PAGEVIEWERS

பட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஜூலை 1-ல் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு

பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை (2010-11) பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புவதற்காக ஜூலை 1-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:  வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களை (2010-11) நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாதவர்கள் ஜூலை 1-ம் தேதி மீண்டும் கலந்துகொள்ளலாம்.  இதற்கான அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லையென்றாலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலை நகல் எடுத்தும் கலந்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment