சென்னை5 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் நேற்று
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதம்
மத்திய அரசுக்கு இணையாக
மாநில அரசின்
இடைநிலை ஆசிரியர்களுக்கு
ஊதியம் வழங்கிட
வேண்டும். தன்பங்களிப்பு
ஓய்வூதியம் ரத்து செய்திட வேண்டும் என்பது
உள்பட 5 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின்
கூட்டு நடவடிக்கைக்குழு
சார்பில் ஆசிரியர்கள்
ஏராளமானோர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத போராட்டத்துக்கு தமிழ்நாடு
ஆசிரியர் சங்கங்களின்
கூட்டு நடவடிக்கைக்குழு
(ஜாக்டா) ஒருங்கிணைப்பாளர்
பி.கே.இளமாறன் தலைமை
தாங்கினார். 18 ஆசிரியர் சங்க உயர் மட்டக்குழு
உறுப்பினர் கே.தயாளன்,
கிப்சன் முன்னிலை
வகித்தனர்.