PAGEVIEWERS

முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்

** புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் (அகஇ), கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலராக மாறுதல்

** நாகப்பட்டிணம் முதன்மைக் கல்வி அலுவலர் (அகஇ), திருவாரூர் முதன்மைக் கல்வி அலுவலராக மாறுதல்

** திருச்சி முதன்மைக் கல்வி அலுவலர் (அகஇ), தொடக்கக் கல்வி துணை இயக்குனராக மாறுதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு அறிக்கை மீதான நிதித்துறை தீர்மானம் - அரசிதழில் வெளியீடு

டாடா சங்கம் சார்பில் வருகிற 3-8-2016 மற்றும்  4-8-2016 அன்று தொடக்க கல்வி இயக்குனர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஆகியோரை கோரிக்கைகளுடன்   சந்திக்க உள்ளோம்,  விரும்புகிற மாவடட , வட் டார  பொறுப்பாளர்கள் தங்கள் விபரங்களை பொது செயலாளர் அவர்களிடம் தெரிவிக்க மாநில அமைப்பு சார்பாக கேட்டு கொள்கிறோம் --
அன்பார்ந்த ஆசிரியர் பெருமக்களுக்கு டாடா சங்கத்தின் வணக்கம் ....... ,

தமிழக அரசு பட்ஜெட் ல் 7 வது ஊதிய குழு பற்றி ஆராய குழு அமைக்கப்படும்.என அறிவிக்கப்பட்டு உள்ளது.ஏற்கனவே தமிழக 6 ஊதிய குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 158 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நிதித்துறை தெரிவித்துள்ளது.இந்த நிலையில் 6 வது ஊதிய குழு முறன்பாடு தீர்கப்பட வேண்டும்.அதன்பின் 7 வது ஊதிய குழு ஊதியம் நிர்னயம் செய்ய வேண்டும். எனவே தோழர்களே ஊதிய குழுகளை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் ,,,,,CPS. திட்டம் ரத்து குழுவை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி தங்கள் மாவட்டத்தில் ,,,வட்டாரத்தில் ,,,,கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் சங்க பாகுபாடு இல்லாமல் நடத்திட ஆயத்தங்கள் செய்திடுங்கள்....இந்த பொண்னான காலத்தில் நாம் ஏனோ தானோ என்று இருந்தால் ஆயுள் முழுவதும் அவதியே......................

. தோழர்களே நமது உரிமைக்காக உரிமை மீட்கப்பட கருத்தரங்கம் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்திடுவோம்...டாடா கிப்ஸன் உங்களுக்காக எப்போதும் தாயார் . மேலும் தொடர்புக்கு.....9443464081.

பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது - படிவங்களில் விவரங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க உத்தரவு

தூத்துக்குடி  மாவட்டத்தில்  - தொடக்க கல்வி - காலிப்பணியிடம் -  இல்லை -  டாடா சங்கம் .




மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதிய குழு - அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.
1) அனைவருக்கும் 2.57 ஆல் பெருக்கி ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் .
2) 1.1.2016 முதல் 7 வது ஊதிய குழு ஊதியம் பெறலாம் .
3)படிகள் எதுவும் ரத்து செய்யப்பட வில்லை.
4)pay band and grade pay க்கு பதில்     pay level  நடைமுறை படுத்தப்படுகிறது.
5)ஆண்டு ஊதிய உயர்வு ஜனவரி 1 , மற்றும் ஜூலை 1 ஆகிய நாள்களில் மட்டுமே வழங்கப்படும்.இது பணி நியமனம்.,பதவி உயர்வுக்கு பொருந்தும்.
6)குறைந்த நிலை ஊதியம் 18,000 ஆகும்.
7)ஊதிய திருத்தத்திற்கு மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது.



திருச்சி, கோ.அபிஷேகபுரத்தில்

 ஆசிரியர் இல்லம் திறப்பு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் திருச்சி மாவட்டம், திருச்சி, கோ.அபிஷேகபுரத்தில் 15,376 சதுர அடி கட்டட பரப்பளவில், 73 ஆசிரியர் மற்றும் 3 சிறப்பு விருந்தினர் தங்குவதற்கு ஏதுவாக தரை மற்றும் மூன்று தளங்களுடன் 23 தங்கும் அறைகள், 3 சிறப்பு விருந்தினருக்கான அறைகள், வரவேற்பறை, சமையலறை, உணவு உண்ணும் அறை, கூட்டரங்கம், வைப்பறை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர் இல்லத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.மேலும்


 சென்னை-- சைதாபேட்டையிலும் 

ஆசிரியர் இல்லம் உள்ளது.நாள் வாடகை ரூ.100/ மட்டும். ஆசிரியர்கள் அடையாள அட்டையுடன் சென்று பயன் படுத்திக்கொள்ளுங்பள்......

.டாடா கிப்சன்
நெல்லை மாவட்டம் - தொடக்க கல்வி- ஆசிரியர்கள்  காலிபணியிடம் -- பட்டியல் ---டாடா சங்கம் --


 
DEE-- மனமொத்த மாறுதலின் போது கடை பிடிக்க வேண்டிய செயல்முறைகள் -- இயக்குனர் -- ஆணை ..




TATA - சங்கத்தின் 19.7.2016 கோரிக்கையை ஏற்று பணி நிரவல் ஒன்றியம் விட்டு ஒன்றியம் செய்யப்படும் போது பணிமாறுதல் அன்று தான் வழங்கிட வேண்டும் --என ஆணை --  DEE பணி நிரவலின்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்(நாள்:22.07.2016)




EMIS-ELEMENTARY DIRECTOR PROCEEDINGS

EMIS (2016-17) முதல் வகுப்பு உள்ளீடு செய்யவும், மற்ற வகுப்பு பதிவுகளை சரி செய்யும் பணியை 7.8.16 க்குள் முடிக்க உத்தரவு..


பிச்சை எடுக்கும் அரசு ஊழியர்கள்


அநீதிக்கு எதிராக அரசின் குரல்வளையை இறுக்கிப் பிடிக்க வேண்டாமா..
{ ( * ) நானும் களத்தில் உள்ளேன் என்று காட்டிக்கொள்ள மட்டும் தான் இந்த குரலோ.. }
உயிர் காக்கும் அரசின் கட்டணமில்லா மருத்துவ காப்பீட்டுத் திட்டம் இருந்தும்... மருத்துவமனையில் இன்னும் கொஞ்சம் சேத்துக் கொடுங்க (காப்பீட்டுத்தொகையினை) என்று அரசு ஊழியர்கள் பிச்சை எடுக்கும் அவல நிலை..
உன் அப்பன் வீட்டு காசையா கேட்கிறான் அரசு ஊழியன்.. மாதம் தவறாமல் பிடித்தம் செய்யப்பட்ட தனக்கான காப்பீட்டுத் தொகையினைத் தானே கேட்கிறான்..
ரூ.4,00,000 காப்பீட்டுத் தொகை இருந்த பொழுதே அதில் ரூ.50,000 வாங்க படாத பாடு..
இதில் குறிப்பிட்ட 2 சிகிச்சைக்கு மட்டும் ரூ.7,50,000-மாம் ..
யாருக்காக இந்த மாற்றம்..
அரசு ஊழியனிடம் பிடுங்கிக் கொடுத்த (தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம்) ரூ.150-ஐ ரூ.180 ஆக உயர்த்த மட்டும் தான் இந்த மாற்றம்..
2008 மே மாதம் வரை HF ரூ.10 பிடித்தம் செய்து 1,00,000 காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டது, பிறகு ரூ.25 க்கு 2,00,000 ஆக மாற்றம், அதன் பிறகு ரூ.150-க்கு 4,00,000 ஆனது. ஆனால் தற்பொழுதோ அதே 4,00,000 காப்பீட்டுத் தொகைக்கு ரூ.180 பிடித்தம்
கொடுப்பதோ ரூ.100 (MA) ஆனால் பிடுங்குவதோ ரூ.180
சரி பிடுங்கிய காப்பீட்டுத் தொகையாவது ஆபத்து காலத்தில் பெற முடிகிறதா அதுவும் இல்லை..
மாதம் மாதம் 10,22,000 அரசு ஊழியர்களிடம் ரூ.180 பிடித்தம் செய்தால்.
*10,22,000×180=ரூ.18,39,60,000 (ஒரு மாதத்தில் மட்டும் 18 கோடி)*
ஒரு வருடத்தில் 18,39,60,000×12=ரூ.220,75,20,000.
4 வருடத்தில் 220,75,20,000×4=ரூ.883,00,80,000
நான்கு வருடம் ஒப்பந்தம் செய்த தனியார் நிறுவனத்திற்கு அரசு நம்மிடமிருந்து பிடுங்கிக் கொடுக்கும் மொத்த தொகை ரூ.883 கோடிகளுக்கு மேல்.. (4 வருடத்தில் மட்டும்)
ஆனால் காப்பீட்டு நிறுவனம் இதற்காக செலவிடும் காப்பீட்டுத் தொகை சொற்ப அளவு தான்..
இப்படி இருக்க 10,22,000 அரசு ஊழியர்களில் எத்தனை பேர் 4 வருடங்களில் சிகிச்சை பெறுவர்...???
இதுவும் சொற்ப அளவு தான்...

சொற்ப அளவில் மட்டுமே சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு காப்பீட்டுத் தொகையும் சொற்ப அளவில் பிச்சையாக வழங்கப்படுகிறது..???
இந்த முறைகேடுகளை செய்தித்தாளில் வெளியிடுவதுடன் சங்கங்களின் பணி முடிந்துவிட்டதா...??
அதனால் மயிர்நுனி அளவுகூட பயன் ஏதும் இது வரை இல்லையே...
மாநில அமைப்பில் உள்ள இயக்கவாதிகள் இதுநாள்வரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லவில்லையா என்ன...???
இல்லை, இந்த முறைகேடுகளை தட்டிக் கேட்க திராணி இன்றி தனது சொந்த செலவில் சிகிச்சை பெறுகின்றனரோ..??
இல்லை, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தான்மட்டும் முழு காப்பீட்டு உரிமையையும் பெற்றுவிடுவதால் கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் அவல நிலை பற்றி கவலையில்லையோ...???
இது எதுவாயினும் அரசு ஊழியனின் உயிர்காக்க சங்கங்களின் ஒன்றுபட்ட போராட்டம் தேவை..
நமது உரிமைகளை பிச்சையாக பெற முடியாது தோழர்களே..
இனியும் இழப்பதற்கு அரசு ஊழியனின் உயிர் மட்டுமே மிச்சமுள்ளது..

அதைக் காக்கவாவது சங்கங்கள் சுயநலமின்றி ஓரணியாய் திரள வேண்டும்..
கட்டணமில்லா மருத்துவ சிகிச்சையை உறுதிசெய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டுமாய் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சார்பாக தமிழக அரசையும் நிதித்துறையும் கேட்டுக்கொள்கிறேன்-----

பள்ளிக்கல்வி / தொடக்கக் கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பங்கள்......

தமிழ்நாடு அரசு -- நிதித்துறை - 2016-17ஆம் நிதியாண்டிற்கான வரவு-செலவு திட்ட அறிக்கை....

தமிழ் நாட்டில் ஆசிரியர் மற்றும் அரசுழியர்களுக்கு 6 வது ஊதிய குழு முரண்பாடுகளை தீர்ப்பதற்கு 2010 ல் திரு . ராஜிவ் ரஞ்சன் .இ.ஆ.ப.அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது . அதிலும் பலவேறுபட்ட முரண்பாடுகள் ஏற்பட்டது. அதை தீர்க்க சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு படி 2012 ல் திரு .கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் 3 நபர் குழு அமைக்க பட்டது . அதன் அடிப்படையில் பல்வேறு அரசு ஆணைகள் வெளியிட்டது .அதில் ஆசிரியர்களுக்கு எந்தவொரு பயனுமில்லை .மேலும் இடைநிலை ஆசிரியர்கள் பற்றி உண்மையில்லாத பல்வேறு கருத்தை கூறியது .மேற்கண்ட இரு ஊதிய குழு அறிக்கை கருத்தை ரத்து செய்து உண்மையான ஆதாரங்கள் அடிப்படையில் ஊதியம் 9300 + 4200 என மாற்றம் செய்திட டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்கள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு எண் .33399/2013 தொடரப்பட்டது .அதில் 12.9.2014 தீர்ப்பு பெறப்பட்டது .அதன் அடிப்படையில் அரசு வெளியிட்ட அரசு கடிதம் எண் .60473/Cmpc/2014 நாள் . 10-12-2014 ல் மேற்கண்ட ஊதிய குழு அறிக்கையில் உள்ள அதே கருத்தை மீண்டும் கூறி மறுத்து விட்டது . பிறிதொரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இரு நபர் அமர்வில் மேற்கண்ட இரு ஊதிய குழு அறிக்கைகள் சட்டப்படி சரியானவை அல்ல .இதில் பல்வேறு குழறுபடிகள் உள்ளன என்பதால் அதை ரத்து செய்து ஓய்வுபெற்ற சதீஷ்கர் மாநில தலைமை நீதிபதி .திருமிகு .வெங்கடாசல மூர்த்தி அவர்கள் தலைமையில் ஊதிய குறை தீர் ஆணையம்.மீண்டும் அமைத்து ஊதிய முரண்பாடு தீர்க்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது .
அதன் படி உடனடியாக நீதிமன்றம் தீர்ப்பு படி ஆணையம் அமைத்து ஊதியம் மாற்றி அமைக்க பட வேண்டும். மேலும் அரசு கடிதம் 60473/2014 -----10-12-2014 ரத்து செய்யப்பட வேண்டும். மீண்டும் டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்கள் தலைமையில் 2வழக்கு W.P. MD NO.1612/15 தாக்கல் செய்ய பட்டது .அதில். 10-2-2015 _ உரிய கால கெடுவுக்கு பின் வழக்கு தாக்கல் செய்திட உத்தரவிட்டார் .
ஆனால் தமிழக அரசு. ஆணையம் அமைக்க முடியாது எனவும். ஊதிய மாற்றம் செய்திட முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் சென்று. special leave petitions. Civil. no 35679 - 35838 of 2014 தாக்கல் செய்து 16-01-2015 ல் தடைகள் பெற்று உள்ளதாக அரசு கடிதம் எண் 12925/2015----27-5-2015 தெரிவித்த உள்ளது தமிழக அரசு .
கடந்த 2011சட்ட மன்ற. தேர்தல் வாக்குறுதி யாக ஊதிய முரண்பாடு தீர்க்கப்படும். பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்தப்படும் என வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது அரசே உச்ச நீதிமன்றம் சென்று தடைகள் பெற்று இருப்பது வியப்பாக உள்ளன .

இந்த நிலையில் டாடா சங்கம்  உச்ச நீதிமன்றத்தில்  SLP.NO.9091/2014 .I.A NO. 5/2015 மூலம் வழக்கு தாக்கல் செய்து உள்ளது .மேற்படி டாடா சங்கத்தின் ஊதிய வழக்கிற்கு தமிழக நிதி துறை பதில் மனு தாக்கல் செய்யாமல் நிலுவையில் உள்ளது.அதனால் நமது ஊதிய வழக்கு இறுதி நிலைக்கு வரவில்லை .எனவே ஆசிரியர்களே நமது வழக்கு முடிவுக்கு கொண்டுவர வும் அரசு விரைந்து பதில் மனு தாக்கல் செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கண்டிப்பாக 7 வது  ஊதிய குழுவுக்கு முன்பாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் தான் 7 வது ஊதிய குழுவில் இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.டாடா சங்கம் அதற்கு ஏற்ற ஆயத்த நிலையில் உள்ளது;

தமிழ்நாட்டிடில் 7 வது ஊதிய குழு உச்ச நீதிமன்றத்தில் அரசு அனுமதி பெற்று அதன் பின்னர் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில்தான் அமைக்க முடியும் .16 மாநிலங்களில் 6 வது ஊதியகழுவில் வழங்கப்படட பிற மாநில அரசு ஆணைகள் மற்றும் 2650 பக்கங்கள் கொண்ட அரசு ஆவணங்களுடன் ஊதிய குழுவை எதிர் கொள்ள டாடா சங்கம் தயார் நிலையில் உள்ளது.கண்டிப்பாக 1.1.2006 முதல் 9300+4200 என இடைநிலை ஆசிரியர் ஊதியம் மாற்றப்பட்டு அதன் அடிப்படையில் தான் 7 வது அமையும் ..

டாட்டா கிப்சன் .பொது செயலாளர்
தமிழ் நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்
9443464081
அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கு டாடா சங்கத்தின் வணக்கங்கள் தமிழ்நாட்டில் நடைமுறை படுத்தப்பட்ட 6 வது ஊதிய குழு வால் ஏற்பட்ட பாதிப்புகள் பல ஆகும் .அதில் ஒன்று 1.1.2011 க்கு முன்பாக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பிபி 750 ஊதியத்தில் சேர்காமல் ஊதியம் நிர்ணயம் செய்த்தால் ஏற்பட்ட ஊதிய இழப்பு ஆகும் .அதாவது இளையவர் அதிக ஊதியமும் மூத்தவர் குறைந்த ஊதியமும் பெற்று வருகிறார்கள் .இந்த ஊதிய பாதிப்பை அரசு ஆணை எண்.25/p#ar/ date .23-3-2015 ன் படி சரிசெய்திட முடியும் .இது போன்ற ஊதிய பாதிப்பில் உள்ள1.1.2011 முன்னர் பதவி உயர்வு பெற்ற து.பள்ளி .த.ஆசிரியர்கள் மற்றும் பட்டாதாரி ஆசிரியர்கள் டாடா சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களை அல்லது பொது செயலாளரை அனுகவும் .9443464081... ...டாடா கிப்ஸன்....

பணி மாறுதல் -- பணி நிரவல் ----டாடா சங்கம்  கோரிக்கை