ஆசிரியனுக்கு எதிரி ஆசிரியனே...
ஒரு போக்குவரத்து ஊழியருக்கு ஒரு பிரச்சனை என்றால், அனைத்து ஊழியரும் ஒன்றுபட்டு போராட்டம் நடத்துகின்றனர். மருத்துவ துறையிலும் இதே ஒற்றுமை தான். மற்ற எல்லா துறையிலும் இதே ஒற்றுமை காண முடியும்.
ஆனால் இந்த கல்வித்துறையில் மட்டும் ஒருவரை ஒருவர் காலை வாரிவிடுவதும், பொறாமை, ஈகோ இப்படி எல்லா கெட்ட எண்ணங்களும் தாண்டவமாடுகிறது.

ஆதிகாலத்தில் டைனோசர் என்ற மிருகம் வாழ்ந்ததாக நாம் படிக்கிறோம். அவைகள்
தங்களை தாங்களே அழித்து கொண்டது போல தான், நம் நிலைமை இன்றுள்ளது.
கிராமம், எண்ணிக்கை காரணம் காட்டி இன்றைக்கு இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தில் கை வைத்தது போல, நாளை அதே கிராமத்தில் பணிபுரியும் பட்டாதாரி, த.ஆ, மு.ப.ஆ, போன்றவர்களுக்கு இந்த பாதிப்பு வராதா? பக்கத்து வீட்டுக் கூரையில் தான் தீ என்று நிம்மதி அடையும் என் ஆசிரிய சமூகமே, அந்த தீயிலிருந்து ஒரு பொறி தங்கள் கூரையில் விழுந்தால் என்ன ஆகுமென்று சிந்தியுங்கள்!