PAGEVIEWERS


தந்தைக்கு உணவு அளிக்க மறுத்த ஆசிரியர் சஸ்பெண்ட் : கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

தர்மபுரி அருகே தந்தையின் பராமரிப்புக்கு உதவாமல் உணவளிக்க மறுத்த துவக்கப்பள்ளி ஆசிரியரை கல்வித்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியை அடுத்த
கரகூரைச் சேர்ந்தவர் தனபால்(80). விவசாயி. இவருக்கு கோவிந்தன், முருகேசன், ரவி என்ற மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. சொத்துகள் அனைத்தையும் மகன்களுக்கு பிரித்துக் கொடுத்து விட்டார். இந்நிலையில், சுழற்சி முறையில் ஒவ்வொரு மகன் வீட்டிலும் தங்கி சாப்பிட்டு வந்தார். கடைசியாக அவரது 3வது மகனான பாலக்கோடு அடுத்த பொப்பிடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ரவியின் வீட்டிற்கு வந்தார். ஆனால் தந்தை ஒருதலைப்பட்சமாக சொத்தை பிரித்துக் கொடுத்து விட்டதாக கூறி அவருக்கு ரவி சாப்பாடு போட மறுத்துவிட்டார். மேலும், பராமரிப்பு செலவுக்கும் பணம் தர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த முதியவர் மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். எஸ்ஐ சற்குணம் வழக்குப்பதிந்து ஆசிரியர் ரவியை கைது செய்தார்.

அரசுப்பணியில் இருப்பவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். இதன்படி, குற்ற வழக்கில் சிக்கிய ரவி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட ரவி, நேற்று ஜாமீனில் வெளியே வந்தார். அவரை மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு வரவழைத்து அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான உத்தரவை அளித்த னர். இது ஆசிரியர்கள் மத்தியிலும், அப்பகுதி மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment