மாவட்டம்தோறும் டீன்-ஏஜ் பருவத்தினருக்காக கவுன்சிலிங் செண்டர்கள்: அரசு அறிவிப்பு
தமிழகத்தில் மாவட்டம் தோறும் வளர் இளம் பருவத்தினரின் மனச்சிக்கல்களை கவுன்சிலிங் மூலம் தீர்ப்பதற்கு மையங்கள் அமைக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து வெளியான அரசு உத்தரவில் தற்போதைய உலகம் போட்டிகள் நிறைந்த உலகம். இத்தகைய சூழ்நிலையை எதிர் கொள்ள இயலாமையினாலும் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் மனதளவில் பாதிக்கப்படும் வளர் இளம் பருவத்தினரின் பிரச்னைகளை கண்டறிந்து, அவர்களுடன் கலந்துபேசி, அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க மாவட்டத்திற்கு ஒரு மனவள ஆலோசனை மையம் என்று 31 மாவட்டங்களிலும், சென்னையில் 3 மையங்கள் என 34 ஆலோசனை மையங்களை ஏற்படுத்த 2 கோடியே 51 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.