PAGEVIEWERS

733867


Dinamani

ஆசிரியர்கள் சங்கக் கூட்டம்


தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தின் கூட்டம் வண்ணார்பேட்டையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் துரை பாக்கியநாதன் முன்னிலை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் எஸ்.சி.கிப்ஸன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் செல்வகுமார், தூத்துக்குடி மாவட்டச் செயலர் செல்வின், இசக்கி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
1-6-2009-க்கு பின்னர் நியமனம் பெற்றுள்ள 17 ஆயிரம் பேர் பழைய ஊதியத்தைவிட குறைவான ஊதியம் பெற்று வரும் நிலை உள்ளது. இதுபோன்ற ஊதிய முரண்பாடுகளைக் களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment