PAGEVIEWERS

சென்னை செல்லும் நண்பர்கள் நமது ஆசிரியர் இல்லத்தை பயன் படுத்தி பயன் அடையுங்கள் --

ஆசிரியர் இல்லம்   ( TEACHER  HOME  )

ஜெய கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி

சைதாபேட்டை    ( NEAR BUS STAND )

தமிழ் நாடு திறந்த வெளி  பல்கலைக் கழகம் அருகில்

போன் ; 044-24351116

இரவு காவலர் ; குமார் -7299722103   

கட்டணம்  ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு  ரூ 100 மட்டும்  
இடை நிலை ஆசிரியர் கல்வித்தகுதி குறித்து -திருநெல்வேலி -DTERT-பதில் -தங்களிடம் அரசு ஆணை -இல்லை -என பதில் -



அ.தே.இ - HSC / SSLC தனிதேர்வர்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வது குறித்து கணினி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி சென்னையில் நடைபெறவுள்ளது

 



இடைநிலையாசிரியருக்கு ஊக்க 


ஊதியம் உண்டு என்பதற்கான தகவல் 


அறியும் உரிமைச் சட்ட கடித நகல்...

கும்பகோணம் தீ விபத்து வழக்கில் பள்ளி நிறுவனருக்கு ஆயுள் தண்டனை; 9 பேருக்கு சிறை; 11 பேர் விடுவிப்பு- தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் தங்கள் குழந்தைகளை இழந்த பெற்றோர். | கோப்புப் படம்கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில், ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து, தஞ்சை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், அந்தப் பள்ளியின் தாளாளரும், பழனிச்சாமியின் மனைவியுமான சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலெட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.


மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாலாஜி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாலாஜி ஆகிய 4 நான்கு கல்வி அதிகாரிகளுக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, தஞ்சை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

128 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் , 42 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி முதல்வர் உத்தரவு.....


சமூக நலம் - குழந்தைகள் நலம் - வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்கள், சிறார் இல்லங்கள், பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் உள்ளுறைவோர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நலனுகாக வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கி அரசு உத்தரவு...

 


பள்ளிக்கல்வி - மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் - 70% குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு உயர் /மேல்நிலைப் பள்ளி த.ஆ மற்றும் ஆய்வு அலுவலர்கள் கூட்டம் 13.08.2014 முதல் 01.09.2014 வரை மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது....


15.03.2014-ல் உள்ளபடி இருக்கைப் பணி கண்காணிப்பாளர்களாக உள்ளவர்களின் முன்னுரிமை பட்டியல்

 

நமது BRTE சகோதரர்கள் பயன் அடைய TATA வாழ்த்துகிறது 
  அனைத்து ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களுக்கும் வணக்கம். ஓர் நற்செய்தி. மதுரை உயர் நீதி மன்றத்தில் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் (மாநிலத் தலைவர் காசிப்பாண்டியன்.பொதுச்செயலாளர் ராஜ்குமார்)அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியரகளாக பள்ளிக்கு பணியிடைமாறுதல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன் அனுப்பவில்லை என்பது குறித்து தொடரப்பட்ட வழக்குக்குஇடைக்கால தடை கிடைத்துள்ளது.மீண்டும் வழக்கு வரும் ஆகஸ்ட் 5-,2014 அன்று விசாரனைக்கு வரவுள்ளது.அதுவரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க முடியாது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களுக்கு தெரிவித்துககொள்கிறேன்.இவன் தா.வாசுதேவன்.மாநிலத் துணைத் தலைவர்.அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்.கிளை விழுப்புரம் மாவட்டம்.