பத்தாம் வகுப்பு முடிவுகள் : மறுகூட்டலுக்கு 07.06.2013 முதல் 10.06.2013 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மார்ச்/ஏப்ரல் 2013 எஸ்.எஸ்.எல்.சி தேர்வெழுதியோர் விடைத்தாட்களின் மதிப்பெண்கள் மறுக்கூட்டலுக்கு Online மூலம் விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. எனவே தேர்வர்கள் விண்ணப்பங்கள் கோரி எந்தவொரு கல்வி அலுவலகத்தையும் அணுக வேண்டாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
மார்ச்/ஏப்ரல் 2013 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்விற்கு தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு (Retotalling) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விழைவோர்.www.dge.tn.nic.in என்ற இணையதளத்தின்மூலம் Online முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விடைத்தாள் மறுகூட்டல் கோரி விண்ணப்பிப்போர், ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்தும் காலம் :07.06.2013 முதல் 10.06.2013 வரை.
மறுகூட்டல் கட்டணம்
இருதாட்கள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் : ரூ.305/-
(மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம்)
ஒருதாள்கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் : ரூ.205/-
(கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல்)
Online முறையில் விண்ணப்பிக்கும் முறை
தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி, விண்ணப்பத்தினை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் ஒவ்வொரு பாடத்திற்கும், விண்ணப்பத்தினை தேர்வர் சரியாக பூர்த்தி செய்த பின்னர், அதற்கான விண்ணப்ப எண்ணுடன் கூடிய ஒப்புகைச்சீட்டு மற்றும் வங்கி செலுத்துச்சீட்டு (Bank Chalan) ஆகியவற்றை பதிவிறக்கம் (Printout) செய்து கொள்ள வேண்டும்.
பதிவிறக்கம் செய்த Chalan-ஐ கொண்டு அருகிலுள்ள ‘கோர் பாங்கிங்’ சேவையுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) ஏதாவது ஒரு கிளையில் Chalan-ல் குறிப்பிட்டுள்ள தொகையினை ‘அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை-6’ என்ற பதவிப் பெயரில் செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment