PAGEVIEWERS

தமிழக முதல்வர் ஜெயலலிதா பொங்கல் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில், அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிகவும்  மகிழ்ச்சி அடைகிறேன்.
சாதி வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்துடன், பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில் கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளை பொருட்களை வைத்து, புதுப் பானையில் அரிசியிட்டு, “பொங்கலோ பொங்கல்” என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனை வணங்கி கொண்டாடும் பண்டிகை  பொங்கல் பண்டிகை ஆகும்.

 பிற பணி என்ற பெயரில், பள்ளிக்கூட பணிகளை கவனிக்காத, தலைமை ஆசிரியர்களுக்கு, ஆறு முக்கிய விதிமுறைகளை விதித்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி... பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.
அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில் சிலர்பள்ளி வேலை நாட்களில்பிற பணி என்ற பெயரில்,வெளியூர் செல்வதும்சொந்த பணிகளை கவனிப்பதாகவும்அரசின் கவனத்திற்கு புகார் சென்றதுஇதனால்,அலுவலக பணிகளுடன்மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுவதை தவிர்க்கபள்ளிக் கல்வித்துறைபுதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.


 பத்தாண்டுகளுக்கு பிறகு, பயணிகள் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. பயணிகளை அதிகம் பாதிக்காத வகையில், உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்கள் மூலம், 6,600 கோடி ரூபாய் திரட்ட, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கூடுதலாக கிடைக்கும் தொகை மூலம், மிக மோசமான நிலையில் இருக்கும், ரயில் சேவைகள் ...

டி.என்.பி.எஸ்.சி., நடப்பு ஆண்டில், 30 ஆயிரம் பேர் 
தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. அரசின் பல்@வறு துறைகளில் தேவைப்படும், பணியாளர் எண்ணிக்கை குறித்த விவரங்களை பெற்று, தேர்வாணையம் இறுதி செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பு, பொங்கலுக்குப் பின் வெளியாகும் என, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. 
சில ஆண்டுகளாக, தமிழக அரசின் பல்வேறு துறைகளில், புதிய பணியாளர்களை நியமனம் செய்யும் பணி, வேகம் எடுத்து வருகிறது. 2011ல், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யும் பணி, முழு வீச்சில் நடந்து வருகிறது. துறை வாரியாக, காலியாக உள்ள பணியிடங்கள் கணக்கு எடுக்கப்பட்டு, டி.என்.பி.எஸ்.சி., - டி.ஆர்.பி., மூலமும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையிலும், பல்வேறு வகையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி.,) தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது சி.பி.எஸ்.இ., நிர்வாகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மத்திய அரசின் ஆர்.டி.இ., சட்டப்படி, நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர் பணிகளில் சேர்வதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ரசு கல்லூரிகளில் புதிதாக நியமிக்கப்பட உள்ள 1,060 உதவி பேராசிரியர் நியமனத்தை கண்காணிக்க கல்லூரி கல்வி இயக்குனர் தேவதாஸ் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அடுத்த கல்வி ஆண்டில் ஏற்படும் ஆசிரியர் காலி பணி இடங்களை சிறப்பு பதவி உயர்வு, நேரடி நியமனம் மூலம் நிரப்ப பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 2013,14ம் கல்வி ஆண்டில் பட்டதாரி ஆசிரியர்கள், சிறுபான்மை மொழி, இடைநிலை ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர்களின் காலி பணி இடங்கள் உருவாகின்றன. இவற்றை நிரப்ப பதவி உயர்வு மூலமாகவும், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து தேர்வாளர் பட்டியல் பெற்று நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்பட உள்ளன. இதற்காக உத்தேச பணியிட மதிப்பு பட்டியலை அரசின் பார்வைக்கு அனுப்புவதற்காக அந்தந்த மாவட்டங்களில் ஏற்படும் காலி பணி இடங்கள் குறித்த முழுவிவரங்களை வரும் 21ம் தேதிக்குள்


நேரடி தேர்வு மூலமாக விரைவில் 12 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகளும், 12 மாவட்ட கல்வி அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளனர். தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலமாக உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளாக (ஏ.இ.இ.ஓ.) பணி அமர்த்தப்படுகிறார்கள். ஏ.இ.இ.ஓ. பணி காலி இடங்களில் 40 சதவீத இடங்கள் நேரடி தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்கான போட்டி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் 12 ஏ.இ.இ.ஓ. பணி இடங்கள் நேரடி தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிட உள்ளது. இதே போல், மாவட்ட கல்வி அதிகாரி நியமனத்தை பொறுத்தவரையில்

எங்களுக்கு மூன்று ஆண்டுகளாக ஓய்வூதியம் கொடுக்கப்படவில்லை. இதனால், வறுமையில் வாடுகிறோம். வரும், 25ம் தேதிக்குள், ஓய்வூதியம் வழங்குங்கள்; இல்லையெனில், எங்கள் உயிரை போக்கிக் கொள்வதற்கு, அனுமதி கொடுங்கள்' என, மகாராஷ்டிராவைச் சேர்ந்த, 164 பேர், ஜனாதிபதிக்கு, உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம், யாவத்மால் மாவட்டத்தை சேர்ந்த சிலர், மத்திய அரசின் திட்டத்தில், முதியோர், மாற்றுத் திறனாளி, விதவை ஆகியோருக்கான, ஓய்வூதியங்களை பெற்று வந்தனர்.மூன்று ஆண்டுகளாக, இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை; பல்வேறு தரப்பினரை அணுகியும், பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து, ஓய்வூதியம் கிடைக்காத, 164 பேர், நேற்று, யவத்மாலில் உள்ள, வருவாய் துறை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கிருந்த தாசில்தாரிடம், தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி, ஜனாதிபதிக்கு எழுதிய, கையொப்பமிட்ட மனுவை அளித்தனர்

2012 - 13ஆம் ஆண்டுக்கான மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பெற்று பணியில் சேர உள்ள அலுவலர் களின் பட்டியல்

1. மாவட்டக் கல்வி அலுவலர், தக்கலை
சி.பால்ராஜ்
முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்
முதன்மைக் கல்வி அலுவலகம்,
திண்டுக்கல்    
2. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், வேலூர்
எஸ்.அருண்மொழி                         
தலைமை ஆசிரியர்     
அரசு மேல்நிலைப் பள்ளி                  
கன்னிகைபேர்                        
திருவள்ளூர் மாவட்டம்   

3. மெட்ரிக் பள்ளிகள் ஆய்வர், மதுரை
செ.எமரல்சி     
தலைமை ஆசிரியர்                       
அரசு உயர்நிலைப் பள்ளி,               
பறக்கை
கன்னியாகுமரி மாவட்டம் 
4. மாவட்டக் கல்வி அலுவலர் பெரியகுளம்
டி.சி.அனந்தநாயகி 
தலைமை ஆசிரியர்  
அரசு மேல்நிலைப் பள்ளி
அ.வல்லாளப்பட்டி
மதுரை மாவட்டம்    

5. மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர்,தூத்துக்குடி
சீ.வசந்தா                                   
தலைமை ஆசிரியர்                         
அரசு உயர்நிலைப் பள்ளி                  
வடமலைபுரம்                             
விருதுநகர் மாவட்டம்    
சென்னையில் பள்ளி நேரத்தை மாற்ற சென்னை போக்குவரத்து துறை செயலாளர் சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சென்னை கந்தன்சாவடியில் பஸ் மீது பின்னால் வந்த லாரி மோதியதில், படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியானார்கள். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்று சென்னை போக்குவரத்து துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சென்னையில் பள்ளி நேரத்தை காலை 7. 30 மணிக்கும், கல்லூரி நேரத்தை காலை 8 மணிக்கு துவக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 26 ம் தேதி முதல் கூடுதலாக 264 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் விபத்துகளை தடுக்க மாணவர்கள், போக்குவரத்து துறைஅதிகாரிகள் , போலீசார் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 1824 பஸ்கள் கதவுகள் இல்லாமல் உள்ளன என கூறினார்

 2012 - 13ஆம் நிதியாண்டில் நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி எவ்வளவு?

ஆண்டு வருமானத்தை பொறுத்து தனிப்பட்ட நபருக்கான வரி விதிப்பு 4 பிரிவுகளில் விதிக்கப்படுகிறது.
முதல் பிரிவு (பொது)வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் - வரி இல்லை.
வருமானம் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை - ரூ.2 லட்சம் வரை வரி இல்லை. அதற்கு மேல் ஈட்டும் தொகையில் 10 சதவீதம் வரி.
ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை- ரூ.30 ஆயிரம்+ ரூ.5 லட்சத்திற்கு மேல் ஈட்டும் தொகையில் 20 சதவீதம் வரி.
ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேல்- ரூ.1,30,000+ ரூ.10 லட்சத்திற்கு மேல் ஈட்டும் தொகையில் 30 சதவீதம் வரி.
2வது பிரிவு (60 வயதிற்கு உட்பட பெண்கள்)ரூ.2 லட்சத்திற்குள் - வரி இல்லை

1127 மாணவ, மாணவிகள் மாயம்.. வழக்கு சிபிசிஐடிக்குப் போகிறது

தமிழகத்தில் கடந்த 2004 முநடப்பாண்டு ரை காணாமல் போய் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ள 1127 மாணவ, மாணவியர் நிலை குறித்து அறிய இந்த வழக்குகளை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க அரசு தீர்மானித்துள்ளதாக
தெரிகிறது. இதுவரை 557 மாணவர்கள், 570 மாணவிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றனர். இவர்களது நிலை என்ன என்பதே இதுவரை தெரியவில்லை. புகார் கொடு்த்த பெற்றோர் மற்று்ம் உறவினர்கள் தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையாய் நடக்கின்றனர்.