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்கள் தலைமையில் 2வழக்கு W.P. MD NO.1612/15 தாக்கல் செய்ய பட்டது .அதில். 10-2-2015 _ உரிய கால கெடுவுக்கு பின் வழக்கு தாக்கல் செய்திட உத்தரவிட்டார் .
ஆனால் தமிழக அரசு. ஆணையம் அமைக்க முடியாது எனவும். ஊதிய மாற்றம் செய்திட முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் சென்று. special leave petitions. Civil. no 35679 - 35838 of 2014 தாக்கல் செய்து 16-01-2015 ல் தடைகள் பெற்று உள்ளதாக அரசு கடிதம் எண் 12925/2015----27-5-2015 தெரிவித்த உள்ளது தமிழக அரசு .
கடந்த 2011சட்ட மன்ற. தேர்தல் வாக்குறுதி யாக ஊதிய முரண்பாடு தீர்க்கப்படும். பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்தப்படும் என வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது அரசே உச்ச நீதிமன்றம் சென்று தடைகள் பெற்று இருப்பது வியப்பாக உள்ளன .

இந்த நிலையில் டாடா சங்கம்  உச்ச நீதிமன்றத்தில்  SLP.NO.9091/2014 .I.A NO. 5/2015 மூலம் வழக்கு தாக்கல் செய்து உள்ளது .மேற்படி டாடா சங்கத்தின் ஊதிய வழக்கிற்கு தமிழக நிதி துறை பதில் மனு தாக்கல் செய்யாமல் நிலுவையில் உள்ளது.அதனால் நமது ஊதிய வழக்கு இறுதி நிலைக்கு வரவில்லை .எனவே ஆசிரியர்களே நமது வழக்கு முடிவுக்கு கொண்டுவர வும் அரசு விரைந்து பதில் மனு தாக்கல் செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கண்டிப்பாக 7 வது  ஊதிய குழுவுக்கு முன்பாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் தான் 7 வது ஊதிய குழுவில் இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.டாடா சங்கம் அதற்கு ஏற்ற ஆயத்த நிலையில் உள்ளது;

தமிழ்நாட்டிடில் 7 வது ஊதிய குழு உச்ச நீதிமன்றத்தில் அரசு அனுமதி பெற்று அதன் பின்னர் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில்தான் அமைக்க முடியும் .16 மாநிலங்களில் 6 வது ஊதியகழுவில் வழங்கப்படட பிற மாநில அரசு ஆணைகள் மற்றும் 2650 பக்கங்கள் கொண்ட அரசு ஆவணங்களுடன் ஊதிய குழுவை எதிர் கொள்ள டாடா சங்கம் தயார் நிலையில் உள்ளது.கண்டிப்பாக 1.1.2006 முதல் 9300+4200 என இடைநிலை ஆசிரியர் ஊதியம் மாற்றப்பட்டு அதன் அடிப்படையில் தான் 7 வது அமையும் ..

டாட்டா கிப்சன் .பொது செயலாளர்
தமிழ் நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்
9443464081
அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கு டாடா சங்கத்தின் வணக்கங்கள் தமிழ்நாட்டில் நடைமுறை படுத்தப்பட்ட 6 வது ஊதிய குழு வால் ஏற்பட்ட பாதிப்புகள் பல ஆகும் .அதில் ஒன்று 1.1.2011 க்கு முன்பாக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பிபி 750 ஊதியத்தில் சேர்காமல் ஊதியம் நிர்ணயம் செய்த்தால் ஏற்பட்ட ஊதிய இழப்பு ஆகும் .அதாவது இளையவர் அதிக ஊதியமும் மூத்தவர் குறைந்த ஊதியமும் பெற்று வருகிறார்கள் .இந்த ஊதிய பாதிப்பை அரசு ஆணை எண்.25/p#ar/ date .23-3-2015 ன் படி சரிசெய்திட முடியும் .இது போன்ற ஊதிய பாதிப்பில் உள்ள1.1.2011 முன்னர் பதவி உயர்வு பெற்ற து.பள்ளி .த.ஆசிரியர்கள் மற்றும் பட்டாதாரி ஆசிரியர்கள் டாடா சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களை அல்லது பொது செயலாளரை அனுகவும் .9443464081... ...டாடா கிப்ஸன்....

பணி மாறுதல் -- பணி நிரவல் ----டாடா சங்கம்  கோரிக்கை 


மதிப்புமிகு.தொடக்க கல்வி இயக்குனர் அவர்களுக்கு வணக்கம். கடந்த ஆண்டு 2015 ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுமாறுதல் கலந்தாய்வு மூலம் பணிமாறுதல் பெற்ற பல ஆசிரியர்கள் பணி விடுவிப்பு செய்யப்படாமல் உள்ளனர். இந்த நிலையில் தற்போது அரசு ஆணை எண்.258 நாள்6-7-2016 மூலம் இந்த ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திட அரசு ஆணையிட்டு உள்ளது.மேலும் விரைவில் தங்களால் விரைவில் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட உள்ளது.எனவே முந்தய கலந்தாய்வு மூலம் பணிமாறுதல் பெற்ற தொடக்க கல்வி துறை சார்ந்த ஆசிரியர்களை உடனடியாக பணி விடுவிப்பு செய்திட வேண்டும்.இதற்கான ஆணையை தாங்கள் உடனடியாக வழங்கிட சமூகம் அவர்களை வேண்டுகிறேன். இப்படிக்கு. டாடா கிப்ஸன். பொதுசெயலாளர். டாடா சங்கம் 235. வடக்குதெரு. பரப்பாடி....627 110. திருநெல்வேலி.மாவட்டம்
******கல்வி உதவி தொகை பெற அரசு, உதவி பெறும் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்****************

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் பிசி, எம்பிசி, டிஎன்சி ஆகிய வகுப்பை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவி தெகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

பள்ளிக்கல்வி - தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப பணி நிரவல் செய்திட அரசு உத்தரவு...........

 🚥🚥🚥🚥🚥                                                                                      

G.O. No. 258 dated 6.7.16 -Transfer Norms-
Important points. 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥                                                                      
G.O. No. 258 dated 6.7.16
🌹01.06.2016 நாளை கணக்கிட்டு காலிப்பணியிடம் பட்டியல் தயாரிப்பு.
🌹உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்தபின் பொது மாறுதல் கலந்தாய்வு.
🌹பொது மாறுதல் கலந்தாய்விற்கு முன்னர் நிர்வாக மாறுதல் & மனமொத்த மாறுதல் முடிக்கப்பட வேண்டும்.
🌹மனமொத்த மாறுதல் 01.06.2015 க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. .
🌹அலகு விட்டு அலகு மாநகராட்சி பள்ளிகளுக்கு மட்டுமே. . தொடக்கக் கல்வித்துறை யில் இருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு இல்லை.
🌹01.06.2015 பணியேற்பில் இருந்து விலக்கு பெறுவதில் சென்ற ஆண்டு பின்பற்றபடியே...
1. Total blind.
2.Physically challenged
3.Army working person's spouse
4.Critically operated persons .
5.Cancer patients
6.Widow
7.Having Special children.
8.Spouce

🌹01.6.2015 க்கு பின்னர் கணவன் / மனைவி இறந்து இருப்பீன் சிறப்பு நிகழ்வாக மாறுதல் வழங்கப்பட வேண்டும். 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥                  TATA Sangam

அகஇ - குறுவளமைய பயிற்சி - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 16.07.2016 அன்று நடைபெறவிருந்த குறுவளமையப் பயிற்சி 23.07.2016 அன்று ஒத்திவைத்து இயக்குனர் உத்தரவு

ஆறாவது ஊதிய குழுவும் ஆசிரியர் சங்கங்களும் -

 ஓர் கண்ணோட்டம்.


அன்பார்ந்த ஆசிரியர் சமுதாய தோழர்களுக்கு அன்பு வணக்கங்கள். 

ஆறாவது ஊதிய குழுவினால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள  
ஊதிய முரண்பாடுகள் முழுமையாக இன்னமும் சரி செய்யப்படவில்லை. தற்போது ஆசிரியர் சங்கங்களால் ஏற்ப்பட்ட நிலைகளை அரசாணையில்    குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை குறிப்பிட்டு ஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.
ஆறாவது ஊதிய குழு அரசாணை 234 நாள்.1.6.2009  வெளியிடப்பட்டபோது, தொகுப்பூதியத்தில் பணியேற்று 1.6.2006 - இல் காலமுறை ஊதியத்திற்கு வந்தவர்கள் 1.6.2006 - இல் பெற்று வந்த ஊதியம் பின்வருமாறு,
             அடிப்படை ஊதியம்              :   4500
              அகவிலைப்படி ஊதியம்    :   2250
              அகவிலைப்படி 24%              :   1620
                                                                   =======
       (DA G.O.188.Dt.17.4.06)  TOTAL      :     8370
                                                                  =======
ஆறாவது ஊதிய விகிதம் G.O. 234 Dt.1.6.2009 - இல் வெளியான போது இவ்வகையான இடைநிலை ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம்
                          அடிப்படை ஊதியம்     :    5200
                          தர ஊதியம்                     :    2800
                          அகவிலைப்படி              :    NIL
                                                                          =======
(New DA (2%) only from 1.7.2006) TOTAL   :     8000
                                                                          =======
முந்தைய ஊதிய விகிதத்தில் பெற்றுவந்த ரூ.8370 ஐ விட புதிய ஊதிய விகித ஊதியம் ரூ.370 குறைவாக இருந்தது. ( 8370 - 8000 = 370)
இவ்வாறான நிலை மொத்தமிருந்த 29 ஊதிய பிரிவினர்களில் 03 ஊதிய பிரிவினர்களுக்கு மட்டுமே ஏற்ப்பட்டது. கல்வித்துறையில் 1.6.2006 இல் காலமுறை ஊதிய விகிதத்திற்கு உட்படுத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு  மட்டுமே ஏற்ப்பட்டது. அதனை கீழே உள்ள அட்டவணை மூலம் அறியலாம். இந்த அட்டவணை தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (T.A.T.A) மூலம் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுக்களில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பை பல்வேறு சங்கங்கள் அன்றைய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதனால் 1.1.2006 முதல் 31.5.2009 வரை பணியேற்றவர்களுக்கு 1.86 ஆல் பெருக்கிக்கொள்ள வாய்ப்பு  கொடுக்கப்பட்டது.
பெற்றுவந்ததை விட குறைவான ஊதியம் பெறும் நிலை எந்தெந்த ஊதிய பிரிவினர்களுக்கு ஏற்பட்ட்தோ  அதனை தெளிவாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்ததால் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதம் மாற்றப்பட்டிருக்கும். சற்று பொறுமையாக படியுங்கள்.
(எப்படி கொண்டு சென்றனர், உள்ளதை உள்ளபடியே அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தால் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பு சரி செய்யப்பட்டிருக்கும் என்பதையும், தவறான தகவலை அரசுக்கு கொடுத்ததால் பெற்று வந்ததை விட நிர்ணயிக்கப்பட்ட புதிய ஊதியத்தில் குறைவு ஏற்படாத ஊதிய பிரிவினர்களுக்கு 1.86 ஆல் பெருக்கிக் கொள்ள வழி வகை ஏற்ப்படுத்தியதையும் நீங்கள் அறிந்துகொள்ள உங்கள் முன் வைக்கிறேன்.)
               01.01.2006 முதல் 31.5.2009 வரை புதிய நியமனதாரர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதியத்தில் குறைவு ஏற்படுவதாக சங்கங்கள் அரசுக்கு தெரிவித்துள்ளன. ஆனால் உண்மை நிலவரமோ மொத்தமிருந்த ஊதிய பிரிவினர்களில் மூன்று ஊதிய பிரிவினர்களுக்கு மட்டுமே ஏற்ப்பட்டுள்ளது.  அரசாணை  258 நாள் 23.5.2009. இல் உள்ளதை படியுங்கள்.
       Certain Employees / Teachers  Associations have brought to the notice of Government that the employees appointed as fresh recruits on or after 1.1.2006 and upto the date of issue of Orders happen to face loss in emoluments while fixing their pay in the revised pay structure and therefore requested to rectify the same by granting pay protection of allowing the fitment benefit to the new entrants as was allowed in the earlier pay commission periods.
  முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல அதற்க்கு பின்னர் தனி ஊதியம் 750 கொடுத்தாலும் அகவிலைப்படிகளோடு ஒப்பிட்டு பார்க்கையில் 1.1.2009-க்கு பின்னர் நியமனம் பெற்றவர்களுக்கு முந்தைய ஊதிய விகித ஊதியமே அதிகமாக உள்ளது.
பணி ஒய்வு பெற்றவர்களை மதிக்கிறோம். விழிப்புணர்வுகளுக்காக பாதிப்புகளை இடைநிலை ஆசிரியர்களின் முன்வைக்க கடமைப்பட்டுள்ளோம்.
             பணியாளர்கள் அங்கம் வகிக்க வேண்டியது  
                 பணியாளர் சங்கத்தில்
    பணி  ஓய்வு பெற்றவர்கள் இருக்க வேண்டியது




 

 


தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( டாடா ) மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 09.07.2016 சனிக்கிழமை மதியம் 2.00 மணிக்கு மாநில தலைவர் அவர்கள் தலைமையில் திருச்சி ...ஹோட்டல் அருணில் நடைபெற்றது.             


 மேற்படி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள்.    வருமாறு.......         
                
  1)மத்திய அரசு உழியர்களுக்கு ஏழாவது ஊதியகுழு நடைமுறைபடுத்தப்பட உள்ள நிலையில் தமிழக இடைநிலை ஆசிரியர்களின் 6 வது ஊதிய குழு முறன்பாடு இதுநாள் வரை தீர்க்கப்பட வில்லை.மேலும் தமிழக 6 வது ஊதியகுழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 158 வழக்குகள் நிலுவையில் உள்ளது.மேற்படி வழக்குகளுக்கு தமிழக அரசு வரைவாக பதில் மனு தாக்கல் செய்து வழக்கை முடித்து ஊதிய முறன்பாட்டை தீர்த்த பின்னர்தான்    தமிழ்நாட்டில் 7 வது ஊதிய குழு அமைக்க வேண்டும்...                
 2)பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்திட அமைக்கப்பட்ட குழு அறிக்கை தயாரிக்கும் முன்னர் அனைத்து சங்கங்களையும் அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்திட வேண்டும்.......              
3) தலைமை ஆசிசியர்கள் பல்வேறு பதிவேடுகள் பராமறிப்பு செய்திட வேண்டியது உள்ளதாள் "" அரசு உழியர்களுக்கு உள்ள பவாணிசாகர் பயிற்சி மையம்  "" போல் தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக திறன் பயிற்சி வழங்கிட திருச்சியை மையமாக கொண்டு புதிய பயிற்சி மையம் துவங்கப்பட வேண்டும் ...               
 4) ஆண்கள், பெண்கள்,மாற்றுதிறனாழிகளுக்கு தனி தனி மேல்நிலை பள்ளிகள் இருப்பது  போல்  திருநங்கைகள்  கல்வி தடையின்றிபயில மாவட்ட தலைநகர்களில் சிறப்பு மேல்நிலைபள்ளிதுவங்கப்பட வேண்டும்........                 5)அரசின் விலையில்லா பொருள்கள் அனைத்தும் பள்ளிகளுக்கே கொண்டு வந்து வழங்கிட வேண்டும்....                 
 6)தமிழக அரசு உழியர்களுக்கான பணி விதிகள் மற்றும்  அடிப்படை விதிகள் ஊதிய விதிகள் இதுவரை தமிழில் இல்லை.ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.எனவே முக்கிய விதிகளைதமிழில் மொழிபெயற்பு செய்து அரசிதழில் வெளியிட வேண்டும் ....             
  7).தொடக்க கல்வி துறையில்  கடந்த 10 வருடமாக நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு. பணிநிரவல் நடைபெற வில்லை.  எனவே விரைந்து பணிநிரவல் நடத்திட வேண்டும். 
8)ஆசிரியர்களின் உயர்கல்வி பின்னேற்ப ு2 வருடமாக அனுமதிக்கப்படாமல்நிலுவையில் உள்ளது இவற்றிற்கு கல்வித்துறை செயலாளர் விரைர்து அனுமதித்து ஆணை வழங்கிட வேண்டும்.                   9)வினாயகா மிஷன் பல்கலைகழகம் படிப்புகள். மற்றும் M.Com. B.Dd.  / M.A .  B.Ed.(பொருளாதாரம்) படிப்புகளுக்கு ஊக்க ஊதிய உயர்வும் பதவி உயர்வும் அனுமதிக்க வேண்டும்.                   
  10) ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் துவங்கப்பட்ட ஆங்கில வழி கல்வி பாட பிரிவுக்கு போர்கால அடிப்படையில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் விரைந்து நியமிக்க அரசை வேண்டுகிறோம்.      
  11.) 2003--2006 வருடங்களில் தொகுப்புதியத்தில் பணி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணி காலத்தை ஊதிய உயர்வுக்கும்  பதவி உயர்வுக்கும் எடுத்துக்கொள்ளபணி நியமன நாள் பணிவரன்முறை செய்திட வேண்டுகிறோம்..    
   12 ) தமிழகத்தில் தொகுப்பூதியத்தில் பணிசெய்து வரும் சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் . ..               
  13.) உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள TET வழக்குகளை விரைந்து முடித்து மத்திய அரசு போல் ஆண்டுக்கு இரு முறை தகுதிதேர்வு நடத்த வேண்டும்..                   
  14) தொடக்க கல்வி துறையில் அதே பள்ளியில் B.Ed கற்பித்தல் பயிற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு முழு ஊதியம் வழங்கிட வேண்டும்..                   
  15) ஆசிரியர்கள் , அரசு உழியர்களின்  பணி சார்ந்த வழக்குகள் விரைந்து முடிக்கப்பட மதுரையிலும் சென்னையிலும் என இரண்டு  "டிரிபினல்" நீதிமன்றங்கள் உயர்நீதி மன்ற வளாகத்தில் அமைத்திட வேண்டுகிறோம்.           16)  ஆசிரியர்களுக்கு  விரைவாக பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல்உ  கலந்தாய்வு ஓளிவு மறைவு இல்லாமல் நேர்மையான முறையில் நடத்திட வேண்டும்..               
  17)    பள்ளி கல்வி துறை போல் தொடக்க கல்விதுறையிலும்  பணி நியமன தேதி அடிப்படையில் மாநில அளவில் பதவிஉயர்வு பட்டியல் தயார் செய்து நடைமுறை படுத்திட வேண்டும்