PAGEVIEWERS

தொடக்கக் கல்வி - 20122013 ஆம் கல்வியாண்டு - ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - வழக்கு M.P.NOs. 1 to 1 / 2012 in W.P. No. 14864 to 14868, 15578,15579 / 2012, M.P. Nos. 2 & 2 / 2 in W.P. No. 15004, 15235, 15675, 15802, 16088, 16111, 16186 / 2012ன் மீதான 26.06.2012 நாளிட்ட சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால தீர்ப்பாணை - நடைமுறைப்படுத்துதல் சார்ந்து.

தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 9502 / டி 1 / 2012, நாள்.27.06.2012

சாப்பாட்டிற்கு பிறகு பழம் சாப்பிடுவரா நீங்கள்? - ஓர் எச்சரிக்கை குறிப்பு.!

சாப்பிடும் முன்பே பழம் சாப்பிடவேண்டும். காரணம்
வெறும் வயிற்றில் பழம் சாப்பிடும்போது நமது உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளிகொண்டு வருகிறது இந்த பழம். இதனால் உடல் எடை குறைவதோடு, உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்க வழி வகை செய்கிறது.

banana
வாழைப் பழம்


தெரிந்து கொள்ளுங்கள்



சி.எப்.எல்., பல்பிலும் சிக்கல்


மின்தடையும், தட்டுப்பாடும் நிலவும் சூழ்நிலையில் மின்சாரத்தைச்

 சேமிக்க சி.எப்.எல்., பல்புகள் குறித்து அதிகம் பேசப்படுகிறது.குண்டு

 பல்புகளை விட 3 மடங்கு குறைவான மின் ஆற்றலை

 பயன்படுத்துகின்றன. சி.எப்.எல்., விளக்கில் பாதரசம் உள்ளது.

 சி.எப்.எல்., பல்பை விற்கும் கடைக்காரரை அவற்றைச் சேகரித்து

 அதனை உற்பத்தி செய்யும் நிறுவனத்திடம் அனுப்ப வேண்டும் என்னும்

 சட்ட விதி உள்ளது.



ஆனால் இது குறித்த விழிப்புணர்வு சி.எப்.எல்., பல்பை வாங்குவோருக் கும்,

 கடைக்காரர்களுக்கும் இல்லை. விற்கும் நிறுவனங்களும் இதனை 

கண்டு கொள்ளவில்லை

. பியூஸ் ஆன உடன் தூக்கி எறியப்படும் சி.எப்.எல்., வழியாக பாதரசம்

 மண்ணில் சேர்கிறது.

 ஒரு பாதரச தெர்மாமீட்டரில் உள்ள பாதரசம் ஒரு நீர்நிலையையே 

மாசுபடுத்த போதுமானது.



சி.எப்.எல்., பல்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கங்கள்

 அவை மறுசுழற்சி

 செய்யப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்த வேண்டும். 

ஏனெனனில் பாதரச மாசுபாடு 

மனிதர்களின் இனப்பெருக்க மண்டலத்தை பாதிக்கும்.

.

.
ஆனால் இது குறித்த விழிப்புணர்வு சி.எப்.எல்., பல்பை வாங்குவோருக்

 கும்

, கடைக்காரர்களுக்கும் இல்லை. விற்கும் நிறுவனங்களும் இதனை

 கண்டு கொள்ளவில்லை

. பியூஸ் ஆன உடன் தூக்கி எறியப்படும் சி.எப்.எல்., வழியாக பாதரசம் 

மண்ணில் சேர்கிறது

. ஒரு பாதரச தெர்மாமீட்டரில் உள்ள பாதரசம் ஒரு நீர்நிலையையே 

மாசுபடுத்த போதுமானது


சி.எப்.எல்., பல்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கங்கள்

 அவை மறுசுழற்சி 

செய்யப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்த வேண்டும்

. ஏனெனனில் பாதரச மாசுபாடு 

மனிதர்களின் இனப்பெருக்க மண்டலத்தை பாதிக்கும்.


ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயம்

பி.எட்., - ஆசிரியர் பயிற்சி டிப்ளமா உள்ளிட்ட படிப்புகளுக்கு, கல்லூரிகளுக்கு தகுந்தாற் போல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு, கட்டணத்தை முறைப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், 500க்கும் மேற்பட்ட தனியார் பி.எட்., கல்லூரிகள்; 600 தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், ஒரே சீரான வகையில் கட்டணம் இல்லை. கல்லூரிகளுக்கு ஏற்றாற்போல், வெவ்வேறான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

முதன் முறையாக இதை முறைப்படுத்தி, படிப்பிற்கு தகுந்தாற்போல் கட்டணத்தை நிர்ணயித்து, தமிழக அரசு நேற்று அறிவித்தது. சுயநிதி தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான கட்டணம் குறித்து, கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் பாலசுப்ரமணியன் நேற்று மாலை அறிவித்தார்.
அவர் கூறியதாவது: சுயநிதி தனியார் கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் உடற்பயிற்சி கல்லூரிகளுக்கு, 2012- 13ம் கல்வியாண்டிற்கு கல்விக் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, அனைத்து வகை கல்வியியல் கல்லூரிகளிடம் இருந்து, வரவு மற்றும் செலவு விவரங்களை, ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்கப்பட்டது

2012-13 ஆம் கல்வியாண்டு - ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - சில நெறிமுறைகள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 09502 / டி 1 / 2012 , நாள். 26.06.2012
அரசாணை எண். 107ன் படி 10+2+3 மற்றும் 11+1+3 முடித்தவர்களுக்கு மட்டும் உரிய பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் 3 ஆண்டு பட்டப்படிப்பு முடித்த பின்பு +2 முடித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க கூடாது என தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.   

பட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஜூலை 1-ல் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு

பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை (2010-11) பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புவதற்காக ஜூலை 1-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:  வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களை (2010-11) நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாதவர்கள் ஜூலை 1-ம் தேதி மீண்டும் கலந்துகொள்ளலாம்.  இதற்கான அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லையென்றாலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலை நகல் எடுத்தும் கலந்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தற்காலிக பணியாளர்களுக்கு பேறுகால விடுப்பு பொருந்தும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

 அரசுத் துறைகளில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் பேறுகால விடுப்பு 80 நாட்கள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்களுக்கும் பொருந்தும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்தவர் கண்ணகி. இவர் கால்நடை பராமரிப்பு துறையில் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி பணியாளராக கடந்த 30.5.1985 பணியில் சேர்ந்தார். 1993ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, 1995ல் அரசுக்கு தற்காலிக பணியாளர்களின் பட்டியலை நிர்வாகம் அனுப்பி வைத்தது.

இந்நிலையில், 5.5.1996ல் கண்ணகி கர்ப்பமானதால் நிர்வாகத்திடம் பேறுகால விடுப்பு கோரினார். தற்காலிக பணியாளர் என்பதால் பேறுகால விடுப்பு தரமுடியாது என்று நிர்வாகம் மறுத்துவிட்டது. 30.6.1996ல் கண்ணகிக்கு ஆண் குழந்தை பிறந்தது. 

அதன் பின்னர் மீண்டும் பணியில் சேர கண்ணகி முயன்றபோது நிர்வாகம் பணி வழங்க மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசா ரித்த நிர்வாக தீர்ப்பாயம் 18.11.1999ம் ஆண்டில் மனு தாரருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் நிர்வாகம் கண்ணகிக்கு வேலை வழங்க மறுத்துவந்தது.

இதனால், கண்ணகி மீண்டும் நிர்வாக தீர்ப்பாயத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில் தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயம் கலைக்கப்பட்டதால் இவ் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இருதரப்பின் வாதத்தையும் கேட்ட நீதிபதி, பேறு கால விடுப்பு சட்டம் 1961 பிரிவு 5 (2)படி ஓர் ஆண்டில் 80 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த பெண் பணியாளர்களுக்கு 12 வாரம் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்புக்கு தகுதியானவர்கள். இதில் ஒப்பந்த பணியாளர்களாக இருந்தாலும் தினக் கூலியாக இருந்தாலும் இவ்விதி பொருந்தும் என்று தீர்ப்பு வழங்கினார்.

மேலும், மனுதாரருக்கு வேலை வழங்க மறுத்தது சட்ட விரோதமான செயல் என்றும் இது அரசமைப்பு சட்ட உறுப்பு எண் 14, 21 பிரிவுக்கு எதிரானது என்றும் கூறினார். எனவே, மனுதாரருக்கு மீண்டும் பணி வழங்கி, அனைத்து விதமான பண, பணிபயன்களையும் 8 வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம்

பள்ளிகளில் ஆபத்தான விளையாட்டுப் பொருட்களை வைக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

பள்ளி குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் விளையாட்டுப் பொருட்களை பள்ளிகளில் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் குற்றாலத்தைச் சேர்ந்தவர் வெள்ளிமலை. இவரது மகள் முத்துலட்சுமி குற்றாலம் கணபதி தேசிய நடுநிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 22.12.2003 அன்று மதிய உணவு இடைவேளையின் போது முத்துலட்சுமி பள்ளி அருகே தோழிகளுடன் சேர்ந்து ராட்டினம் ஆடினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் முத்துலட்சுமியின் கையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் வலது கை அப்பறப்படுத்தப்பட்டது.

இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிமலை வழக்கு தொடர்ந்தார். அதில் தனது மகள் வலது கையை இழக்க பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவு தான் காரணம். எனவே அவளது எதிர்காலத்தை கருத்து கொண்டு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கே.என்.பாஷா நேற்று வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது,

வழக்கு விசாரணையில் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் கவனக் குறைவு மூலம் சிறுமி வலது கையை இழந்துள்ளது தெரிய வருகின்றது. சிறுமியின் தந்தை அரசிடம் இழப்பீடு அளிக்க கோரிக்கை விடுத்தும் கிடைக்கவில்லை.

வழக்கின் தன்மை, ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மொத்தம் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதில் பள்ளி நிர்வாகம் ரூ.1.5 லட்சமும், அரசு ரூ.1.5 லட்சமும் வழங்க வேண்டும். மேலும் இழப்பீட்டுத் தொகையை 2005ம் ஆண்டு முதல் 12 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்.

ஆரம்ப பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை பள்ளி நேரத்தில் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது. இதனால் பல விபத்துகள், கடத்தல் சம்பவங்கள் நடக்கின்றன. மேலும் பள்ளி வளாகம் அல்லது பள்ளியையொட்டிய பகுதியில் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய விளையாட்டு பொருட்களை வைக்க அனுமதிக்கக் கூடாது. குழந்தைகளின் சுகாதாரத்தை கெடுக்கும் உணவுப் பொருட்களை பள்ளியின் அருகே விற்கக் கூடாது என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

பச்சை மையை யார் பயன்படுத்தலாம்? அரசு புதிய உத்தரவு

பச்சை மையை யார், எப்போது, எந்தத் தருணத்தில் பயன்படுத்தலாம் என்பது குறித்து தமிழக அரசு புதிய வழிகாட்டுதல் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
  • அரசு அலுவலகங்களில் நீலம், கருநீலம் அல்லது கருப்பு வண்ணத்திலான மைகளை மட்டுமே அரசு ஆவணங்களில் எழுத பயன்படுத்த வேண்டும். இவைகளைத் தவிர பிற வண்ண மைகளை பயன்படுத்தக் கூடாது.  
  •  சட்டத் துறையைச் சேர்ந்தவர்கள் சிவப்பு நிற மையை உபயோகப்படுத்தலாம்.
யார் பச்சை மை பயன்படுத்தலாம்? 
  • வரைவு உத்தரவுகள், அறிவிக்கைகள், விதிகள் போன்றவற்றில் திருத்தம் செய்யும் போது பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அதிகாரிகள் பச்சை நிற மையை பயன்படுத்தலாம்.  
  • அரசு அலுவலகங்களில் மைப் பேனா, பால்பாயிண்ட் பேனா, ஜெல் பேனா ஆகியவற்றை பயன்படுத்த அனுமதிக்கலாம். 
  • சான்றொப்பம் இடுவதற்கு அனுமதிக்கப்பட்ட அலுவலர்கள் பச்சை நிற மையினை பயன்படுத்த வேண்டும்.  
  • பிரிவு "அ' அலுவலர்கள் மட்டும் அரசு கோப்புகளில் சிறு குறிப்புகள் எழுத பச்சை நிற மையை பயன்படுத்தலாம். 
அரசாணை எண்: 151 நாள்: 21-10-2010

தமிழ்நாடு குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2010 வரைவு விதிமுறைகள் வெளியீடு

குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான வரைவு விதிமுறைகள் தமிழக அரசின் இணையதளத்திலும், பள்ளிக் கல்வித் துறையின் இணையதளத்திலும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் இந்த விதிமுறைகளைப் பார்வையிட்டு தங்களது கருத்துகளை டிசம்பர் 20-ம் தேதிக்குள் அரசுக்குத் தெரியப்படுத்தலாம். 

இணை இயக்குநர் (உயர் கல்வி), பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகம், சென்னை -600 006 என்ற முகவரிக்கு தங்களது கருத்துகளை அஞ்சலில் அனுப்பலாம். இமெயில் முகவரி:  jdhssed​@nic.in


தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2010 வரைவு விதிகள்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - விதிமுறைகள்

6 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு கல்வியைக் கட்டாயமாக்கும் வகையில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தமிழக அரசின் சார்பில் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
  • மாணவர்களின் பெற்றோர்களை உள்ளடக்கிய பள்ளி நிர்வாகக் குழு பள்ளியின் வளர்சிக்கான மூன்றாண்டு திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.
  • இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் நடைபெறும் மாணவர் சேர்க்கை, தேவைப்படும் கூடுதல் ஆசிரியர்கள், கட்டமைப்பு வசதிகள், தேவைப்படும் நிதி போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
  • பள்ளி நிர்வாகக் குழுவின் தலைவர் அல்லது துணைத் தலைவர், அமைப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்ட இந்தத் திட்ட அறிக்கை நிகழ் நிதியாண்டு முடிவதற்கு முன்னதாக உள்ளூர் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்

பிரம்படி கொடுக்கும் ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

பள்ளி குழந்தைகளுக்கு பிரம்படி போன்ற கடுமையான தண்டனை கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை அளிக்கும் வகையில் சிறுவர்கள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பள்ளிகளில் ‘கார்பரேட் பனிஷ்மென்ட்’ எனப்படும் பிரம்படி தண்டனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறு தவறு செய்யும் மாணவர்களுக்கும் பள்ளிகளில் பிரம்படி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கடந்த 2010ம் ஆண்டு 7 மாநிலங்களில் சுமார் 6 ஆயிரம் மாணவர்களிடம் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் ஆய்வு நடத்தியது. இதில் 99 சதவீத மாணவர்கள் பள்ளிகளில் கடுமையான தண்டனையை சந்தித்து வருவதாக புகார் தெரிவித்திருந்தனர்.

இதை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சிறுவர்கள் பாதுகாப்பு சட்டத்தை குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் என பெயர் மாற்றம் செய்யவும், அதில் பல்வேறு புதிய அம்சங்களை சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறிய அளிவில் காயம் ஏற்படுத்தும் பிரம்படி தண்டனைக்கு ஒரு வருட சிறை தண்டனையும், அந்த தவறை மீண்டும் செய்தால் 3 வருட சிறை தண்டனை அளிக்கவும் சட்டதிருத்தம் செய்யப்படுகிறது. இரண்டாவது முறை தவறு செய்யும் போது பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யவும் சட்டதிருத்தம் கொண்டு வரப்படுகிறது.

மாணவர்கள் மனதளவிலும், உடல் ரீதியிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் வகையில் தண்டனை வழங்கும் ஆசிரியர்களுக்கு 5 வருட சிறை தண்டனையும், இதே தவறை இரண்டாவது முறை செய்தால் 7 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

HSC March 2012 - Online filing of Application for Revaluation / Retotalling

Government of Tamil Nadu
Directorate of Government Examinations
Higher Secondary Examination March 2012



Application for Revaluation / Retotalling of Answer Script



TNTET 2012 - LIST OF EXAM VENUE / CHECK YOUR APPLICATION STATUS



                          Tamil Nadu Teachers Eligiblity Test 2012

horizontal rule
I.  List of Candidates
    enter your Application No. (eg.0100001)
           (for all the candidates who have applied for Examination)
                                                      App No.      
EXAMINATION TIME TABLE


Tamil Nadu Teacher Eligiblity Test 2012
 I. List of Admitted candidates                                      -        656088
Date of Examination: 12.07.2012 Thursday
Paper I Timing: 10:30 A.M to 12 Noon
Paper II Timing: 02:30 P.M to 04:00 P.M
Paper Both : (Paper I Timing and Paper II Timing)
           

Dated: 25-06-2012
Chairman

ஊதிய முரண்பாடு களைதல் குழு கவனிக்குமா? 3 ஆண்டு கோரிக்கைக்கு முடிவு வருமா?


6வது ஊதியக் குழு முரண்பாடுகளை களைய மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.4,200 தர ஊதியம் கிடைக்குமா? மூன்று ஆண்டு கால கோரிக்கை முடிவுக்கு வருமா என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஆசிரியர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 75 ஆயிரம் ஆசிரியர்களுமாக மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 44 ஆயிரத்து 905 பேர் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 9 ஆயிரத்து 969 பேர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள். 65 ஆயிரம் பேர் பட்டதாரி ஆசிரியர்கள். மீதமுள்ள 91 ஆயிரத்து 36 பேர் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.இடைநிலை ஆசிரியர்களில் சாதாரண நிலையில் 40 ஆயிரம் பேரும், தேர்வு நிலையில் 30 ஆயிரம் பேரும், சிறப்பு நிலையில் 21 ஆயிரத்து 36 பேரும் பணியாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் 6வது ஊதியக் குழு பரிந்துரைகள் கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டன. அதன் படி இடைநிலை ஆசிரியர்களில் சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200& 20,200, தர ஊதியம் ரூ.2,800, தேர்வு நிலையில் உள்ளவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9,300&34,800, தர ஊதியம் ரூ.4,300, சிறப்பு நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.9,300 & 34,800 அடிப்படை ஊதியம், ரூ.4,500 தர ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊதிய விகிதத்தை மாற்றி சாதாரண நிலையில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 9,300 & 34,800, தர ஊதியம் ரூ.4,200ம், தேர்வு நிலையில் உள்ளவர்களுக்கு தர ஊதியம் ரூ.4,600ம், சிறப்பு நிலையில் உள்ளவர்களுக்கு தர ஊதியம் ரூ.4,800ம் வழங்க வேண்டுமென்று கடந்த மூன்று ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஊதியக் குழு முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழு அமைக்கப்பட்ட போதும் இடைநிலை ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
தற்போது தமிழக அரசு செயலாளர் (செலவுகள்) கிருஷ்ணனை தலைவராகக் கொண்டு உறுப்பினர்கள் அரசு கூடுதல் செயலாளர் பத்மநாபன், இணை செயலாளர் உமாநாத் ஆகிய மூவரை கொண்ட புதிய குழு ஊதியக் குழு ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் குறை தீர்ப்பில் சிக்கல்

தமிழகத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தாததால், ஆசிரியர்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அரசு உதவி பெறும் 632 உயர்நிலைப் பள்ளிகள், 1,120 மேல்நிலைப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களது குறைகளை தீர்க்க, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, குறை தீர்ப்பு கூட்டங்கள், மாவட்ட கல்வி அலுவலரால் அந்தந்த கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், இரண்டு நாட்கள் நடத்தப்பட்டு வந்தது. அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களது குறைகளை தலைமை ஆசிரியர்களிடம் மனுவாக வழங்குவர். அவை, குறை தீர்ப்பு கூட்டத்தின் போது, மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் வழங்கப்படும். இதை பெற்று அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். 

தற்போது, இந்த குறை தீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்படுவதில்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் உள்ள வருகைப் பதிவேட்டில், குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டதாக பதிவு செய்து வருகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான மனுக்கள் தீர்வு கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 

குறை தீர்ப்பு கூட்டத்தை நடத்த அரசும், பள்ளிக்கல்வித் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அமைச்சர் செல்லூர் ராஜு மகன் தமிழ்மணி இரு சக்கர வாகன விபத்தினால் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து துயரத்தில் ஆழ்ந்திருக்கும் செல்லூர் ராஜுவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்  முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மகன், நேற்றிரவு சென்னையில் உறவினர் இல்ல நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு இரு சக்ர வாகனத்தில் திரும்பி கொண்டு இருந்த நேரம் பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் ஐகோர்ட் எதிரில் நள்ளிரவு 12.30 மணிக்கு வேகமாக வந்த போது எதிர்பாரதவிதமாக ஸ்பீடு பிரேக்கரில் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனால் தலையில் பலத்த காயத்திற்கு உள்ளானார்.

உடனடியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி தமிழ்மணி  இன்று காலமானார்.

தமிழ்மணியின் மரணத்தால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு அவரது குடும்பத்தினக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

வட்டார வள மையஅளவிலான பயிற்சிகள் 2012-13..

  • ஜூன் - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பயிற்சி - 2 நாள்கள்
  • ஜூலை -   புதுமையான முறையில் கணிதம் கற்பித்தல் - 3 நாள்கள்
  • ஆகஸ்ட் - உள்ளடங்கிய கல்வி - 2 நாள்கள்
  • அக்டோபர் - அமைதி மற்றும் மதிப்புக் கல்வி - 2 நாள்கள்
  • நவம்பர் - வகுப்பறை தொடர்புடைய ஆங்கிலம் - 2 நாள்கள்

குறுவள மைய பயிற்சி நாள்கள் 2012-13 (CRC)

  • 23-06-2012  - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பயிற்சி 
  • 14-07-2012  - துணைக்கருவிகள் தயாரித்தல் பட்டறை
  • 11-08-2012  - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு - அனுபவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல்
  • 15-09-2012  - செயல்திட்டம்
  • 20-10-2012  - உள்ளடங்கிய கல்வி
  • 17-11-2012  - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
  • 08-12-2012  - கலை மற்றும் கைவேலைப்பாடுகள் பட்டறை
  • 12-01-2012  - எளிய அறிவியல் செய்முறைகள் பட்டறை
  • 09-02-2012  - வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல்
  • 09-03-2012  - பள்ளி சுகாதாரம் மற்றம் தன் சுத்தம்