PAGEVIEWERS




இன்று கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த தினம். இவரது காலத்தில் தான், கல்வியில் தமிழகம் அபார வளர்ச்சி பெற்றது.

காமராஜர், விருதுநகரில் 1903ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மாள். காமராஜருக்கு ஆறு வயது இருக்கும் போது தந்தை காலமானார். இதனால் பள்ளிப் படிப்பை ஆறாம் வகுப்போடு முடித்தார். தாயின் அரவணைப்பில் வளர்ந்த அவருக்கு, சுதந்திர போராட்டத்தில் ஆர்வம் ஏற்பட்டது.

தொடக்கக் கல்வி - அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.09.2011ல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கை படி உபரி இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் மற்றும் பொது மாறுதல் விவரம் அளிக்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

போலி நோட்டுகள் கண்டுபிடிக்க 

ரிசர்வ் வங்கி
 
 தனி இணையதளம் தொடக்கம்


 கள்ள நோட்டுகளைக் கண்டறியும் வழிமுறைகள் குறித்து விளக்கும் 


இணையதளம் ஒன்றை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.





 www.paisaboltahai.rbi.org.in என்ற இணையதள 

முகவரியில் 10, 20, 50, 100,


 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் உண்மையான காட்சி வடிவம் 


குறித்து தெரிந்துகொள்ளலாம்.


இத்தகைய நோட்டுகளின் 


போஸ்டர்களை 
 இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொண்டு 


கள்ள 
நோட்டுகளைக் கண்டறியலாம். மேலும் இதுகுறித்து 


ஆவணப்படம் 
ஒன்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 


அதையும்
 பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.




இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கள்ள நோட்டு எண்களின் 


விவரமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

200 எஸ்எம்எஸ் உச்சவரம்பு ரத்து - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி!

செல்போனில் தினசரி 200 எஸ்எம்எஸ் மட்டுமே அனுப்பலாம் என்ற டிராய் நிர்ணயித்த உச்ச வரம்பை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதனால், இனி எத்தனை எஸ்எம்எஸ் வேண்டுமானாலும் அனுப்பலாம். செல்போனில் ரியல் எஸ்டேட் முதல் உடல் எடை குறைப்பு வரை டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் எஸ்எம்எஸ் தொல்லை அதிகரித்து வந்தது. இதை தடுக்க தினசரி அதிகபட்சமாக 100 எஸ்எம்எஸ் வரை
மட்டுமே அனுப்பலாம் என்ற உச்ச வரம் பை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கடந்த ஆண்டு அறிவித்தது. அது மிக குறைவான எண்ணிக்கை என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன.

இதையடுத்து, கடந்த நவம்பரில் எஸ்எம்எஸ் உச்ச வரம்பை 200 ஆக டிராய் உயர்த்தியது. எனினும், இது தனிநபரின் கருத்து பரிமாற்றம், பேச்சுரிமையை பாதிப்பதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லாமலும் இருப்பதாக கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில்  பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது விளக்கம் அளிக்க டிராய், மத்திய அரசுக்கு டிசம்பர் 6ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. தனிநபர் அனுப்பும் தினசரி 200 எஸ்எம்எஸ் உச்ச வரம்பு ரத்து செய்யப்படுவதாகவும், டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட உச்ச வரம்பு தொடரும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

கல்வி - இடைநிலை - உதவி பெறுபவை - பொருளாதாரம், முதன்மைப் பாடமாக படித்த நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் ஏற்கனவே அளிக்கப்பட சலுகைகள் நிரந்தர மாக்கப்படுகின்றன - ஆணை வெளியிடப்படுகின்றது.

பள்ளி மாணவ, மாணவியருக்கு கையடக்க பஸ் பயண அட்டை வழங்குதல், புதிய வழித்தடங்கள் மற்றும் 560 புதிய பஸ்களின் இயக்கத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா கையடக்க பஸ் பயண அட்டை வழங்கும் திட்டத்தைத் துவக்கிவைத்து, மாணவர்களுக்கு பயண அட்டையை வழங்கினார்.


SSA அல்லது RMSA நிதியை பயன்படுத்தி கல்விவளர்ச்சி விழாவினை கொண்டாட இயக்குனர் உத்தரவு 

மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும்?
'கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்' என்று சொல்வார்கள். அதனால்தான் அந்த நாளை மங்களகரமாக கொண்டாடுகிறார்கள். திருமண வீட்டிற்கு சென்றால் அனைவருடைய கண்களும் மணமகளின் அழகையே மொய்க்கும். மணப்பெண்ணுக்கு ...
நச்சென்ற அழகுடன் திகழணுமா?
அழகு குறிப்புகள் எவ்வளவோ சொன்னாலும் கேட்டுக் கொண்டேயிருப்பது நம் பெண்களின் குணம். ஆனால் செயல்முறைப் படுத்துவது ஒரு சிலரே. அதற்கு பல காரணங்கள் உண்டு. குடும்பம், சூழ்நிலை, பொருளாதாரம், நேரமின்மை.... ...
உபயோக அழகு‌க் கு‌றி‌ப்புக‌ள்
உங்கள் கண்களை சுற்றியுள்ள திசுக்களை மென்மையாக வைத்திருக்க சிறந்த கண் மாய்‌ஸ்ச்சரைசரை பயன்படுத்தவும். உங்கள் கண்கள் பொங்கியிருந்தால் இரண்டு டீ பேகுகளை குளிர் நீரில் நனைத்து அதனை கண் ...
கூ‌ந்த‌ல் பராம‌ரி‌ப்‌பி‌ல் கவன‌ம்
தலை முடி எண்ணையாக இருக்கிறது என்று தினமும் சாம்பு போடும் பழக்கம் ஆபத்தனது. உங்கள் தலை முடியை பளபளக்க வைக்கும் விளம்பர பொருட்களை வாங்குவதை நிறுத்துவது நல்லது. அடி‌க்கடி ஹே‌ர் டிரைய‌ர் ...
ஆ‌ப்‌பி‌ள் உடலு‌க்கு ம‌ட்டும‌ல்ல சரும‌த்‌தி‌ற்கு‌ம் ஏ‌ற்ற பழமாகு‌ம்.
ஆப்பிள் பழத்‌‌தி‌ன் தோலை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு நன்றாக மசித்து‌க் கொ‌ள்ளவு‌ம். அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசவு‌ம். அரை மணி நேரம் முக‌த்‌தி‌ல் ...

குரூப்-2 தேர்வுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பம்

குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான நேற்றுடன், ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்தனர். நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலகத்தில் உதவிப்பிரிவு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு, குரூப்-2 நிலையில், 3,631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, கடந்த மாதம் 13ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது.

பட்டதாரிகள், இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து வந்தனர். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு நிலவரப்படி விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தை தாண்டிவிட்டதாக, தேர்வாணையச் செயலர் உதயசந்திரன் தெரிவித்தார். தேர்வுக் கட்டணத்தை, 17ம் தேதி வரை செலுத்தலாம்.
வி.ஏ.ஓ., தேர்வு:வி.ஏ.ஓ., தேர்வுக்கு, ஒவ்வொரு நாளும் 75 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிப்பதாக, செயலர் தெரிவித்தார். இதே நிலையில் சென்றால், 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு பேருக்கும், எத்தனை தேர்வு மையங்களைப் பார்ப்பது, தேர்வை எப்படி நடத்தி முடிப்பது என, இப்போதே தேர்வாணையம் தீவிரமாக யோசித்து வருகிறது

சென்னையில் 16ம் தேதி 1,494 பேருக்கு கலந்தாய்வு தமிழாசிரியர்களுக்கு வந்தது சோதனை

கல்வி உரிமைச் சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் 1,494 தமிழ் ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதுபற்றி மத்திய அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டது.


தமிழக அரசும் 2010 பிப்ரவரி 24ம் தேதி இச்சட்டம் பற்றி அரசித ழில் வெளியிட்டது. இதன் படி 2010 ஏப்ரல் 1ம் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வந்தது.  இதன்படி, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் ஆசிரியர் பயிற்சி பெற்றிருந்தாலும் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து ஆசிரியர் தேர்வு நலவாரியம் இந்த தேர்வை நடத்தி வருகிறது.