PAGEVIEWERS

733366

ஜெ., வழக்கு தீர்ப்புக்கு இடைக்கால தடை......

கர்நாடகா ஐகோர்ட்டில், ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு கூற, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஏப்ரல் 15ம் தேதி வரை தீர்ப்பு வழங்கக்கூடாது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்கக்கோரும், அன்பழகன் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்ததை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இந்த இடைக்கால தடைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment