PAGEVIEWERS

HSC March 2012 - Online filing of Application for Revaluation / Retotalling

Government of Tamil Nadu
Directorate of Government Examinations
Higher Secondary Examination March 2012



Application for Revaluation / Retotalling of Answer Script



TNTET 2012 - LIST OF EXAM VENUE / CHECK YOUR APPLICATION STATUS



                          Tamil Nadu Teachers Eligiblity Test 2012

horizontal rule
I.  List of Candidates
    enter your Application No. (eg.0100001)
           (for all the candidates who have applied for Examination)
                                                      App No.      
EXAMINATION TIME TABLE


Tamil Nadu Teacher Eligiblity Test 2012
 I. List of Admitted candidates                                      -        656088
Date of Examination: 12.07.2012 Thursday
Paper I Timing: 10:30 A.M to 12 Noon
Paper II Timing: 02:30 P.M to 04:00 P.M
Paper Both : (Paper I Timing and Paper II Timing)
           

Dated: 25-06-2012
Chairman

ஊதிய முரண்பாடு களைதல் குழு கவனிக்குமா? 3 ஆண்டு கோரிக்கைக்கு முடிவு வருமா?


6வது ஊதியக் குழு முரண்பாடுகளை களைய மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.4,200 தர ஊதியம் கிடைக்குமா? மூன்று ஆண்டு கால கோரிக்கை முடிவுக்கு வருமா என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஆசிரியர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 75 ஆயிரம் ஆசிரியர்களுமாக மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 44 ஆயிரத்து 905 பேர் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 9 ஆயிரத்து 969 பேர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள். 65 ஆயிரம் பேர் பட்டதாரி ஆசிரியர்கள். மீதமுள்ள 91 ஆயிரத்து 36 பேர் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.இடைநிலை ஆசிரியர்களில் சாதாரண நிலையில் 40 ஆயிரம் பேரும், தேர்வு நிலையில் 30 ஆயிரம் பேரும், சிறப்பு நிலையில் 21 ஆயிரத்து 36 பேரும் பணியாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் 6வது ஊதியக் குழு பரிந்துரைகள் கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டன. அதன் படி இடைநிலை ஆசிரியர்களில் சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200& 20,200, தர ஊதியம் ரூ.2,800, தேர்வு நிலையில் உள்ளவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9,300&34,800, தர ஊதியம் ரூ.4,300, சிறப்பு நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.9,300 & 34,800 அடிப்படை ஊதியம், ரூ.4,500 தர ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊதிய விகிதத்தை மாற்றி சாதாரண நிலையில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 9,300 & 34,800, தர ஊதியம் ரூ.4,200ம், தேர்வு நிலையில் உள்ளவர்களுக்கு தர ஊதியம் ரூ.4,600ம், சிறப்பு நிலையில் உள்ளவர்களுக்கு தர ஊதியம் ரூ.4,800ம் வழங்க வேண்டுமென்று கடந்த மூன்று ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஊதியக் குழு முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழு அமைக்கப்பட்ட போதும் இடைநிலை ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
தற்போது தமிழக அரசு செயலாளர் (செலவுகள்) கிருஷ்ணனை தலைவராகக் கொண்டு உறுப்பினர்கள் அரசு கூடுதல் செயலாளர் பத்மநாபன், இணை செயலாளர் உமாநாத் ஆகிய மூவரை கொண்ட புதிய குழு ஊதியக் குழு ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் குறை தீர்ப்பில் சிக்கல்

தமிழகத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தாததால், ஆசிரியர்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அரசு உதவி பெறும் 632 உயர்நிலைப் பள்ளிகள், 1,120 மேல்நிலைப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களது குறைகளை தீர்க்க, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, குறை தீர்ப்பு கூட்டங்கள், மாவட்ட கல்வி அலுவலரால் அந்தந்த கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், இரண்டு நாட்கள் நடத்தப்பட்டு வந்தது. அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களது குறைகளை தலைமை ஆசிரியர்களிடம் மனுவாக வழங்குவர். அவை, குறை தீர்ப்பு கூட்டத்தின் போது, மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் வழங்கப்படும். இதை பெற்று அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். 

தற்போது, இந்த குறை தீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்படுவதில்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் உள்ள வருகைப் பதிவேட்டில், குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டதாக பதிவு செய்து வருகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான மனுக்கள் தீர்வு கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 

குறை தீர்ப்பு கூட்டத்தை நடத்த அரசும், பள்ளிக்கல்வித் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அமைச்சர் செல்லூர் ராஜு மகன் தமிழ்மணி இரு சக்கர வாகன விபத்தினால் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து துயரத்தில் ஆழ்ந்திருக்கும் செல்லூர் ராஜுவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்  முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மகன், நேற்றிரவு சென்னையில் உறவினர் இல்ல நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு இரு சக்ர வாகனத்தில் திரும்பி கொண்டு இருந்த நேரம் பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் ஐகோர்ட் எதிரில் நள்ளிரவு 12.30 மணிக்கு வேகமாக வந்த போது எதிர்பாரதவிதமாக ஸ்பீடு பிரேக்கரில் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனால் தலையில் பலத்த காயத்திற்கு உள்ளானார்.

உடனடியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி தமிழ்மணி  இன்று காலமானார்.

தமிழ்மணியின் மரணத்தால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு அவரது குடும்பத்தினக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

வட்டார வள மையஅளவிலான பயிற்சிகள் 2012-13..

  • ஜூன் - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பயிற்சி - 2 நாள்கள்
  • ஜூலை -   புதுமையான முறையில் கணிதம் கற்பித்தல் - 3 நாள்கள்
  • ஆகஸ்ட் - உள்ளடங்கிய கல்வி - 2 நாள்கள்
  • அக்டோபர் - அமைதி மற்றும் மதிப்புக் கல்வி - 2 நாள்கள்
  • நவம்பர் - வகுப்பறை தொடர்புடைய ஆங்கிலம் - 2 நாள்கள்

குறுவள மைய பயிற்சி நாள்கள் 2012-13 (CRC)

  • 23-06-2012  - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பயிற்சி 
  • 14-07-2012  - துணைக்கருவிகள் தயாரித்தல் பட்டறை
  • 11-08-2012  - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு - அனுபவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல்
  • 15-09-2012  - செயல்திட்டம்
  • 20-10-2012  - உள்ளடங்கிய கல்வி
  • 17-11-2012  - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
  • 08-12-2012  - கலை மற்றும் கைவேலைப்பாடுகள் பட்டறை
  • 12-01-2012  - எளிய அறிவியல் செய்முறைகள் பட்டறை
  • 09-02-2012  - வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல்
  • 09-03-2012  - பள்ளி சுகாதாரம் மற்றம் தன் சுத்தம்

பெண் வாரிசுகளுக்கு திருமணமானாலும் கருணை அடிப்படையில் பணி : விதிமுறைகளைத் தளர்த்தியது அரசு

பெண் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமனம் தொடர்பான விதிமுறைகளை வகுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

"பணியில் இருக்கும் போது, மரணமடைந்த அரசு ஊழியரின் நெருங்கிய உறவினர்கள் என்று குறிப்பிடப்பட்ட நபர்களில், திருமணமாகாத மகள் என்ற நிலையில், பணி நியமனம் கோரி விண்ணப்பம் அளித்து, பணி நியமனம் வழங்கப்படுவதற்கு முன்னதாகவே திருமணம் செய்து கொண்டவர்கள், கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு உரிய தகுதிகளை நிறைவு செய்யும் பட்சத்தில், பணி நியமனம் வழங்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


அரசாணை எண்: 96 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை நாள்: 18-06-2012
Directorate of Elementary Education
DPI Complex
College Road, Chennai-600 006
(PBX Nos.  28253684 & 28253709)
Designation / Section
Name
Direct
.PABX
Resi.
Director
Thiru V.C Rameswaramurugan
28271169
122
 
JD (Admin)
  
28267186
127
  
JD (Aided School Scheme)
Tmt N Latha
28202414
126
.
FAX
.
28217583
.
.
 
Telephone Directory            HODs

தனியார் கல்லூரிகளில் பி.எட் : கல்விக் கட்டணம் விரைவில் அறிவிப்பு

தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கான கல்விக் கட்டணம் குறித்து நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி அடுத்த வாரம் அறிவிப்பு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளும், 647 தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு ஏறத்தாழ 2,500 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்று வருவதால், பி.எட். படிப்பில் மாணவ-மாணவிகள் போட்டிப் போட்டு சேருகிறார்கள். தற்போது போட்டித்தேர்வு முறை வந்துவிட்டதால் பி.எட். படிப்புக்கு மவுசு மேலும் கூடிவிட்டது.
அரசு மற்றும் உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் மிகக்குறைந்த பி.எட். இடங்களே இருப்பதால், பட்டப் படிப்பில் மிக அதிக மதிப்பெண் பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமே அங்கு இடம் கிடைக்கிறது. பெரும்பாலான மாணவ-மாணவிகள் பி.எட். படிப்பதற்கு தனியார் சுயநிதி கல்லூரிகளைத்தான் நாடுகிறார்கள்.
தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் எவ்வளவு கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையில் ஒரு கமிட்டியை அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டி தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து அவர்களின் கோரிக்கைகளையும், கேட்டறிந்தது. நடப்பு கல்வி ஆண்டில் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், தனியார் கல்லூரிகளில் பி.எட். கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்க அரசு முடிவு செய்துள்ளது.
கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், எவ்வளவு கல்விக்கட்டணம்? என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இன்று 25.06.2012 நடைபெறவுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.  இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து பணியிடங்களின் காலிப்பணியிட அறிக்கை, மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியலிலுள்ள குறைபாடுகளையும், முரண்பாடுகளையும் களைவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது இரட்டைப் பட்டங்கள் குறித்து சர்ச்சை பெரிய அளவில் உருவாகியுள்ளதால் அதுகுறித்து இன்று முடிவெடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் அரசாணை எண்.15ன்படி உருவாக்கப்பட்ட 1267 பணியிடங்களை பதவிஉயர்வு கலந்தாய்வில் காட்டுவதா என்பதை குறித்தும் முடிவெடுக்கப்படும் என்றும் மேலும் இந்த அரசாணை சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்குகள் குறித்தும் முடிவெடுக்கப்படும் என்று தொடக்கக் கல்வி துறையை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
  1. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை (மே 15) முதல் விற்பனை செய்யப்பட உள்ளன.
  2. MBBS Admission Official Website| www.tnhealth.org
  3. மே 11ல் பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பங்கள்
  4. B.E/B.Tech Admission Official Website | www.annauniv.edu/tnea2012/
  5. 14ம் தேதி முதல் கால்நடை படிப்புகளுக்கான விண்ணப்பம்
  6. B.V.Sc Admission Official Website | www.tanuvas.tn.nic.in/ugadmin
  7. 7ம் தேதி முதல் வேளாண்மைப் படிப்புகளுக்கான விண்ணப்பம்
  8. Agri Admission Official Website | www.tnau.ac.in/admission
    ......................TNPSC..........
     
    பொறுப்பேற்பு
  1. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவர் பொறுப்பேற்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்.
  2. TNPSC INTERVIEW PART - 1
  3. TNPSC INTERVIEW PART - 2
  4. OFFICIAL WEBSITE
  5. TNPSC OFFICIAL WEBSITE.
  6. TNPSC RESULTS
  7. RESULTS 
  8. STUDY MATERIALS
  9. TRB|TET|TNPSC|12 மாதங்களுக்கான சமீபத்திய நிகழ்வுகள் 2011 | 12 MONTHS Current Affairs-2011 
  10. ANNUAL PLANNER
  11. TNPSC ANNUAL PLANNER FOR THE YEAR 2012-2013
  12. ONLINE SERVICES
  13. TNPSC ONE TIME REGISTRATION SYSTEM
  14. CURRENT NOTIFICATIONS
  15. TNPSC SYLLABUS FOR VARIOUS POSTS
  16. TNPSC SYLLABUS
  17. QUESTION PAPERS AND ANSWER KEYS
  18. PREVIOUS YEAR QUESTION PAPERS
  19. ANSWER KEYS
  20. DEPARTMENTAL EXAMINATIONS
  21. Click here to Download Departmental Examinations May 2012 Hall Ticket
  22. DEPARTMENTAL EXAMINATIONS-Online Registration
  23. Results of Departmental Examinations - DECEMBER 2011
  24. FEES DETAILS
  25. SYLLABUS
    1. Departmental Test- Books To Download
    Departmental Test- Previous Year Question Papers
  26. Departmental Test Bulletin
  27. MORE TO KNOW
  28. NAMES OF EXAMINATION / SERVICE AND CODE NUMBERS
  29. LIST OF EXAMINATION CENTRES
  30. LIST OF COMMUNITIES.
  31. VARIOUS G.Os
  32. LIST OF SUBJECTS WITH CODES
  33. TNPSC NEWS
  34. அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகளுக்கு 8-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

TET அறிவிப்பு : ஜுன் 3-ந்தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 22.03.12 முதல் 12.04.12 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.

 

  1. TRB EDUCATION | TET குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் | Child Development and Pedagogy 001-1000 - QUESTIONS
  2. Tamil Nadu Teacher Eligiblity Test (TNTET) - 2012 Advertisement and Prospectus
  3. Tamil Nadu Teacher Eligiblity Test (TNTET) - 2012 Model Question Paper and Syllabus for Paper I and Paper II
* ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏப்ரல்12ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் கால நீட்டிப்பு செய்துள்ளது.


ஆசிரியர் தகுதி தேர்வு (TET) மார்க் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள் அவர்களுக்கு போட்டித்தேர்வு கிடையாது என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி அறிவித்தார்.

*   ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET)  பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளன.