PAGEVIEWERS

இன்று (21-04-2015 )டாட்டா வின் 3ம் ஊதிய வழக்கு மதுரை உயர் நீதி மன்றம் கிளையில் W.P (MD)No; 5301/2015. -ல் 31 வது வழக்காக நீதிபதி திரு .வைத்தியநாதன் அவர்கள் முன்னிலையில் விசாரணை க்கு வந்தது .அரசு வழக்கறிஞர் 4 வாரம் கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தார் .நமது மூத்த வழக்கறிஞர் திரு .அஜ்மல் கான் அவர்கள் ஆஜர் ஆகினார்கள் .நீதிபதி 4 வாரம் வழங்க முடியாது என கூறி நீதிமன்றம் விடுமுறை முடிந்ததும் வருகிற ஜுன் மாதம் முதல் வாரத்திற்கு வழக்கை ஒத்திவைக்கப்பட்டது-டாட்டா கிப்சன் 9443464081.
2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள்.
2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இவ்வழக்குகளை
க.பரமத்தி ஒன்றிய ஆசிரியர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு எண் விவரம். WP.15724, WP.15725, WP.15726, WP.15727, WP.15728/2014.
வசூல் வேட்டை மே மாதத்தில் 650 தலைமை ஆசிரியர் ஓய்வு:காலியிடங்களை பிடிக்க வசூல் வேட்டைக்கு வாய்ப்பு
அரசுப் பள்ளிகளில், 650 தலைமை ஆசிரியர்கள், மே மாதத்துடன் ஓய்வு பெறஉள்ளனர். அந்த இடங்களை பிடிக்க ஆசிரியர்களிடம் போட்டா போட்டிஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர், சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் சிபாரிசை நாடி வருகின்றனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2015-2016 ஆம் ஆண்டில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுதிறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு வாக்காளர் சரிபார்த்தல்.


பி.எஃப் தொகை எவ்வளவு: 5 நிமிடத்தில் கண்டறியும் வழிகள்!

பிஎஃப் கணக்கு விவரத்தை அக்டோபர் 16ம் தேதி முதல் அந்தந்த மாதமே தெரிந்துக் கொள்ள முடியும் என பிஎஃப் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்காக 12 இலக்கம் கொண்ட நிரந்தர எண் (Universal
ActivationNumcer) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அக். 16ம் தேதி துவக்கி வைக்க உள்ளர்.
இந்த எண்ணை வைத்து இந்தியாவில் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் பிஎஃப் கணக்கு விவரத்தை தெரிந்துக் கொள்ள முடியும். ஒரு ஊழியர் வேலைக்கு சேர்ந்து பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை இந்த எண் தான் அவருடைய பி.எஃப் கணக்கு எண்ணாக இருக்கும். அதனால், நிறுவனம் மாறினாலும் சர்வீஸ் காலம் விட்டுப் போகாது.
இதுவரை கட்டிய பிஎஃப் தொகை எவ்வளவு என அறிந்து கொள்ள 5 நிமிடம் போது அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் இதோ:
1. http://members.epfoservices.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று UAN நம்பரை ஆக்டிவேட் செய்வதற்கான லின்க்கை க்ளிக் செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் அதிகாரிகள் உடந்தையுடன் முறையில்லாமல் நடக்கும் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் அதிகாரிகள் உடந்தையுடன் முறையில்லாமல் நடக்கும் பணியிட மாற்றம்-தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகளால் மன உளைச்சலை ஏற்படுத்தும் சம்பவமும், அதனால் அரசு ஊழியர்கள் தற்கொலை செய்வது அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
அரசு ஊழியர்களின் மன உளைச்சலுக்கு முக்கிய காரணமாக இருப்பது பணியிட மாற்றம்தான் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக, அரசு ஊழியர்கள் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணி செய்யக்கூடாது என்பது விதியாக உள்ளது. இது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும். ஆனால், இந்த விதிமுறைகள் அரசு அலுவலகங்களிலோ, அரசு பள்ளிகளிலோ, ஏன் போலீஸ் நிலையங்களில் கூட இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. உயர் அதிகாரிகளுக்கு பிடித்த அரசு ஊழியர்கள் என்றால் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் ஒரே இடத்தில் பணியாற்ற முடிகிறது. ஆனால், தனக்கு பிடிக்காத ஊழியர்களோ அல்லது ஆசிரியர்களோ ஒரு சில மாதம் பணியாற்றினால்கூட, நிர்வாக நடவடிக்கை என்ற போர்வையில் உடனடியாக அவர்களை பணியிடம் மாற்றம் செய்து மனஉளைச்சல் ஏற்படுத்துகிறார்கள்.
படாதபாடுபடும் ஊழியர்கள்

ஊதியம் மட்டும் ஆசிரியர்களின் பிரச்சனை அல்ல?


1.அரசு தொடக்க , நடு நிலைப் பள்ளிகளில் ஒருபுறம் வாசிப்புத்திறன் மறுபுறம் விதவிதமான கற்பிப்பு முறைகள்.
2.இடைனிலை ஆசிரியர்கள் வகுப்பின் 1-5 பட்டதாரிகள் கிஞ்சித்தும் கவனிப்பதில்லை என பல புகார்கள்,மாணவர்கள் 6,7,8 விட அதிகம் ஆனால் 2 அல்லது 3 ஆசிரியர்கள் 5 வகுப்புகள்/6.7.8 30 அல்லது 40 ஆசிரியர்கள் 3 அல்லது 4 /
3.மாறுதலில் ஊழல் அதனால் காலிப்பணியிடம் அவ்வகுப்பிற்கு 2 அல்லது 3 வகுப்பிற்கு ஒரே ஆசிரியர்.
4.தலைமை ஆசிரியர் ஒர் மெசேஜ் அல்லது தொலைபேசி தகவலில் அலுவலகம் செல்லனும் ,ஏதாவது கற்பித்தல் அல்லாத பணி
5.இந்த பி.எல்.ஓ டூட்டி ஏன் ஆசிரியர் செய்யனும்
6.கம்பூட்டரில் ஈ பே, வசூல் பாவம் ஆசிரியர்கள்
7.அதிகம் படித்த இடை நிலை ஆசிரியருக்கு பள்ளிக்கல்வித்துறையில் பதவி உயர்வல்லை
8.பள்ளி மேம்பட உழைக்கும் ஆசிரியர்களுக்கு அங்கீகாரமில்லை
9.சரியான திட்டமிடல் ,வழிகாட்டலின்றி தொடக்க கல்வி சீரழிகிறது.
10.பள்ளி என்றால் மாணவர்கள்,படிப்பு என்பதை மறந்து அ.க.இயக்கம்
கட்டிடங்கள்,வீணான பயிற்சி,புள்ளி விவரம் மீட்டிங் ,பல்வேறுஆபடிவங்களை வழங்கி ஆசிரியர்களின் கற்பித்தலை முடக்கி தொடக்க , நடுனிலைப் பள்ளிகளை மூடு விழா நோக்கி அழைத்துச் செல்கிறதோ என ஆசிரியர்கள் மத்தியில் வெறுப்பினையும் வேதனையையும் வளர்க்கிறது. .

11.கட்டிடம் உண்டு,கம்பூட்டர் உண்டு,புரொஜெக்டர் உண்டு ,கம்பிய்யூட்டர் வாத்தியாரில்லை,அல்லது கற்பிக்க பாடத்திட்டமில்லை,அல்லது ஆசிரியருக்கு நேரமில்லை.இணையதள வசதியில்லை.
12.வட்டார வள மையத்தில் சரியான வசியில்லை,வீடியோ கான்பரென்ஸ் என கோடிகோடி கொட்டி அழுத பணம் வீணானது.வட்டாரத்தில் இருந்தே டெல்லி வரை பேசுவோம் என்ற வார்த்தைகள் வீணானது.
14.என்ன சொல்ல யாருக்கும் வெட்கமில்லை
ஆசிரியர்குரல் அருணாசலம்
நிதி உதவி பெரும் தனியார் மற்றும் சிறுபான்மை பள்ளி நிர்வாகியால் பாதிப்பா ? - ஆசிரியர்களை பாதுக்காக்க டாட்டா சங்கம் இருக்கிறது .9443464081/9025054081.

 பள்ளி நிர்வாகி என்ற போர்வையில் ஆசிரியருக்கு ஏற்படுத்தும் தொல்லைகள் ;-

1) மாதந்தோறும் ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல் செய்வது .

2) சிறு விடுப்பு , மருத்துவ விடுப்புகள் மற்றும் அரசின் சலுகைகளை அனுமதிக்க மறுப்பது .

3) வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் பிற பண பலன்களை உரிய காலத்தில் பெற்று தர மறுப்பது 

4) தேவையில்லாமல் மெமோ கொடுத்து மன உளைச்சல் ஏற்படுத்துவது 

5)  பணி நியமனங்களுக்கு பணம் வாங்குவது 

6) பிற அனைத்து வகை தொல்லைகளில் இருந்து விடுதலை பெற பள்ளி நிர்வாகத்தை அரசின் நேரடி கட்டு பாட்டில் கொண்டு வந்திட தொடர்பு கொள்ளவும்











5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் கட்சி தலைவர்கள் ஆதரவு

சென்னை5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்
மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும். தன்பங்களிப்பு
ஓய்வூதியம் ரத்து செய்திட வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆசிரியர்கள் ஏராளமானோர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத போராட்டத்துக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டா) ஒருங்கிணைப்பாளர் பி.கே.இளமாறன் தலைமை தாங்கினார். 18 ஆசிரியர் சங்க உயர் மட்டக்குழு உறுப்பினர் கே.தயாளன்கிப்சன் முன்னிலை வகித்தனர்.

டாட்டா ஜாக்டா உடன் இணைந்து நடத்தும் உண்ணாநிலை போராட்டம்.












 

madurai high court க்கான பட முடிவுடாட்டா வின் முன்றாம் ஊதிய வழக்கு W.P.(MD) No; 5301/2015இன்று 9.4.2015 மதுரை உயர் நீதிமன்றம் கிளை யில் நீதிபதி மாண்புமிகு .வைத்தியநாதன் அவர்கள் முன்னிலையில் விசாரணை க்கு 23 வது வழக்காக 12;05 மணிக்கு எடுக்க பட்டது நமது டாட்டா சங்கம் சார்பாக மூத்த வழக்கறிஞர் திரு.அஜ்மல் கான் அவர்கள் மற்றும் வெங்கடேஷ் குமார் ஆஜர் ஆகி வாதாடினார் கள் .ஒருநபர் குழு மற்றும் மூன்று நபர் குழு அறிக்கை களை ரத்து செய்து ஊதியம் 9300+4200 என மாற்றிட ஒய்வு பெற்ற நீதிபதி தலைமை யில் ஆணையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது .அதை நீதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார் ..மேலும் அரசின் அறிக்கை பெற்று சமர்ப்பிக்க அரசு வழக்கறிஞர் அவர்களுக்கு உத்தரவிட்டார் .மீண்டும் வழக்கு for orders என்ற பகுதிக்கு ஏப்ரல் 21ல் இறுதி விசாரணை க்கு எடுக்கப்பட்டுள்ளது . ..டாட்டா பொறுப்பாளர் கள் மற்றும் ..டாடாகிப்சன்.

IGNOU B.ED-க்கு மதிப்பீடு சான்று தேவை இல்லை -அரசாணை அரசாணை (நிலை) எண் :160 நாள்02.12.2004

 டாட்டா ஜாக்டா உடன் இணைந்து நடத்தும் உண்ணாநிலை போராட்டம்.

5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 12ம் தேதி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

டாட்டா வின் முன்றாம் ஊதிய வழக்கு W.P.(MD) No; 5301/2015 இன்று  9.4.2015 மதுரை உயர் நீதிமன்றம் கிளை யில் நீதிபதி மாண்புமிகு .வைத்தியநாதன் அவர்கள் முன்னிலையில் விசாரணை க்கு வர உள்ளன . நமது டாட்டா சங்கம் சார்பாக மூத்த வழக்கறிஞர் திரு.அஜ்மல் கான் அவர்கள் மற்றும் வெங்கடேஷ் குமார் ஆஜர் ஆகி வாதாட உள்ளனர் .நாளைக்கு இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சினை க்கு நல்ல முடிவு ஏற்படும் ..டாட்டா பொறுப்பாளர் கள் மற்றும் ..டாடாகிப்சன் ஆகியோர் நீதிமன்றம் சென்று விபரங்கள் உடனடியாக வழங்கிட உள்ளனர் .
 MADURAI BENCH OF MADRAS HIGH COURT DAILY CAUSE LIST
(For 09th, April, 2015 )
    COURT NO. 9           
HON'BLE MR.JUSTICE S.VAIDYANATHAN
BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
TO BE HEARD ON THURSDAY THE 9TH DAY OF APRIL 2015 AT 10.30 A.M.
 23.    WP(MD).5301/2015         M/S.AJMAL ASSOCIATES               NELLAI
       (Service)                C. VENKATESH KUMAR                          
உரிமைப் போர் பாகம் 2
டாட்டா ஜாக்டா உடன் இணைந்து நடத்தும் உண்ணாநிலை போராட்டம்.
உரிமைக்காக குரல் கொடுக்க இது நமக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பு.
இடைநிலை ஆசிரியர் உணர்வை தட்டிப் பார்க்க நினைத்த அவர்களை திரும்ப அடிக்க கிடைத்த வாய்ப்பு.
தோல் கொடுப்போம் தோழமைகளே இனி தோல்வி நமக்கில்லை என்று.
பாரத போர் போல் தொடரும் நமது உரிமை போரில் நிச்சயம் நாம் வெல்வோம்.
அதுவரை நாம் இணைந்திடுவோம்.
ஏப்ரல் 12 திரளுவோம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் .
இது உள்ள உணர்வுகள் அனைத்தும் ஏரிமலையாய் வெடிக்க வேண்டிய தருணம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு ஜனவரி 2015 முதல் வழங்க இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜாக்டா சார்பாக ஏப்ரல் 12 ஞாயிறு அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நடைபெறும் உண்ணாநிலை அறபோராட்டத்தில் டாட்டா உறுப்பினர்கள். மாவட்ட மற்றும் வட்டார பொறுப்பாளர் கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள மாநில அமைப்பு சார்பாக அறிவிக்கப்படுகிறது .இவன் டாட்டா கிப்சன்