PAGEVIEWERS


பொது பிரிவினருக்கு கூடுதல் இடம் வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அமலில் உள்ள, 69 சதவீத இடஒதுக்கீட்டால், பொது பிரிவைச் சேர்ந்த, தகுதியுடைய மாணவர்களுக்கு, கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங்களை உருவாக்கி, அவர்களைச் சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மண்டல் கமிஷன் பரிந்துரையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், இடஒதுக்கீடு, 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்டோர் நலன் கருதி, தமிழக அரசு, சட்டத்தின் மூலம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டு, அது தொடர்கிறது.
bugs 4

Cherries

பள்ளிப் பேருந்து உதவியாளருக்கும் லைசென்ஸ் வழங்க அரசு திட்டம்




 பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாக்கும் விதத்தில் ஓட்டுனர்களுக்கு மட்டுமின்றி, பேருந்து உதவியாளருக்கும் லைசென்ஸ் வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி பேருந்துகளையும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஓட்டுனர்களை பரிசோதிக்கும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உதவியாளரை விட்டு விடுகின்றனர்.

எனவே பள்ளி வாகன உதவியாளர்களும் லைசென்ஸ் பெற வேண்டும் என்ற விதிமுறையை அமல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 விதிகள்,அரசாணைகள் மற்றும் வழிக்காட்டு நெறிமுறைகள் சார்ந்த பயிற்சி - Powerpoint Presentation Slide Show


பள்ளிக்கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் கூடுதல் மாநில திட்ட இயக்குனர் என்ற பதவியை திட்ட இயக்குனர் என்று பெயர் மாற்றி அரசு உத்தரவு.


பள்ளிக்கல்வி - மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் நிரப்புதல் 2012 ஆம் ஆண்டிற்கான தேர்ந்தோர்ப் பட்டியல் தயாரித்தல் - DEO பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டதற்க் கான அரசாணைகள் கோரி உத்தரவு.




அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு முழு உடல் பரிசோதனை: மத்திய அரசு உத்தரவு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper





நாடுமுழுவதும் அரசு பள்ளியில் படிக்கும் 22 கோடி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள 15 மாநிலங்களில் அரசு நடத்தும் 11 லட்சம் பள்ளிகளில் படிக்கும் 22 கோடிக்கும் அதிகமான மாணவ, மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டில் முழு உடல் பரிசோதனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்காக மண்டல அளவில் 2,414 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.383 கோடி நிதியை மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் ஒதுக்கியுள்ளார். மாணவ, மாணவிகளின் கண் பார்வை, செவித் திறன், சருமம், இதயம், பற்கள் என உடலின் அனைத்து பாகங்களும் ஒழுங்காக இருக்கிறதா என்பது பரிசோதனையின் போது உறுதி செய்யப்படும். குறை இருந்தால் அதற்கான சிகிச்சைக்கு மருத்துவர் குழு பரிந்துரை செய்யும். நோய் தடுப்பு ஊசி, இரும்பு சத்து மாத்திரை, விட்டமின் சி மற்றும் ஏ மாத்திரைகளும் பரிசோதனையின் போது பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும். 6 முதல் 18 வயது வரையிலான அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் இந்த பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


டிஎன்பிஎஸ்சி கட்டிடம் இடம் மாறுகிறது





சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள  டிஎன்பிஎஸ்சி கட்டிடம் இடம் மாறுகிறது. பிராட்வே பேருந்து நிறுத்தம் அருகே உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற உள்ளது.வருகிற 27 ந் தேதி டிஎன்பிஎஸ்சி க்கு புதிய கட்டிடத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.புதிய கட்டிடத்தில் பாதுகாப்பு விதிகளை கடிமையாக அமல் படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குரூப் 2 வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை தீவிரமாகிறது. போலி வினாத் தாள்களைப் பயன்படுத்தியவர்கள் மீது தடை விதிப்பது குறித்து புதிய கட்டிட திறப்பு விழாவிற்குப் பின் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 டி.என். பி.எஸ்.சி. குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இத் தேர்வில், ஈரோடு மற்றும் தருமபுரியில் வினாத்தாள் வெளியானது கண்டுபிடிக்கப்பட்டது

:ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப வினியோகம் இன்று (24.09.2012)  தொடங்கியது.

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பணிக்கு தேர்வாக தகுதிதேர்வு எழுத வேண்டுமென்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதற்காக தமிழகத்தின் முதல் ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஜூலை 12ம் தேதி நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். இதில் சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற¢றனர். இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது. இதற்காக அக்டோபர் 3ம் தேதி மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.




சென்னை:அக்டோபர் 30 ல் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சட்டப்பேரவை அமைந்து 60 ஆண்டுகள் ஆவதை ஒட்டி சிறப்புவிழா என அரசு தகவல் வெளியிட்டுள்ளது. வைரவிழாவை ஒட்டி சட்டப்பேரவை மண்டபத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி விழா நடைபெறுகிறது.து.

SCERT - 27, 28 & 29.9.12 அன்று நடைபெறும் ஒரு நாள் RTE பயிற்சி காலாண்டு விடுமுறையில் நடத்தப்படுவதால் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் தாங்கள் விடுப்பில் உள்ள அந்தந்த ஒன்றியத்திலேயே பயிற்சியில் கலந்துகொள்ளலாம் - இயக்குநர் உத்தரவு.


சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஆண்டுதோறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அப்போதைய விலைவாசி உயர்வை பொறுத்து அதிகரித்து வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த நிதி ஆண்டுக்கான அகவிலைப்படி 7 சதமாக உயர்த்தப்பட்டது.
இது தொடர்பாக கடந்த வாரம் நடந்த அதிகார குழு கூட்டத்தில், மம்தா ஆதரவு விலகல் காரணமாக அமைச்சர்கள் குழுக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பொருளாதார விவகாரத்திற்கான அமைச்சரவை குழு மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர்கள் குழு இன்று கூடியது. இந்த கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

பள்ளிக்கல்வி - ஆசிரியர்களின் கல்வித்தகுதி சான்றிதழ் களின் உண்மைத்தன்மை கோரி பெறப்படாத நிலையில் பணிவரன்முறை / தகுதிக்காண் பருவம் முடிக்காமல் உள்ள ஆசிரியர்கள் பட்டியல் கோரி உத்தரவு.


வி.ஏ.ஓ தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு


தொடக்கக்கல்வி - திருச்சி மண்டலம் - மாண்புமிகு அமைச்சர் , பள்ளிக்கல்வி செயலாளர் முன்னிலையில் DEEO / AEEO / AAEEOs கலந்துகொள்ளும் பள்ளி மாணவர் களுக்கான அரசின் விலையில்லா திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் 29.09.2012 அன்று நடைபெறுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான,

 அகவிலைப்படியை, 7 சதவீதம் உயர்த்துவது

 குறித்து முடிவெடுப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


 மத்திய அரசு ஊழியர்களுக்கு, தற்போது, 65 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதை, 72 சதவீதமாக உயர்த்த, அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான முடிவு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நாளை (செப். 21) கூடும், பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன கலந்தாய்வு.



மத்திய அரசு ஊழியர்களுக்கு 7

 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு


மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 65 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதை உயர்த்துவது தொடர்பாக கடந்த சில தினங்களாக டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. 

சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகம் உயர்ந்து விட்டதால் அகவிலைப்படியை கணிசமான அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. 

பள்ளிக்கல்வி - காலாண்டு தேர்வு விடுமுறை +1, +2 தவிர மற்ற வகுப்புகளுக்கு 23.09.2012 முதல் 03.10.2012 வரை விடுமுறை அறிவித்து உத்தரவு.


தமிழ் வளர்ச்சி துறை சார்பாக இளம் எழுத்தாளர் மற்றும் பேச்சாளர்களுக்கான இளந்தமிழர் இலக்கியப் பட்டறை 22 முதல் 28.09.2012 வரை திருவரங்கத்தில் நடைபெறுகிறது.



தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தில்பிளஸ் மற்றும் பிளஸ் பாடநூல்களை எழுத முதுகலை பட்டப்படிப்பு முடித்த திறமையான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பள்ளிக்கல்விவிளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் தலைமையில் தற்போதுள்ள கல்விமுறையை மேம்படுத்த தமிழ்நாட்டுப் பாடநூல் கழகக் கூட்ட அரங்கில் மே 11, 2012 அன்று வல்லுநர் குழு அமைக்கப்பட்டு மேனிலைக் கல்விக்காக பாடத்திட்டம்பாடநூல்கள் எழுதும் பணிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பாடத்திற்கும் உயர்கல்வித் தகுதிகற்பித்தல் அனுபவம்பரந்துபட்ட பாடநூல் அறிவுபாடநூல் எழுதும் ஆற்றல்ஆர்வம் உள்ள மேனிலை வகுப்பு முதுகலை ஆசிரியர்களை emktamil@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிககு அனுப்பலாம்


பள்ளிக் கல்வித் துறையில், இணை இயக்குனர்கள் இருவர், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக இருந்த கண்ணப்பன், பணியாளர் தொகுதி இணை இயக்குனராக மாற்றப்பட்டார். பணியாளர் தொகுதி இணை இயக்குனராக இருந்த ராஜ ராஜேஸ்வரி, இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக மாற்றப்பட்டார். இருவரும், புதிய பொறுப்புகளை ஏற்றனர்.

"தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும்
 குழந்தைகளாக இருக்க வேண்டும்

என்ற உறுதிமொழியை எடுத்துச் செல்வது அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகள் மாநாட்டின் செய்தியாக இருக்க வேண்டும்'' என்று "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் வலியுறுத்தினார்.

"தினமணி' இதழும், தில்லித் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய அகில இந்தியத் தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டு நிறைவு விழாவில் அவர் ஆற்றிய நிறைவுரை:

ஜனவரி 1 முதல் அமலாகிறது எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கும் சில ஸ்டேஷன்கள் ரத்து.


 ஜனவரி 1ம் தேதி முதல் சில முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறிப்பிட்ட ஸ்டேஷன்களில் நிற்காது என்று எனத் தெரிகிறது.தொலை தூர விரைவு ரயில்களில் பயணம் செய்ய 4 மாதங்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதன்படி, தற்போது ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் கடந்த 4 தினங்களாக முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு

DSE - CEO / ADDL CEOs PROMOTION / TRANSFERRED LIST, PROMOTED DEO / DEEOs & INCHARGED DEOs LIST


SCERT - தொடக்க / உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான RTE சட்டம் தொடர்பான புத்தாக்கப் பயிற்சி 27.09.2012 முதல் 29.09.2012 வரை நடத்துதல் சார்ந்த இயக்குனரின் செயல்முறைகள்


அக்டோபர் 3-ந் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு: தோல்வி அடைந்தவர்களுக்கு மறுதேர்வு நடத்த முடியாது விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

 ஏற்கனவே தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்களுக்கு அக்டோபர் 3-ந் தேதி நடத்தப்படும் தேர்வில் புதிய விண்ணப்பதாரர்களையும் அனுமதிஅளிப்பது குறித்து விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர் தகுதி தேர்வுசென்னை சூளையை சேர்ந்த ஏ.யாமினி என்பவர், சென்னை
ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-மத்திய அரசு கொண்டு வந்துள்ள கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆசிரியராக பணியில் சேர தகுதி தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும். இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில்,ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வினை கடந்த ஜுலை மாதம் நடத்தியது.இந்த தேர்வில், 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் கலந்துக் கொண்டனர்.

Honble Chief Minister paid floral tributes to Perarignar Anna on the occasion of his 104th birth anniversary and released a special Souvenir

Press Release
Press Release