தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னை
தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இன்று 25.06.2012 நடைபெறவுள்ளது. இந்த ஆய்வு
கூட்டத்தில் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் தவறாமல் கலந்து
கொள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்த கூட்டத்தில்
மாவட்டத்தின் அனைத்து பணியிடங்களின் காலிப்பணியிட அறிக்கை, மாவட்டத்திலுள்ள
ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியலிலுள்ள குறைபாடுகளையும்,
முரண்பாடுகளையும் களைவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என
எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது இரட்டைப் பட்டங்கள் குறித்து சர்ச்சை பெரிய
அளவில் உருவாகியுள்ளதால் அதுகுறித்து இன்று முடிவெடுக்கப்படும் என்று
எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் அரசாணை எண்.15ன்படி
உருவாக்கப்பட்ட 1267 பணியிடங்களை பதவிஉயர்வு கலந்தாய்வில் காட்டுவதா என்பதை
குறித்தும் முடிவெடுக்கப்படும் என்றும் மேலும் இந்த அரசாணை சம்பந்தமாக
தொடரப்பட்ட வழக்குகள் குறித்தும் முடிவெடுக்கப்படும் என்று தொடக்கக் கல்வி
துறையை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment