இடை நிலை ஆசிரியருக்கு 9300+4200 போராட்டத்தின் மூலம் பெற முடியுமா ?
TATA ஏன் வழக்கு தொடர்ந்தது ?
1984 ம் ஆண்டு இடை நிலை ஆசிரியரும்,இளநிலை உதவியாளரும் சம ஊதியத்தில் இருந்தனர் ( ரூ 610)
ஆனால் 5 வது ஊதிய குழுவில் 1-6-88 ல் இளநிலை உதவியாளருக்கும்இடை நிலை ஆசிரியரும், ஊதியம் ரூ 975 நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது .இதே காலத்தில் இடை நிலை ஆசிரியரின் கல்வி தகுதி டிப்ளமாவாக மாற்றப்பட்டதின் விளைவாக மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான ஊதியம் ரூ 1200 என மாற்றப்பட்டது . இளநிலை உதவியாளருக்கு ஊதியம் ரூ 975+5% PP என மாற்றப்பட்டது .
1996 ஊதிய குழுவில் இளநிலை உதவியாளருக்கும்இடை நிலை ஆசிரியரும், ஊதியம் ரூ4000 நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.பின்னர் மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான ஊதியம் ரூ 4500என மாற்றப்பட்டது.நமக்கு ஊதியம் உயர்ந்ததும் இளநிலை உதவியாளர் போராடினர் அதனால் அவர்களுக்கு ஊதியம் ரூ4000+5% PP என மாற்றப்பட்டது .
2006 ஊதிய குழுவில் இடை நிலை ஆசிரியருக்கு
1.கிராமபுரத்தில் பணி செய்கிறார்கள் அங்கு விலைவாசி குறைவு
2.எண்ணிக்கை அதிகம் 1,16,129பேர் .
3.கிட்டதட்ட மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான ஊதியம் ரூ 11,150. வழங்கப்பட்டு உள்ளது .
4. இடை நிலை ஆசிரியருக்கு வழங்கினால் ,இளநிலை உதவியாளர் பாதிக்க படுவர்
5. SSLC.யுடன் சான்றிதழ் படிப்பு மட்டுமே !
6.இந்தி ,ஆங்கிலம் ,கணினி அறிவு இல்லை .
7. டிப்ளமா படிக்க வில்லை அதனால் மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான ஊதியம் கேட்பது சடடத்திற்கு எதிரானது .
8.9300+4200 வழங்கினால் அதிக நிதி தேவை படும் என காரணம் கூறி மறுக்கப் பட்டு உள்ளது .
TATA சங்கம் இவை அனைத்திற்கும் உரிய ஆதாரங்கள் 172 பக்கம் சேகரித்து வழக்கு தாக்கல் செய்து உள்ளது .நிதியை காரணம் காட்டி மறுத்துவிட கூடாது என்பதற்கு மத்திய திட்டக்குழு தலைவர் மண்டெசிங் அலுவாலியா அவர்கள் தமிழக அரசின் நிதி நிலை சிறப்பாக உள்ளது என பாராட்டி கொடுத்த சான்று RTI மூலம் பெற்று இணைத்து உள்ளோம் .
பணி ஒய்வு பெற்றோர் தலைமையில் செயல் படும் சங்கத்தில் உள்ள ரூ 2800 இடை நிலை ஆசிரியரே உங்கள் சங்கம் நிதி துறையிடம் கொடுத்த மனுவை RTI மூலம் பெற்று படித்து பாருங்கள் , உண்மை தெரியும் .. TATA வின் மனுவையும் ஆதாரங்களையும் பெற்று படித்து பாருங்கள் , உண்மை தெரியும் மேலும் ஊதிய பிரச்சனைக்காக உயர் அலுவலர்களை சந்தித்து பேசும்போது நமது உண்மை நிலை குறித்து ஒருவருக்கும் தெரியவில்லை .நீங்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்றால் உங்களிடம் எண்ணிக்கை இல்லை என்கின்றனர் .1,50,000 அரசு ஆணைகள் ,60 சட்ட புத்தகங்கள் ,அனைத்து சங்கங்களின் டைரிகள் ( வரலாறு ) 1940 முதல் ஊதிய நிர்ணய அறிக்கைகள் அனைத்தும் எம்மிடம் உள்ளது அதன் படி கிடைத்த தகவல் படி அரசுக்கும் , அலுவலர்களுக்கும் உண்மையை புரியவைக்க வழக்கு தாக்கல் செய்துள்ளோம் . அதிக எண்ணிக்கை உறுப்பினர் கொண்டுள்ள சங்கம் உண்மையை அறியவில்லை , அறிய முயற்ச்சிக்க வில்லை .இந்த வழக்கு மூலம் இடை நிலை ஆசிரியரின் இழந்த உரிமை மீட்கப்படும்.
மேற்கண்ட காரணங்களால் ஊதியம் மறுக்கப் பட்டு உள்ளதால் தான் இடை நிலை ஆசிரியரின் உரிமையை நிலை நாட்ட வழக்கு தாக்கல் செய்து உள்ளது .இந்த காரணங்களை மறுத்து ஆதரங்களை சேகரித்து எந்த ஒரு தாத்தாகள் தலைமையில் செயல் படும் சங்கமும் மனு கொடுக்கவில்லை ..இந்த காரணங்களை வெல்ல போராட்டத்தை விட வழக்குதான் சிறந்தது .