அமைச்சர் செல்லூர் ராஜு மகன் தமிழ்மணி இரு சக்கர வாகன விபத்தினால் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து துயரத்தில் ஆழ்ந்திருக்கும் செல்லூர் ராஜுவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மகன், நேற்றிரவு சென்னையில் உறவினர் இல்ல நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு இரு சக்ர வாகனத்தில் திரும்பி கொண்டு இருந்த நேரம் பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் ஐகோர்ட் எதிரில் நள்ளிரவு 12.30 மணிக்கு வேகமாக வந்த போது எதிர்பாரதவிதமாக ஸ்பீடு பிரேக்கரில் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனால் தலையில் பலத்த காயத்திற்கு உள்ளானார்.
உடனடியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி தமிழ்மணி இன்று காலமானார்.
தமிழ்மணியின் மரணத்தால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு அவரது குடும்பத்தினக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment