இடைநிலை ஆசிரிய நண்பர்களுக்கு ஓர்
விளக்கமும் வேண்டுகோளும்.
ஆறாவது ஊதிய குழுவின் ஊதிய முரண்பாடுகளை நீக்கிட ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.
ஒரு நபர் குழுவின் அறிக்கைக்குப் பின்னரும் ஊதிய
முரண்பாடுகள் தொடர்ந்ததால் ஏற்ப்படுத்தப்பட்டது மூன்று நபர்
குழு என்று அழைக்கப்படுகிற ஊதிய குறை தீர்க்கும் பிரிவு.
(இதன் அறிக்கை அடிப்படையில் வெளிவரப்போகும் அரசாணைகளை அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.)
இவ்வாறிருக்க "ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் Diploma Qualification உள்ள பணியிடங்களுக்கு ரூ.2800 லிருந்து ரூ.4200 /- ஆக திருத்தியமைக்கப்பட்டது. இ.நி.ஆ. பணியிடத்திற்கு மாற்றப்படவில்லை - அரசு பதில்" எனபழைய RTI யில் தகவல் என வெளிவந்துள்ள தகவலை கண்டு, கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் வேதனயுடன் பதறி விளக்கம் கேட்டு வேதனை அடைந்துவருகின்றனர்.
இதனால் என் இடைநிலை ஆசிரியர் சமுதாய நண்பர்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய நிலையில் இதனை பதிவு செய்கிறேன்.
இன்னும் 500 வருடம் கழித்து RTI யில் ஒரு நபர் குழுவின்
இடைநிலை ஆசிரியர் ஊதிய விவரம் கேட்டால் 5200 - 20200 +2800
என்று தான் தருவார்கள்.
ஒரு நபர் குழுவின் முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு அதாவது ஊதிய குறை தீர்க்கும் பிரிவிலும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதம் மாற்றப்படவில்லஎன்றால் தான் கவலைப்பட வேண்டும்.
17.4.2013 இல் கையெழுத்திடப்பட்ட கடிதம், மூன்று நபர் குழ அறிக்கை அடிப்படையில் அரசாணைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் வெளியிடப்பட்டிருப்பது வீண் குழப்பத்தையே ஏற்படுத்தி உள்ளது.
இடைநிலை ஆசிரியர் சமுதாய நண்பர்களே, மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறேன். ஒரு நபர் குழுவில் முரண்பாடுகள் இருந்ததால் அமைக்கப்பட்டதுதான் ஊதிய குறை தீர்க்கும் பிரிவு.
ஒரு நபர் குழு அரசாணை விவரங்களில் இடைநிலை ஊதிய விவரம் உள்ளது. இதனை RTI இல் கேட்டால் ஊதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தகவல் தர மாட்டார்கள். இது விமர்சனம் அல்ல. பதறிய என் நண்பர்களுக்கான விளக்கம்.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்(T.A.T.A.) சார்பில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகளை ஊதிய குறை தீர்க்கும் பிரிவிடம் தெளிவாக முன்வைத்துள்ளோம். நிச்சயம் நம் நம்பிக்கை வீண் போகாது. பொறுமை கொஞ்சம் நமக்கு அதிகம் வேண்டும். காத்திருப்போம் நண்பர்களே.பழைய RTI தகவல்களை கண்டு அஞ்சி விடாதிருங்கள்.
Relax please