PAGEVIEWERS

வருந்துகிறோம்!!!
sad க்கான பட முடிவு  திருச்சி மாவட்டம், தமிழ்நாடு அனைத்து  ஆசிரியர் சங்கம் , மண்டல தலைவர் திரு .புகழேந்தி அவர்களின் மாமியார்  அவர்களின் மறைவிற்கு இயக்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

இன்றைய 08.03.2015 ஜாக்டோ போராட்டம் ? ஏமாற்றத்தில் இடைநிலை ஆசிரியர் சமுதாயம் !

இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற பேரணியில் மாதம் ரூ .10000/= பாதிப்பில் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர் பாதிப்பு பற்றி விளக்கமாக எந்த மாவட்டத்திலும் பேசவில்லை /பத்திரிக்கை செய்திகளுக்கும் இந்த கோரிக்கை பற்றி விரிவாக பேட்டி கொடுக்க பட வில்லை இப்படி இருந்தால் நமது கோரிக்கைகளை இவர்கள் எப்படி வென்று தருவார்கள் ? மேலும் நான்கு சுவருக்குள் அரசுடன் நடக்கும் பேச்சு வார்த்தையில் எப்படி இவர்கள் நமக்காக முழு மனதுடன் பேசி பெற்று தருவார்கள் ? மேலும் இவர்கள் உண்மை நிலை வெளிவர வேண்டும்  அரசிடம் சமரசம் செய்திடாமல் கடந்த 7 வருடமாக
 ஏமாற்றப்பட்டது போல் தற்போதும் ஆகி விட கூடாது என்பதால் தான் ஜாக்டா உருவாக்க பட்டு உள்ளது ,மேலும் இவர்கள் நம் முன்னேயே பேச வில்லை இங்கு பேசினால்தானே உளவு காவல் துறை அரசிடம் எடுத்து செல்லப்படும்  இடைநிலை ஆசிரியர் சமுதாயம் இழந்துள்ளது அதிகம் .உங்கள் திறமையில் இந்துல்லத்தை பெற்று தருவதில் கவணம் செலுத்துங்கள் ......

நமது முக்கிய கோரிக்கை 3 மட்டுமே 

1.இடைநிலை ஆசிரியர் ஊதியம்  .2.CPS ரத்து . 3.தொகுப்பூதிய பணி நாள். ஏற்க பட வேண்டும்.
மேலும் டாட்டா வின் சட்ட போராட்டம் மிக வலுவாக தொடருகிறது ... மிக விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் .
மேலும் முக நூல் பக்கத்தில் டாட்டா சங்கத்தையும் என்னையும் எள்ளி  நகையாடுகிறவர்கள் எவரும்
 பாதிப்புக்கு உள்ளான இடைநிலை ஆசிரியர்கள் அல்ல என்பதை கருத்தில் கொண்டு சிந்திப்பீர் !!!
தமிழகத்தில் புதிதாக டாட்டா சங்கத்தின் தலைமயில் ஜாக்டா என்ற பெயரில் 15 சங்கங்களை கொண்ட அமைப்பு உருவாக்க பட்டுள்ளது. இதன். முதல் கூட்டம் 5-3-15 அன்று நடைபெற்றது .மேற்படி கூட்டமைப்பு சார்பாக 5.3.15 தலைமை செயலகம் சென்று மனு கொடுத்தனர்  .இந்த கூட்டமைப்பு பணியில் உள்ள. தலைவர்கள் மூலம் உருவான சங்கம் ஆகும். இந்த கூட்டமைப்பில் பணி ஓய்வுபெற்றவர் இல்லை .டாட்டா சங்கத்தின் நோக்கம் சட்ட போராட்டம் மற்றும் கள போராட்டம் இரண்டுமே இருந்தால் தான் நமது கோரிக்கை வெல்ல முடியும் .
1.இடைநிலை ஆசிரியர் ஊதியம் 
.2.CPS ரத்து .
3.தொகுப்பூதிய பணி நாள். ஏற்க பட வேண்டும்.
கோரிக்கைகள்  3 மட்டுமே  
ஜாக்டோ போல் 15 அல்ல 25 அல்லவே
அல்ல...

கோரிக்கைகளை நிறைவேற்ற ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்: வாசன் அறிக்கை

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 வருடமாக தொடர்ந்து போராடி வருகிறார்கள்.


தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 6–வது ஊதியக்குழுவில் திருத்தம் மேற்கொண்டு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் அரசு ஆசிரியர்களுக்கான தர ஊதியம் ரூ.4,200ம், படி நிர்ணயம் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும்.

தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் முதல்-அமைச்சர் தனி பிரிவில் JACTA மனு



 
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சர் தனி பிரிவில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டா)JACTA கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி மத்திய அரசில்
பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம்போல், தமிழக அரசின் கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
தன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (சி.பி.எஸ்.) ரத்து செய்துவிட்டு, பழைய திட்டத்தை (ஜி.பி.எப்.) நடைமுறைப்படுத்த வேண்டும். தொகுப்பூதிய அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்ட அனைத்து நிலை ஆசிரியர்களையும் பணியில் சேர்த்த நாள் முதல் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறையில் வழங்குவதுபோல, மாவட்ட அளவிலான கலந்தாய்வின் மூலம் பொதுமாறுதல் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'ஜாக்டோ'விற்கு போட்டியாக 'ஜாக்டா' அமைப்பு மனு....

 
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, 'ஜாக்டோ' ஆசிரியர் அமைப்பினர், அறிவித்துள்ள நிலையில், 'ஜாக்டா' அமைப்பினர், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில்,
மனு கொடுத்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, ஆறாவது சம்பளக்
கமிஷன்படி, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட, 15 கோரிக்கைகளை, நிறைவேற்றக்கோரி, 8ம் தேதி முதல் போராட்டம் நடத்தப் போவதாக, 'ஜாக்டோ' அமைப்பு அறிவித்துள்ளது. 'ஜாக்டோ' அமைப்பு, 28 ஆசிரியர் சங்கங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக, அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஜாக்டா--கூட்டமைப்பில் உள்ள சங்கம்


1,தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் --
2,தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் -TATA.
3,தமிழ்நாடு ஆசிரியர் மன்றம்
4,தமிழ்நாடு கலை ஆசிரியர் கழகம்
5,தமிழ்நாடு பட்டதாரி இடைநிலை ஆசிரியர் பேரவை
6,தமிழ்நாடு தொழில் ஆசிரியர் நல சங்கம்
7,தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆசிரியர் சங்கம்
8,தமிழ்நாடு கைதொழில் கல்வி ஆசிரியர் சங்கம்
9,தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம்
10,தமிழக ஆசிரியர் மன்றம்
11,JSR,தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி
12,தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆதிவாசிகள் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம் .
13,சென்னை மாநகராட்சி இடைநிலை ஆசிரியர் சங்கம்
14.ஒருங்கிணைந்த பள்ளி ஆசிரியர் சங்கம்
15,தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆசிரியர் பேரவை

அக இ - தொடக்க நிலை / உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "குழந்தைகளின் அடைவு குறித்து கலந்துரையாடல்" என்ற தலைப்பில் 14.03.2015 அன்று குறுவள மைய அளவில் ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது.

இரண்டு கோரிக்கைகள் மட்டும் வைத்த போராட்டம் என்றால் அதற்கு மறுகேள்வியே இல்லை.--டாடா வாழ்த்தி வரவேற்கும் ்...டாட்டா கிப்சன் ்...

போராட்டம் வேண்டாம் என்றோ, போராட்டத்திற்குப் போக வேண்டாம் என்றோ யாரிடமும் சொல்லவில்லை. போராட்டம் வேண்டாம் என்று நாங்கள் ( இளைய தலைமுறை) சொல்லவில்லை. போராட்டத்தின் முக்கிய அம்சமாக என்ன உள்ளது, என்ன இருக்க வேண்டும் தற்போது என்பது கேள்வியாக அனைவரது மனதிலும் உள்ளது. 2800 கிரேடு பேவில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் இந்த 6 வது ஊதியப் பரிந்துரை முழுவதும் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் அடுத்த ஊதியக்குழுவில் இன்னும் மாபெரும் இழப்பு. இதைக் கருத்தில் கொண்டு இ. ஆ ஊதியம் மற்றும் cps cancel ஆகிய இரண்டு அதிமுக்கிய கோரிக்கையை மட்டுமே வைத்து நம் தொடக்கப்பள்ளி சங்கங்கள் மட்டும் இணைந்து ( அரசு கூற்றின்படி இ.ஆ 1,00,000 பேர்+ ) போராட்டம் செய்திருக்கலாமே? என்பது பலரது கேள்வி. அதைவிடுத்து 15 கோரிக்கைகள்( உட்பிரிவு வேறு) எதற்கு? மற்றவர் கோரிக்கையும் பெற வேண்டியதுதான், ஆனால் அதிமுக்கியமான கோரிக்கைகளை அதுவும் இத்தனை வருடம் இதோ, அதோ என்று ஏமாற்றிய கோரிக்கைகளை மட்டும் வைத்திருக்கலாமே?

-TATA -சங்கம் போலியான இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாது.---டாட்டா கிப்சன் ...

என் இனிய இ.நி.ஆசிரியர் சமுதாயமே! மார்ச் - 8 ல் அவசியம் கலந்து கொள்ளுங்கள். அது நம் இ.நி.ஆ. சமுதாயம் மீது பழி வராமலிருக்க உதவிடும். ( அப்படியே TATA மீதும் பழி வராது ) போராட ஆக்கபூர்வமான வழியை விட்டுவிட்டு TATA பொய் சொல்கிறது ஏமாற்றுகிறது என்று தூற்றித்திரியும் சா(ன்றோ)ர்களின் கவனத்திற்கு மற்றும் இ.நி.ஆ. சமுதாயத்திற்கான விழிப்புணர்வு மடல் : முந்தைய கால போராட்டங்களில் இ.நி.ஆ. அதிகம் பங்கேற்கவில்லை. எனவே தான் இன்னமும் ஊதிய முரண்பாடு தீர்க்கப்படவில்லை என்று நம் மீது ஒரு பழி இருந்து கொண்டே உள்ளது. எனவே அனைவரும் கலந்து கொள்ளுங்கள். நாம். ஏமாற்றப்படாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். நம் பிரச்சனைகளை முன்வைத்து போராடி, இறுதியில் நம்மைத் தவிர்த்து இவர்களுக்குரிய பயன்களையெல்லாம் பெற்று விட்டனர். இந்திய மக்கள் தொகையைவிட நாங்கள் எண்ணிக்கையில் அதிகம் என்று சொல்லாத குறையாக, நாங்கள் தான் பெரியவர்கள் என்று சொல்பவர்கள் ஜனவரியில் நடந்த முதல் TETOJAC கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தனிவழியில் சென்றவர்கள் பின்னர் பிப்ரவரியில் நடந்த கட்டத்திலேயே கலந்து கொண்டனர். அப்படி Buildup பண்ணுகிறார்களாம்.யாரும் இதை மறக்கவில்லை. மறைக்கவும் முடியாது. தனியாக வேண்டாம் கூட்டாகவே இருக்கலாம் என லேட்டாக முடிவு செய்திருக்கிறார்கள். இவர்கள் எங்களை விமர்சிக்கிறார்கள் அறிவை விரிவு செய் அகண்டமாக்கு என்று . ஜனவரியில் இது தெரியவில்லையோ! பிப்ரவரியில் தான் இவர்களுக்கு தெரிந்ததோ! சரி அது போகட்டும். முத்தாக கோரிக்கை வைப்பார்கள் என்று பார்த்தால் கொத்தாக கோரிக்கை வைத்திருக்கிறார்கள். முதன்மையான பிரச்சனை இ.நி.ஆசிரியர்களுடையது. அதனை முதல் கோரிக்கையாக வைப்பது போல் வைத்து இ.நி.ஆசிரியர்களுடன், அவர் இவர் என சுவர் விளம்பரம் போலக் குறிப்பிட்டு கோரிக்கை வைத்துள்ளனர். இ.நி.ஆசிரியர்களே உஷார். கட்டாயம் கலந்து கொள்ளுங்கள். அப்போது தான் நீங்கள் உங்கள் உரிமையை கேட்க முடியும். அடுத்தாக இவர்களின் மிகமுக்கிய கோரிக்கையை, திட்டமிட்டு அரசு கண்ணில் பட வேண்டும் என்பதற்காக கடைசியில் வைத்திருக்கிறார்கள். முதலாம் கோரிக்கையை பார்த்து விட்டு கடைசி கோரிக்கையை பார்ப்பார்களாம். என்னே ஐடியா. தொடக்கப்பள்ளிகள் பொறுத்தவரையில் இந்த. கோரிக்கை நிறைவேற்றப்பட்டாலே ஆளுக்கு முந்தி நன்றி சொல்லி விட்டு நடையை காட்டுவார்கள். கடை காலியாகி விடும். இப்படி சொன்னால் காமாலைக்காரனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரியும் என்று தத்துவம் பேசாதீர்கள். உங்கள் P.P. யை யாரும் மறக்க முடியாது. அது போல பதவி உயர்வுக்கு 6% வேண்டுமாம். ஏற்கனவே இ.நி.ஆசிரியர்கள் பெயரைச்சொல்லி போராடி தேர்வு /சிறப்பு நிலைகளுக்கு. 6% பெற்றவர்கள் தானே இக்கூட்டம். மத்திய அரசிலேயே இப்படியொன்று இல்லையென்று நினைக்கிறோம். இ.நி.ஆ. பெயரைச் சொல்லி போராடி, அவர்கள் அதிகம் பங்கேற்கவில்லை என்று குற்றம்சாட்டி இவர்களுக்கு ஆக வேண்டியதை பார்த்து விட்டு அமைதி காப்பதே வாடிக்கையாகிவிட்டதே. இந்த முறை அப்படியொரு நிகழ்வு நடக்காத வண்ணம் கவனமாயிருங்கள். எனவே அனைவரும் கலந்து கொள்ளுங்கள். ஏமாற்றப்படாமல் இருக்க விழிப்பாயிருங்கள்.----டாட்டா வை குறை கூறி கூட்டம் சேர்காதீர்கள் .உங்கள் 5//15//25//35//45//கோரிக்கைகளை விளக்கி கூறி போராட்டத்திற்கு கூட்டம் சேர்த்து கொள்ளுங்கள்

டிட்டோ ஜேக் ல்- JACTTO வில் டாட்டா சங்கத்தை சேர்க்காததற்கு கரணங்கள் ...



1.  டிட்டோ ஜேக் ல் உள்ள தலைவர்கள் ஓய்வு பெற்றவர்களரகவே உள்ளனர்...
அவர்களுக்கென்று 'ஓய்வு பெற்றோர்கள் சங்கங்கள்' இருக்கும் போது அவர்கள் ஏன் இங்கு பொறுப்பை பிடித்துக் கொண்டு இருக்கிறரர்கள்....
இளம் சந்ததியருக்கு வழி விடலாமேஎன 2013 ல் விமர்சனம் வெளியிட்டது .

2. டிட்டோ ஜேக் ல் உள்ள 7 சங்கங்கள் அரசு அங்கிகாரம் உள்ள சங்கம் என பொய் சொல்லுகிறார்கள் இதில் 2 சங்கம் டாட்டா வை போல் பதிவு பெற்ற சங்கம்தான் ,

3.வழக்கு நடத்தியவர்களை அரசு பேச்சு வார்த்தைக்கு அழைக்காது என்பதால் சேர்க்கவில்லை என நாடகம் நடத்துகிறார்கள் .வழக்கை பற்றி அரசு எதாவது சொன்னால் இவர்களை மறுத்து கூரிட முடியுமா ? 

4. 72 ஆயிரம் இடைநிலை ஆசிரியனின் ஊதிய பிரச்சனையும் மாதம் ரூ 10,000 இழப்பும் பிற ஆசிரியர்களுக்கும் உள்ள இழப்பும் ஒன்றானதா ? ஏன் இடைநிலை ஆசிரியனின் ஊதிய பிரச்சனைக்கு தனி கோரிக்கை வைக்க முடிய வில்லை ? கூட்டம் காட்ட . 72 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் வேண்டும் .ஆனால் தனி கோரிக்கை வைக்க முடியாதா ? ஒற்றுமை , ஒற்றுமை  என விர வசனம் பேசி டாட்டா வை விமர்சித்து நீதிமன்றம் மூலம் வாங்க முடியாது என பொய் சொல்லி ஆசிரியர்களை எமாற்றி கூட்டம் சேர்ப்பது நியாயமா ? டிட்டோ ஜேக் மற்றும் JACTTO வாள் கண்டிப்பாக 9300+4200 பெற்று தருவோம் என உத்திர வாதம் வழங்கிட முடியுமா? டாட்டா  9300+4200 பெற்று தருவோம் என உத்திர வாதம் கொடுக்கிறதே உங்களால் ஏன்  உத்திர வாதம் கொடுக்க முடிய வில்லை ? 

5.நீதிமன்றத்தால்  (1 man commission,,3 man commission அறிக்கைரத்து செய்ய பட்ட விபரம் முழுமையாக உங்களுக்கு தெரியுமா?

 6 .JACTTO கூட்டமைப்பில் உள்ள பல இடைநிலை சங்கத்தின் பொறுப்பாளர்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்றவர்களரகவே உள்ளனர்...
அவர்களுக்கென்று 'ஓய்வு பெற்றோர்கள் சங்கங்கள்' இருக்கும் போது அவர்கள் ஏன் இங்கு பொறுப்பை பிடித்துக் கொண்டு இருக்கிறரர்கள்....
இளம் சந்ததியருக்கு வழி விடலாமே என்றோம்...
இதில் தவறு என்ன இருக்கிறது...
சரி என்றரல் ஏற்றுக் கொள்ளுங்கள்...
இல்லையென்றரல் விட்டு விடுங்கள்....
அதைவிடுத்து TATA வை ஓரம் கட்டும் முயற்சி வேண்டாம்....
அது பெரும் சங்கங்களுக்கு அழகு இல்லை....
சங்கத்தலைவர்களுக்கும் தான்...
நல்ல தலைவருக்கு உள்ள தகுதிகளில் ஒன்று....
விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும்....
அனைவரையும் அணைத்து செல்ல வேண்டும்...
நாங்கள் நீதிமன்றம் துணை கொண்டு உலகுக்கு வெளிக்காட்டிய பிறகுதான் உங்களுக்கே பிரச்சினை யின் தன்மை புரிந்து கூட்டு குழு அமைத்து (உறுப்பினர்களை தக்க வைக்க) களத்தில்
இறங்கினீர்கள்.....

நான் JACTTO வுக்கு கேட்கும் ஒரேயொரு கேள்வி.....
4 வயதேயான ஒரு குழந்தை சங்கம் தனியே போராடி எண்பதாயிரம் இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதார பிரச்சினையை, நீதிமன்றத்தின் மூலம் ஊருக்கு தெரிய படுத்தி JACTTO என்ற கூட்டமைப்பு அமைய காரணமாக இருந்த (1 man commission பிறகு கூட அனைத்து பெரும் சங்கங்களும் விசயம் தெரியாமல் அரசியல் தலைவர்களை பாராட்டி நன்றி சொல்லிவிட்டு வந்தீர்கள்-அதையும் இச்சமயத்தில் நியாபகப் படுத்துகிறது TATA) எங்களை நீங்கள் பாராட்ட வேண்டாம் .....
அங்கீகரிக்க வேண்டாம் .....

 7. எங்களை எங்கள் வழியிலே விட்டு விடுங்கள் எம் ஆசிரியர் சமுதாயத்தின் முக்கிய பிரச்சனைகளை 1.புதிய ஓய்வுதிய திட்டம் ,2. இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை களை சட்ட போராட்டம் நடத்தி கண்டிப்பாக கண்டிப்பாக புதிய வரலாறு டாட்டா சங்கத்தினால் உருவாகும் .காலம் பதில் சொல்லும் டிட்டோ ஜேக் மற்றும் JACTTO வுக்கு - இவர்கள் போராட்டம் வெற்றியடைய டாட்டா வின் வாழ்த்துகள்

பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக புதிதாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளுக்கு பதவி உயர்வு மூலம் தலைமையாசிரியர் நியமனம் செய்தல் மற்றும் தற்போது காலியாக உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களையும் பதவி உயர்வு மூலம் கலந்தாய்வு நடத்தி நியமனம் செய்திட இயக்குனர் உத்தரவு

DSE - HIGH SCHOOL HM PROMOTION REG PROC CLICK HERE.

பள்ளிக்கல்வி - 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மார்ச் 1ம் தேதி நடைபெறவுள்ளது

தமிழகத்தில் காலியாக உள்ள 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கல்ந்தாய்வு மார்ச்1ம் தேதி நடைபெறவுள்ளது. இக்கலந்தாய்வில் முன்னுரிமை பட்டியல் வரிசை எண்.685 வரை உள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்

நிதி(ஊதியப் பரிவு)த்துறை - 6வது ஊதியக் குழுவில் ஊக்க ஊதியம் பெற்றதனால் ஏற்படும் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாட்டை களைய, ஊதிய நிர்ணயம் மேற்கொள்ளும் அதிகாரியே ஊதிய நிர்ணயம் செய்யலாம் என த.அ.உ.சட்டத்தின் வாயிலாக அரசு பதில்

தமிழ்நாடு விடுமுறை விதிகள் - விதி 15 - அரசு ஊழியர் / ஆசிரியர்களின் ஈட்டா விடுப்பின் பேரில் மருத்துவ விடுப்பு அனுமதித்தல் சார்பான வழிமுறைகள் வழங்கி அரசு உத்தரவு

Dear Madam/Sir,
Government of India has created a 'New Education Policy' group to formulate New Education Policy. In all 33 themes have been identified (13 under School Education and 20 under Higher Education sector).
The link can be accessed at http://mygov.in/new-education-policy-group.html
For all your convenience, the link has also been shared/activated on the Home page of NCERT and CIET website:
http://www.ncert.nic.in/index.html http://www.ciet.nic.in/
Please do share with your colleagues, friends, group members who are associated with school and/or higher education and/or interested to contribute. Your inputs are valuable for shaping the New Education Policy of our Country.

கேஸ் போட்டா கிடைக்குமா?


நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை - அனைத்து ஆசிரியர்களுக்கும் பொருந்துமா ?
2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை - அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா ? தொடக்கக் கல்வி - கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டத்தை சார்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக 2004-05ஆம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பின்னர் 01.05.2006ல் முறையான ஊதியம் அளிக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு உண்மை நிலவரம் 2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா ??? நண்பர்களே.. இவர்கள் அனைவரும் நவம்பர் 2001ல் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் D.t.ed பதிவு செய்திருந்தவர்கள். ஜனவரி 2002ல் கரூர் மாவட்டத்தில் இவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு அரசியல்வாதிகளின் துணையுடன் பணிநியமனம் வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் SC, mbc பிரிவினர். இவர்கள் அனைவருக்கும் பின்னடைவு பணியிடங்கள் இருந்தும் பணிநியமனம் மறுக்கப்பட்டது. மேலும் ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் 11.1.2002ல் நடத்தப்பட்ட பணிநியமணத்திலும் இவர்களுக்கு பணியிடங்கள் இருந்தும் சான்றிதழ்கள் மட்டும் சரிபார்க்கப்பட்டு பணிநியமனம் மறுக்கப்பட்டது. பெரம்பலூர் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் அன்றைய நாளில் பணிநியமனம் வழங்கப்பட்டது. அன்றைய தினம் பணி வழங்கப்பட்டு இருந்திருந்தால் காலமுறை ஊதியத்தில் பழைய ஓய்வூதியத்தில் நியமனம் செய்யப்பட்டிருப்பர். இதனை தொடர்ந்து 2004ல் தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்றனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததை தொடர்ந்து நியமனம் பெற்ற நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க ஆணை வழங்கப்பட்டது. 2002ல் நியமனம் வழங்கப்பட்டிருந்தால் ஓய்வூதியம் கிடைத்திருக்கும். இவர்கள் அனைவரும் கரூர் மாவட்ட பதிவுதாரர்கள். மற்ற மாவட்டங்களுக்கு மாறுதல்கள் பெற்று சென்றதால் அம்மாவட்டத்தின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது

தொடக்க கல்வி துறையில் 31.8.2014 மாணவர் எண்ணிக்கை படி பணி நிரவல் செய்ய விவரங்கள் சேகரித்து 26.2.14 முதல் மண்டல வாரியாக நடைபெறும் ஆய்வுக்கூடத்தில் சமர்ப்பிக்க தொ.க.இயக்குனர் உத்தவு.




 
ஆசிரியர்களின் சம்பள கணக்கு 90% StateBankOfIndia விடம் உள்ளது.ஆனால் கீழ்கண்ட சலுகை ஊதிய கணக்கு வைத்து உள்ள ஆசிரியர்களாகிய நமக்கு  வழங்குவதில்லை.இவர்களின் முகனூலில் சென்று புவர் ரேட்டிங் மூலம் புகார் தெரிவியுங்கள் ...
https://www.facebook.com/StateBankOfIndia

SALARY ACCOUNTS UNDER STATE GOVERNMENT SALARY PACKAGE (SGSP)
Salary Accounts under SGSP a gamut of privileges and other value added services to the employees of State Government, Union Territories and their Boards/Corporations. Salary Accounts under this package are available in four variants, namely Silver, Gold, Diamond and Platinum depending on the designation of the personnel.
Benefits to the Employer
Convenient way to manage salaries across a large number of centers through Core Power and the Bank's award winning Corporate Internet Banking
Reduces employer's paperwork and salary administration cost.
No charges for uploading of salaries
Employees receive instant credit of salaries
Benefit to the Employee
Convenience of Anywhere Banking at
The largest network of more than 16,000 Core Banking Branches
Extensive alternative channels.
53,000 plus ATMs of State Bank Group
Free Internet Banking, Mobile Banking
Complete gamut of Banking Services including:-
Unique Lifetime Account Number
Zero Balance Account facility with no penal charges for non-maintenance of minimum balance
Auto sweep (in & out) facility (on request)-Surplus amount in Savings bank account beyond threshold balance is transferred automatically into Term Deposits (multi option deposits) in multiple of Rs.1000/- and vice versa
Free Personal Accident Insurance (Death) Cover to Primary Salary Package Account*
Free personalized Multi City Cheques
Free Drafts*/RTGS*/NEFT*
Free Core Power: Anywhere banking facility with the widest network of more than 16,000 branches. Free updating of pass-books at any branch
Easy overdraft up to 2 months' salary repayable within 6 months*
SMS Alerts
Free Debit Cards
Domestic cards for Silver Accounts, Gold Debit cards for Gold and Diamond Accounts and Platinum Debit Card for Platinum Accounts.
Maximum daily withdrawal of Rs. 40,000 on Domestic Cards, Rs. 50,000 on Gold Cards and Rs. 1,00,000 on Platinum Cards.
Various Personal loans like Home loan/ Auto loan/ Xpress Credit loan, etc. at attractive terms
Demat facility, 3-in 1 Trading Account available
Systematic Investment Plan in Mutual funds
Range of other value added benefits

2004-05ஆம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பின்னர் 01.05.2006ல் முறையான ஊதியம் அளிக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு ( மேற்படி அரசு ஆணை 2002 ல் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு 2004 ல்  பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டுமே பயன் பெற முடியும் . 2004 க்கு பின் பணியில் சேர்ந்தவர்கள் இதன் பயன் அடைய முடியும் )

சிறப்பு பட்டதாரி ஆசிரியர் 200 பேரை நியமிக்க ஆணை....




இன்று 10:02:2015 விசாரணைக்கு வந்தது

நமது ஊதிய பிரச்சனை மேல் முறையீடு வழக்கு W.P.(MD ) NO; 1612 / 2015. மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மாண்புமிகு .நீதிபதி அவர்கள் நீங்கள்

         Hon'ble  Mr.Justice  A.S.Venkatachalamoorthy.
  Formerly Chief Justice of  Chattishgarh High Court  (Retd.)
        The Chairman of Pay Grievance Redressal Committee  
க்கு 14.01.2015 அன்று அனுப்பிய மனு
மாண்புமிகு . ஒய்வு பெற்ற நீதிபதி அவர்களுக்கு 17.01.2015 அன்றுதான் கிடைக்கப்பெற்று .மேலும் நிதித்துறை செயலாளருக்கும் அதே நாளில் கிடைக்கப்பெற்று உள்ளது . மேற்படி ஊதிய பிரச்சனையை ஒய்வு பெற்ற நீதிபதி  Hon'ble  Mr.Justice  A.S.Venkatachalamoorthy. அவர்கள் விசாரணைக்கு உத்தரவிட மனு செய்து 30 நாள்கள் முடிந்து இருக்க வேண்டும் .அதன் பின் The Chairman of Pay Grievance Redressal Committee  தலைவருக்கு ஒருமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பி விட்டு வருகிற மார்ச் மாதம்  2015 ல் 16 ம் தேதி 5000 பேரின் பெயர் பட்டியலுடன் மீண்டும் வழக்கை தாக்கல் செய்திட ஆணையிட்டு உள்ளார்கள் .எனவே பெயர் பட்டியலை

5000 பேர் பட்டியல் தயாரிப்பது எப்படி
1,வரிசை எண்
2,பெயர் மற்றும் பள்ளி முகவரி
3,பிறந்த நாள்

4,பணியில் சேர்ந்த நாள்
5,Pay
6,pp
7,g.p.
8, உறுப்பினர் சந்தா ரசீது எண்
மேற்கண்ட விபரங்களுடன் எக்சல் பான்டில் தயாரித்து Kipson76@yahoo.in என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பிட வேண்டுகிறேன் 

தர ஊதியம் 2800 ல் உள்ள அனைத்து ஆசிரியர்கள் கவணத்திற்கு.....


டாடா சங்கம் 2013 ல் வழக்கு தாக்கல் செய்யும்போது 5000 உறுப்பினர்கள் ஊதிய முரண்பாட்டில் உள்ளதாக நீதி மன்றத்தில் முதலில் தெரிவிக்கப்பட்ணது .அரசு எண்ணிக்கை அதிகம் என்ற காரணம் கூறி ஊதிய மாற்றம் செய்ய மறுத்து 60473/2014,கடிதம் நமது சங்கத்திற்கு அனுப்ப பட்டு இறுந்தது. அததைஎதிர்த்து நாம் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து உள்ளோம் . வழக்கு எண்.1612/2015, அதில் நீதிபதி அவர்கள் .5000 பேரின் பெயர் பட்டியல் தாக்கல் செய்திட கூறி உள்ளார்கள் . டாடா சங்கத்தில் இல்லாதவர்கள் ஊதிய பலணை அடைந்திட உடனடியாக இணைந்திடுவீர் டாடா சங்கத்தில். மேலும் டாடாவில் இணையும் அனைவருக்கும் நீதி மன்றம் மூலம ஊதிய பலன் பெற்று வழங்கப்படும்.
நமக்கு 10 Ias அதிகாரிகள் ஊதிய குழு என்ற பெயரில் ஊதிய உயர்வு வழங்கிட பொய்யாண காரணம் கூறி மறுத்து உள்ளதால் அதை நீதி மன்றம் முலமாக மட்டுமே நீக்கி ஊதிய மாற்றம் பெற முடியும்.(எ.கா) Aeeo அவர்கள் நமது பண பலன் சார்ந்த கோப்புகளை எதோ ஒரு காரணம் கூறி திருப்பினால் அதை சரி செய்தால் தான் பணபலன் பெற முடியும்.அதே போல் நமது ஊதிய முரன்பாடும் தீர்க்கப்பட Ias அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட ஊதிய குழு அறிக்கை தவறானது என அறிவித்து திருத்தி எழுதும் அதிகாரம் நீதி மன்றத்திற்கு மட்டுமே உண்டு  என்பதால் தான் டாடா நீதி மன்றத்தை நாடி  உள்ளது.முதல் கட்டமாக 5000 பேருக்கும் பின்னர் அனைவருக்கும் நீதி மன்றம் மூலம் ஊதிய மாற்றம் டாடா பெற்று தரும்.டாடா கிப்ஸன்.


தர ஊதியம் 2800 ல் உள்ளவர்கள் கவணத்திற்கு

இன்று இடைநிலை ஆசிரியர் ஊதிய மேல் முறையீடு வழக்கு
 
 WP(MD).1612/2015               M/S AJMAL ASSOCIATES            
       (Service)                C. VENKATESH KUMAR,
    
விசாரணைக்கு வந்தது .நீதிபதி அவர்கள் ஊதிய பாதிப்புக்ககு உள்ளான ( ஜி.பி .2800 ) 5000 ஆசிரியர்களின் பெயர் பட்டியலை நீதி மன்றத்தில் 2 வார காலத்தில் தாக்கல் செய்திட கூறி உள்ளார்கள். எனவே டாடா சங்கத்தின் மாவட்ட ; வட்டார பொறுப்பாளர்கள் விபரங்களை ஒன்றிய வாரியாக எக்சல் படிவத்தில் ஒரு வார காலத்தில் தயார் செய்து Kipson76@yahoo.in என்ற இ .மெயில் முகவரிக்கு அனுப்பிட வேண்டுகிறேன். நன்றி!!!

  5000 பேர் என்பது ஊதிய பாதிப்பு உள்ளவர்களில் டாடா சங்க உறுப்பினர்கள் மட்டுமே.
 
இந்த 5000 பேரில் தர ஊதியம் 2800 உள்ள் அனைத்து நியமன ஆசிரியர்களும் பொருந்தும்

பள்ளிக்கல்வி - மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ள துறை சார்ந்த வழக்குகளை கவனிக்க தனி சட்ட அலுவலர் பதவியை தோற்றுவித்து இயக்குனர் உத்தரவு - இனி மதுரை உயர்நீதிமன்ற வழக்குகளுக்கு அவரையே அணுகும்படி அனைத்து அலுவலர்களுக்கும் ஆணை.

ஊதிய பிரச்சனை மேல் முறையீடு வழக்கு விசாரணை நாள் 06.02.2015 வெள்ளி.....

நமது ஊதியம் 9300 + 4200 என மாற்றம் செய்திட கோரி அரசு  

 கடிதம் .60473 (CMPC) 2014-1 / DATE.10.12.2014; மறு ஆய்வு செய்திட கோரி நீதிமன்றத்தில்வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது . மேற்படி வழக்கு விசாரணை மூலம் நமக்கு நீதி கிடைக்க விரைவில் ஓய்வு பெற்ற நீதிபதி அவர்கள் மூலம் விசாரணை செய்திடவழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது .மேற்படி ஊதிய பிரச்சனை மேல் முறையீடு வழக்கு விசாரணை நாள் 06.02.2015 வெள்ளி மதுரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது .அன்று நமது மூத்த வழக்கறிஞர் திரு.அஜ்மல் கான் அவர்களும் வழக்கறிஞர் திரு . வெங்கடேஷ் குமார் மற்றும் பலர் நமக்காக ஆஜர் ஆக உள்ளனர் .நல்ல செய்தி கிடைக்க இறைவனை வேண்டுவோம்