PAGEVIEWERS

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - 01.01.2015 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்திட தகுதிவாய்ந்த இடை நிலை / உடற்கல்வி / சிறப்பாசிரியர்கள் பட்டியல் தயாரித்து அனுப்ப இணை இயக்குனர் உத்தரவு

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு-மேலும் ஓர் ஆய்வுப்பட்டியல்




புதிய ஊதியக்குழு அமுலாக்கத்தினால் ஏற்பட்டுள்ள மாதாந்திர இழப்பு பாரீர் முதல் பட்டியல் (Aமுதல் J வரை) 01.06.2006-ல் பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர் ஊதியக்குழு அறிக்கையின் படி அவரது அடிப்படை ஊதியம் {(4500*1.86)=8370+2800GP}

எனக்கணக்கிட்டுள்ளோம் 

இரண்டாம் பட்டியல் (K முதல்R வரை) 01.06.2006-ல் பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர் ஊதியக்குழு அறிக்கையின் படி அவரது அடிப்படை ஊதியம் PAY BOND 2 (5200+2800GP} எனக்கணக்கிட்டுள்ளோம் . வித்தியாசம் கணக்கீடு (s)
This a list of colleges and educational institutions of the Government of Tamil Nadu.
TamilNadu Logo.svg

Contents

DIRECTORS OF EDUCATION DEPARTMENT OF TAMIL NADU,.

Tmt. D Sabitha IAS
Principal Secretary to Government of Tamil Nadu
(Department of School Education) 
Phone: 25672790 (O), 25676388 (Fax) Email: schsec@tn.gov.in
S.NODEPARTMENTSDIRECTORSPHONE NUMBERE MAIL ID
1DIRECTOR OF SCHOOL EDUCATIONமுனைவர் எஸ்.கண்ணப்பன் 044-28278796, 044-28232580 (Fax)dse@tn.nic.in
2DIRECTOR OF GOVERNMENT EXAMINATIONSகே.தேவராஜன் 044-28278286, dge@tn.nic.in
3DIRECTOR OF ELEMENTARY EDUCATIONமுனைவர் ஆர்.இளங்கோவன் 044-28271169, dee@tn.nic.in
4DIRECTOR OF MATRICULATION SCHOOLSஆர்.பிச்சை044-28270169, dse@tn.nic.in
5DIRECTOR OF PUBLIC LIBRARIESமுனைவர் எஸ்.கண்ணப்பன்044-28550983, dpl@tn.nic.in
6DIRECTOR OF NON FORMAL AND ADULT EDUCATIONவி.மோகன் ராஜ் 044-28272048, dnfae@tn.nic.in
7DIRECTOR OF SCERTமுனைவர் வி.சி.ராமேஸ்வர முருகன் 044-28278742, dtert@tn.nic.in
8RMSAமுனைவர் ஜி.அறிவொளி4428251817rmsatamil@gmail.com
9SARVA SHIKSHA ABHIYANபூஜா குல்கர்னி, இ.ஆ.ப 044-28278068, spd_ssatn@yahoo.co.in
10TAMIL NADU TEXT BOOK SOCIETY
044-28271468, tbc@tn.nic.in
11TAMIL NADU TEXT BOOK SOCIETYஎஸ்.அன்பழகன்044-28271468,tbc@tn.nic.in
12TEACHERS RECRUITMENT BOARDவிபு நாயர் இ.ஆ.ப 044-28269968, trb@tn.nic.in
13TEACHERS RECRUITMENT BOARDதண்.வசுந்தர தேவி 044-28269968,trb@tn.nic.in
14TEACHERS RECRUITMENT BOARDவி.ராஜராஜேஸ்வரி 044-28269968,trb@tn.nic.in
15TRB - TETகே.தங்கமாரி044-28269968trb@tn.nic.in


Kalvinla C To me 29 Dec 2014 வணக்கம், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு மேல்முறையீடு செய்வதற்கு விழுப்புரம் மாவமாவட்டம் திருநாவலூர் ஒன்றிய ஆசிரியர்களின் பங்களிப்பு ரூபாய் ஐந்தாயிரம் தங்களின் வங்கி கணக்கில் அனுப்பி உள்ளேன். நன்றி ---- From: "Kalvinla C"


நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களின் வழக்குகளை விசாரிக்க ஏதுவாக மறு ஆய்வுக்குழுக்களை அமைக்க அரசு உத்தரவு

தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - அரசு ஊழியர் ஒரு வருடம் முழுமையாக பணிபுரிந்து வருடாந்திர ஊதிய உயர்விற்கு ஒரு நாள் முன்னால் ஓய்வு பெறுபவர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு வழங்க அரசு உத்தரவு

GO.MS.NO.311 Finance Dept Dt.31.12.2014 - Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009 – Grant of notional increment to Government Servants who retires on superannuation on the preceding day of increment due date – Orders – Click Here....

 

தொடக்கக் கல்வி - வலைதள மூலம் சம்பளப் பட்டியல் (Web Pay Roll) முறையினை நடைமுறைப்படுத்துவது சார்பான அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு

பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள்-அறிவுரைகள்-தொடக்கக் கல்வி இயக்குனர் செயல் முறை



TATA-சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதியம்  ( 
9300 + 4200.) மேல் முறையீடு வழக்கு - விளக்ககூட்டம்.

 நாள் ;-04.01.2015 நேரம் ;-காலை 10.00 மணி

இடம் ; கோவை 


தொடர்புக்கு ;-ஜெயராஜ்  ஆசிரியர் -9786369755.


 நாள் ;-04.01.2015 நேரம் ;-பிற்பகல்  2.00 மணி



இடம் ;TELC பள்ளி ,பேருந்து நிலையம் அருகில் பொள்ளாச்சி ,கோவை மாவட்டம் 

தொடர்புக்கு ; K.மல்லிகாஜுனர் சாமி ஆசிரியர் - 9976352463.

அனைவரும் சங்கம் பாகுபாடு இல்லாமல் கலந்து கொள்ளவும்.  உண்மை விபரங்களை அறிந்திட அழைக்கிறோம்


TATA-சங்கத்தின் ஊதிய வழக்கு மேல் முறையீடு -கூட்டம் 

 நாள் ;- 28.12.2014, நேரம் ;-காலை 11.00 மணி

இடம் ;TDTA துவக்க பள்ளி .புளியங்குடி -திருநெல்வேலி மாவட்டம் -

அனைவரும் சங்கம் பாகுபாடு இல்லாமல் கலந்து கொள்ளவும் 
தொடர்புக்கு ;- சாமுவேல் ஆசிரியர் -7418720158

ஆசிரியனுக்கு எதிரி ஆசிரியனே...
ஒரு போக்குவரத்து ஊழியருக்கு ஒரு பிரச்சனை என்றால், அனைத்து ஊழியரும் ஒன்றுபட்டு போராட்டம் நடத்துகின்றனர். மருத்துவ துறையிலும் இதே ஒற்றுமை தான். மற்ற எல்லா துறையிலும் இதே ஒற்றுமை காண முடியும்.
ஆனால் இந்த கல்வித்துறையில் மட்டும் ஒருவரை ஒருவர் காலை வாரிவிடுவதும், பொறாமை, ஈகோ இப்படி எல்லா கெட்ட எண்ணங்களும் தாண்டவமாடுகிறது.
ஆதிகாலத்தில் டைனோசர் என்ற மிருகம் வாழ்ந்ததாக நாம் படிக்கிறோம். அவைகள் தங்களை தாங்களே அழித்து கொண்டது போல தான், நம் நிலைமை இன்றுள்ளது.
கிராமம், எண்ணிக்கை காரணம் காட்டி இன்றைக்கு இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தில் கை வைத்தது போல, நாளை அதே கிராமத்தில் பணிபுரியும் பட்டாதாரி, த.ஆ, மு.ப.ஆ, போன்றவர்களுக்கு இந்த பாதிப்பு வராதா? பக்கத்து வீட்டுக் கூரையில் தான் தீ என்று நிம்மதி அடையும் என் ஆசிரிய சமூகமே, அந்த தீயிலிருந்து ஒரு பொறி தங்கள் கூரையில் விழுந்தால் என்ன ஆகுமென்று சிந்தியுங்கள்!
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களையும் ஒருங்கிணைத்து வலுவான போராட்ட களத்தை உருவாக்கிட அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களுக்கும்  TATA சங்கம் சார்பாக அனுப்பப் பட்டுள்ள கடிதம் .



இடைநிலை ஆசிரியர் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்; பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை 

இடைநிலை ஆசிரியர்களுக்காய் குரல் கொடுத்த ஐயா இராமதாசு அவர்களுக்கு மாநில அமைப்பு சார்பாக நன்றிகள்

மத்திய அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்த போதிலும், அவர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இக்கோரிக்கை நியாயமற்றது; சாத்தியமற்றது என அரசு கூறியுள்ளது.

ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்ட போது, தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட புதிய ஊதிய விகிதம் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. ஊதிய விகிதத்தை மாற்றியமைப்பதில் நிகழ்ந்த குளறுபடிகள் காரணமாக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியத்தில் ரூ.360 இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, அவர்களது பணி நிலையில் உள்ள மத்திய அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைவிட தங்களுக்கு சுமார் ரூ.4800 குறைவாக நிர்ணயிக்கப் பட்டு இருப்பதாகவும், இக்குறைபாட்டை களையும் வகையில் மத்திய அரசு இடைநிலை ஆசிரியருக்கு இணையாக தங்களுக்கும் ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்றும் இடைநிலை ஆசிரியர்கள் கோரினர்.
 
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்க 2010 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையம், அவர்களுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஊதிய விகிதத்துடன் ரூ.750 சிறப்பு ஊதியம் சேர்த்து வழங்க ஆணையிட்டது. இதன்மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.1553 கூடுதலாக கிடைக்கும். ஆனால், இது போதுமானதல்ல என்று கூறி தொடரப்பட்ட வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை கனிவுடன் ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. ஆனால், ஆசிரியர்கள் கோரிக்கையில் உள்ள நியாயத்தை கருத்தில் கொள்ளாமலேயே அதை தமிழக அரசு நிராகரித்துள்ளது.
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிராகரிப்பதற்காக தமிழக அரசு தெரிவித்துள்ள காரணங்கள் எதுவும் ஏற்கத்தக்கதல்ல. மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நகர்ப்புறங்களில் இருப்பதால் அதில் பணியாற்றும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதால் அவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது; ஆனால், தமிழக அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் கிராமங்களில் பணியாற்றுவதால் எந்த சிரமமும் இல்லை என்பதால் அவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கத் தேவையில்லை என்று தமிழக அரசின் தரப்பில் கூறப்பட்டுள்ள காரணம் நகைப்புக்குரியது.
 
நகரங்களில் பணியாற்றுவதை விட கிராமப்புறங்களில் பணியாற்றுவதில் தான் சிரமங்கள் அதிகம் என்பதும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு கிராமப்பகுதிகளில் பணியாற்ற கூடுதல் ஊதியம் வழங்கப்படுவதும் அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி, நகர்ப்புறங்களில் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களில் பயிலும் ஒப்பீட்டளவில் முன்னேறிய மாணவர்களுக்கு கற்பிப்பதைவிட, எந்த வசதியும் இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு தான் அதிக முயற்சியும், உழைப்பும் தேவைப்படும். இதையெல்லாம் உணராமல் கிராமப்புறங்களில் பணியாற்றுவதால் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் தரத் தேவையில்லை என்ற அரசின் வாதம் கேலிக்குரியது என்பது மட்டுமின்றி, கிராமப்புறங்களை அரசு இரண்டாம் தரமாக பார்க்கிறது என்பதற்கும் சிறந்த உதாரணமாகும். ஒருவேளை வாதத்திற்காக கிராமப்புற பள்ளிகளில் பணியாற்றுவதில் சிரமம் இல்லை என்று வைத்துக் கொண்டால் கூட, இந்தியாவிலேயே அதிக அளவில் நகரமயமாக்கப்பட்ட மாநிலமான தமிழ்நாட்டில் 50%-க்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் நகரப்பகுதிகளில் பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்கும் இதே காரணத்தைக் கூறி அதிக ஊதியத்தை மறுப்பது எந்த வகையில் நியாயம்?
 
கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்களுக்கு கல்வித் தகுதி அதிகம்; மாநில அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு கல்வித் தகுதி குறைவு என்பதும் தவறான வாதமாகும். கேந்திரிய வித்யாலயாக்களின் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கின்றனர்; தமிழக அரசு ஆசிரியர்கள் தமிழில் பயிற்றுவிக்கிறார்கள் என்று கூறுவதையும் ஏற்க முடியாது. தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப் பட்டுவிட்டன என்பது ஒருபுறமிருக்க, ஆங்கிலத்தில் கற்பிப்பதை விட தமிழில் பயிற்றுவிப்பது தகுதி குறைவானது என்று தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட அரசே கூறுவதை சகிக்க முடியவில்லை. தமிழை இதைவிட அவமதிக்கமுடியாது. அதேபோல் கேந்திரிய வித்யாலயாக்களில் மொத்தம் 1017 இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால் அவர்களுக்கு அதிக ஊதியம் தரலாம்; ஆனால், தமிழக அரசு பள்ளிகளில் 1.16 லட்சம் இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதால் அவர்களுக்கு தர முடியாது என்று என்று அரசு அளித்துள்ள விளக்கத்தை எந்த வகையில் சேர்த்துக் கொள்வது என்று தெரியவில்லை.
 
எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பது தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தான். இதை உணர்ந்து மத்திய அரசு பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தேவை என்ற அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

பள்ளிக்கல்வி - 01.01.2015 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்ந்து - இயக்குநர் செயல்முறைகள்

CLICK HERE - DSE - PREPARATION OF HIGH SCHOOL HM PROMOTIONAL PANEL AS ON 01/01/2015 - REG PROC

 

ஆசிரியர் தேர்வு வாரியம் - கணினி பயிற்றுநர்களுக்கான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்த தேர்வு நடத்துதல் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்புகான ஆய்வு கூட்டம், 26.12.2014 அன்று சென்னையில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் தேர்வு வாரியம் - கணினி பயிற்றுநர்களுக்கான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்த தேர்வு நடத்துதல் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்புகான ஆய்வு கூட்டம், 26.12.2014 அன்று சென்னையில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு...

 

தொடக்கக் கல்வி - பள்ளி மாணவர்கள் மனச்சிதைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம் கோரி உத்தரவு

புதுகோட்டை மாவட்டம் -கிள்ளுகோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் -நிதி முறைகேடு-நடவடிக்கை எடுக்க வேண்டி மாநில அமைப்பு சார்பாக CEO அலுவலகம் முன்பு போராட்டம்

புதுகோட்டை மாவட்டம் -கிள்ளுகோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் -நிதி முறைகேடு - போராடிய  -TATA -மாவட்ட பொறுப்பாளர்கள் -திரு.யோவேல் ,திரு.ராஜேஷ் ஆகியோர்கள் - தலைமை ஆரிசியர்களின் தூண்டுதலால் ஊர் மக்கள் மற்றும் முறைகேடுகளுக்கு உதவி வரும் சில ஆசிரியர்களால் தாக்கி சிறைப்பிடிக்க பட்டனர்  மேலும் நமது பொறுப்பாளர்கள் மீது இரவு காவலர் தமிழ் செல்வி முலம் காவல் துறையிலும் புகார் கொடுத்து உள்ளார்கள்( இரவு காவலருக்கு பகலில் பள்ளியில் என்ன வேலையோ ?) .இது குறித்து புகார் தெரிவித்தும் கல்வித் துறை ஊழல் ஆசிரியர்களை யும்   தலைமை ஆரிசியரையும் காப்பாற்றும் விதமாக நடந்து வருவதை கண்டித்து விரைவில் மாநில அமைப்பு சார்பாக CEO அலுவலகம் முன்பு போராட்டம் நடை பெறும் .

பி.எட் .,எம் .எட் -2 வருடங்களாக உயர்வு- NCTE -ன் NOTIFICATION கடிதம்

CLICK HERE-NCTE -NOTIFICATION LETTER

TATA -சங்கத்தின் உண்ணா நிலை அற போராட்டத்தில் கலந்து கொள்கிறவர்கள் தங்கள் விபரங்களை Facebook ல் பதிவு செய்யுங்கள் .அது நமக்கு வலு சேர்க்கும் ....

TATA -சங்கத்தின் உண்ணா நிலை அற போராட்டம் 11.01.2015 ல் இருந்து 01.02.2015 க்கு மாற்றம் --
11.01.2015அன்று இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய மாற்றம் செய்ய மறுத்த நிதித்துறையை கண்டித்தும் தமிழக அரசு கடிதம் எண் 60473 / CMPC / 2014. நாள் ;10.12.2014 . அய் ரத்து செய்திட வேண்டியும் உண்ணா நிலை அற போராட்டம்சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடத்திட திட்டமிட பட்டு இருந்தது .மேற்படி பொங்கல் பண்டிகை காலத்தை ஒட்டி வருவதால் அனுமதி கிடைப்பதில் ஏற்படுகிற சிரமங்களை முன்னிட்டும் மேலும் ஆசிரியர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆயத்த படுத்திட கால அவகாசம் தேவை படுவதாலும் மேற்படி TATA -சங்கத்தின் உண்ணா நிலை அற போராட்டம் 11.01.2015 ல் இருந்து 01.02.2015 க்கு மாற்றம் செய்யப்படுகிறது என அறிவிக்கிறோம் -