PAGEVIEWERS

பதவி உயர்வு & பணி மாறுதல்  கலந்தாய்வு எப்போது நடக்கும் ?

          பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி துறைகளின் கீழ் உள்ள பள்ளிகளில் பதவி உயர்வு & பணி மாறுதல்  கலந்தாய்வு ஜூலை மாதம் தான் நடை பெற சாத்திய நிலைகள் உள்ளன , காரணம் தமிழ்நாடு சட்ட மன்ற பஜ்ஜெட் கூட்டதொடர் முடிவு பெறாமல் உள்ளது .பள்ளி கல்வி துறை மானிய கோரிக்கை நடை பெற வேண்டியது உள்ளத்தாலும் தேர்தல் விதிமுறை  மே 28 ல் தான் முடிவதாலும் பள்ளி திறந்த பின்  பணி மாறுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு  கூட்டதொடர் முடிவு பெற்ற பின்  கலந்தாய்வு ஜூலை மாதம் தான் நடை பெற சாத்திய நிலைகள் உள்ளன..
                                                    அன்புடன் ....  

                             S.C.கிப்சன் .TATA .பொது செயலாளர் ,

பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் -விண்ணப்ப படிவம்.....


S.NOFILE NAMEDOWNLOAD
1Application FormClick Here
2InstructionClick Here
3Soft Copy FormatClick Here
4Delivery ChallanClick Here
பொதுமாறுதலில் காலிப்பணியிடங்கள் 

 
 மறைக்கப்படுவதை தடுக்க 


இயக்குனர் அலுவலகம் முற்றுகை ...

நாள் ; 20.05.2014 . நேரம் ; காலை 11   மணி முதல் .. 

இடம் ; DPI . நுங்கம் பாக்கம் ,சென்னை -6.   


                   அன்பார்ந்த ஆசிரியர்களே கடந்த 2005 முதல் கலந்தாய்வு 


முறைக்கு வேட்டு வைக்கும் விதமாக தொடர்ந்து 

காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டு கையூட்டு கொடுக்கும் 

ஆசிரியர்களுக்கு ரூ . 8 லட்சம் வரை தொடர்ந்து விற்கப்பட்டு 

வருகிறது . 
                 

இதை தடுக்க வேண்டி தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் 

பல தகவல்களை சேகரித்து கடந்த 2010 முதல் TATA சங்கம் 

மூலம் போராடி வருகிறோம். மேலும் மதுரை உயர் நீதி மன்ற 

கிளையில் வழக்கும் தொடர்ந்து உள்ளோம் .மேலும் பல புகார் 

காரணமாக  கடந்த 2013 செப்டம்பரில் ஊழல் தடுப்பு காவல் 

துறையில் அமைச்சர் மற்றும் 194 அலுவலர்கள் மீது வழக்கு பதிவு 

செய்யப்பட்டது . மேற்படி வழக்கு தற்போது முறையான 

விசாரணையின்றி  ஊழல் வாதிகளுக்கு சாதகமாக உறங்கும் 

நிலையில் உள்ளது .
                   
                             ஊழலுக்கு எதிராக நான் போராடி வருவதால் 


திருநெல்வேலி DEEO அலுவலகமும் எனது மனைவி பணி செய்த 

தனியார் பள்ளி நிர்வாகமும் சேர்ந்து 2011 முதல் எனது மனைவியை 

நிரந்தர பணி நீக்கம் செய்து என்னை பழிவாங்கியது .மேற்படி   பணி 

நீக்கம் ரத்து செய்திட திருநெல்வேலி DEEO அலுவலகத்திற்கு மனு 

செய்தேன். மேற்படி அலுவலகம் நிர்வாகத்திடம் பணம் 

பெற்றுக்கொண்டு பணி நீக்கத்தில் தலையிட கல்வித்துறைக்கு 

உரிமை இல்லை என அறிவித்து விட்டது .தனியார் பள்ளி 

ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு உள்ளது என்பதால் தொடக்கக் 

கல்வி இயக்குனர் அவர்களிடம் சுமார் 80 மனுக்கள் கொடுத்தும் நீதி 

வழங்காமல் என்னை கல்வி துறை பழிவாங்கி வருகிறது .
                                             

  எனக்கு நீதி கிடைக்க வேண்டியும் நிர்வாகம் 

என்றப்பெயரில் காலிப்பணியிடங்கள் விற்பனை செய்யப்படுவது 

நிறுத்தப்பட்டு ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு நடத்திட வேண்டியும் 

மேற்படி போராட்டம் நடைபெற உள்ளது .
             

 கல்வித்துறையில் ஊழல் ஒழிக்கப்பட 

ஆசிரியர்களே மே 20 ல் திரண்டு வாருங்கள் . 
 


தொடர்புக்கு ; கிப்சன் .                

TATA.பொதுசெயலாளர்                                                                         

9443464081//9840876481.





இரட்டைப்பட்ட வழக்கின் நடவடிக்கை விவரங்கள்

 இரட்டைப்பட்டடம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில்தள்ளுபடியானதை தொடர்ந்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் புதுதில்லி உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இவ்வழக்குஉச்ச நீதி மன்றம் 6வது அமர்வில் நீதியரசர்கள் இரதாகிருஷ்ணன்மற்றும் 
விக்ராம் சிங்சென் முன்னிலையில் 25வது வழக்காக கடந்த 02.05.2014அன்று விசாரணைக்கு வந்தது. இதில் அரசு மற்றும் பல்கலைகழகமானியக் குழுவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கினைமுன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும், இன்றைய மூத்தவழக்குரைஞரான கிரி அவர்கள் பங்கேற்று வாதாடினார். வழக்கைஏற்றுக்கொண்ட நீதி பதி அவர்கள் 7.5.2014 அன்று உத்தி வைத்தனர்.வழக்கானது மீண்டும் 9.05.2014 அன்று மீண்டும் விசாரணைக்குவந்தது. அதில் பங்கெடுத்த யு.ஜி.சி. 1010 102103101 என்றஅடிப்படையில் பயின்றால் அந்த படிப்பு தகுதியானது பதில்அளித்தது. இருந்தாலும் விரிவாக பதிலுரை தாக்கல் செய்ய காலஅவகாசம் தேவைப்படுவதாக யு.ஜி.சி. கேட்டுக்கொண்டது. தமிழகஅரசும் கால அவகாசம் கேட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவேஉச்ச நீதி மன்றத்தில் வழக்கை தாக்கல் செய்த அனைவருக்கும்வழக்கு குறித்த விபரம் அனுப்ப நீதி மன்றம் முனைந்துள்ளது. அதன்பின் வழக்குரைஞர்கள் மூலம் உச்ச நீதி மன்றத்தைநாடியுள்ளவர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும்.

இது குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் திரு.கலியமூர்த்தி அவர்கள்நம்மிடம் கூறியதாவது: இரட்டைப்பட்டம் வழக்கை உச்ச நீதி மன்றம்ஏற்றுக்கொண்டது என்பதே எங்களுக்கு கிடைத்த வெற்றியாககருதுகிறோம். ஏனென்றால் வழக்கியல் நியாயம் இல்லாமல் உச்சநீதி மன்றம் எந்த வழக்கையும் ஏற்றுக்கொள்வதில்லை. இதில்யு.ஜி.சியும் எங்களுக்கு சாதகமாக பதில் அளித்துள்ளது. இதில்யாருடைய பதவி உயர்வையோ அல்லது பணியமர்த்துவதையோதடுப்பது எங்கள் நோக்கம் அல்ல. ஆனால் அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடிள்ள அனைவருக்கும் 1.1.2012 முன்னுரிமையைபெறுவது என்பது உறுதியாகி விட்டது. எனவே நாங்கள் இந்த முறைஉறுதியாக வெற்றியடைவோம். இது குறித்து இரட்டைப்பட்டம்படித்து பதவி உயர்வை தவறவிட்டவர்கள் மற்றும் ஆசிரியர் தகுதிதேர்வில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் கூட்டம் சென்னைஅல்லது திருச்சியில் தேர்தல் முடிவுக்கு பின்பு நடத்துவதற்குஆலோசணை செய்து வருகிறோம் என்றார். மேல் விபரங்களுக்குகீழ் கண்ட தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

1. திரு. கலியமூர்த்தி - 9894718859 (விழுப்புரம்)
2. திரு.ஆரோக்கியராஜ் - 9942575162 (சிவகங்கை)
3.திரு.கணேஷ் - 9976105153 (சிவகங்கை)
4.திரு.கருணாலய பாண்டியன் - 9894192500 (திருவள்ளூர்)
5.திரு.இரவிச்சந்திரடுலு - 8608273362
6.திரு. விஸ்வநாத் - 9842942105

01.01.2014 நிலவரப்படி அரசு உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் / அதனையொத்த பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான முன்னுரிமைப் பட்டியல்...

 



இரட்டைப்பட்ட வழக்கு இறுதித் தீர்ப்பு நகல்

DOUBLE DEGREE HIGH COURT -JUDGEMENT COPY CLICK HERE TO DOWNLOAD (GOOGLE DRIVE)

 

DOUBLE DEGREE HIGH COURT -JUDGEMENT COPY  (BOX.NET


பள்ளிக் கல்வி இயக்குநர் திரு மதிப்பு மிகு 

இராமேஸ்வர முருகன் அவர்களை சந்தித்து TATA 

 பொதுச்செயலாளர் திரு S.C கிப்ஸன் 08-04-2014 

அன்று அளித்த கோரிக்கையில் புதுக்கோட்டை 

மாவட்டம் , கிள்ளுக்கோட்டை,அரசினா் 

மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர் நிர்வாக 

சீர்கேடுகள் பற்றி புகார் தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் நிர்வாக சீர்கேடுகள் 

தொடர்வதால்  புதுக்கோட்டை மாவட்ட

முதன்மைக் கல்வி அலுவலர் திரு 

நா.அருள் முருகன் ,முனைவர் அவர்களுடன்  TATA 

 மாநில தலைவர் திரு நா.கார்த்திகேயன் மற்றும்

 புதுக்கோட்டை மாவட்ட TATA 

பொறுப்பாளர்கள்  திரு .சு.யோவேல்,

திரு அ.சேவியர் ராஜேஸ் 06-05-2014 அன்று 

பேச்சுவார்தை நடத்தினர்.புதுக்கோட்டை 

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கொடுத்த 

 வாக்குறுதியின் பேரில் தற்காலிகமாக தீர்வு 

தீர்மானிக்கப்பட்டது.
கோரிக்கை தீர்மானங்கள்.

1. ஊதியம் தாமதம் இல்லாமல் மாத இறுதியில் 

பெற்று தருவது.

2.ஆசிரியர் மற்றும் அலுவலக ஊழியர் 

பணப்பலனை உரிய நாட்களில்தாமதமின்றி

  பெற்று தருவது.

3.பணிப்பதிவேடு விடுப்பட்ட பதிவுகள் உரிய 

நேரத்தில் தவறின்றி பதிவுகள் மேற்கொள்வது.

4.மாற்று சான்றிதழுக்கு நன்கொடை 

வசூலிக்க தடை.

5.மாணவர் - கூட்டுறவு சங்கம் முறைப்படுத்துவது.

6..மாணவர் பயிற்சி ஏட்டிற்கு உரிய

 தொகை மட்டும் வசூலிப்பது.

7.பெற்றோர் ஆசிரிய கழக நிதியை செயற்குழு 

அனுமதியுடன் முறையாக பயன்படுத்துவது.




ஆசிரியர் பணியிடம் ரூ.8 லட்சம்: 

ஆசிரியர்கள் குற்றச்சாட்டு- 

DINAKARAN NEWS

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தினர் ( TATA )   வெளியிட்டுள்ளஅறிக்கை:
தமிழ்நாட்டில் தொடக்க கல்வி துறை மற்றும் பள்ளிகல்வித்துறையில் 
 காலிப்பணியிடங்களை கலந்தாய்வில் காட்டாமல்நிர்வாக மாறுதல் 
 என்ற பெயரில் ஓரு ஆசிரியர் பணியிடம் ரூ.5 லட்சம்முதல் 8 லட்சம் வரை 
 விற்பனை செய்யப்படுவது தடுக்கப் பட்டு

கலந்தாய்வுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.வேலூர் மாவட்டத்தில்
உள்ள நல்லூர் பள்ளி உதவியாசிரியர்கள் மீது தவறே செய்யாமல்
 தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்பனஉள்ளிட்ட 
 கோரிக்கைகள் குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம்பலமுறைமனுக்கள்  
கொடுத்தும் நடவடிக்கை இல்லை.எனவே பாதிக்கப்பட்டுள்ளஆசிரியர்கள் 
 தங்களது குடும்பத்துடன் வரும் 20ம் தேதி முதல் தொடக்ககல்வி இயக்குநர் 
 அலுவலகத்தின் முன்பு காலவரையற்ற போராட்டத்தில்ஈடுபட முடிவு
  செய்துள்ளோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.