டிஎன்பிஎஸ்சி கட்டிடம் இடம் மாறுகிறது |
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள டிஎன்பிஎஸ்சி கட்டிடம் இடம் மாறுகிறது. பிராட்வே பேருந்து நிறுத்தம் அருகே உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற உள்ளது.வருகிற 27 ந் தேதி டிஎன்பிஎஸ்சி க்கு புதிய கட்டிடத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.புதிய கட்டிடத்தில் பாதுகாப்பு விதிகளை கடிமையாக அமல் படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குரூப் 2 வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை தீவிரமாகிறது. போலி வினாத் தாள்களைப் பயன்படுத்தியவர்கள் மீது தடை விதிப்பது குறித்து புதிய கட்டிட திறப்பு விழாவிற்குப் பின் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.என். பி.எஸ்.சி. குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இத் தேர்வில், ஈரோடு மற்றும் தருமபுரியில் வினாத்தாள் வெளியானது கண்டுபிடிக்கப்பட்டது