PAGEVIEWERS

pay case

இடைநிலை ஆசிரியருக்கு  ஊதியம் 9300+4200 

வழங்க மறுப்பது 
சட்ட விரோதம் .உடனே வழங்க வேண்டும் .

TATA   இடைநிலை ஆசிரியர் உரிமைக்காக

 சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு .33399/2013.

வழக்கறிஞர்  திரு . அஜ்மல்கான் .அவர்கள் .

 வழக்கு  வருகிறது  ராசிநாளில்    11-12-13




மொத்தம் 4 மாணவர்களே படிக்கும் நகராட்சி பள்ளியில் 5 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அருப்புக்கோட்டையில் நகராட்சி நடுநிலை பள்ளியில் தான், இந்த அவலம் நிலவுகிறது அருப்புக்கோட்டை மேலரத வீதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. 1927 முதல், செயல்பட்டு வரும் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த 4 ஆண்டுகளாக, படிப்படியாக குறைந்து வருகிறது. 
தற்போது, இப்பள்ளியில், முதல் வகுப்பில் 4 பேர் , 6 ம் வகுப்பில் 2 பேர் , 7 ம் வகுப்பில் ஒருவர், 
8 ம் வகுப்பில் 3 பேர்களுமாக, மொத்தம் 10 மாணவர்களே படிக்கின்றனர். இதிலும், 4 மாணவர்கள் மட்டுமே, தினமும் பள்ளிக்கு வருகின்றனர். மொத்த ஆசிரியர்கள் 5 பேர் உள்ளனர். மாணவர்கள் எண்ணிக்கையை விட, 
ஆசிரியர்கள் அதிகமாக உள்ளனர். இப்பள்ளியில், 10 க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் உள்ளன. பள்ளி முழுவதும் "டைல்ஸ்' ஒட்டப்பட்டு, குடிநீர், கழிப்பறைகள், சத்துணவு மையம் போன்ற தனியார் பள்ளிக்கு 
நிகரான, அனைத்து வசதிகள் இருந்தும், மாணவர்கள் இங்கு படிக்க வருவதில்லை. 

அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன் கூறுகையில், "" இப்பள்ளியில் அனைத்து வசதிகளும் இருந்தும், மாணவர்கள் சேர்க்கை மிக குறைவாக உள்ளது. ஆசிரியர்கள், வீடு வீடாக சென்று, பள்ளியின் தரத்தை பற்றி, பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து, மாணவர்களை பள்ளியில் சேர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த வேண்டும். வரும் கல்வியாண்டில், மார்ச் துவக்கத்திலிருந்தே மாணவர்களை சேர்க்க, ஆசிரியர்கள் முனைப்பு காட்ட வேண்டும்,'' என்றார்.





‘ரிட்டயர்டு’ பட்டியலில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் காலியிடங்களை நிரப்ப என்ன   வழி?



 
 
 
 



அரை காசு சம்பளம் என்றாலும் அது அரசாங்க உத்தியோகமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அத்தகைய அரசு பணியில் இன்று சேர இளைஞர்களிடையே பலத்த போட்டி நிலவுகிறது. அரசு பணியாளர் தேர்வாணையம் எந்த ஒரு தேர்வை அறிவித்தாலும் லட்சக்கணக்கானோர் போட்டிபோட்டு விண்ணப்பித்து டிஎன்பிஎஸ்சியை திணற செய்கின்றனர். 10ம் வகுப்புதான் கல்வி தகுதி என்றாலும் பட்டதாரிகள் படையெடுக்கின்றனர். ஆனால் தேர்வு செய்யப்படுபவர்கள் என்னவோ ஆயிரத்துக்கு உள்ளாகத்தான் இருக்கும். அரசு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து லட்சக்கணக்கானோர் காத்திருப்பது ஒருபக்கம், ஆசிரியர் பணி, அரசு ஊழியர் பணி என்று லட்சக்கணக்கான காலியிடங்கள் மறுபக்கம் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது. இவை ஒருபுறம் இருக்க வரும் ஆறு மாத காலத்திற்குள் அதாவது 2014 மார்ச் 31ம் தேதிக்குள் தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் மேல் அரசு பணியாளர்கள் புதிய காலி பணியிடங்கள் உருவாக இருக்கிறது. நடப்பு நிதியாண்டு நிறைவு பெறும்போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்று சீருடை பணியாளர்கள் தவிர்த்து மாதத்திற்கு சுமார் 40 ஆயிரம் பேர் வீதம் என ஒட்டுமொத்தமாக சுமார் 2 லட்சம் பேருக்கு மேல் ஓய்வு பெற இருக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளி விபரம்.

தமிழகத்தில் 1980 முதல் 1984 வரை அதிக அளவில் பணி நியமனங்கள் நடந்தன. மேலும் 1984ல் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் ‘யூத் சர்வீஸ்‘ என்ற பெயரில் சிறப்பு தேர்வு ஒன்று நடத்தப்பட்டு தற்காலிகமாக பணியாற்றிய ஆயிரக்கணக்கானோர் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தனர். தொடர்ந்து 1984க்கு பிறகு அடுத்து வந்த ஐந்தாண்டு காலத்தில் அதிக அளவில் பணி நியமனங்கள் ஏதும் நடைபெறவில்லை. பின்னர் 1989ல் இருந்து பணி நியமனங்கள் மீண்டும் அதிக எண்ணிக்கையில் நடந்தன. அவ்வாறு 1984 வரை நியமனம் செய்யப்பட்டவர்கள் எல்லாம் 58 வயதை நெருங்கியுள்ளதால் நடப்பு நிதியாண்டுடன் ஓய்வுபெற உள்ளனர். அரசு துறைகளில் ஏ, பி, சி, டி என்று 4 பிரிவுகளில் ஆபீசர் நிலையில் உள்ளவர்கள் முதல் இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட கடைநிலை ஊழியர்கள் வரை தமிழகத்தில் 13.30 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். சி மற்றும் டி பிரிவுகளில் ஊழியர்கள் வரும் நாட்களில் அதிகம் ஓய்வுபெற உள்ளனர். மொத்த பணியாளர்களில் 15 முதல் 20 சதவீதம் பேர் ஓய்வுபெற உள்ளதால் ஏற்கனவே பணி பளுவுடன் செயல்படுகின்ற ஊழியர்கள் மேலும் பணி பளுவில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளன.

மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அரசு துறைகளில் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. மாறாக பணியிடங்கள் எண்ணிக்கை வழக்கத்தைவிட குறைக்கப்படுகிறது. கணினிமயம் உள்ளிட்ட தொழில்நுட்ப காரணங்கள் இதற்கு முன்வைக்கப்படுகிறது. பணி ஓய்வு பெறுபவர்களுக்கு ஏற்ப புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படாதது நீண்டகால குறையாக இருந்து வருகிறது. வருடத்திற்கு 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் வரை ஓய்வுபெற்று வந்த நிலை மாறி இப்போது 2 லட்சம் ஊழியர்கள் வரை வருடத்திற்கு ஓய்வுபெறுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்று சுமார் 40 ஆயிரம் பேர் வரை மட்டுமே புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2001ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஐந்தாண்டுகள் புதிதாக பணி நியமனங்கள் ஏதும் நடைபெறாததும் மாநிலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை பெருகவும், அரசு துறைகளில் காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் காரணமாக அமைந்துவிட்டது. இதற்காக ஓய்வுபெறும் ஊழியர்கள் வயது வரம்பை 60 ஆக அதிகரிக்கும் எண்ணமும் அரசிடம் உள்ளது. இது பிரச்னைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்திடாது என்கிறது அரசு ஊழியர் சங்கங்கள்.

தொடக்கக் கல்வி - அரசாணை எண்.179 / 216 மற்றும் 234ன் படி வழக்கு தொடர்ந்து தீர்ப்பாணை பெற்றவர்களில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தவர்களில் தீர்ப்பாணையின் படி ஊதிய நிலுவையினை உரியவர்களுக்கு பெற்று வழங்கிய விவரத்தை அளிக்க இயக்குநர் உத்தரவு

 


நிதித்துறை - தமிழாசிரியர் பதவி இனி பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) ஆக மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை வெளியீடு, இதனால் தர ஊதியத்தில் ரூ.200/- குறைவு சார்பான முரண்பாடு தீர்ந்தது.

 


ஊழல், அரசியல் தலையீடுகள் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் நடைமுறைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பத்திரிக்கை ஆசிரியர்கள் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியைப் போன்று இந்தியாவிலும் அனைத்து அரசியல் கட்சிகளின் நிதி தொடர்பான விபரங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என கோல்கட்டாவில் நடைபெற்ற தேர்தல் பத்திரிக்கை ஆசிரியர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சிகளின் நிதி தொடர்பான அனைத்து விபரங்களும் கோப்புகளாக தொகுக்கப்பட்டு, வெளியிடப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பத்திரிக்கையாளர் கூட்டம் :


RTI-உரியதுறை அனுமதியுடன் இரண்டு பட்டங்களை ஒரே கால அட்டவணையில் வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம்

 


நிதித்துறை - தமிழாசிரியர் பதவி இனி பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) ஆக மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை வெளியீடு, இதனால் தர ஊதியத்தில் ரூ.200/- குறைவு சார்பான முரண்பாடு தீர்ந்தது.

 


பள்ளிக்கல்வி - அனைத்து CEO / ACEO / DEO / IMS / DEEO ஆய்வுக்கூட்டம் 05.12.2013 அன்று தாம்பரம் கார்லி மேல்நிலைப் பள்ளியில் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது.

 


Dinamalar

திங்கள் ,டிசம்பர்,2, 2013
கார்த்திகை ,16, விஜய வருடம்
Advertisement

 




தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க கருத்தரங்கு


திருநெல்வேலி : வண்ணார்பேட்டையில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கருத்தரங்கு நடந்தது.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தின் சார்பில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு தொடர்பான கருத்தரங்கு வண்ணார்பேட்டையில் நடந்தது. மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் துரைபாக்கியநாதன் முன்னிலை வகித்தார். மாநில பொதுசெயலாளர் கிப்சன் பேசினார்.
கூட்டத்தில், மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர் செல்வக்குமார், கடையம் இசக்கி, பட்டுராஜா, விஜயகுமார், சுரேஷ், ராஜேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Dinamani

ஆசிரியர்கள் சங்கக் கூட்டம்


தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தின் கூட்டம் வண்ணார்பேட்டையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் துரை பாக்கியநாதன் முன்னிலை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் எஸ்.சி.கிப்ஸன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் செல்வகுமார், தூத்துக்குடி மாவட்டச் செயலர் செல்வின், இசக்கி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
1-6-2009-க்கு பின்னர் நியமனம் பெற்றுள்ள 17 ஆயிரம் பேர் பழைய ஊதியத்தைவிட குறைவான ஊதியம் பெற்று வரும் நிலை உள்ளது. இதுபோன்ற ஊதிய முரண்பாடுகளைக் களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.