PAGEVIEWERS

733628


Dinamalar

திங்கள் ,டிசம்பர்,2, 2013
கார்த்திகை ,16, விஜய வருடம்
Advertisement

 




தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க கருத்தரங்கு


திருநெல்வேலி : வண்ணார்பேட்டையில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கருத்தரங்கு நடந்தது.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தின் சார்பில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு தொடர்பான கருத்தரங்கு வண்ணார்பேட்டையில் நடந்தது. மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் துரைபாக்கியநாதன் முன்னிலை வகித்தார். மாநில பொதுசெயலாளர் கிப்சன் பேசினார்.
கூட்டத்தில், மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர் செல்வக்குமார், கடையம் இசக்கி, பட்டுராஜா, விஜயகுமார், சுரேஷ், ராஜேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment