PAGEVIEWERS
அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூட்டம் 13.03.2013 அன்று சென்னை தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெற உள்ளது.
அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூட்டம் 13.03.2013 அன்று சென்னை தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெற உள்ளது. மேற்கண்ட கூட்டத்தில் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களும் தவறாது கலந்துகொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தங்களது மாவட்டத்தின் முக்கியமான புள்ளி விவரங்களை தயார்ப்படுத்தி வைத்து கொள்ள இயக்குநர் உத்தரவு பிற்பித்துள்ளார்.
மேற்கண்ட கூட்டத்தில் கழிவறை / குடிநீர் வசதி, மடிக்கணினி பயன்பாடு, ஸ்மார்ட் கார்டு, விலையில்லா நோட்டு புத்தகம், நீதிமன்ற வழக்குகள், சுயநிதிப் பள்ளிகள், அரசாணை எண். 210 குறித்த நீதிமன்ற தீர்ப்பினை செயல்படுத்தாதற்க்கான காரணம், சிறார் இல்லங்கள் கருத்துருக்கள், மின் கட்டண தேவை, முதலமைச்சரின் தனிப் பிரிவு மனுக்கள் பற்றிய விவரம், அரசு வழக்கறிஞர் கட்டண நிலுவை ஆகிய விவரங்களை கொண்டு வர இயக்குநர் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட கூட்டத்தில் கழிவறை / குடிநீர் வசதி, மடிக்கணினி பயன்பாடு, ஸ்மார்ட் கார்டு, விலையில்லா நோட்டு புத்தகம், நீதிமன்ற வழக்குகள், சுயநிதிப் பள்ளிகள், அரசாணை எண். 210 குறித்த நீதிமன்ற தீர்ப்பினை செயல்படுத்தாதற்க்கான காரணம், சிறார் இல்லங்கள் கருத்துருக்கள், மின் கட்டண தேவை, முதலமைச்சரின் தனிப் பிரிவு மனுக்கள் பற்றிய விவரம், அரசு வழக்கறிஞர் கட்டண நிலுவை ஆகிய விவரங்களை கொண்டு வர இயக்குநர் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒலி மாசுவின் விஸ்வரூபம்
வாழ்வதற்கு ஏற்ற நல்ல சூழல் என்பது, நல்ல காற்று, குடிநீர், இருப்பிடம் ஆகியவற்றோடு முடிந்துவிடுவதில்லை. அமைதியும் முக்கியம். ஓசை என்பது ஓசையாகவே இருக்க வேண்டும்; அது ஒலியாக மாறி நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது.
மாசு நிறைந்த நீர், நிலம், காற்று ஆகியவற்றால் உடல் ஆரோக்கியம் எப்படிப் பாதிக்கப்படுகிறதோ அதற்கு இணையாக ஒலி மாசு உடல் நலத்தையும் மன நலத்தையும் பாதிக்கும் என்பதை உணராவிடில் உடல் உறுப்புகள் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.
எச்சரிக்கை...! C.F.L .பல்புகள் உடைந்தால்...!
சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது.
இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .
ஏழாவது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.லோக்சபாவில் நேற்று, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா கூறியதாவது: ஆறாவது சம்பள கமிஷன் அளித்த பரிந்துரைகள், 2006 ஜனவரி, 1ம் தேதியிலிருந்து, அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், ஏழாவது சம்பள கமிஷனை அமைக்க வேண்டும் என, ஒரு சிலரிடமிருந்து, கோரிக்கைகள் வந்துள்ளன.முந்தைய நடைமுறைகளின்படி, இரண்டு சம்பள கமிஷன்களுக்கு இடையே, குறைந்தது, 10 ஆண்டுகள் இடைவெளி இருந்துள்ளது. எனவே, ஏழாவது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் எதுவும், இப்போது அரசிடமில்லை.இவ்வாறு, நமோ நாராயண் மீனா கூறினார்.
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் பதவிக்காலம், 12ம் தேதியுடன் முடிகிறது. எனவே, புதிய தலைவர் குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியான நடராஜ், கடந்த ஆண்டு, ஜனவரி, 23ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நியமிக்கப்பட்டார். தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருப்பவர்கள், 62 வயது அல்லது ஆறு ஆண்டுகள், இதில், எது முதலில் வருகிறதோ, அதுவரை பதவியில் இருக்கலாம். அதன்படி, நடராஜ், 62, பதவிக்காலம், வரும் 12ம் தேதியுடன், முடிவுக்கு வருகிறது. கடந்த,
"ஆண்களுக்கு பெண்கள் போட்டி' என்ற நிலை மாறி இன்று "பெண்களுடன் ஆண்கள் போட்டியிடும் நிலைமை' ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு அனைத்து துறைகளிலும் பெண்கள் வளர்ச்சி பெற்றுள்ளனர். பெண் என்பவள், மனைவி, தாய், குடும்பத்தலைவி என பல பரிணாமங்களாக திகழ்கிறாள். "உடல் வலிமை ஆண்களுக்கு பலம் என்றால், மன வலிமை பெண்களுக்கு பலம்' என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியலில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. "ஒரு உறுதிமொழி: பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளை முற்றிலும் நிறுத்துவதற்கான நேரம்' என்பது இந்தாண்டு ஐ.நா.,வின் மையக்கருத்து. பல துறைகளில் ஆண்களுக்கு நிகராக, பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதிகார வர்க்கமாக திகழும் அரசியலில், பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்பது, இன்னும் கோரிக்கை நிலையில் உள்ளது. எத்தனை ஆட்சிகள் மாறினாலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தற்போது பார்லிமென்டிலும், மத்திய அமைச்சரவையிலும் உள்ள பெண்கள் வெறும் 10 சதவீதம். பெண்களுக்கு கிடைக்க வேண்டிய இந்த உரிமையை, சிலர் சலுகையாக நினைத்து மறுப்பது வேதனைக்குரியது.
அரசுத் துறைகளில் குறித்தகாலத்தில் பொருள்
மற்றும் சேவை பெறும் உரிமை மற்றும் குறைதீர் சட்ட முன்வடிவுக்கு மத்திய
அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைச் சுருக்கமாக "சேவை பெறும் உரிமைச்
சட்ட முன்வரைவு' எனலாம். இந்தச் சட்ட முன்வரைவின் உள்ளார்ந்த நோக்கம்
ஒருவகையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு இணையானது.
மத்திய, மாநில அரசுத் துறைகள், அரசு நிதியுதவி
பெறும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் ஆகியன அனைத்தும் இந்தச் சட்ட
வரம்புக்குள் வருகின்றன. சேவைக் குறைபாடு உண்மை என்று கண்டறியப்பட்டால்,
ரூ.250 முதல் ரூ.50,000 வரை அபராதம், துறை நடவடிக்கை எல்லாவற்றையும் இந்தச்
சட்டம் உறுதி செய்கிறது.
தமிழகத்திற்கு அறிவிக்கப் பட்டுள்ள 14 புதிய ரயில்களின் முழு விவரம்.
எக்ஸ்பிரஸ் ரயில்கள் விவரம்:1.பாலக்காடு- ஈரோடு
2.மதுரை- கச்சிகுடா (ஹைதராபாத்) வாராந்திர எக்ஸ்பிரஸ்
3.சென்னை- ஷாலிமார் (கொல்கத்தா) வாரந்திர ரயில்4.மன்னார்குடி- திருப்பதி (வாரம் 3 முறை- திருவாரூர், விழுப்புரம், காட்பாடி வழியாக)
5.கோவை- பிகானீர் (ராஜஸ்தான்) ஏசி எக்ஸ்பிரஸ் வாரந்திர ரயில்
6.சென்னை- பெங்களூர் ஏசி டபுள் டெக்கர் தினசரி
7.திருச்சி- திருநெல்வேலி தினசரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (மதுரை, விருதுநகர் வழியாக)
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( TATA)
1.6.2009 க்கு பின்னர் நியமனம் பெற்றவர்களை
வைத்து ஏன் கோரிக்கை வைக்கிறது
என்பதற்கான விளக்கம்.
அனைவருக்கும் வணக்கம். எங்கள் சங்கம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெற்றுத்தருவதில் அதிக அக்கறையுடன் செயல்படுவதை சமீபத்தில் எங்கள் சங்கம் பெற்ற RTI தகவல்கள், மற்றும் நிதிதுறையிடம் இருந்து பெறப்பட்ட கடிதங்களை நமது நண்பர்களின் இணையங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
தற்போது (01.06.2009 )க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வந்துள்ள தகவலை பார்த்து 1.6.2009 க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் பாதிப்பா ? எல்லோரும் தானே GRADE PAY 2800 வாங்குகிறோம் என கேட்கின்றனர். அவர்களுக்கு விளக்கமளிக்க விரும்புகிறேன். கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்.
மாநில அளவிலான பதிவு மூப்பு முன்னுரிமை
அடிப்படையில் நியமனம் பெற்று இடைநிலை
ஆசிரியர்களாக பிற மாவட்டங்களில் பணியாற்றும்
ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்.
மாநில அளவிலான பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் கோரி வழக்கு
தொடுத்தவர்கள் சார்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் மேற்காண் வகையில் நியமனம்
பெற்றவர்கள்
மாவட்ட மாறுதல் பெற இயலாத நிலை உள்ளது. எனவே இது குறித்து பணிவுடன்,
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா
அவர்களிடமும்,
மதிப்புமிகு. பள்ளிகல்வித்துறை முதன்மை
செயலாளர் அவர்களிடமும்
கோரிக்கை மனுக்கள் அனுப்ப தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( TATA )
முடிவுசெய்துள்ளது. இங்கே வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவினை பதிவிறக்கம்
செய்து உங்கள் முகவரி மற்றும் உங்களைப் பற்றிய விவரங்களை காலி
இடத்தில் நிரப்பி கையொப்பமிட்டு பதிவு தபாலில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
மொழிக் கல்வி பயிற்சித் திட்டம்
மொழிக் கல்வியில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள்,
மாணவர்கள், சிறுபான்மை மொழியினர், மொழிப் பெயர்ப்பாளர்கள், மொழிக்
கல்வியில் ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து, 10 மாத மொழிக்கல்வி பயிற்சித்
திட்டத்தில் சேர மத்திய மொழிக்கல்வி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவில், ஏழு மண்டலங்கள் உள்ளன. இந்திய
மொழிகள் பற்றி பயிலும் திட்டம் இவற்றில் உள்ளது. மொத்த இடங்கள் 506.
பல்வேறு பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு உண்டு. மைசூரில் தென் மண்டல மொழிகளின்
மையம் செயல்படுகிறது. இங்கு கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற
மொழிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்ய கோரி தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு
நடுவண்
அரசு 01.01.2004ல் நாடு முழுவதும் பணிபுரியும் மத்திய அரசு பணியாளர்கள்
இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதையடுத்து
படிப்படியாக பெரும்பாலான மாநில அரசுகளும் இத்திட்டத்தை நடைமுறைக்கு
கொண்டு வந்தன. இத்திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள்
நடைபெற்றாலும் தொடர்ந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு
பல்வேறு முயற்சிகள் செய்தவண்ணம் உள்ளனர்.
மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மாற்றம்
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் பொறுப்பில்
இருந்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, விடுவிக்கப்பட்டார்.
பாடநூல் கழக செயலர் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பொறுப்பு
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மெட்ரிக் இயக்குனராக இருந்த செந்தமிழ்ச்
செல்வி, டிசம்பரில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, தேர்வுத்துறை இயக்குனர்
வசுந்தரா தேவியிடம், மெட்ரிக் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக
வழங்கப்பட்டது. விரைவில், பள்ளி பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன.
இதனால், தேர்வுத்துறை இயக்குனர், தேர்வுப் பணிகளில், முழு கவனம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதை அறிந்து, அவரை, மெட்ரிக் இயக்குனர் பொறுப்பில் இருந்து, தமிழக அரசு விடுவித்துள்ளது. பாடநூல் கழக செயலராக இருக்கும் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இதனால், தேர்வுத்துறை இயக்குனர், தேர்வுப் பணிகளில், முழு கவனம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதை அறிந்து, அவரை, மெட்ரிக் இயக்குனர் பொறுப்பில் இருந்து, தமிழக அரசு விடுவித்துள்ளது. பாடநூல் கழக செயலராக இருக்கும் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருந்ததால் தான் இன்று நீதிபதியாக உள்ளேன்: உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன்
எனது ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருந்ததால்தான்
இன்று உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளேன் என்றும், ஆசிரியர்களை மதிக்கக்
கற்றுக் கொண்டவர்களின் வாழ்க்கை எதிர்காலத்தில் கண்டிப்பாக வெற்றியாகத்தான்
இருக்கும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
கே.வெங்கட்ராமன் சனிக்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூர், வள்ளுவர்
வித்யாலயாவில் நடைபெற்ற 9-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில்
கூறினார்.
ஆசிரியர் நியமன தகுதி மதிப்பெண்: தளர்த்த கோரிய மனுக்கள் தள்ளுபடி
ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதி தேர்வில்,
தகுதி மதிப்பெண்ணை தளர்த்தக் கோரிய மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி
செய்தது. நிர்ணயிக்கப்பட்ட தகுதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்; அதை
மீறி நடக்கும் நியமனங்கள் செல்லாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் பணி நியமனத்துக்கான, தகுதி தேர்வு,
கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்தது. தகுதி மதிப்பெண், 60 சதவீதம் என,
நிர்ணயிக்கப்பட்டது. இதில், கலந்து கொண்டோர், சொற்ப அளவிலே தேர்ச்சி
பெற்றனர். இதையடுத்து, கடந்த ஆண்டு, அக்டோபரில், மீண்டும் தகுதி தேர்வு
நடத்தப்பட்டது.
"தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியாது" - Dinamalar
லட்சக்கணக்கானோர் படித்து விட்டு, வேலையின்றி காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய, தகுதித் தேர்வு நடத்த
வேண்டியுள்ளது. தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியாது என, மதுரை
ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.திருநெல்வேலி மாவட்டம்,
சுப்பானூர் இந்து நடுநிலை பள்ளி, குலசேகரம்பட்டி பொன்னுச்சாமி துவக்க
பள்ளி, புதுக்குடி முருகா துவக்க பள்ளி, சொக்கம்பட்டி ஹரிஜன் துவக்க பள்ளி
செயலர்கள் தாக்கல் செய்த மனுக்கள்:
.VOICE OF TATA: தந்தைக்கு உணவு அளிக்க மறுத்த ஆசிரியர் சஸ்பெண்ட் :...
.VOICE OF TATA:
தந்தைக்கு உணவு அளிக்க மறுத்த ஆசிரியர் சஸ்பெண்ட் :...: தந்தைக்கு உணவு அளிக்க மறுத்த ஆசிரியர் சஸ்பெண்ட் : கல்வித்துறை அதிரடி நடவடிக்கை தர்மபுரி அருகே தந்தையின் பராமரிப்புக்கு உதவாமல் உண...
தந்தைக்கு உணவு அளிக்க மறுத்த ஆசிரியர் சஸ்பெண்ட் :...: தந்தைக்கு உணவு அளிக்க மறுத்த ஆசிரியர் சஸ்பெண்ட் : கல்வித்துறை அதிரடி நடவடிக்கை தர்மபுரி அருகே தந்தையின் பராமரிப்புக்கு உதவாமல் உண...
தந்தைக்கு உணவு அளிக்க மறுத்த ஆசிரியர் சஸ்பெண்ட் : கல்வித்துறை அதிரடி நடவடிக்கை
தர்மபுரி அருகே தந்தையின் பராமரிப்புக்கு உதவாமல் உணவளிக்க மறுத்த துவக்கப்பள்ளி ஆசிரியரை கல்வித்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியை அடுத்த
கரகூரைச் சேர்ந்தவர் தனபால்(80). விவசாயி. இவருக்கு கோவிந்தன், முருகேசன், ரவி என்ற மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. சொத்துகள்
மாநில அளவிலான பதிவு மூப்பு முன்னுரிமை
அடிப்படையில் நியமனம் பெற்று இடைநிலை
ஆசிரியர்களாக பிற மாவட்டங்களில் பணியாற்றும்
ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்.
மாநில அளவிலான பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் நியமனம்
கோரி வழக்கு தொடுத்தவர்கள் சார்பான வழக்கு நிலுவையில் உள்ளதால்
மேற்காண் வகையில் நியமனம் பெற்றவர்கள் மாவட்ட மாறுதல் பெற
இயலாத நிலை உள்ளது. எனவே இது குறித்து பணிவுடன்,
மாண்புமிகுதமிழகமுதல்வர்அம்மா
அவர்களிடமும், மதிப்புமிகு.
பள்ளிகல்வித்துறை முதன்மை
செயலாளர் அவர்களிடமும் கோரிக்கை மனுக்கள் அனுப்ப தமிழ்நாடு
அனைத்து ஆசிரியர் சங்கம் முடிவுசெய்துள்ளது. இங்கே வெளியிட்டுள்ள
கோரிக்கை மனுவினை பதிவிறக்கம் செய்து உங்கள் முகவரி மற்றும்
உங்களைப் பற்றிய விவரங்களை காலி இடத்தில் நிரப்பி கையொப்பமிட்டு