செந்தில்நாதன் ஜோ
தேவேந்திரன். இடைநிலை ஆசிரியர்
தேவேந்திரன். இடைநிலை ஆசிரியர்
அரசியல் கட்சிகளும் - தொடக்கக் பள்ளிகள்
ஆசிரியர்களின் சங்கங்களும் :
இன்றைய தொடக்கக் பள்ளிகள் ஆசிரியர்களுக்காக
செயல்படும் ஆசிரியர்
சங்கங்கள் இந்திய அரசியல் கட்சிகளை விஞ்சும் அளவிற்கு அரசியல்
செய்வது என்னை போன்ற இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில்
வருத்தத்தையே ஏற்படுத்துகிறது. தங்களுடைய சுய கெளரவத்துக்காக
ஒற்றுமையின்றி போராடி, யார் பெரியவன் என தங்களுக்குள் மார்தட்டிக்
கொண்டு இறுதியில் மண்ணை கவ்வி கொண்டு அனைத்து சங்கங்களும்
இருக்கிறது. இதில் எனக்கும் வருத்தமே. ஏனெனில் பல உரிமைகளை
போராட்டங்கள் வாயிலாக வென்று வெற்றி வாகை சூடிய சங்கங்கள், இன்று
ஒரு வாழ்வாதார பிரச்சனையான இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய
முரண்பாட்டை களைய முடியாமல் திணறி கொண்டிருப்பது தான். எங்கே
பிழை உள்ளது என்று அனைவருக்கும் தெரியும். ஆம், அது நம் சங்கங்களின்
மாநில தலைமைகளின் மனங்களில் தான். பிழைத் திருத்தப்பட வேண்டும்,
இல்லையெனில் காலமும், இடைநிலை ஆசிரியர்களும் உங்களை மன்னிக்க
மாட்டார்கள்.
அரசியல் கட்சிகளை சார்ந்துள்ள தொண்டர்கள், தங்கள் கட்சி செய்த
தவறுகளையும், செய்த ஊழல்களையும் நியாயபடுத்தி பேசும்
முட்டாள்தனமான அவலநிலையில்தான், இன்றைய இடைநிலை
ஆசிரியர்களில் பெரும்பாலானோர் இருக்கிறார்கள். ஆம், தங்கள் சங்கமே
உயர்ந்தது என்றும், பிற சங்கங்கள் தாழ்ந்தது என்றும் விமர்சனம் செய்து
கொண்டு இருக்கிறார்கள். முதலில் இடைநிலை ஆசிரியர்களான நாம்
திருந்தினால் தான் சங்கங்களை சீர்திருத்த முடியும். எல்லா சங்கமும்
ஏதாவது ஒரு வகையில் ஆசிரியர்களின் உரிமைகளுக்காக தங்களின்
போராட்டங்களை நடத்தி கொண்டு தான் இருக்கின்றன.
குறை என்னவென்றால் ஒற்றுமையின்மையே. ஒற்றுமை என்று வருமோ
அன்று தான் நமக்கான உரிமையை நாம் வென்றெடுக்க முடியும்.
ஆகவே சங்கங்களின் மாநில தலைமைகளே சங்கங்களை சங்கங்களாக
நடத்துங்கள். உங்களுக்குள் அரசியல் வேண்டாம். அது அனைத்தையும்
ஒன்றும் இல்லாமல் செய்துவிடும்.