PAGEVIEWERS

பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி) செயல்முறைகள், சென்னை - 06                            
ந.க.எண். 75417 / டி2 / இ2 / 2012, நாள்.   .12.2011      
பொருள் : இடைநிலைக் கல்வி - உதவி பெறும் பள்ளி - தகவல்               அறியும் உரிமைச் சட்டம் - 2005-ன் கீழ் விபரங்கள் கோருதல் சார்பு. பார்வை : உதவிப்பதிவாளர், தமிழ்நாடு தகவல் ஆணையம் தேனாம்பேட்டை அவர்களின் ஆணை எண்.26088 / C / 2011, நாள். 28.08.2011
                                                                      **************
      பார்வையில் காணும் கடிதத்தின் வாயிலாக  திருமதி. ஜீவாகமலக்கண்ணன் என்பார் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி கோரியுள்ள தகவல்களுக்கு பின்வருமாறு விபரம் அளிக்கப்படுகிறது.
வினா எண்.1
                     அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் (சிறுபான்மையற்றது) இடைநிலை ஆசிரியர் ஒருவர் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறுகிறார். அதே பள்ளியில் 20 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியராக (பொருளாதாரத்தில் B. Ed.,) படித்து பட்டதாரி ஆசிரியர் தகுதியுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நான் மேற்கண்ட பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியுமா? அதே போல் எனக்கு கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தமிழ், வரலாறு பாடத்தில் B.Ed., பயின்று பட்டதாரி ஆசிரியர் தகுதி பெற்றுள்ளார்கள்.  என்னுடைய இடைநிலை ஆசிரியர் காலி பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர்களாக ஒன்றன்பின் ஒன்றாக பதவி உயர்வு பெற முடியுமா?


பதில் : 

            அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பளிகளில் (சிறுபான்மையற்றது) எந்த பாடங்களில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலிப் பணியிடமாக உள்ளதோ, அந்த பாடத்தினை முதன்மை பாடமாகக் கொண்டு பி.எட்.,பயின்று முடித்து பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதியுடைய இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதியுடையவர்கள் ஆவர். அவர்களை கொண்டே பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (பாடவாரியாக) நிரப்பப்பட வேண்டும்.
                                                                                                                       / Sd /

                                                                                              பள்ளிக்கல்வி இணை இயக்குநர்,

                                                                                                           (இடைநிலைக் கல்வி)

பெறுநர் : திருமதி. ஜீவாகமலக்கண்ணன்,

நகல் : தகவல் உரிமை ஆணையர், தமிழ்நாடு தகவல் ஆணையம், தேனாம்பேட்டை, சென்னை - 600 018.

No comments:

Post a Comment