PAGEVIEWERS

அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வியூகம்!
மாநில கல்வி இயக்குனரின்,&'ரகசிய கண்காணிப்பு குழு&' அமைக்கும் அறிவிப்பால், ஓபி அடிக்கும் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சமவெளி பிரதேசங்களை ஒப்பிடுகையில், நீலகிரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய, அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவு. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் செயல்படும் பல ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில், சொற்ப அளவிலான ஆசிரியர்களே உள்ளனர்.

ஓபி அடிக்கும் ஆசிரியர்கள்
பள்ளிகள் மற்றும் மாணவர்களின் மீது தனி அக்கறை, ஆர்வம், நேரம் கருதாமல் பணியாற்றுவது போன்ற சேவை மனப்பான்மை கொண்ட தலைமையாசிரியர், ஆசிரியர்களால் மட்டுமே, சில ஊராட்சிப் பள்ளிகள் &'பெயர் சொல்லும்&' பள்ளிகளாக உள்ளன. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் கணக்கு காண்பிக்கவே, ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர்; வெறுமனே &'ஓபி&' அடித்தும் செல்கின்றனர்.
ஊராட்சி ஒன்றிய, அரசு, உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித் தரம், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணிகளை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே செய்து வரும் நிலையில், அவர்களது செயல்பாடுகளிலும் திருப்தியில்லை என்ற புகார், அரசின் கவனத்துக்கு சென்றிருக்கிறது.
வருகிறது கண்காணிப்பு குழு
இதன் விளைவாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவி, கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள், நர்சரி தொடக்கக் கல்வி அலுவலர்கள், ஆசிரியப் பயிற்றுனர்களை உள்ளடக்கி குழு அமைக்க, தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு குழுவில், இரு உறுப்பினர்கள் உள்ளவாறு பிரித்துக் கொண்டு, முன்னறிவிப்பின்றி, பள்ளிகளை பார்வையிட வேண்டும். தொடர்ந்து புகாருக்கு உள்ளாகும் பள்ளிகள், கல்வித் தரத்தில் பின்தங்கிய பள்ளிகளை கண்காணிப்பதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பணிகள் வரையறை
ஆசிரியர்கள், குறித்த நேரத்திற்கு வந்து, பணி நேரம் முழுக்க பள்ளிகளில் உள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழ், ஆங்கில வாசிப்பு, எழுதும் திறன், கணித அடிப்படை செயல்பாடுகளில் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து சோதித்தறிய வேண்டும். குறிப்பாக, 6, 8 படிக்கும் மாணவ, மாணவியரின் தமிழ், ஆங்கில, கணக்குப் புலமையை பரிசோதிக்க வேண்டும்.
பள்ளி நுாலக செயல்பாடுகளை கண்காணித்து, மாணவர்களை, துணைப்பாட புத்தகங்களை வாசிக்கச் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு புத்தகம், நோட்டுப்புத்தகம், காலனி, புத்தகப்பை, கிரையான், கலர் பென்சில், கணக்கு உபகரணப் பெட்டி, கம்பளிச் சட்டை, பஸ் பாஸ் போன்றவை வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.
பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கற்றல், கற்பித்தல் உபகரணங்கள், ஆங்கில உச்சரிப்பு சார்ந்த சிடிக்கள், லேப்டாப் மற்றும் கணக்கு உபகரணப் பெட்டி போன்றவை, முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
பள்ளியில் உள்ள கழிப்பறை, தண்ணீர் வசதி; மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, பராமரிப்பு உள்ளதா என, உறுதி செய்ய வேண்டும் என்பன, போன்ற பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
ஆய்வில் குறை தென்பட்டால், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் மூலம், எஸ்.எஸ்.ஏ., முதன்மைக் கல்வி அலுவலரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும், கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம், துவக்கப் பள்ளிகளின் கல்வித் தரம் உயருமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உபரி ஆசிரியர்கள் உள்ளதாக 2015 டிசம்பர் மாதம் மாநிலம் முமுவதும் உள்ளதாக AEEO , SSA பணியாளர்களை கொண்ட குழு அமைத்து கண்டறியப்பட்டு உள்ளது

இயக்குனரக செய்தி..........................

. .தொடக்கக் கல்வித்துறை கட்டுபாட்டில் 6000 க்கும் மேற்பட்ட நிதியுதவி பெரும் தனியார் பள்ளிகள் உள்ளது இப்பள்ளிகளில் தமிழகம் முழுவதும் 3000 க்கும் மேற்பட்ட உபரி ஆசிரியர்கள் உள்ளதாக 2015 டிசம்பர் மாதம் மாநிலம் முமுவதும் உள்ளதாக AEEO , SSA பணியாளர்களை கொண்ட குழு அமைத்து கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது இந்த பட்டியலில் உள்ளவர்களை வெளிமாவட்டங்களில் தேவை உள்ள நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு மாற்றம் செய்திட இயக்குனரால் அனுமதி வேண்டி பள்ளிக் கல்வி செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே 2004 ஆண்டு இதுபோல் உபரி ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு பணி நிரவல் செய்யப்பட்டனர்.அதன் பின் 12 வருடங்களுக்கு மேலாக பணி நிரவல் செய்யப்படாத்தால் தென் மாவட்டங்களில் அதிக அளவில் தனியார் பள்ளிகள் உள்ளதால் அங்கு உபரி ஆசிரியர்களும் அதிகமாக உள்ளனர்.நெல்லை மாவட்டத்தில் தொடக்கக் கல்வித்துறையில் மட்டும் 524 பேர் உபரி ஆசிரியர்கள் என கண்டறியபட்டுள்ளனர்.
இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் ஆண்டுதோறும் நிதி இழப்பு ஏற்படுகிறது.எனவே விரைவில் இவர்கள் வெளிமாவட்டங்களுக்கு பணி நிரவல் செய்யப்பட உள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் தெரிவித்து உள்ளார்கள்இந்த மாறுதல்கள் உள்ளாட்சி தேர்தல் முடிந்த்தும் .வெளிமாவட்டங்களுக்கு மாற்றப்படும் ஆசிரியர்கள் பணி ஓய்வு வரை திரும்ப தன் மாவட்டத்திற்கு மாறுதல் பெற முடியாது........டாடா கிப்ஸன்
15-9-16 தலைமை செயலகத்தில் நிதித்துறை செயலாளர் மற்றும் குழு தலைவர் .திருமதி.சாந்தா சீலா நாயர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற CPSதிட்டம் ரத்து
கருத்துக்கேட்பு வல்லுனர்குழுவில் டாட்டா மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர் கலந்துகொண்டு 347 பக்கம் கொண்ட ஆதாரங்களை சமர்பித்து தமிழகத்தில் நாளது தேதி வரை PFRDA Act 2011.நடைமுறைக்கு கொண்டு வராத்தால் சட்டபடியான அங்கிகாரம் இந்த திட்டத்திற்கு இல்லை எனவே 1.4.2003 முதல் நடைமுறை படுத்தபட்டு வரும் இந்த திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்..............

மேலும் டாட்டா சங்கத்தின் சார்பில் கொடுக்கப்படட மனுவின் நகல் உங்கள் பார்வைக்கு .....இதை  நகல் எடுத்து அனைவரையும் படிக்க செய்யுங்கள் ..............டாட்டா கிப்சன் .





CPS க்கு. .....பதில் .......வேறுவகையான பென்சன். ...திட்டம்......

விரைவில் ......தமிழகத்தில். புதிய திருத்திய  பங்களிப்பு ஓய்வூதிய  திடடம்
 ( NRCPS )......நடைமுறைபடுத்த தமிழக அரசின் வல்லுனர் குழு தீவிரஆய்வு ......................................................................................................................................................................
 

தமிழகத்தில் 01-04-2003 முதல் நடைமுறை படுத்தப்பட்டு வரும் CPS திட்டத்திற்கு மாற்றாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் ஆகும் ...ஆனால் வல்லுனர் குழு அதற்கு மாற்றாக வேறுவகையான ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறை படுத்த தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.......இந்த புதிய திட்டத்தில் அரசு அறிவிக்க உள்ளவை......

......................................................................................................................................................................
1) கட்டும் பணத்தில் கடன்பெறலாம்     ................

2) சந்தாதாரர் விரும்பும் அளவு பணம் செலுத்தலாம் ஆனால் அரசு 10% மட்டுமே பங்கு தொகை செலுத்தும்    ........
3) குடும்ப ஓய்வூதியம் உண்டு     ..............
4) கிராஜூடி மற்றும் கமிடேஷன் உண்டு்............  ........
5) கட்டும் பணம் பங்கு சத்தையில் முதலீடு செய்யபடமாட்டாது....................
விரும்பினால் தமிழக அரசின் நிதியத்தில் முதலீடு செய்யலாம் .முதலீட்டுக்கு தமிழக அரசின்100% பாதுகாப்பு உண்டு  ......... ..

.6 ). PFRDA விடம் தமிழக அரசு தன் அரசு ஊழியர்களின் பணத்தை கொடுக்காது   .............
7). அரசு ஊழியர்கள் கட்டும் பணத்தின் வரவு செலவுகளை மாநில கணக்காயர் பராமரிப்பார்      ..............
8) PFRDA வுக்கும் தமிழக அரசு ஊழியர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை  ................

9) பணி ஓய்வு பெரும்போது நிர்னயம் செய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும் .இது பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகும் 


high court madras க்கான பட முடிவு
       ஆனால் புதிய பென்சன் சட்டம் 2011 இது நாள் வரை தமிழ்நாட்டில் சட்டம் நடைமுறை படுத்ததால் 1.4.2003 முதல் நாளது தேதி வரை பணி நியமனம் பெற்றவர்களுக்கு  பழைய ஓய்வூதிய திடடத்தை நடைமுறை தான் நடைமுறை படுத்த வேண்டும் என டாட்டா சங்கம் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு W.P.NO.10375/2016  தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இதன் மூலம் கண்டிப்பாக சட்டம் நடைமுறைக்கு முன்பாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு  பழைய ஓய்வூதிய திடடத்தை டாட்டா சங்க வழக்கு மூலம் அனைவருக்கும் கிடைக்கும் ....டாட்டா கிப்சன் .





Madras High Court
Case Status Information System

Case Status :
Pending
Status Of :
WRIT PETITION  10375  Of  2016
Litigants :
ALL TEACHERS ASSOCIATION OF  Vs.  STATE OF TAMIL NADU,
Pet's Adv :
M/S.M.GNANASEKAR
Res's Adv :
M/S.A.KUMAR SPL GP
Last Date of Hearing :
---
Next / Final Date of Hearing :
Tuesday, March 29, 2016
Case Updated On :
Tuesday, March 29, 2016
Category :
Service

Connected Application(s)

WMP
9158
2016

WMP
9159
2016

Connected Matter(s)

No Connected Cases