தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர்களுக்கு 2010 ல் திரு .ராஜிவ் ரஞ்சன் அவர்கள் அறிக்கை படியும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை படியும் ஊதியம் மத்திய அரசுக்கு இணையாக வழங்கிவிட்டது என பொய்யான தகவல்கள் கூறி ஊதிய பிரச்சினை க்கு தடை ஆணை பெற்று விட்டது .
டாட்டா சங்கம் 2010 புதிதாக துவங்கியது முதல் ஆசிரியர்களுக்கு ஆக போராட்டம் செய்து வருகிறது .இடைநிலை ஆசிரியர் களுக்கு ஊதியம் மறுக்கப்பட்ட காரணம் டாட்டா சங்கம் முலமாக வெளி உலகுக்கு தெரிய வந்தது .RTI சட்டத்தை சரியான காரியங்களை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தி பல்வேறு ஆவணங்கள் அரசுக்கு எதிராக சேகரித்து இதுவரை 1989 முதல் மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் பெற்று காரணம் எல்லாம் வரலாறு ஆவணங்கள் 4300 சேகரித்து சட்ட போராட்டம் உயர் நீதிமன்றத்தில் நடத்தி வந்தது .தற்போது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி தடை பெற்று உள்ளதால் நாமும் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது .நாம் உச்ச நீதிமன்றம் செல்லாவிட்டால் வருங்காலத்தில் ஊதியம் மிகவும் பாதிக்கப்படும் .இதை அறியாமல் நாம் சங்கத்தின் பெயரால் சண்டை போடுகிறோம் .இப்போது நமக்கு தேவை ஊதிய முரண்பாடு தீர்க்க படுதல் ஆகும் .
டாட்டா அனைத்து சங்கங்கள் நடத்தும் கள போராட்டம் வெற்றி பெற தனது பங்களிப்பு வழங்கும் .அதுபோல சங்க பாகுபாடு இல்லாமல் அனைவரும் சட்ட போராட்டம் வெற்றி பெற நிதியுதவி வழங்க வேண்டுகிறேன் .தற்போது காலம் கடந்து கொண்டே செல்கிறது வழக்கு தாக்கல் செய்திட வழக்கறிஞர் அவர்களுக்கு ரூபாய்.2,50,000வழங்க வேண்டியது உள்ளது .ஆனால் இதுவரை நிதியுதவி ரூபாய் 12,500 மட்டுமே கிடைத்துள்ளன .இன்னமும் தேவை அதிகம் .இடைநிலை ஆசிரியரே இழந்து உள் ள உரிமை மீட்க ஊதியம் 9300+4200 என மாற்றம் செய்திட தங்கள் பங்களிப்பு வழங்கிடுங்கள் .
இந்த பாதிப்பு நீங்காவிட்டால் அரசு அடுத்த ஊதிய குழு வில் இடைநிலை ஆசிரியர் களுக்கு ஊதியம் தற்போது பெறுவதில் இருந்து 20,000 உயர்த்தி வழங்குமாறு ? சிந்தனை செய்வீர் இழந்த உரிமை மீட்டிடுவோம்.
டாட்டா கிப்சன் .